Saturday, November 30, 2013

என் அருமைப் பெண்ணே


தெருக்  கோடியில்  அமைந்த
மின் கம்பத்தின் கீழ்  அமர்ந்து
விளக்கொளியில் படித்து
காலையி ல்  எழுந்து  நாளிதழ்களை
 தெருத்  தெருவாகப்   போட்டு
கல்லூரிக்கு விரைந்து
 புத்தகங்களை கடன் வாங்கி
 கட்டணத்தை கட்ட முடியாமல் கட்டி
 மாலையில் திரும்பியவுடன்
பக்கத்துக் கடையில்   கணக்கு எழுதி
பின் நட்டநடு நீசி வரைப படித்து  
கல்லோரியிலே முதல் மாணவியாக
பயின்று வெளியே வந்த நிஜந்தா
உன்னுடைய காலம்  இனி மேல்
விடிவு காலம்  பொன்னான நேரம்
 அதை பயனுள்ளாதாக மாற்றி  
நல்வாழ்வு வாழ்ந்து
ஏழை எளியோருக்கு  வழிகாட்டி
வாழ் என் அருமைப் பெண்ணே

புது வாழ்வு

எதுவும் செய்யலாம்  என்ற போது 
எதுவும் செய்ய  முடியவில்லை 
ஏதுவும் செய்ய  முடியும் என்ற போது 
எதுவும் இல்லை செய்வதற்கு 
என்ன வாழ்க்கையோ தெரியவில்லை 
என்று சலித்துக் கொண்டே வாழ்கிற  போது 
சட்டென்று  ஒரு பிடிமானம் தென்பட்டது 
என்ன என்று குறுகுறுக்கும் மனத்திற்கு 
விடையாக ஒரு பச்சிளங் குழந்தை 
அழ முடியாமல் அழுது கொண்டு  கிடந்தது
அதை தூக்கி எடுத்துக்   கொஞ்சினவுடன்  
நெஞ்சில் இருந்த சலனம் பறந்து ஓடியது  
மனது  துள்ளிக் குதிக்க எண்ணங்கள்  விரைந்து ஓட  
என்னால் எல்லாம் முடியும் என்ற  நினைப்போடு
புது வாழ்வை தொடங்க ஆவலாய் உள்ளாள்  நிஜந்தா.  



முலமும் மந்திரமும்

ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன்
 கால் மாற்றி மாறி ஆடினான்  வேகமாக  சிற்சபையிலே
காலைத் தூக்கி தூக்கி ஆடினான் கூத்தன்  அம்பலத்திலே


அண்டம் அதிர  கால் சலங்கைகள் குலுங்க  ஆடினான்
 கங்கை  துளி சிதற  அடியார்கள் எல்லாம் கொண்டாட
ஆடினான் தாண்டவம்  வெகு நாகரிமாக  வெள்ளி அம்பலத்திலே

காணக் கண் கோடி வேண்டும்  திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க
பரவசமாக  கரைந்த்துருகி நெகிழ்ந்தது  கணகள்  துடிக்க 
கண்ட காட்சியை   என் சொல்லி விளக்குவேனோ .

மெய் மறந்தேன் நிலை இழந்தேன்  பரமா னந்தத்தைக்  கண்ட பிறகு
 பரததிற்கே  ஓர் இலக்கணம்  வகுத்த பரமனை   தாழ்   பணிந்து
முலமும் மந்திரமும் கண்ட  மூக்கண்ணணை  சிறைப்பிடித்தேன் .



Friday, November 29, 2013

கானல் நீர்

கானல் நீர் போன்று ஆனது வாழ்வு 
கனல் தெறி த்தது  கடு வாயிலே 
அனல் பற ந்த்தது வாழ்விலே 
அடித்துக் கிளப்பியது  காற்றிலே

 துவண்டு போனாள்  அவள் 
வெடித்துச் சிதறினாள்  துண்டு துண்டாக 
 விம்மி கதறினாள்  விக்கி விக்கி 
எல்லாம் போய்  விட்ட பின்  அழுது என்ன பயன்.?

கோபம் தலை  உச்சிக்கு ஏறிய போது 
தன்னை மறந்து தன நிலை உணராது 
பேசின பேச்சுக்கு வந்த வினை 
இன்று வாழ்வு இழந்த நிலை 

நிதானம் நியாயம் பார்த்து  நிற்காமல்  
தன் பிடிவாதத்தால் கொம்பாகிப்  போனாள்
வெற்றுக் கொடி  கூட அவள்  மீது படராமல்
பட்ட மரமாகிப் போனாள் நிஜந்தா .



Monday, November 25, 2013

பிடிப்புடன் வாழ

பிடித்தது என்றும்  \
பிடிக்காதது என்றும்
 பிரிக்காது இருந்தும்
பிடித்ததுக்கு ஒன்று
பிடிக்காததற்கு ஒன்று
என்று பிடிவாதமாக
பிடித்து வைத்திருந்தும்
பிடிக்க வேறு ஒன்று மில்லை
என்ற நிலை போய்
எல்லாமே பிடித்து விட்டது
என்று வாழப் பழகியும்
குறையே காணும்  மனிதர்கள்
நிறைந்த உலகிலே
பிடிக்காமலே   வாழும்
நிர்ப்பந்தம்   பிடித்துவிட்டது
என்னை  பிடிப்புடன்.

