Tuesday, December 31, 2013

மனதில் பதிய பாடிய பாடல்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அளவு என்று இருத்தல்  அதற்காகத்தானோ
அளவுடன்  நிறைவாக இருத்தலே நியமம்.

அளவாக   உணவருந்தி  ஆரோக்கியமாக  வாழ்தல்
அளவுடன்  உடற் பயிற்சி செய்து திடமாக இருத்தல்
அளவு   என்றாலே கச்சிதம் என்று கொள்.

செலவில் அளவு தொலை தூரம் செல்லும்
அதிகச் செலவு இன்னல் பெருக்கும்
அளவு கோலே  எவற்றுக்கும்  துணை என்று நினை
.
தோற்றத்தில்  அழகு   அளவுடன் அமைய
திருத்தம்  என்று சொல்லே அளவாக அமைதல்  என்று பொருள் பட
 எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பது  அளவு . என்று அறி

பழக்கமும், பழகுதலும்  ஒரு அளவுக்குள்ளே அடக்கம் 
தாண்டிப் போயின்  அது கொச்சை படும்  என்று நினைவில் கொண்டு
நிர்ணயமே இங்கு அளவு என்று புரிதல் அவசியம் .


அடக்கமே காணாத  இவ்வுலகு   மாந்தரிடம்
அளவு என்று சொன்னாலே வெறுப்படையும்  மக்கள்
நியாயம் ,நிர்ணயம் , திருத்தம்  என்று சொற்றொடர்கள்
மனதில் பதிய பாடிய பாடல்.




நீயே தான் !

 காடு மலை ஏறி
 வயல் வரப்பு கடந்து
 ஆறு கடல் தாண்டி
குதித்து வரும் இளவஞ்சிக் கோடியே

வீடு வரை வந்து
 வாசலில் நின்று
கதவைத் தட்டும்
அழகான் பொன் மயிலே


உன்னை எதிர்பாராது
சட்டென்று விழித்து
கண்ணைக் கசக்கும் போது  நின்ற
தேன்  மதுர இசைக் குயிலே


வருக என்று அழைத்து
வாய் நிறைய   வந்தனம் கூறி
மனம் கசிந்து உருகும் நேரம்
 வந்த  கவின் மிகு  பேரொளியே .


எனக்கு வழி  காட்டும் திசையே
என்னிடம் என்ன சேதி சொல்ல வந்தாயோ
என்று நெகிழ்ந்து நெக்குருகி நின்ற வேளையிலே
என் திவ்விய  திருமுகமே  திரு வாய்   மலர்ந்தாய் .

புன்னகையுடன்  வாய் திறந்தாய்  பின்
அருளினாய்  யாவற்றையும்  நிறைவுடன்
அள்ளிக் கொடுத்தாய்   குறைவில்லாமல்
கூத்தாடினேன் கொண்டாட்டத்தோடு
உன்னைக் கண்ட களிப்பிலே .


நீ யாரென்று எனக்கு தெரியவில்லையே
நீ யாரை இருந்தாலும்  சரி  என்ற போது
 என் நெஞ்சம் சலனமில்லாமல்  பேசியது.
இந்நேரம் நீ எதிர் கொண்டது  உன்னேயே  தான்



இது ஒரு வகை மண் வாசம். .

.பெருந் தொழிலுக்கு கைமாற்று வாங்கினான்
சிறிய விகிதத்தை   இழந்தான் தொழிலில்
 இருந்தும் பேசப்பட்டான் கடன்காரன் என்று .

பேசினவர்கள்  வேறு   யாரும் இல்லை
அவன் தன உடன் பிறந்தவர்கள்
கொக்கரித்தார்கள்  இவனைப பார்த்து

கேலி பேசினார்கள் வெகுவாக
ஏளனம் செய்தார்கள்  மிகுதியாக
அவர்களின் நிலை அறியாமல்

பட்டறி வும் படிப்பறிவும்  இல்லாதவர்கள் 
அட்டகாசமாக  சிரித்தார்கள்  ஆர்ப்பரித்தார்கள்
குடும்பச் சொத்தை  அப்படியே அபகரித்த பின்.

நீடித்தாதா  அவர்கள்  கேளிக்கை ?
வீழ்ந்தார்கள்  கடன் சுமையில்
நசிந்து கொண்டிருக்கிறார்கள்   தற்போது

பே சப்பட்டவனோ    தொழிலைச்  சுருக்கி
 வாங்கிய கை மாற்றை  அடைத்து  அமைதியாக
 வருமானத்தைப்  பெருக்கி  வாழ்கிறான்

பெருஞ் சொத்து மிஞ்சினது  அபாரமாக
பெருமிதம் பொங்க  பெரிதும் மதிக்கப்படுகிறான்
மதிப்பும் பெருமையும் பெருக  வாழ்கிறான்  அடக்கமாக

கை தட்டினவர்களுக்கு  இன்று தட்ட ஏதுமில்லை.
 வஞ்சித்தவர்கள்  இன்று  நிற்கிறார்கள் தெருவிலே
.அபகரித்த சொத்து இன்று கை விட்டுப்  போய்  விட்டது.

தடுமாறுகிறார்கள்  தாறு மாறாக இப்போது  முற்றிலும்
பணத்திற்கு பேயாக அலைந்தவர்கள் இப்போது இழந்தார்கள்
பணத்தையும் பெயரையும்  ஒருங்கே

இது இதிகாசமோ காவியமோ அல்ல
இது நாம் யாவரும் காணும் நிகழ்வு
செப்புகிறேன்  கவிதை வடிவிலே  கண்ணால்
 கண்டதை என் அறிவிற்கு எ ட்டிய வகையிலே.


