Friday, January 31, 2014

அவள் வாழ்க்கை

பால் ஏந்தினாள் 
  பழம் ஏந்தினாள் 
பாலும் பழமும் ஏந்தினாள் 
வாழ்கையை ஏந்த வில்லை.

பாசம் காட்டினாள் 
நேசம் காட்டினாள்
பாசமும் நேசமும் காட்டினாள்
வாழ்கையில் எதையும் காண வில்லை

சாதுரியம் . இருந்தது
சா துர்த்தியமும் இருந்தது
சாதுரியமும் சாதுர்த்தியமும் இருந்தது 
வாழ்க்கையில் எதுவும் இல்லை

ஏன் என்று புரியவில்லை
தவறு  எங்கே  என்று தெரியவில்லை 
மனது வலிக்க உடல் குலுங்க
அழுதவாறே போகிறது அவள் வாழ்க்கை 

விடி வெள்ளியை நோக்கி

கால் போன போக்கில்
போனான்
மனம் தன வசம் இல்லாமல்.

மனம் அலை பாய
போனான்
எங்கு என்று தெரியாமல்.

எங்கு எ ன்று அறிய
நினைக்க  தெரியவில்லை
எங்கே இருக்கிறோம் என்று.

போனான் அவன்  போக்கிலே
 மனமும் திரண்டு  செல்ல
விடி வெள்ளியை நோக்கி
போகிறான் வேகமாக.

தமிழ் கவிதையின் அழகு.

இரண்டு அடியில்
 எழுதிய  வள்ளுவன்  
ஒரே யடியாகப்   புகழ் பெற்றான்  
உலகம் போற்றும் 
 திருவள்ளுவனானான்  .

நாலடியில் எழுதி 
நான்கு  மறைகளையும் கொணர்ந்து 
உலகுக்கு  உணர்த்தி 
நாழிகையிலே  உயர்ந்தான்
நாலடியார் என்றப பெயருடன்  .

தெருவெல்லாம் நடந்து 
ஊர் ஊராகத் திரிந்து 
சிறார் களையும் பெரியவர்களையும் 
ஆத்திச்சூடி பாடி தன பால்
 ஈர்த்தாள்  அவ்வைப்  பாட்டி .

முலமும் மந்திரமும் 
மருந்தும், பயனும் 
நடப்பும், நடவடிக்கையும் 
வாழ்வும், வாழ்வியலும் 
பயிற்று வித்தான்  திருமுலன் . 

தமிழில் காணாத 
 கவிதைகள்   இல்லை 
 சொல்வதைச சொல்லி 
சொல்ல  இயலாத்ததை  
இலை மறைகாய் மறைவாக
எடுத்தியம்பும்   விதம் ஓர் அழகு.



 .

பெரிய மனிதன்.

பேட்டி  ஒன்று கண்டேன்
பெரிய  புள்ளி .

படித்தது என்னவோ  
பெரிது இல்லை 

கையிருப்பு என்னவோ 
பெரிதாக 

அறிவுத் திறனோ 
பெரியது அல்ல .

ஆளோ  நீண்டு பருத்து 
பெரும் உருவமாக.

பேச்சோ வள வள  என்று  
பெரிய கருத்துக்கள் காணேன் .

வியக்கும் படி எதும் இல்லை 
இருந்தும் பெரிய மனிதன்.


கடமை என்று அள வளாவினேன் 
தலை எழுத்தை நொந்து கொண்டு. 

சிரிப்பு சிறப்பு

தவழ்ந்த குழந்தை
சிரித்த  போது
தெரிந்தது  மழலை.

நடந்த குழந்தை
சிரித்த போது
தெளித்தது  அழகு.

வளரும் குழந்தை
 சிரித்த போது
 தெறித்தது  குறும்பு.

வளர்ந்த பெண்
 சிரித்த  போது
 தோன்றியது அச்சம் .

சிரிப்பிலே பல விதம்
 பல பருவங்களில்
அறியும்  விதம்


சிரிப்பு  சிறப்பு 

Thursday, January 30, 2014

குரங்குக் குட்டி

 என் வீட்டின் முன் ஒரு குரங்கு
தவ்வித தாவி விளையாடும்  குட்டி
குட்டிக் கர்ணம் போட்டு வாசலுக்கு வந்தது
மெதுவாக கதவை மூடினேன் .