நாட்டின் நடப்பு அவ்விதம்

அழுத குழந்தைக்கு
பால் கிடைக்கும்   சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும்  பட்டென்று


அடம் பிடித்த வளுக்கு
 ஆலிங்கனம்  அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
 ஓரு    மோதல்   கோபமாக


வெட்டிக் கொண்டு  போனவளுக்கு
அனுதாபம்  கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக

குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம்  தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம்  வீண் முட்டும்


நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம்   அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி  பாவம். மிகுதியாக

இது  தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு  நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும்  வெடிப்பு. பலவிதமாக

மழையின் சிறப்பு

தகை சால் சிறந்த மழையின்  தன்மை
வரம்புக்குள் பெய்தால் மகிமை
 வரம்பு மீறி கொட்டினால் வன்மை
வரம்புக் குறைய வந்தால் இன்மை
பொய்த்து விட்டால் எடுபட்ட கொடுமை.



Sunday, November 24, 2013

உங்களையும் இழுத்துக் கொண்டு

எழுத ஆரம்பித்தால்
 எழுதிக் கொண்டே இருப்பேன்.
என்ன எழுது வேன்
 எனக்குத் தெரியாது
  எதற்காக எழுதுகிறேன்
 எனக்கு புரியாது
 ஆனாலும் எழுது வேன்
 புரியாதத்தையும் தெரியாததையும்.

 வார்த்தைகள் வந்து விழுகின்றன
எண்ணங்கள் வந்து தொடும் போது
எண்ணங்கள் தன்னிச்சையாக தோன்றுகின்றன
காட்சிகள் மனக் கண்ணில் விரியும் போது
காட்சிகள் தெரிகின்றன வெளிச்சமாக
 கண்களை  பிரித்து நோக்கும் போது
கண்ணால் கண்டது எல்லாம்  வண்ணக் கோலங்கள்
 கவிதையில் புனையும் போது கொஞ்சி குலாவி கும்மாளமிடுகின்றன .
இராகமும் மெட்டும்  தாளமும் சேர்ந்தால்
மனதை மயக்கும்   சூழ்நிலை தன்னோலே வந்தமையும்
என்னுடைய எழுத்துக்கு விளக்கம் சொல்லப் போய்
எங்கேயோ போய் விட்டேன் என்னை அறியாமல்

மொழி மறந்தவன் தோலி இழந்தான் போல்.

தாய் மொழி  தாயைய்ப்  போல் அன்பானது
இன்னல் வரும் போது  நாம் சொல்வது அம்மா
வலி தாங்க முடியாத  போது  நாம் கதறுவது அம்மா
மொழியின் நினவு அதிகம் தோன்ற
 இன்று பிள்ளைகள் பேசும்
ஆங்கிலக் கலப்புடன் தமிழ்  பேச்சு
 என்னை  கண் கலங்க வைக்கின்றது.

 ஆதி தமிழன் தாயை ஆத்தா  என்று அழைத்தான்
 இன்றும் என் குழந்தைகள் என்னை அவ்வாறே  அழைக்க
 தந்தையை அப்பச்சி என்று  எங்கள் குல வழக்கப்படி கூப்பிட
  நாங்கள்  யாவரும் தமிழ் நாட்டை விட்டு மற்ற  நாடுகளில்  வாழ்ந்தாலும்
 அன்று  ஆத்தா மறைந்து அம்மா  தோன்றினாள் 
அம்மா இன்று இல்லை மமமி  ஆகி விட்டாள்
தமிழன் வெளக்காரனாகி விட்டான்  நிறத்தை தவிர.


நம் மொழியில் பேசுவது இயல்பு  மிக எளிது
தவறி விழுந்தோம்  என்றால் ஆத்தாடி என்போமே தவற
மம்மி  என்று நாம் ஒங் காரமிடுவதில்லை .
ஆங்கிலேயன் நம் நாட்டில் இருந்து கொண்டு போனான்
செல்வத்ததையும், பொன்னையும்,  உவகையும்
 விட்டுச் சென்றான் அடிமைத்தனத்தையும் கலப்படத்தையும்
மொழி மறந்தவன்  தோலி இழந்தான்  போல்.





Saturday, November 23, 2013

நான் ஒரு தமிழனடா

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வள்ளு வனுக்கு இரண்டடி சாத்தியம்
ஈற்றடியில்  கொண்டு வந்தான்
 உலகின் சிறப்பை  வானின் உயர்வை
உழவனின் வாழ்வை,மழையின் பலனை
மண்ணின்  வாசனையை மனிதனின் குணத்தை
வல்லவனுக்கு  வல்லவன் வள்ளுவன்.

உலக மறைப் புலவன் வள்ளுவன்
சுருங்கக் கூறி அகலப் புரிய வைத்தான்
திருக்குறள்  சிறு சிறு அத்தியாயங்கள்
பத்து குற ட்  பாக்கள்  பத்து பொருளைக் கூற
நூற்றி முப்பத்தி மூன்றும்  நெறியை தூக்கி நிறுத்த
வள்ளுவன்  நிலை பிற ழா த  வாழ்விற்கு
இலக்கணம் வகுக்கிறான் எளிமையாக.


தமிழில் எது இல்லை என்று நான் நினைக்க
இல்லாதது ஏதும் இல்லை என்று மனம் கூவ
 இலக்கிய  சுகமா  நாடக  நயமா
இலக்கண தெளிவா  கவிதை தெள்ளமுதா
வழிபாட்டு பாடல்களா  இதி காசக்  காவியங்களா
எதற்குப் பஞ்சம் எதற்குமே  இல்லை என்று  எண்ணி
 தலை நிமிர்ந்து  நடக்கிறேன் தமிழன் என்ற பெருமையோடு





Thursday, November 21, 2013

அமைதியின் வலி வெற்றியின் வழி

போராட்டம் சத்தமாக இருக்க வேண்டுமா?
கத்தி  மறி த்து  அடித்து  தான் செய்ய வேண்டுமா?
உடைத்து உதைத்து  சிதறி  தான்  முயல  வேண்டுமா?