.




Monday, December 30, 2013

என்னுடைய குட்டிப் பூ

காட்டிலே ஒரு பூ
அழகான் பூ பூத்தது
அது காட்டுப் பூ.

சேற்றிலே ஒரு பூ
 செம்மையான பூ கிடந்ததது
அது சேற்றுப் .பூ

தோட்டத்திலே ஒரு பூ
வெளிர் நிறத்தில் விரிந்தது
அது தோட்டப் பூ


விட்டிலே ஒரு பூ
என் வயிற்றில்  உண்டானது
என் குட்டிப் பூ .

பூத்து குலுங் கியது
படுத்து தவழ்ந்தது
 நடந்து ஓடியது.

படித்து சிறந்தது
மனம் புரிந்தது
என்னை மறந்த்தது.
 
தன வீடு தன குடும்பம்
என்று வாழ்கிறது
ஆனந்தமாக .

மனம் பரப்பி
இனத்தை பெருக்கி     
 பிஞ்சும் பூவுமாக தழைக்கிறது .

மரமும் கொடியுமாக
வாழ்வாங்கு  வாழ்கிறது
என்னுடைய குட்டிப் பூ

     

நட்சித்திரங்களே நட்சித்திரங்களே

 வானில் மின்னும் நட்சத்திரங்களே 
இரவை  ஒளி மயமாக்கும்  சித்திரங்களே  
துள்ளிச் சிதறும் கோலங்களே 
நீவீர்   எவ்வாறு நின்று நிடிக்கிறீர் ?  

கருமையில் தோன்றும் அழகுக் கூட்டமே 
தீப் பொறி போல் வட்டமிடும் சுடரே  
அங்கு ஒன்று இங்கு ஒன்றாகச் காட்சித்  தரும் பாங்கே 
நீவீர்  எப்படி திரண்டு  நிற்கிறி ர் ?

கார்மேக வண்ண மேகக் குவியலிலே 
ஓடி விளையாடும்  மினமினி தொடர்களே 
அவ்வப்போது கண்ணா முச்சி ஆடும்  விழிகளே 
நீவீர்  என்ன விதத்தில் தோன்றி மறைகிறிர் ? 

நட்சத்திரங்களே  வண்ண வானவில்லில் 
கோலோச்சும்  ஆனந்தச்   சிகரங்களே 
அற்புதமான  பொலிவிலே மெருகூட்டும்  திருவே   
நீவீர்  எங்கிருந்து இவ்வனவு அழகை கொணர்ந்தீர்?



Sunday, December 29, 2013

கண் ஆயிரம்

கண் அசைவிலே உலகைக் கண்டேன்
கண்ணால் உலகை அளந்தேன்
 கண் மூடி திறப்பதற்குள் மாற்றங்களை
கண்டு மலைத்து நின்றேன்.  

கண் பார்வையில் குற்றம் இல்லை அறிந்தேன்
மனக்கண்ணில்  குறைபாடு   என்று தெளிந்தேன்
கண்ணே மணியே என்ற  கொஞ்சலிலும்
 கண்ணையே  கண்டேன்.

கண்  பட்டது என்று   கூறக் கேட்டு ள்ளேன்
கல்லடி பட்டாலும் கண்ணடி கூடாது
 கண்டேன்   உண்மையை வாழ்விலே 
கண்ணின்  வீச்சைத்   தவிர்த்தேன்

கண் ஆயிரம் பேசும் காதலோடு .
கண் ஆயிரம் கட்டளை இடும் அதிகாரத்தோடு
கண் ஆயிரம் விளக்கம் தரும் உவகையோடு
கண் கோடி கனிவை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியோடு..

கண்களைப் பற்றி பாடும் போது
கண்ணிலே தோன்றும் ஒளி  மலர 
கண்ணிலே   கண்ணீர்  வழிய
கண்ணோடு  தெரியும் பெருமை  பொங்க
கண் இறும்பூது  எய்துகிறது  



காதல் எழுத்திலே

கண்ணிலே காதல் மின்ன
நெஞ்சிலே உவகை   கூட
நின்றாள்  மரத்தடியிலே 

கண்ணிலே குறும்புத்  தெரிய
 நெஞ்சிலே மகிழ்வு கூட
  மறந்து நின்றான் மரத்தின் பின்னாலே .

வழி மேல் விழி வைத்து
கால் கடுக்க நின்றாள்
வண்ண மயில்  அவனுக்காக .

 பின் நின்று முன் வரத் துடிக்க
 கால் முன் வர மறுக்க
கட்டிளங் காளை    மறுகினான் அவளுக்காக

கண்ணா மூச்சி   விளையாட்டுத் தொடர
அவளும் அவனும் உருக
வெளிக் கொணர முடியாத  தருணம்

எத்தனயோ காதல் இவ்வாறு அழுந்தி
மனதின் ஆழத்தில் உழல
காவிய்ங்கள் உருவாகி  வலுப்பெற

வாழ்க்கையில் காணாத சுகத்தை
 எழுத்தில் கண்டோம் 
மனம் கண்ட களிப்பு .