தோட்டத்தில் ஆட்டம் போட்டு ஜொலித்தது
சாளரத்தின் வழியே கண்டேன் கூத்தை
என் தோட்டத்தில் பந்தாடியது
 பூக்களைப் பறித்து வீசியது .

போகுமா போகாதா என்று நினைகையில்
 வந்தது அதனுடைய அண்ணன்
இரண்டும்   சூரையாடின என் பழ  மரங்களை
 கொண்டாட்டமும்  கும்மாளுமாக .

விட்டினுல்லிருந்து பார்த்தேன் வேடிக்கையை
துரத்த மனம்  வர வில்லை  எனக்கு
மனம் இலகுவாகி யது எதனாலோ
கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.




Wednesday, January 29, 2014

பாட்டும் பரதமும்

பாரு பாரு படம் பாரு
ஆடு ஆடு ஆட்டம் ஆடு
பாடு பாடு பாட்டு பாடு
 என்று  பாட்டு ஒலிக்க
தாளமும் அடவும் ஒன்றோடு
 ஒன்று கலந்து உறவாட
பாவமும் முத்தாய்ப்பும்
அருமையாகக் கூடி வர
கண் அசைவும் கழுத்து
அட்டமியும் பொருந்தி வர
டப்பாங் குத்து ஆட்டம் போல்
தொனிக்க முதலில்
பாட்டு அவ்வாறிருக்க
 நேரம் கடக்க  அது
 நல்ல பயிற்சியின்
விசாலமான நாட்டியமே
அற்புதமான நடனமே
என்று தெளிந்து
 நின்று  கண்டு களிக்க
 நிகழ்ச்சி ஒன்று அழகாக
அரங்கேறியது   கோர்வையாக.

வாழ்ந்தால் என்ன !

பழம் வேண்டும்
பால் வேண்டும்
பாயசமும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
 எனக்கே எனக்கு

நீ வேண்டும்
 நான் வேண்டும்
நாலும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு  .

 அது வேண்டும்
 இது வேண்டும்
ஆவதெல்லொம் வேண்டும்
 எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .

அறிந்தது வேண்டும்
 அறியாததும் வேண்டும்
அழகானது வேண்டும்
 எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .


எனக்கு வேண்டும்
 எனக்கே வேண்டும்
 என்ற நினைப்போடு
வாழும் நாம்
எதற்கு வாழ்கிறோம் ?

பண்டத்துக்கும்,  பகட்டுக்கும்
அழியும்  அழகுக்கும்
அழிகின்ற பொருளுக்கும்
தனக்கே என்று வாழும் நாம்
 வாழ்ந்தால் என்ன !
 வாழா விட்டால் என்ன !

Tuesday, January 28, 2014

இறையுணர்வு

 இறையருள்  இறைவன் 
 என்றே எப்போதும் 
 பேசுவான்  .

திசை நோக்கி  
நேரம் அறிந்து 
வழிபடுவான்.

கை தலைக்கு  மேலே  தூக்கி 
 கை நெஞ்சின் அருகே வைத்து 
தொழுவான் .

திருநீறு பூசுவான்
 வலதிலிருந்து  இடம் வரை 
 நெற்றி நிறைய .

பாடுவான்  ஆடுவான் 
குதிப்பான்  இறைவனை
 துதித்து 

எல்லாம் உண்மையா 
யாவும் அன்போடும் 
 அருளோடுமா .

இல்லவே இல்லை  
யாவையும் நடிப்பு
வெறும் வெட்டி .

இறையுணர்வு என்ற 
போர்வையினுள்ளே   இருக்கிறான்
கபடன்.

காவியும் சடை முடியும் 
 மெய்யன்பர்களுக்கு   என்ற 
காலம் போய்
பொய்காரன்க்கே. 
 


 

கதிரவனுக்கும் தூக்கமா !