இல்லை
மனம் ஒன்றாமல்    விலகி நின்று
மனதில் உறுதி பூண்டு   எதிர்ப்பை  பொருட்டாக  கருதாமல்
வெற்றியே குறிககோளாக நினைக்க  வேண்டும்

 
வன்முறையும் அடாவடியும்  பலன் வேகமாகத்  தரும்
வந்த வேகத்தில் அவை அடித்துச்  செல்லப்படும் 
ஆக்கப் பூ ர்வமான தடுத்தல்  மிக விவேகம்
அது   நின்று பிடிக்கும்.

இது தான் காந்தியின்  வழி   என்று நினைக்கலாம் .
எத்தனை  மக்கள் இவ்வியுகத்தை  கை பற்றினார்கள்
அவர்களின்  அடையாளம் .நமக்கு தெரியவில்லலை.
அவர்கள் சாமானியர்கள் 


ஆயிரக்கண கானோர்  சென்ற வழித்தடம்
 பெண்கள் கை பிடித்த  முறை ஆண்டாண்டாக
சாதுர்த்தியமும் சாமர்த்தியமும்  அடைய முடியாதது  ஏதுமில்லை
 அமைதியின்  வலி  வெற்றியின்  வழி

உனக்கு எப்போது விடுதலை

கண்டேன் சீதையை
கண்டேன் அவள் கோலத்தை
கண்டேன் அவள் வி ர்க்தியை
 கண்டேன் அவள் ஏக்கத்தை.
 கண்டேன்   அவளின் எழிலை.

துவண்டு இருந்தாள் 
துணிவில்லாமல் இருந்தாள்
துணி போல் இருந்தாள்
துனபறு தப்பட்டிருந்தாள்
துடித்து  போயிருந்தாள் .

பெண்ணிற்கு  வரக் கூடாத துன்பம்
பெண்மையை  சோதித்த  கொடுமை
பெண்ணினத்தை   அவமானப்படுத்திய விதம்
பெண்கள் தலை குனிய வைத்த  உண்மை
பெண்ணே உனக்கு எப்போது  விடுதலை ?


கம்பன் காலம் முதல் பெண் ஓர் அடிமை
 இன்றும்  அவள்  ஓர் அபலை
 எப்போதும் அவள் ஒரு சுமை தாங்கி
 கண்ணீரும் கவலையும் அவளுக்கு சொந்தம்
  தாங்கி தாங்கி அவள் நொந்து போகிறாள்

Monday, November 18, 2013

என் வெற்றி

எனக்கு ஒரு  வெற்றி
 உண்மையாகவே வெற்றி .
அது ஒரு கோப்பை.
 அது வே ஒரு சன்மானம் .

நான் உயர்ந்து நிற்கிறேன்
படித்த  மனிதர்களின்  நடுவில்.
என்னுடைய அழகா னவலைதளத்தில்
அதில் ஒரு முறை அல்ல  பல முறைக
 நுழைந்து நுழைந்து செல்வேன்
 எத்தனை தடவைகள் என்று தெரியாமல் .

என்னுடைய எழுத்துக்கள் எனக்கு
ஒரு வடிகால்  ஒரு இளைப்பாறும் இடம்
அவைகளுடன்  மணிகணக்காக  இருப்பேன்
எழுதுவேன் எனக்கு  தோன்றி யதை எல்லாம்
நன்றாக இருக்கிறதோ நன்றாக இருக்காதோ
என்று ஒரு காலும் நினையாமல்.


என்னுடைய வலை தளம் ஒரு சிறு படத் தொ குப்பு
அதில் வரைவுகளும் வண்ணங்களும் இருக்கா
 எழுத்துக்கள்   வண்ணங்களில் சொக்கி நிற்க
அனுபவங்கள் சொல்லில் வடிவு  எடுக்க
இயற்கையின்  சலனமில்லா நேர்த்தியை வர்ணிக்க
 மனிதனின் குணங்களை  அவ்வவாறே வெளிப்படுத்த
சொற்களோடு எ ன்னுடைய நினைவுகளும் ஒன்று சேர
எனக்கு தெரிந்த மொழியில் அவற்றை  எழுத
அவை சொல்லோவியமாக பதிய
 படைப்பாற்றல் என்னை  உலகுக்கு வெளிப்படுத்தியது.



மிகப் பெரிய வட்டம் எனக்கு அமையவில்ல
எனக் கெ ன்று ஒரு சிறு குழா ம் என்னை உற்சாகப்படுத்த
நான் இடை விடாமல் இலக்கி ய உலகில் வல ம் வருகிறேன்.
என்னுடைய  எழுத்து வாழ்க்கை தாமதமாக ஆ ரம்பிக்க
நான் எழுதுகிறேன் யாரையும் நம்பி அல்ல
பரிசை வென்றேன் எனறு  நினைக்கையில் மகிழ்ச்சி உண்டாகி
என்னுடைய மாணவப் பர்வத்த்ற்கு என்னை அழைத்துச் செல்ல
 அன்று நான் வாங்கிய ம் கோப்பை என்னுடைய மனக் கண் முன் தோன்ற
விம்முகிறேன் விசும்புகிறேன் எனக்குள்  பரவசமாக .