Saturday, December 28, 2013

நன்றியுமில்லை

என்னை நடத்திச் சென்ற கால்கள்
 தோய்ந்து நொந்து அழுகின்றன
ஏன்  எந்த அழுமுஞ்சி ஆட்டம் ?
என்று சற்று கோபத்துடன் எண்ண
கால்களோ மேலே நடக்க மறுக்க
அவற்றை ஏளனத்துடன் நோக்கி
இரைந்தேன் சீற்றத்துடன்
 என் வயதை மறந்து
கால்கள் செய்த தொண்டை  மறந்து
 வேகமாக நடந்த  நாட்களை மறந்து
உலகத்தை சுற்றியதை   மறந்து
பாராட்டத் தோன்றவில்லை
பழிக்கத்  தோறுகிறது
மனித மனமே
உனக்கு ஈவில்லை
இரக்கமில்லை
 நன்றியுமில்லை.  

வருத்தம் மிகுகிறது

நாகரிகமான இந்நாட்களிலே
செயல்கள் பல நாணச  செய்ய 
தலை குனிந்து  செல்ல  வேண்டிய  போது
நாம் நிமிர்ந்து நடக்கிறோம் .

சுற்றுப்புறத தூய்மை அறவே நினையாமல்
எவ்விடத்திலும் காறித் துப்பி
நினைத்த் இடத்தில் இயற்கை உபாதைகளை  கழி த்து 
நாம் பெருமையுடன் நடக்கிறோம்.

 கழிவுகளை அகற்றாமல் தெருவில் குவித்து
  எதையும் எங்கு  என்று பாராமல் எறி ந்து
 அவற்றை எரித்து கரும் புகையை உண்டாக்கி
நாம் பெருமிதத்துடன் நடக்கிறோம்..

நமக்கு ஏன் இவ்வளவு  பெருமை ?
நமக்கு எதற்கு இத்தனை மகிழ்ச்சி ?
நம்மை எண்ணினால் வருத்தம் மிகுகிறது
இருந்தும் நாம் தலை தூக்கி நடக்கிறோம்.


Friday, December 27, 2013

தண்ணீர் எங்கே?

தண்ணீர்  எங்கே  என்று ஏங்குகிறோம்  
தண்ணீருக்கு வழியில்லாமல்  தவிக்கிறோம் 
நீர் நிரம்பிய ஆற்றைக்  கண்டில்லோம்
கேணிகள் இன்று எங்கும் அறியோம்.


கிராமத்துக்கு மூன்று   கண்மாய் 
 வீதிக்கு  ஒரு நல்ல தண்ணீர்  கிணறு 
 ஊரைச் சுற்றி ஒரு  வற்றாத ஆறு 
யாவையும் ததும்பும் நீர் வளத்தோடு..
கண்டோம் அன்று.

வீட்டிற்கு நான்கு ஆழ்கிணறு 
வீதிக்கு ஓர் அடி குழாய் 
ஊரைச்   சுற்றும் ஒரு வறண்ட ஆறு 
யாவற்றிலும்  வற்றிய  ஊத்து
காண்கிறோம் இன்று.


தண்ணீர்ப பந்தல் அமைத்து  
வரு வோருக்கெல்லாம்   தாகம் தீர் த்து
மகிழ்ந்த தமிழர்களை  இன்று கண்டில்லோம் 
குடத்துனும் பானைகளுடனும்  அலையும்
பெண்டிரைக்   காணும் போதில் துணுக்க்குற்றோம்.

ஏன்   இந்த நிலை ? என்று எண்ணும் போது  
 நம்முடைய   அளவில்லா ஆசையும் 
 வளமான நிலத்தை  பாழாக்கும்  நோக்கும்  
 எதிலும்  பணத்தைக்  கருதும் உணர்ச்சியைக் கண்டு 
வகையறி யாத  வேதனையுடன் கலங்குகிறோம்     

 
 
 

Wednesday, December 25, 2013

ஒலியும் ஒளியும்

ஒலிகளின்  ஓசையில் 
மயங்கி நின்றேன்
ஒளிகளின்   பிரகாசத்தில்
தோய்ந்து நின்றேன் 
ஒளியும் ஒலியும் 
எழுப்பும் விகிதங்களில்
மலைத்துப்  போய்
சிலிர்த்து  சமைந்தேன்.

ஒலிகள் பாட்டாகவும் இசையாகவும் 
 குரல்  வழியாகவும்   
கருவிகள் மூலமாகவும்   
பறவைகளின்   ஓசையாகவும் 
குழந்தையின் மழலையாகவும் 
பெரியோர்களின் ஆசியாகவும்
நோக்கி வரும் போது
சிலாகித்து   மயங்கினேன்.


ஒளிகள்   வண்ண மயமாகவும் 
கண்களுக்கு   அழகாகவும்
குளிர்ச்சியாகவும்  குளுமையாகவும் 
செடி கொடிகளின் பசுமையும்
கடலின் நீல நிறமும் 
ஆகாயத்தின் வெண்மையும்  
பரந்த மணற்பரப்பின்   செம்மையும் 
கண்டு புளாங்கிதம் அடைந்தேன். 


ஒலிகள் வித்தியாசமான் 
 சத்தங்களி எழுப்பி 
கூ ச்ச்சலும் கத்தலுமாகி 
ஒளிகள்  கண்ணைப்  பறிக்கும் 
விதமான  கோலங்களில்  தோன்றி  
விகார விகிதங்கள் கூடி  
செவித்திறனும்  கண் பார்வையும் 
பறிபோகும்  நிலை அறிந்து 
மனம் பேதலித்து பின்னடைந்தேன்.