காலைப் பொழுது
 விடியும் நேரம்
சிட்டுக் குருவிகள்
கும்மாளமிடும் நேரம்
கதிரவன் மேலெழும்  நேரம் 
 இருட்டு விலகியும்
வில காமல் இருக்கும் நேரம் 
 மசண்டை என்று
குறிப்பிடும் நேரம் 
தினம் வந்தாலும்
 இன்று சற்று மாறுபாடு 
கண்ணைக் கசக்கி கொண்டு
பார்க்கும் போது
கதிரவனைக் காணவில்லை 
சாளரத்தின் வழியே
எட்டிப் பார்க்கும் பொழுது  
சிட்டுக் குருவிகளின்
கூச்சல் கேட்கவில்லை 
 பதற்றம் மனதில் பரவ
கதவை திறந்த வேளை 
 இருள்  நீண்டு  கொண்டு
போனது ஏகமாக  
கதிரவனுக்கும் தூக்காமா 
நின்று நின்று ஒவ்வொரு நாளும்
சுடரோடு அலைந்த   களைப்போ
என்ன தேக்கமோ  நின்றேன்   
வாசலில் விக்கித்துப் போய்  

Monday, January 27, 2014

வெட்டிப் பேச்சு

பேசுபவன் பேசிக் கொண்டே இருப்பான்
கேட்டுக் கொண்டே இருந்தால்  
பேசிக் கொண்டிருப்பான்  தொடர்ச்சியாக .

பேசுவதை நிறுத்துவதற்கு  என்ன வழி
பேசாமல் இருப்பதே  என்று ஒரு சாரார்  
சொல்வது   கேட்பதற்கு நன்று.

பேசுவதை   தடை செய்வதற்கு  என்ன மாற்று 
வாயடைப்பதே என்று மற்றோருவர் 
சொல்வது  செய்வதற்கு  நன்று.

 எது மிகவும் பொருத்தம் என்று நோக்கின்
 சில இடங்களில் வாளாவிருப்பது   உசிதம்
பல நேரங்களில்  திருப்பிக் கொடுப்பது அவசியம்.

பேசுபவன் என்றும் தன நிலை மறந்தவன் 
வெட்டி பேச்சும் விதண்டாவாதமும்
அவனின் குறுகிய எலலை .

பேசியே வாழ்கிறான்  காலம் முழுவதும்
பயன் படாத அடாவடித்தனமும்  
எடுபடாத   விளக்கமும்  அளித்து 
தானே தன்னை அழிக்கிறான்    




வெள்ளையின் மதிப்பு.

வெள்ளை என்பதே ஒரு நிறம்
 குறிக்கும் ஒரு இனத்தைக்  கூட சான்று
வெள்ளயனே வெளியேறு என்ற அறை கூவல்


மனம்  வெள்ளை என்பது ஒரு   புதிர்
பெருமையா சிறுமையா
என்று  தெளிவது கடினம்
.

வெள்ளை என்றால் புனிதம்
  வெள்ளை உடை ஓர் அழகு
அது  விதவைக்கும்   ஓர் உடை.

வெள்ளை என்றால் ஓர் உ யர்வு
கண் கூடாகக்  கண்ட  உண்மை
நிற வேறுபாட்டில்.

வெள்ளையன் செய்த கொடுமை
 எத்தனயோ எவ்வளவோ ஆயிரம்
 இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும்.

வெள்ளை ஒரு பயன்பாடு
 மற்ற நிறங்களுக்கு   அது
ஒரு  விகிதமான கோட்பாடு..


வெள்ளைத்  தோல்  என்றால் ஒரு சிறப்பு
அதைப்  பார்க்கையில் ஒரு சிலிர்ப்பு.
அறியாமலே தோன்றும் ஒரு வியப்பு .


வெள்ளை யைப்  பற்றிய ஆராய்ச்சியில்
தூ க்கி நிற்கிறது ஒரு ஆதாயம்
அது தான் வெள்ளையின் மதிப்பு.






   .



 .


Sunday, January 26, 2014

அழகே, ஆரணங்கே, கண்மணியே !.

கண் சிமிட்டும் நேரத்திலே 
தோன்றி மறைந்த வேளையிலே 
கை சொடுக்கும விநாடியிலே 
கண் முன் வந்து சென்ற  கொடியே .

அழகே, ஆரணங்கே, கண்மணியே 
கொடி இடையும், பூவிதழும் 
குமின் சிரிப்பும்,பவள வாயும்  
கொண்டபேரழகே .