கண்களும் வயிறும் தெறிக்க

பார்வை பல விதம்
 எண்ணமும் பல விதம்
நல்லதும் உண்டு 
கெட்டதும்  உண்டு 

கண்ணால்  அடிபடுவது
திருட்டி  என்று வழங்கப்படும் 
காலை வாங்கி கையை முடக்கி 
 உடம்பை படுத்தி சீரழிக்கும்.

கவலையைக் கொடுத்து 
செல்வத்தை பறித்து
வறுமையில் வாடி சொல்லொண்ணாத்
துயரத்தை உண்டாக்கும்.


வயிறும் அவ்வாறே   
வயிற்ரெ  ரிச்சல்  காவு வாங்கும் 
சாபமும் சாட்டையும் ஒன்றே
இரண்டும்  வகையான்   கொடுமை


கதை என்று நினைக்க வேண்டாம் 
 உண்மை நிகழ்ச்சி  ஒன்று 
ஒருவன் பார்வை   பட்டு 
அழகான கட்டிடடம்  பிளந்த்தது..


துவண்ட பெண்மணியின் 
ஆத்திரமும் ஆவேசமும் 
அவளை  நிலை குலைய  வைத்த
கயவர்களை  சாம்பலாக்கியது


நம்பவும் முடியவில்லை 
 நம்பாமல் இருக்கவும் இயலவில்லை
கண்டதை எழுதுகிறேன் 
 கேட்டதை கவியாக்குகிறேன்..

  

Sunday, November 17, 2013

பலே ராமன்

வாழ்வது கொஞ்ச நாட்கள்
 அதில்அக்கப்போர்  மிகுதி
வம்பு வழக்கும் அதி கம்
 திமிரும்  அடா வடியும்  நிறைய
இப்படி வாழ்கிறான்
 எனக்கு தெரிந்த ராமன் 

தெரிந்தது அவனுக்கு  எள்ளளவு
தலைக்கன்மோ உலகளவு
போக்கே தனி கட்டுப்பாடதது 
கை நீட்டி  சம்பளம் வாங்கிக் கொண்டு
கொடுப்பவரிடமே தன திமிரைக்  காட்டுவான்
ராமன்   பலே கையாள் .


ராமன் தன நிலை அறியாமல்  வாழ்கிறான்
அவனுக்கோ வயது எழுபத்திஐந்து 
பல அடிகள் பட்டும் திரு ந்தவில்லை
அடிகள் சாதராணம் அல்ல மரண  அடிகள்
இருப்பினும் அவன் தன நோக்கத்திற்கு வாழ்கிறான்
இது ஓர் அறியாமை ஓர் இயலாமை .

நாளை நாம் இருப்பது உறுதி அல்ல
 ராமனோ தான் சாசுவதம் என்றி நினைக்கிறான்.
 மகனின் வாழ்வில் அமைதியை பங்கப்படுத்தி 
மகளின் வாழ்வில் சூறாவளி யை உண்டாக்கி
போகும் இடமெல்லாம் கெடுதல் செய்து
 வாழ்ந்து  கொடிருக்கிறான் ராமன்.



 

Saturday, November 16, 2013

கெட்ட தை மறவாது

நல்லதை  நினைவு  கொள்
கெட்டதை மற .
என்று சொல்வது எளிது
 செய்வது கடினம் .
இருந்தும் எல்லோரும்
சொல்வது இதுவே
  நானும் சொல்வேன்
அதை வேகமாக .

சொல்லும் வார்த்தை சுடும்
செய்யும் செயல்  கொதிக்கும்
சுடு வதையும் கொதிப் பதையும்
எப்படி மறப்பது 
இதத்தையும் இனிமையும் 
 மறந்து விடலாம்
தகிப்பதை தா ங்கிக் கொள்ளலாம்
 மற என்பது முடியாது.



நான் பேசுவது பிடிக்காது
என் பேச்சு  ஒரு மாறுபாடு
மாற்றம் ஏற்கப்படுவதில்லை
மாறாக  எதிர்க்கப்படும்
இருந்தும் என் நிலை பெயராமல்
 சொல்லுகிறேன்  வினயமாக
வாளாவிருப்பது   பொறுமை  அல்ல
அது மிகுந்த கோழைத்தனம்.


கவனம் கொள்ளுங்கள்  
 தீமையைக் கண்டு  விலகாதிர்கள்
 வேரோடு  பறியுங்கள்
 கூண்டோடு  பிடுங்குங்கள்
மீண்டும் தலை தூக்க விடாமல்
சாகடியுங்கள்  தீயவர்களை.
ஆற்றுங்கள்  இப்பணியை
இப்போதே  இந்த வினாடியே 




நானும் ஒரு கருவேப்பிலை.

திரும்பி பார்க்கிறேன்
 திரும்பும் போது
கண்டேன்  எதை
காண வேண்டாம்
என்று  நினைத்தேனோ.

கண்டதைச் சொல்கிறேன் 
என் வழிப் பாதையிலே
நான் கடந்த வேதனைகளை
மறக்க வேண்டும்
என்று நினைத்தேனோ.


மறந்ததைச் சொல்லுகிறேன்
என் நினவுகளிலிருந்து 
நான் அப்பாவியாக
இருந்த நாட்களை
எண்ணும் போது


எனக்கு நடந்த  நிகழ்ச்சிகள்
 எதை விட்டு   கழிப்பது
எதை விடாமல்   சேர்ப்பது
சொல்ல  முடியாமல்
தயங்குகிறேன்

நான் கண்டது  மிகப் பெரிதில்லை
 அது ஒரு கருவேப்பிலை
வாசத்திற்கு  சேர்ப்பதும்
உபயோகமில்லை எனறு எறிவதும்
  அதற்கு வழி  முறை.