மனிதனின்அறிவின் மீது  
ஏள்ளளவும்  ஐயமில்லை எனக்கு 
அவனின்  செய்கையில் 
தோன்றும் அலட்சியமும் 
தான் தான் என்ற நினைவும் 
மற்ற எதைப்  பற்றிய சிந்தனையும் 
அறவே  மறந்த விட்ட தன்மையும் 
என்னை வெகுவாகப் கலங்க வைக்கிறது 
கை பிசைந்து நிற்கிறேன்  தன்னாலே 

நிலைத்து நீடுழி வாழும்

 காதல் புனிதமானது
நின்று நிதானமாக
 தங்கு தட்யில்லாமல்
நல்கி  நயந்து 
கூடி கொண்டாடி
 வரும் நேசம்
பாசமாகி  பண்பாகி
 விரிந்து நெடிதுயர்ந்து
 பயணமாக வரும்  ஒரு பற்று
 காதல் எனக் கொள்வோமாக .

காதல் கொச்சையாகும் நிலை
உடலும் உடல் சார்ந்த  போதில்
சிற்றின்பம் பெரிதாகும் நேரம்
 இச்சை  மிகையாகும் காலம்
இலை மறை காய்    மறைவாக
நிற்கும் தோதில் மாறி
 வெளிச்சம் காட்டும் வகையில்
 வெளியேறும் நிகழ்வு
ஒரு வெறுப்பான வினையை
எதிர் கொள்ளும் நிகழ்ச்சி.

காதல்
 புனிதம்  தோற்றும் தெய்விகம்
 அளிக்கும் சிறப்பு  அருமை
 தரும் மேலாண்மை  பெருமை
சாலப் பொருத்தம் பெறும் வளமை 
அன்பின் பரிணாமங்களை
வியந்து போற்றி விரிந்து
  அரவணைத்து ஆதரித்து
அழகான  நெக்குருகும்
விதமான   காதலே
தொடர்ந்து நிற்கும்  எப்போதும்,

துவளும் மனம்

கலையும்  கவியும்
ஆடலும் பாடலும்
வண்ணமும் ஓவியமும்
பேச்சும் நடிப்பும்
 மொழியும்  விஞ்ஞானமும்
தழைத்து  ஓங்கும்
 தமிழ் நாட்டில்
அரசாங்கமும் அரசியலும்
ஆட்சியும்  அலுவலர்களும்
நேர்மையும் நியாயமும்
தன்மையுடன் இல்லாததால்
செழிப்பு இல்லை
முன் னேற்றம் இல்லை
பின் தங்கி பின்னடடைந்து
சிதைந்து கலங்கி
சீர்ர லையும் அவல  நிலையை
காணும் போது
மனது துவண்டு
துடிக்கிறது பெரிதுமாக..


  


Tuesday, December 24, 2013

உன் கை உனக்கு உதவி.

தகிக்கும் வெயிலிலே 
 கொந்தளிக்கும் மனதுடன் 
 தணியாத  கோபத்துடன்  
வீறு கொண்டு எழுந்தான்
 


சாடினான் தீங்கு இழைத்தவர்களை
வாழ வும் மாட்டீர்கள்   நிறைவுடன் 
 வாழ விட மாட்டீ ர்கள்  நல்வழியில்
ஆவேசமுடன்   பேசி கலங்கினான் 


கேட்டவர்கள் நியாயத்தை உணர்ந்தார்கள் 
அவன் மீது இரக்கம்  கொண்டார்கள் 
பிற எதுவும் செய்ய முடியாமல் நின்றார்கள் 
அவன் பாட்டை அவனே மேற்பார்க்க வேண்டிய சூழ்நிலை.


இது தான் உலகம் பொதுவாக  என்று கொள் 
இன்னல் என்ற பொது யாரும் துணை வர மாட்டார்கள்
ஆதரவை கனவிலும்  நினனக்காதே 
உன் கை உனக்கு உதவி என்று கொள். 


பாடம் கண்டு மிரளாதே  மகனே  
புரிந்து செயல் படு தங்கமே 
நின்று நிதானமாக வாழ கற்றுக் கொள் 
இதுவே நிறைவான வழி  என் கண்ணே.
 
 

Monday, December 23, 2013

தவிப்பது

பெற்ற மூவருக்கும்
 ஒருங்கே யாவும் செய்து 
ஒன்றாக நினைத்து
வேறுபாடு ஏதும் இல்லாமல் 
பாகுபாடு  எவையும் காணாமல்  
ஒன்றுக்கு   இணையாக 
மற்றொன்று என்று கருதி 
 வித்தியசாம் இன்றி  நடத்தி
வளர்த்து நிலைப்படுத்தி 
நிமிரும்  போது 
எனக்கு தான் குறை வைத்தாய்  
எனக்கு அதை கொடுக்கவில்லை 
எனக்கு அதைச் செய்யவில்லை  
என்று குரல் எழும்பியது 
 மனம் நோகாமல்   என்ன செய்வது ?
பெற்றவர்கள் காயப்படுத்திய போதில்  
பொறுத்துக்கொண்ட மனது 
தற்போது பெ ற்  றது   சாட்டும்  குற்றச் சாட்டை 
தாங்க முடியாமல் தவிக்க 
பெற்றவர்களும் பெற்ற துகளும் 
படுத்தும் போது 
மனம் கல்லாகி  மாறியது 
 சலி த்துக் கொண்டே வாடி
 தவிக்கப் போகுவது  திண்ணம் 





தவிப்பது 

Sunday, December 22, 2013

அதவே சரி

காலில் வலி
தாங்கவில்லை
 கையில் கடி
பொறுக்கமுடியவில்ல
 மூக்கில் நெடி
 உணர இயலவில்லை
கண்ணில்  துடி
தடுக்கத தெரியவில்லை
தலையில் வெடி
சத்தம்  அடங்கவில்லை 
மனதில்  படி
அமைதி இல்லை
 சட்டென மடி
 அதவே சரி 

Saturday, December 21, 2013

அன்பே அழகே ஆராவமுதே

காணவில்லை உன்னை
காண விளைந்தேன் உன்னை 
  கண்டு கொள்ளவே  இல்லை நீ 
கண்டும் காணாமல் போனாய்

கோபம் தான் என்னவோ?  
குறை தான் எதுவோ?   
சொல்லாமல் செல்கிறாயே கண்மணி  
 ஏன்  என்று புரியவில்லயே!.