உன் அழகில் நான் சொக்கினேன் 
உன்  எழிலைக் கண்டு மயங்கினேன் 
உன் உறுதியைக் கண்டு நான் மலைத்தேன் 
 உன் தெய்விகத்தைக்  நோக்கினேன்  சற்று நேரம் 
விதர் விதர்த்தேன் ,பரவசமானேன்  

எப்போது எல்லாம் முடியுமோ ?

கழிந்தது தொல்லை
 என்ற நினைத்தப் பொழுது
கிளம்பியது புதிதாக
 ஒன்று சடாரென்று


முடிந்தது பொறுப்பு
 என்று அமர்ந்த பொழுது
 முளைத்தது மற்றொன்று
வேகமாக சடுதியில்

படுக்க வேண்டியது தான்
என்று சாய்ந்த பொழுது
வந்தது வேலை
முக்கியமாக சட்டெனறு  .

எப்போது எல்லாம்  முடியுமோ?
என்று நினைக்கையில்
தோன்றியது உடனே
 கண்ணை மூடும் பொழுது
நிரந்தரமாக. 

Saturday, January 25, 2014

கொண்டு செல்லும் இனமோ !

தடி எடுத்தவன் எல்லாம் வீரன் அல்ல
புத்தகம் ஏந்தியவன் எல்லாம் படித்தவன் அல்ல  
வரிகள் எழுதினவன் எல்லாம் கவிஞன் அல்ல 
பணம் வைத்திருப்பவன் எல்லாம் செல்வந்தன் அல்ல.

வீரம் என்பது செயலிலும் தேவையிலும்  தெரியும்
படிப்பு என்பது புரிதலிலும் பழக்கத்திலும்  அறியும்  
 கவிதை என்பது அழகிலும் சொல் ஓவியத்திலும் மிளிரும்
செல்வம் என்பது பயன்பாட்டிலும்  பண்பிலும் தெளியும் .

குருட்டு தைரியமும்  புரியாமல்  படித்த லும்
பக்கத்தை நிரப்ப எழுததுலும் ,பணத்தை  அடுக்குவதும் 
காண்கிறோம் மிகுதியாக இன்று ஒரு நாளைப் போல 
இவை கொண்டு செல்லும் இனமோ  என்று நினைத்தால் 
 இவை கொண்டு விற்காத திறனே என்று கொள்வோமாக 

  

வாய் பேசுபவனும் ,வாய் பேசாதவையும்

விலங்குக்கும், பறவைக்கும்
இருக்கும் ஒழுக்கம் 
 மனிதனிடம் காணவில்லை
இருக்கும் ஒழுங்கு முறை 
 மனிதனிடம் இல்லவே இல்லை.
இருக்கும் பற்றும் பாசமும்
மனிதனிடம் இல்லை 
இருக்கும் ஒற்றுமையும் ,
 உணர்ச்சியும்  மனிதனிடம் 
காண முடியவில்லை.
இல்லாத   கோபமும், ஆத்திரமும் 
காண்கிறோம்  நிறையவே 
இல்லாத  பொறாமை
இருக்கிறது மிகுதியாக 
இல்லாத கபடும், கசடும் 
காண  முடியும்  ஏராள மாகவே 
வாய் பேசுபவனும் ,வாய் பேசாதவையும்
அரங்குக்கு வந்தால்  ,போட்டிக்கு நின்றால்  
மனிதன் மேலா என்று நினைக்கும்போது  
 தோன்றுவது  எளிதில் 
மிருகமும் , பறவையும் 
பல அடி  மேலே.