 வழி  வழியாக  வருவது
கருவேப்பிலைக்கு  உவகை
எனக்கும் அதில் உடன் பாடு
என்னுடைய தடமும்  அதுவே.
சேர்த்துக் கொள்வதும்  விடுதலும்


காலம்  ஓடுகிறது  வேகமாக
 நானும் வாழ்ந்து விட்டேன்
 மிகுதியாக  சற்றுக்  காலம் 
வாழ்ந்து விட்டால்  கவலை யில்லை
நானும் ஒரு கருவேப்பிலை.

  

Thursday, November 14, 2013

தளர்த்தி மாறி வாழ

வேலைப்  பளுவிலே மறந்தான் தன்னை 
உண்  மறந்தான் உடை மறந்தான் 
குடி மறந்தான்  

வேலை வேலை என்று திரிந்த அவனிடம் 
அன்பு இருந்தது  கனிவு இருந்தது 
 களிப்பு இல்லை.

வேலையைத்  தவிர அவனுக்கு ஏதும் இல்லை 
பாசம் தெரியும்  நேசம் தெரியும் 
 எல்லாம்  தெரியும் 

வேலையை நேசித்து  வாழ்ந்தான் 
மனைவியோடு அன்போடு  வாழ்ந்தான் 
ஏனோ  மனைவிக்கு புரியவில்லை 

  அவளுக்கு எதும்  வெளிப்படையாக  வேண்டும்  
அன்பும் ஆதரவும் ஆலிங்கனமும் 
வெளியில் போவதும் வருவதும்  

அவனுக்கோ எதும்    அளவாக இருத்தல் வேண்டும் 
பாசமும்  அரவணைப்பும்   நான்கு சுவற்றுக்குள்
எல்லாமே வீட்டிற்குள்  
.

பிணக்கும்  சண்டையும் அவ்வப்பொழுது தோன்றின 
அவன் கோபப்பட  அவள் அழுக 
சுற்று சலனங்கள் ஏற்பட்டன.

இருவரும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் 
 அவனும் தன கெடுபிடியைத் தளர்த்தி 
அவளும் தன எண்ணத்தை மாற்றி. 




Wednesday, November 13, 2013

சத்தியம் தவறினான்

பேசினான் என்றால் 
 அதில் பொருள் உண்டு 
அதில் நேர்மை உண்டு 
அதில் சத்தியம் உண்டு .

அப்பேர்  பட்ட மனிதன் 
மயங்கினான் தவறினான் 
 குழறி னான் வீழ்ந்தான் 
இறுதியில்  பரிதாபமாக

ஒரு சிறு தவறு 
ஒரு பெரிய வீழ்ச்சி 
உருக்குலை ந்தான் 
எ ழும்ப முடியாமல் .

ஒரு சிறு  பொய்  சொல்லி 
ஒரு பெரிய  உண்மையை மறைக்க
அது அவனை மாய  வலை யில் பின்ன 
கவிழ்ந்தான் தலை குப்பற.

சத்தியம் தவறினான் 
பொலிவு இழந்தான்  
புகழ் மறைய 
இகழ்வு அடைந்தான் 

 
  
 

நான் ஒரு ஜடம்

நான் யாரென்று அறியேன் 
என்னை ஒரு மரம் என்று நினைக்கலாமா
கூட வே  கூ டாது மரத்தை என்னோடு ஒப்பிடலாமா  
மரம் தரும் பலன்களை என்னால் தர முடியமா 
நிழலும் பழமும் கனியும் தரும்  விருட்சம் 
நான் ஒரு கல் என்று கொள்ளலாமா 
தவறு பெரிய தவறு கல்லாக நான் ஆக முடியுமா 
காலத்தை வென்ற கல்லும் நானும் சரியாக முடியுமா 
அதன் பொறுமை எங்கே நான் எங்கே 
இப்பத்தான் உன்னை பற்றி தெரியுதா 
 என்று குறு நகையுடன்  கேட்கிறாயா
உன்னுடைய கிண்டல் அர்த்தமுடையது  
நான் ஒரு தேவையில்லாத  ஜடம் 
என்று எனக்கு நல்லாவே தெரியும்.
இருந்தும் வாழ்கிறேன்  எனக்கு 
 விதித்த நாட்கள் முடியும் வரை.


  


Saturday, November 9, 2013

இலக்கிய உலகிலே

காதல் கவிதைகள் கொடி கட்டி பறக்க
புதுக் கவிதைகள் சிலாகித்து நிற்க
 பாசக் கவிதைகள் கண்ணீரை  வரவழைக்க
உண்மை சொல்லும் கவிதைகள் புறக்கணிக்கப் பட
பக்திக் கவிதைகள் சற்று ஆதரிக்கப்பட
பொதுவாக கவிதைகள் ஒதுக்கிவைக்கப்பட
இலக்கிய உலகில் கதைகளும் ,உரை நடைகளும் ஒங்க
நல்ல கவிதைகள் கேட்பாரற்று கிடக்க
 கவிஞன் துவண்டாலும்  படைப்பதை நிறுத்தவில்லை
அவனால் நிறுத்த முடியவில்லையே.

எண்ணங்கள் நூலிலே

 ஒரு சிறு எண்ணம்
 மனதில்  தோன்ற
தட்டினேன் மடி கணினியில்  
எண்ணங்களும் கருத்துக்களும் 
மாறி மாறி வர 
தொகுப்பை அமைத்தேன்.