உன்னை  கண்ணின் இமை போல் காத்தேன் 
பூவாக எண்ணி ஆராதித்தேன் 
பொன்னாக கருதி மயங்கினேன்
  ஏன் இந்த பாராமுகம்?  

நான் செய்த தவறு தான் என்னவோ?
என் குற்றம் ஏதேனின் சொல் அன்பே 
திருந்தி வாழ்  ஆர்வம் கொண்டுள்ளேன் 
இந்த  ஒரு தடவை  மன்னிப்பாயாக 

தெரியாமல் பல் நிகழ்வுகள் காயப்படுத்தியி ருக்கும் 
  தெரிந்து சில நிகழ்ச்சிகள் புண் படுத்தி யிருக்கும் 
அறியாமல் செய்த பிழைகளை  மன்னித்து  
அறிந்து செய்தவைகளை கண்டித்து  
என்னை உன்னோடு பிணைத்துக்  கொள்ளடி  கண்ணே !


Thursday, December 19, 2013

நான் யார்?

நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை
நான் ஒரு மகள்  இருவருக்கு
ஒரு மனைவி ஒருவருக்கு
ஒரு தாய் மூவருக்கு
ஒரு  சகோதிரி ஐவருக்கு
என்று  புரிந்து கொண்டே.ன்.
ஆனால் உண்மையாக  நான் யார்   புரியவில்லை.

இத்தனை பேருக்கும் என்னை நினைவிருக்கமா?
நான் செய்தது நினைவில் தங்கியிருக்குமா?
 என்னை மறந்து வாழ்ந்தேன்
என்னை அழித்து வாழ்ந்தேன்
என்னையே அளித்தேன் அவர்களுக்காக
இன்று நான் இல்லை அவர்கள் மனதில்  
   நான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது .

எனக்காக வாழப் போகிறேன்
மிஞ்சியுள்ள காலங்களில்
எனக்கு எனக்காகவே வாழ்வேன்
 எழுதி கொண்டே படித்து
படித்துக் கொண்டே எழுதி
எழுத்வதே இனி என் பணி 
கண் மூடும் தருவாய் வரை


Wednesday, December 18, 2013

அலைந்தான் எதற்காக ?

ஓடி ஓடி உழைத்தான்
 நேரம் காலம் பார்க்காமல்
பணம் ஒன்றே குறியாக
நல்லியல்புகளை மறந்தான்
நல்  வாரத்தைளை களைந்தான்
 நன்னடத்தையை  உதறினான்


வென்றான் ஈட்டுவதில்
எவ்வழி என்று பாராமல்
 நல்வழி யில் சில கோடி
மற்ற வழியில் பல கோடி
பெருக்கினான் செல்வத்தை
தங்கமும் இடமும்மாக .


துவண்டான் வாழ்க்கையில்
இழந்தான் மனைவியை
தீராத நோய்க்கு
மீறின குழந்தைகளை
 தாரை வாரத்தான்
தீய பழக்கங்களுக்கு .


மிஞ்சியது பணம் மட்டுமே
தனிஆளாகித்   திரிந்தான்
மனதில் நிம்மதி இல்லை
பையில்  பணம் வழிய
தளர்ந்தான் வெகுவாக
 இறந்தான் யாருமில்லாமல் .

Monday, December 16, 2013

திருமணம் இன்று துர்மணம்

இரு மனம் இணையும் போது
மிகுந்த மணம் உண்டாகும் நேரம்
கலந்து உறவாட எண்ணும் வேளை
கூடி மகிழும் காலம்
நடை பெரும் நிகழ்வு 
திருமணம்  என்ற ஒரு காட்சி
திரு என்று அ டை மொழி
 அருளைக் குறிக்க
மணம்   என்ற சொல்
 வாசம் என்பதை எடுத்துரைக்க
 வாசம் நல்ல வாசனையை தெளிக்க
 வாசம் ஒரு இருப்பிடம் என்று கொள்ள
 அருள்  நிறைந்த இருப்பிடம்
திருமணம் என்று கொண்டு
சிறப்புடனும் சீருடனும்
காதலுடனும் இணைந்து
வாழ பணிப்பதே
திருமணம்  ஆகி வந்தது
இன்று அது உடைபட்டு
சட்டை மாறும் நேரம் கூட  தாங்காமல்
விட்டு விலகி முறிந்து
தூளாகி பொடியாகும் போது 
அது  துர்மணம் என்று கொள்ள நேரிட
வகையான  வாழ்வு  தொய் ந்து
துவண்டு நசிந்து போகும் நிலை
மனத்தை பாதித்து  வலியை .
செவ்வனே உண்டாக்குகிறது


காதல் என்றால்

காதல் வரும்முன் 
திருமணம் வந்தது 
திருமணத்தை அறியும் முன் 
குழந்தை பிறந்தது 
குழந்தையை வளர்க்கும் முன்  
அடுத்து ஒன்று உண்டானது 
அதை பெற்றவுடன்  
 மற்றொன்று பிறக்க நேரிட்டது 
 குடும்பம் பெருத்தது 
பொறுப்பும்  வந்தது 
உழைப்பு மிகுந்தது 
உடல் பாதித்தது 
வயது ஏறியது 
முதுமை  ஆட்கொண்டது 
கை நடுங்கியது 
அணைக்க முயலும் போது 
கால் பின்னியது 
அருகில் நெருங்கிய போது 
உடல் துவண்டது 
அருமை அறியும் போது 
கண்ணை  மூடும் வரை 
 காதலிக்கவே முடியவில்லை .
 