தவிக்கும் நெஞ்சங்கள்

வேற்று நாட்டிலே வாழ 
 வேற்று இனத்துடன் வாழ 
 வேற்று  மொழி பேச  
வேற்றுக் கலாச்சாரம்  புரிய 
வேற்று பழக்கங்கள்  புக 
வேற்றுமையே வாழ்க்கையாக 
வாழ வேண்டிய நிமித்ததிலும் 
விட முடியவில்லை எவ்விதத்திலும் என்னால் 
நம் தாய் மொழியை தேன் தமிழை   
நம் உடையை அதன் அழகை 
நம் மத வழக்கத்தை குங்குமத் திலகத்தை
சற்று வேறுபாடாகத்  தோன்றும் 
இன்று நம் நாட்டிலே ஓட்டும் திலகம் 
வழக்கத்தில் வந்து விட்ட நேரத்தில் 
என் போனற  சிலர இன்றும் மஞ்சள் குங்குமத்தை நாட  
நம் உணவை சைவ முறையை 
 மறக்க முடியவில்லை  நம் இட்லியை 
நினைவுக்கு வரும் நம் வற்றல் குழம்பை 
குடியேறிய நாட்டில் அடைகிற பணப் புழக்கத்தை 
பிறந்த  நாட்டிலே கிட்டும் உணர்வை ,பற்றுதலை 
 எது பெரிது என்று அறிய முடியாமல் தவிக்கும் 
நெஞ்சங்களுக்காக  ஆதங்கத்துடன் எழுதும் வரிகள். 

Friday, January 24, 2014

வளர்ச்சியின் விலாசமே !

பெண் என்று பிறந்தால்
திருமகள் என்று கொள்வீர்
அவள் ஒரு விருத்தி என்று தெளிவீர்

அவளின் அழகு எங்கும் பொங்க
செழுமையின் உட்கோடுகள் நிரம்ப
வளர்ச்சியின் விலாசமே அவள் தான்.

மனை வாழ அவள் துணை பெரிது 
இனம் பெருக அவள் தன்மை பெரியது
நாடு வளர அவள் பங்கு பெரிதாக,பெருமையாக .

தாயைப் போல பிள்ளை என்பது முது  மொழி
ஆக்குவதும் அவளே அழிப்பது அவளே என்ற அடுத்த  மொழி
பெண்ணின் மாண்பை பறைசாற்ற பலவித பழமொழி.

பெண்ணினத்தைப்  பழிக்காதீர் என்றும்  எப்போதும்
பெண் இல்லையெனின் உலகம் இல்லை
ஆண்  இருந்து பெண் இல்லையென்றால்
யாதும் இல்லை என்று காண்

எங்கே தண்ணீர்ப் பந்தல்?

கிணற்று நீர் இனிப்பு
குடிப்பதற்கு  
ஆற்று நீர் நன்று
துவைப்பதற்கு  
குளத்து நீரை 
தேத்தி சமையலுக்கு 
விருந்தினருக்கு முதலில்
குளிர்ந்த நீர்  எனறு  உபசரிப்பு  
என்று பேசிய காலம் 
இன்று இல்லை 

இன்று நீர் குடுவையிலெ
வீடுகள் தோறும் 
பெரிய குடுவைகளை 
 கவிழ்த்து வைத்து 
மற்றொன்றில் வடிய 
குழாய்  வழி  பிடித்து 
உபயோகப்படுத்தும்  காலம் 
கைகளில்  அருந்தும் நீர் 
சிறிய பெரிய போத்தல்களில் 
எல்லாமே  காசுக்கு.


இனி எங்கே உபசரிப்பு ?
இனி எங்கே தண்ணீர்ப் பந்தல்?
குளங்கள் கட்டிடமாக மாற 
 ஆறுகள்  வற்றி காய்ந்து 
மணல் வாரப் பயன்பட 
கிணறுகள்  மூடப்பட்டு 
ஐநூறு அடி , ஆயிரம் அடி 
என்று ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட 
நிலத்தை ஏகமாகச் சேதப்படுத்தி 
விளைவித்தக் கொடுமை 
கண் கொண்டு பார்க்க முடியவில்லை,.
 

 

  

சுனாமி

கடலோரம் அடித்தக் காற்று
அள்ளித் தூக்க
அறை கூவலுடன் வந்த அலையோ
தூக்கி அடிக்க
வலை விரித்த மீனவனோ
பாய்ந்து திரும்ப
படகும்  அதுனுளிருந்த
பொருட்களும்அடித்துச் செல்ல
கடல் பேரோசையுடன்
சீறி ஊருக்குள் புக 
குழந்தைகளும்  பெண்களும்
பதறி ஓட
அங்கு நிகழ்ந்தது
ஓர்  அவலம் .
அங்கு அரங்கேறியது
ஓர் ஆபத்து
சுனாமி என்ற பெயருடன் 