அழகாக   வந்தது 
கொத்தாக  மலர்ந்த்தது 
மணம்  பரப்பியது  
புத்தக வடிவத்தில்  
தாள்கள் சேர்ந்த  உருவத்திலும்  
 இ நூல்  என்ற தோற்றத்திலும்.

சேர்ந்து வாழும் காலம் போய் 
தனித்து வாழும் நிலைமை வந்து 
தான் தன குடும்பம் என்று பிரிந்து 
தனியாகவே வாழும்  நேரத்தில் 
மாறிக் கொள்ளும் வகையிலே 
பழகிக் கொள்ளு ம் பயிற்சி  புத்தக வடிவிலே. 


தனிமை பாதிககாது   என்ற நினைப்புடன் 
தன்னால் முடிந்த உதவி நல்கி  
இயன்ற வரை  இனிமையைக் கொடுத்து 
நலிந்தோர்க்கு  வெகுவாக உதவி 
 சிறப்புடன்  வாழ்ந்தால்  பெரும்   பயன் 
என்று   வலியுறுத்தும்  நூலை  எழுதினேன் .

இது பழம்  பஞ்சாங்கம்  எனலாம்.
இது எல்லோருக்கும் தெரிந்தது  எனலாம் 
இது  ஒரு கோட்பாடு 
 இது ஒரு தெளிவு
இதில் காண்பவை நடந்தவை 
வழி  முறைகள் வெவ்வேறு  வகையானவை.
.




தேதியும் நாளும்

தேதி எனக்கு நினைவில்லில்லை
நாள் எனக்கு தெரியவில்லை 
மனதில் எதுவமில்லை
எந்த சிந்தனை யும் இல்லை
நான் அமைதியை நாடுகிறேன்
எதற்கும் அவசரமில்லை 
அடர்த்தியான மரங்களுக்கு  நடுவே
வாழ் விரும்புகிறேன்
அதுவே சொர்க்கம்.


Friday, November 8, 2013

நிலை மாறும்

மனம் மாறும் மனிதனே
இன்று ஒன்று பேசி
நாளை ஒன்று கூ றி
நேரத்திற்கு ஏற்ப  மாறி
அதைச் சொல்லி
இதைச் சொல்லி
வாழும் மனிதா
 வாலுடன்  வலம்  வரும்
 குரங்கைப் பார்த்து 
 நீ சொல்லுகிறராய்
கிளைக்கு கிளை
தாவும் அற்பமே  என்று.

தீர்க்க தெரியாததால்

கண க்கு கேட்டால்
 ஒரு கிறுக்கல்
 வழக்கு போட்டால்
 ஒரு  வழுக்கல்
நேரே வாதாடினால்
 ஒரு  சறுக்கல் 
எப்படிச் செய்தாலும்
 ஒரு விலகல்
முடிவு என்று  வந்தால்
ஒரு ஒட்டம்
தீர்வு என்பது இல்லை
 தீர்க்க  தெரியாததால்
 

Wednesday, November 6, 2013

எங்கு இருக்கிறானோ ?

தொழில்  செய்தான்
 என்ன   எது
 என்று தெரியாமல் .

 செலவழித்தான்  செல்வத்தை
ஏன் எதற்கு
 என்று  தெரியாமல்

பார்த்தார்கள்  யாவரும்
எப்படி எவ்வாறு
 என்று அறியாமல்

வியந்தார்கள்   எல்லோரும்
 செல்வம் வந்த வழி
 என்ன என்று புரியாமல்

புரண்டான் காசில்
தவழ்ந்தான்  பணத்தில்
தலை கால் தெரியாமல்

உருண்டான் தலை  குப்பற
 வெகு வேகமாக
எங்கு இருக்கிறானோ  தெரியவில்லை ?

Tuesday, November 5, 2013

பால் மரக் காட் டினிலே

சொர்ண பூமியில்
ரப்பரும், செம்பனையும்
நிறைந்த தோட்டங்களில் 
வாழ்ந்த இந்தியனே !

மண்ணுக்கு நல்கினாய்
உடலையும் உயிரையும்
 வெயிலிலும் மழை யிலும்
பாடுபட்டாய் இந்தியனே!

நாட்டுக்கரா னாகி விடுகிறான்
மலாய்க் காரன்  சலுகைகளும்
உரிமைகளும் செழிப்பும்
 மித மிஞ்சி  அடைகிறான்.

வியாபாரமும் விநியோகமும்
படிப்பும் முன்னேறமும்
சீனனை  உயர்த்த
ஏற்றம் கண்டுள்ளான்.

உழைப்பைத் தவிர ஏதும் தெரியாத
கல்வியும்  விருத்திக்காமல்
 வாழ்கிற  இந்தியனோ  இ ன்று
நிலையிழந்து  விட்டான்


தோட்டங்கள் சுருங்க துயரங்கள்   தொடர
வேலையிழந்து திருடு  கொலை
என்ற வன்முறைகளைப்  பழகி
துச்சமாக மதிக்கப்படுகிறான்

மலாயா நாடு  முற்றிலும் மறந்த்தது
 வளத்திற்கு  காராணமான இந்தியனை
நினைக்கவில்லை எள்ளளவும்  அவனை 
சோபையிழந்து நிற்கிறான்.


தாய் நாடே தெரியாது  வாழ்ந்து
அண்டிய நாட்டில்  தள்ளி வைக்கப்பட
இந்தியன் எங்கே செல்வான்  வாழ்விற்கு
எப்படி வாழ்வான்  செம்மையாக ?