பாடம் புகட்டிய விதம்

அழகிய மலர் ஒன்று கண்டேன்
நறுமணம் பரப்பும் விகிதத்தை நோக்கினேன்
 பட்டு இதழ் ஒன்றை தொட்டேன்
பஞ்சை விட மென்மையான  நிலையை அறிந்தேன்
பச்சை இலை ஒன்றை  தடவினேன்
வழுக்கும் நிமித்ததை   தெரிந்து கொண்டேன்
நீண்ட கொடியை   வருடினேன் 
நெக்குருகும் தன்மையை உணர்ந்தேன்
பொடிதான வேரை துழா வினேன் 
  அதன் பிடிமானத்தை எண்ணி வியந்தேன்
சிறு செடி என்று நினைத்தேன்
அது எனக்கு பாடம் புகட்டிய விதமே  அருமை



மனமே, மனமே !

மனமே நீ எங்கு இருக்கி  றாய் ?
 மனிதனிடம்  என்று நீ சொல்வாய்
எந்த  மனிதனிடம்  காண்போம் உன்னை ?
நின்று நிதானமாக சொல்
 நான் காத்திருக்கிறேன் .


யோசிக்கிறாய் பலமாக
 நினைத்துப்  பார்க்கிறாய்    வெகு நேரமாக
உனக்கே குழப்பம்  வருகிறது
என் சொல்வேன்  மனமே
நான்  இன்னும் காத்திருக்கிறேன் .


காத்திருக்கும் போது நினைக்கிறேன்
மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இருக்கிறதா ?
இருந்தால் ஏன் இவ்வளவு கலகம், யு த்தம்
பொறாமை,  திருடு, பேராசை  என்று
நான் திரும்பிப்  பார்த்தேன் .


மனம், மனம் என்று கூக் குரலிடுகிறேன்
எங்கும் காணேன்  தேடினேன்  எங்கும் இல்லை
ஏன்  ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய் ? மனமே
அறிந்து  கொள்கிறேன் சடுதியில்
 மனம் என்று ஒன்று இன்று இல்லை


Saturday, December 14, 2013

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணாம்
எழுவதாம் கல்யாணாம்
எ ண் பதாம் கல்யாணாம்
தம்பதியர்கள்  முதுமையில்
 கல்யாணம்  ஏன் என்றதற்கு
பிறர் பார்த்து மகிழ்வதற்கு
பீடை கழிவதற்கு 
பிளளை கள்  கட்டாயத்திற்கு 
 ஆயுசு விருத்திக்கு 
என்று பல காரணங்கள்
என்று பல் காரியங்கள்
 என்று பல ஆசைகள்
 என்று அடுக்கிக்கொண்டே போவது
இன்று நடை முறை  .
அறுபதுக்கு மேல்  வாழ ஆசை
 எழுபதுக்கு பின் ஓட  ஆசை
 என்பதுக்கு மேல் குதிக்க ஆசை
 நூறுக்கு மேல் கும்மாளமிட ஆசை
என்று பல குரல்கள் ஒலிக்க
 பல  பேச்சுக்கள் எழ
பலர் கேள்விகள் எழுப்ப
இதுவும் இன்று நடப்பில்  தெரிய
 எதற்கு  இவ்வளவு ஆர்ப்பாட்டம்
 நினைக்காமல்  இருக்க முடியவில்லை
எதற்கு இவ்வளவு செலவுகள்
நினைத்து பார்க்க முடியவில்லை
அவரவர் விருப்பங்கள்
 அவரவர் வாழ்விலே   வெளிப்பட
யாரும் யாரைப் பற்றி  பேச உரிமை இல்லை 
என்ற  கருத்தோடு ஒதுங்க வேண்டும்.
இந்  நோக்கோடு செயல் பட்டால்
நல்லது என்று தோன்றுகிறது .



 

Friday, December 13, 2013

சமுதாயம் எங்கே செல்கிறது ?

சற்று முன் கண்ட நிகழ்வு
மனக் கண்ணை விட்டு அகல மறக்க
கண் முன்னே நடந்த நிகழ்ச்சி
பொய் என்று சொல்வதை கேட்ட பின்
மனம் துடிக்க கத்த வேண்டும்  என்று தோன்ற
வெடிக்க முடியாத  சூழ் நிலை அழுத்த
குமைந்த நெஞ்சோடு  விடு திரும்பி
வெதும்பும் உள்ளத்தோடு சாய்ந்து
 நிலையை எண்ணி எண்ணி உருகி
 அக்காட்சி   திரும்பி திரும்பி  தோன்ற
என்னே என்று அறிய முற்படும் உங்களுக்கு
சொல்ல விளையும் நேரம் வந்து விட்டது
ஒரு பெண் தன கணவனை   தாக்க
 அவன் குடி வெறியை  பொறுக்க  முடியாமல்
அவனின் அட்டுழியத்தை தாங்கிக் கொள்ள இயலாமல்
அவனை நிலைக்கு கொண்டு வர  அடித்தால் பளாரென்று
 அவனின் பொருத்தமற்ற செய்கையை  மறைக்க
அவளின் சீற்றத்தை அடாவடி  என்று பொருள் பட
ஊதி பெரிதாக்கி அவளை நிலை குலைய வைத்து
தவறின அனை மன்னிக்க விளையும் சமூகம்
திருத்தின மனைவியை அலங்கோலப்படுத்தும்  சமுதாயம்
எங்கே செல்கிறதோ என்று மனது படுத்துகிறது என்னை .


Thursday, December 12, 2013

தலை வாயில் நுழைவாயில்

தலை வாயிலில் நின்றாள் 
எழில் மங்கையொருத்தி 
கடைக்கண்ணால் பார்த்தாள் 
அழகிய வாலிபனை 
அவளும் நோக்க 
 அவனும் நோக்க 
கண்ணும் கண்ணும் பேச  
அவள் வெட்கி  நாண 
அவன் விம்மி சிலர்க்க்
காதல் வெள்ளோட்டம்  கண்டது .

தலை வாயில் நுழை  வாயிலாக மாற 
செம்மை படர நங்கை நல்வரவு கூற 
விருப்பத்துடன்  அவன் தன சம்மதம் அளிக்க 
பெற்றோர்களோ  தடைசொல்லி கோபம் அடைய
நிரோடை போன்ற காதல் தெளிவற்று நிற்க 
அவள் கண்ணீர் சொரிய  
அவன் வேதனையடைய  
கண்ணும் கண்ணும்  கரைய 
காதல் மெல்லோட்டத்தில் வந்த வழியே திரும்பியது.



தலை வாயில் நுழைவாயில் 

Wednesday, December 11, 2013

என் தாய்த் திரு நாடு

கவின் மிகு மலையும்
நிலவண்ணக்  கடலும்
நீண்டமணற்  பரப்பும்
பசுமையான நிலமும்
நெடிதுயரந்த  மரங்களும்
கொட்டும் அருவிகளும்
சலனமின்றி ஓடும் ஆறுகளும்
அமைதியான மக்களும்
நிறைந்த தமிழ் நாட்டிலே
 செம் மொழி பேசும் போதினில்
கனிந்துருகி அழகான நடையிலே
அருமையான சொற்களிலே 
நெக்குருகி   பாடிய  பாடல்கள்
எத்தனை எத்தனையோ
திருவாசகத் தெள்ளமுது
உருகாத  மனத்தையும்   உருக்க  
தேவார   சொல்லமுது
மனதில் நுழைந்து  பரவசமுட்ட 
தெய்விகம் கமழும்  இத் திரு நாட்டிலே
விஞ்சும் அருளுனர்வும்
எஞ்சும்  நெறி முறைகளும்
நெஞ்சை சொக்க வைக்க
என் தாய் திரு நாடு  இதுவே
 என்று பெருமிதம் கொண்டு
வலம்   வரும் என் போன்றோர்க்கு
எளிமையான  வாழ்வு  எழுத்தால் வலிமை 
பேச்சால் சுகம் விளைய  இதம் தவழ
  வேண்டும் என்று வேண்டி நிற்கிறேன்
 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி 








ஆண் என்ன பெண் என்ன ?

 மகனைப்  பெற்றவள் மக ராசி 
 அவளைக் கை எடுத்துக் கும்பிடும்  மண் ராசி
அளவில்லா மகிழ்ச்சியை தரும் மனராசி
அவளே  ஒரு முக ராசி
அவள் ஒரு பேரரசி .

மகளை ஈன்றவள்  ஒரு மூதேவி 
 அவள் வெட்டி சாய்க்கும்  ஒரு பெருந்தேவி
மனம் குமறி   வெதும்பி  அழுகும்  சிறு தேவி
அவளே ஒரு  பொருந்தாத  தேவி
அவள் ஒரு  வீண்டிக்கும் தேவி 

மகனோ மகளோ  என்று  விழும்  திரை 
மகன் என்றால் வெகு  நிறை
மகள் என்றாலே   படு  குறை
பிள்ளையே  ஒரு வரம்  என்கிறது மறை
குழந்தையே  ஒரு மட்டில்லா  இன்பம்  என்று பறை .


Tuesday, December 10, 2013

கண்டேன் உலகை அவ்வவாறே

அடக்கம் காணேன் எங்கும்
அமைதி காணேன் இங்கும் 
 சாதனைகள் செய்வோர் 
ஆட்டமும் பாட்டமும் 
 கலந்த அதிகாரம் 
கண்டேன் இங்கும் அங்கும் .

கண்ணிலே நீர் எதற்கும் 
முகத்திலே கவலை  இதற்கும் 
காரியம் கை கூடா  விடில் 
துயரம் அதி களவு பொங்க
நெஞ்சம் விம்மி வெடிக்க  
கண்டேன் அதற்கும் இதற்கும் .