தேவதையோ

 நிலவின் பட்டொளியிலே
வானவில்லின் வர்ண ஒளியிலே
இருட்டும் வெளிச்சமும்
அமைந்த  பொழுதினிலே
ஒர்  அழகிய பெண்
 ஒயிலாக வந்தாள்


சிவந்த நிறமும்
அடர்ந்த கூ ந்தலும்
வாளிப்பான் உட லும்
அளவான உயரமும்
பொருந்திய பெண் அவள்


கண்டோர் வியக்க
 கேட்டோர்  ஆனந்திக்க
பார்த்தோர்  புகழ
மயில் போல்
 ஓயாரமாக  வந்தாள்


அவள் ஒரு மயிலோ
 அவள் ஒரு அன்னமோ
அவள் ஒரு தே வதையோ
என்று மயங்கிய வேளையில்
மாயமாக மறை ந்தாள்.



Monday, November 4, 2013

விட்டு விடாமல்.

தூங்கும்  போது 
அலை அலைகளாக 
 நினைவுகள் 
தூங்க விடாமல் 

கண் மூடி  உறங்கும் போது  
கனவுகள் படலம் படலமாக 
காட்சிகள்  பல 
அலைகழித்தன விடாமல் 

தூங்கும் போதில்லாமல் 
கனவு காணும் போதில்லாமல் 
நடக்கும் நிகழ்ச்சிகள் 
மனதை ஒன்று பட விடாமல் 

எதுவும் விட்டும் விடாமலும் 
எதிலயும் பட்டும் படாமலும் 
இங்கும் இல்லை அங்குமில்லாமலும் 
எதையும் விட்டு விடாமல் 

இருந்தவன் இன்று இல்லாமல் 
தெரிந்தவன் தெரியாமல் 
புடிந்தும் புரியாமல்  
பற்றிக் கொண்டு  வாழ்கிறான்  
மனிதன் விட்டு விடாமல்.


நற்செய்தி

செய்தி நல்ல செய்தி
 மனதுக்கு இனிய செய்தி 
இதமான செய்தி
 நன்மையான செய்தி
எத்தனை செயதிகள்
 இனிமையும் இன்பமும்
ஒன்றே நல்குபவை
இச் செய்தி அளித்தது
நல்ல   அருமையான் வாய்ப்பை
நினைக்கும் போதே மகிழ்ச்சி
என்ன என்று யோசிக்க
அது ஒரு வேலைக்கு ஆனஉத்தரவு
வாடும் குடும்பத்துக்கு
 ஒரு அற்புதமான  திறவுகோல்
வறுமையை மறந்து
இனிதாக வாழும் நேரம்
இன்னல்களை துறந்து
இங்கிதமாக இருக்க வேண்டிய தருணம்  
சங்கடங்களை சமாளித்து
 சமாளித்து பழகிய மனத்திற்கு
ஒரு இளைப்பாறும்  நிலை
வெகு நெருக்கத்தில் வந்து விட்டது
வாழ்த்துகளுடன் நற்செய்தியை
பகிர்ந்து கொண்டு  இன்புற்றிருக்குவதல்லாமல்
வேறு ஒன்றும்  அறியேன்



Sunday, November 3, 2013

ஆண்டு தோறும் தீபாவளி

பட்டாசுகள் பட படக்க 
மத்தாப்புக்கள்  பூக்க 
புது உடைகள் சர சரக்க 
தீபாவளி   பண்டிகை 
விமிரிசையாக   கொண்டாடி 
மி க்க செலவோடு முடிய  
வானமும் மேகமும்  
கறுத்துப்  போக
பூமி யும்  நிலமும்  
 நகண்டு  போக
சத்தம் காதை  அடைக்க 
 அங்கும் இங்குமாக 
தீ காயங்கள்  படர 
சில  இடங்களில் 
உயிர்ச் சேதம்  ஏற்பட 
காசை இறுதியில் 
கரியாக்கி  கொண்டாட்டத்தை 
முடிக்கிறான் மனிதன்
  ஆண்டு தோறும்.

  

 

Saturday, November 2, 2013

காலை வணக்கம்

காலை வணக்கம் என்ற குரல்
 எங்கேயோ கேட்ட  குரல்
யாரென்று கூற  இயலவில்லை
என்னைத் தெரியவில்லையா
 என்ற அடுத்த வந்தததற்கு
தடுமாறி பதில்  அளிக்கும் முன்
என்ன இவ்வளவு மறதியா
என்று வேகமான குற்றச் சாட்டு
உண்மயிலே மறதி வந்து விட்டதோ
அய்யய்யோ என்று எண்ணும் போது
மீண்டும்மொரு  தொடர்   மொழியாக
  ஏன்  இப்படி ஆகி விட்டாய்?
மலங்க மலங்க விழித்தபடி
 நின்ற என்னிடம் கேலியாக
உனக்கே உன்னை   தெரியவில்லை
என்று நகைக்க
 எனக்கு என் மேல் வெறுப்பு
தோன்றத  தொடங்கியது
நல்ல காலை வணக்கம் பாடி
மனத்தை  சுருங்க வைத்ததற்கு
நன்றி மிக்க நன்றி  .



ஆகாத வரை சரி

பண வீக்கம் குறைந்தது
வெங்காயம் விலை ஏறியது 
பணக்காரன் பாடு மகிழ்ச்சி 
 ஏழையின்  நிலை  திண்டாட்டம் 

மத்தி ய வங்கியின் ஆளுநர் 
மந்திரக் கோலுடன் வலம்  வருகிறார்  
உழவனோ ஏறுடன் 
உழுது  பாடுபடுகிறான் 

ரூபாயின் மதிப்பு  ஏறகிறது  
  அன்னியச் செலவாணி உயருகிறது 
தானியங்களின் விலை தாவு கிறது 
  உணவு அரிதாகத்  தெரிகிறது.