சீற்றம் எழும்பியது சட்டெ ன்று  
சென்ற வழி  திரும்பியது  பட்டென்று 
நினைத்தது  நடக்கா விடில்
அடிதடியில்  இறங்கி கலகம் கொணர    
கொலை வெறியில்  களமிறங்கி 
கண்டேன்  குருதியும் சாவும் ,

சுற்றுகிறது  உலகம்  எப்போதும்
பகலும் இரவும் மாறுகிறது   எப்பொழுதும் 
கடலும் கொந்த ளிக்கிறது அவ்வப்போதே 
காற்றும் புயலாக சீறுகிறது  சில நேரங்களிலே 
நெஞ்சமும் ஏறி   இறங்குகிறது  எந்நேரமும்
 கண்டேன்  விநோதங்களை  அந்தப் போதினில் 


Saturday, December 7, 2013

பாக்கியம் இல்லை

சென்ற ஆண்டு மழை போதவில்லை  
இந்த ஆண்டு  மழை இல்லவே இல்லை  
அடுத்த  ஆண்டு மழை  இருக்குமோ இருக்காதோ 
வரும் ஆண்டுகளில்  மலை ஒரு சொல்  மட்டுமே 
 எத்தனையோ சேதங்கள் பாதகங்கள் கண்டோம் 
இதையும் ஏன்  விட்டு விட வேண்டும்  பார்ப்போம் 
நம்  குழந்தைகளுக்கு  மழை  ஒரு பாடப் பொருள்  மட்டுமே 
கண்டு அநுபவிக்க அவர்களுக்கு பாக்கியம் இல்லை 

Thursday, December 5, 2013

குப்பையும் வார்த்தையும்

குப்பையைக்  கொட்டினான்
 கூட்டி அள்ளினான
இடம் சுத்தம் ஆனது

வார்த்தைகளை  கொட்டினான்
வம்பை விலைக்கு வாங்கினான்.
இடம் ரண களமாயிற்று.


குமித்து வைத்த  குப்பையை
சேகரித்து தூரப் போட்டான்
இடம் துலங்கியது பளிச்சென்று.

கொட்டிய வார்த்தைகளை
திரும்பிப் பெற முடியாமல்  திணறினான்
இடம் கும்மிருட்டாகி  விட்டது.

குப்பையை விட வார்த்தைகள் மோசம்
குப்பை அழிந்து போகும்  சுவடில்லாமல்
வார்த்தை நின்று நிலைக்கும் அச்சுப பிசகாமல்





 

Tuesday, December 3, 2013

ஆடல் காணிரோ

ஆடல் காணிரோ
திரு விளையாடல் காணிரோ
இன்று நடக்கும் ஆட்டம் காணிரோ

அரசியல் ஒரு சூதாட்டம்
 அங்கு தலைவர்களும் கட்சிகளும்  
ஆடும் வெறியாட்டத்தை  காணிரோ.

வர்த்தகம் ஒரு களியாட்டம்
இதில்  பங்குச் சந்தையிலும் தொழிலும்
 நடக்கும் தில்லு முல்லு  ஆட்டத்தைக் காணீரோ.

கல்வி ஒரு சதிராட்டம்
இங்கு  படிப்புக்கும்  ஆசிரியர்கள்  பணிக்கும்   விலை
பணத்தின் பேயாட்டத்தைக் காணீரோ.

 மக்கள் பாடு திண்டாட்டம்
எதற்கும்  காசு என்ற நிலை  நிடடிக்கும் அவதி
சாமானியனை  ஆட்டிப் படைக்கும் ஆட்டத்தைக்  காணீரோ


Sunday, December 1, 2013

பிறந்து மடிவது நிர்ணயமே

வாடின பூ  என்னிடம் சொன்னது
என் என்னை பார்த்து ஒதுங்குகிறாய் என்று?
நான் வதங்கிப் போனேன் என்று தானே ?
 நான் சருகாகிப் போனேன் என்று தானே ?
 நான் பொலிவிழந்து கிடக்கிறேன் என்று தானே?

நான் பதிலுரைக்கும் முன்
 மீண்டும் பேசியது அழாக்  குறையாக
நேற்றுக்கு முந்திய நாள்  நான்
ஓர் அழகான மொட்டு  விரிய  காத்திருக்க
விடியும்  முன்  மெல்ல விரிந்து விட்டேன்  நேர்த்தியாக


நேற்றைய தினம் அ ன்றலர்ந்த மலராகத்  தோன்றி 
கண்டோரும் காணப் போவோரும்   வியந்து மகிழ
மெலிந்த காம்பிலே மொட்டவிழ்த்து   மனம் பரப்பினேன்
தென்றல் காற்றிலே அசைந்து ஆடி  இதமாகத் தவழந்தேன் 
என் அழகிலே நானே மயங்கி னேன் அன்று போதும்  முழுமையாக .


இன்று நான் ஆகாமல் தரையில்  விட்டேரறியப்பட்டுள்ளேன்
என் நிலைமை கண்டு உனக்கு ஏளனமோ!
 வாழ்வே இது தான் புரிந்து கொள் மானிடனே !
 இன்று இருப்பது நாளை இல்லை  யாவும்
மனிதனும், பொருளும் பிறந்து  மடிவது  நிர்ணயமே 

 




என்னே ஓர் அற்புதம் !

பே ரிரச்சலடுன் ஆடிப் பாடும் கடலே
 உன்னிடையே மேலும் கீழும  ஏறி இறங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  கும்மாளுமிடுகிறாய்?

குமறிக்  கொப்பளிக்கும்  கடலே
உன்னுள் கோரத் தாண்டமாடும் அலையே
எதற்கு நீ இவ்வாறு கோபம் கொள்கிறாய்?


 சலனமே இல்லாமல் தவழும்  கடலே
உன்னிடம் ஒரே  கோட்பாட்டில்  அடங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  நிதானமா இருக்கிறாய் ?

  ஆழம் தெரியாத  நீலக் கடலே
உன் மேல் அலங்காரமாக  சலசலக்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு பதுங்குகிறாய்?

உன்னை எப்போது பார்த்தாலும் ஆனந்தம்
எத்தனை முறை கண்டாலும் அதிசயம்
 கனவோ நனவோ என்னே ஓர் அற்புதம்