பணக்காரன்  பணத்தில் புரளு கிறான்
ஏழையோ ஏழ்மையில் வாடுகிறான் 
மந்திரக் கோல்  தந்திரக் கோல் 
ஆகாத வரை சரி.


பொருத்தம் பத்து

பொருத்தம் பார்த்தார்கள் 
பொருந்தியது   பத்தும் 
செயதார்கள்  திருமணத்தை 


சாதகத்தில் பொருந்திய 
 பத்து  பொருத்தங்கள்  
வாழ்க்கைக்கு பொறுப்பேற்கவில்லை 

பத்தும் பதிவேட்டில்  பொருந்த 
வாழ்வு ஏட்டில் விலக 
பற்றிக்கொண்டது  விவகாரம் 

ஆணின்  கை ஒங்க  
  பெண்ணின் சினம் பொங்க 
முற்றியது சண்டை 

ஆணவம் தலை தூக்க 
அடங்காமை தலை விரித்தாட 
 வேறுபாடு சென்றது நீதி மன்றம் .

ஆண்டுகள் பலவாக  ஓட 
வயதும்  கூட அதனுடன் விரைய 
பிரிவும்  நிரந்தரமானது 

மறு முறை திருமணம் 
வேகமாக அரங்கேற 
அறுத்துக் கட்டுவது  வழக்கமானது 


அன்று சாதகம் சொன்ன 
 பொருத்தங்கள் அனரத்தமாக  போக  
மண  முறிவு ஏற்பட்டது. 


இன்று பொருத்தம்  பார்க்காத 
இரண்டாம் கல்யாணம்
மன ஒற்றுமையை    உண்டுபடுத்துகிறது .

என்னவென்று சொல்லப்   புரியவில்லை 
 ஏன்  என்று அறிய முடியவில்லை 
எப்படி என்று தெளிய இயலவில்லை 





உன் பெயர் என்ன ?

காதிலே பூ  அழகாகச் சுற்றுவதில் திற னுடன்
கண் கட்டி வித்தையிலே  சிறந்து
முக்கை நுழைக்கும்  வழியிலே  மேம்பட்டு
வாய் வார்த்தையிலே  பொய் புகுந்து
கழுத்தை நொடிக்கு ஒரு தரம் நொடித்து
நெஞ்சிலே நேர்மை இழந்து  சத்தியம் தவறி
கையை நீட்டி மிரட்டி சிம்ம நடை  போட்டு
பேரரசன்  போல் வாழும் மனிதனே
உன் பெயர்  தான்   என்ன ?
நானே  அரசியல் வாதி என்று மார் தட்டினான்


காலனே பொறு

காலனைக் கண்டேன்
 காலை நேரத்திலே
கால் கடுக்க நிற்கிறேனே
உன் வரவை நோக்கி
 என்று கேட்கிறான்


சற்றுப் பொறு  காலனே
காலமும்  நேரமும் கூடட்டும்
வேலையும் முடியட்டும்
வருகிறேன் உன்னோடு
என்று சொன்னேன்.

என்னை இருக்கச் சொல்கிறாயா
காலப் பரிமாணம் புரியாமல் 
நான் வந்தவிட்டால்
 நேரம் முடிந்தது  என்று கொள்
 என்று சொன்னான்


நகைத்தபடியே  பகர்ந்தேன்
நான் காலத்தை வென்றவன்
நீ பொறு என்றால் பொறு
நான் யார் என்று நீ அறியவில்லை
என்று பதிலளித்தேன்

வெகுண்டான் காலன்
எனக்கே தவணை சொல்கிறாயா? என்றான்
நான் தான் மனிதன்    யாவற்ரையும்
தவணை  முறையில் வாங்குபவன்
சாவையும் கூட

Friday, November 1, 2013

எந்தாய் தந்தை முகங்கள்

நான்  அந்த வீட்டிலே பிறந்தேன்
செல்வ மகளாக  வளர்ந்தேன்
 பூவிலும் மென்மையாக  கொண்டாடி
செல்வமும் செல்லமும் ஒருங்கே கூடி
தாயின் அன்பும்  அரவணைப்புடன்  ஆடிப்பாடி 
கண்டிப்பும் கறாருடன்  ஓடி விளையாடி
தந்தையின்  கனிவும் கட்டுப்பாட்டுன்  படித்து சிறக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
மகிழ்வுடன் வளர்ந்து  கல்வியில் மேம்பட
சீருடன் சிறப்புடன்  மண  வாழ்க்கை அமைய 
நான் பிறந்த வீட்டை  விட்டு   விலகினேன்


நாட்கள் செல்லச் செல்ல  அந்த வீடு  மாறியது
இருந்த ஒழுங்கும் நேர்மையும் முற்றும் மாற
பெற்றவர்கள் வாழ்ந்த முறை தலை கீழாக திரும்ப
செழிப்பு வறண்டு  தேய்ந்து  காய்ந்து போக
பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும்  பெருக
செல்வம் சொல்லாமல் . கொள்ளாமல்  ஓட
 என்னோடு  பிறந்தவர்கள்  யாவற்றையும்  கைபற்ற
என் பிறந்த பங்கும் உரிமையும் என்னிடமிருந்து பறிக்க
விழி  பிதுங்கி வழி  நோக  துடித்தேன் நான்
அச்சமயத்தில்  ஏனோ 
எந்தாய் தந்தையின்   முகங்கள்  தோன்றி மறைந்தன