நானும் நீயுமாக

நானும் நீயுமாக வாழ்ந்து
நம்மிடையே மூவரும் பிறந்து
வளர்ந்து உயர்ந்து  பின் பிரிந்து
நம்மை வீட்டுச் சென்று
பறந்து ஓடி வாழும் நிலை
 இன்று   நமக்கு ஏற்பட்டு
 திரும்பவும் நானும் நீயுமாக
வாழ்கிறோம் மிஞ்சின  காலத்துக்கு
இது தான்  நம் வாழ்க்கை.
காலம் ஓடுகிறது  வேகமாக
முடிவை எதிர் பார்த்து நிற்கிறோம்
நானும் நீயுமாக

நீலம் பல வகையிலே

பூ ஒன்று கண்டேன்
 நீல வானத்திலே
நட்ச்சத்திரம்

விழி   ஒன்று கண்டேன்
நீலக் கடலிலே
கயல்விழி  .

குறி ஒன்று கண்டேன்
 நீலக் கண்களிலே.
நல்ல குறி

கரும் புள்ளி ஒன்று கண்டேன்
நீலப் படுகையிலே .
அவமானம் 


மரணம் ஒன்று கண்டேன்
நீலம் பாய்ந்த உடலிலே
துர்மரணம்



    

Thursday, January 23, 2014

யாரைச் சொல்வது குற்றம் ?

இனிப்பும் ,புளிப்பும்,
காரமும், துவர்ப்பும்  
ஒரு ங்கே அமைந்தால்  
பண்டம் தேடி  வெளியே 
அலையப் போவதில்லை .

இனிமையும், இயல்பும் 
தன்மையும் தாக்கமும் 
 ஒரு சேரப் பெற்றால் 
 துணை தேடி  வெளியே 
அலையப் போவதில்லை.

இருக்கவேண்டியது இருந்தால் 
இருக்கும் இடத்தில் இருந்தால்  
அலைபாய வேண்டியதில்லை 
அலை மோதத்  தேவை இல்லை 
நிலை மாறப்  போவதில்லை .


இல்லாமல் போனதாலே  
ஏதும் அணுக முடியாதானாலே
எதுவும் கிடைக்காதானாலே  
வெளியே போகும் எண்ணம்  வந்திடும் 
யாரைச் சொல்வது குற்றம் ?
அலைவதையா, இறுகினதையா !

என்னே அற்புதம் !

எண்ணங்கள் மனம் போலே
கருத்துக்கள் அறிவுத்  திறனைப்   பொறுத்தே
உணர்ச்சிகள் மனத்தின் பிரதிபலிப்பே
பேச்சுக்கள் அறிவின் வெளிப்பாடே.
இவை யாவின் வாழ்வியல் முறையே.

சிந்தனையும் நல்ல விதமாக அமைந்து
உணர்ச்சிகள் கட்டுக்குள் அடங்கி 
பேச்சு  அளவோடு பொருந்தி 
அறிவு திற னொடு இயங்கினால்
வாழ்வு வசந்தமாக விரியத் தொடங்கும்     


கால் போனபடி நடந்து செல்வது  இலக்காகா து  
கைக்கு வந்த படி வரைவது ஓவியம் ஆகாது .
எதற்கும்   ஒரு வரை  முறை உண்டு.
அதன் வழி  செல்வதே   சாலச் சிறந்த்தது
முறையோடு செய்தால்  முறைகேடு இருக்காது .

வாழும் கலை என்ற பிரச்சாரம் இதுவே
இதனை  உணர்த்த ஓர் இயக்கம்
அதற்கு உலகாளவிய விமர்சனம்
ஆஹா ! ஆஹா ! என்னே அற்புதம் என்ற கரவொலி
சின்னஞ் சிறியதை  மலையென் றாக்கும் ஒரு கும்பல்
தாரை வார்க்கிறோம் பணத்தையும் நேரத்தையும்.


Wednesday, January 22, 2014

இரு பாலருக்கும் .

நேரில் கண்டேன்
 நெறி தவறி ய ஒழுக்கத்தை 
எதிர்க்க நினைத்தேன் 
வேகத்தோடு 
எதிர்த்தேன்  முழுமையாக 
ஆத்திரத்துடன் .
கண்டித்தேன் ஏகத்தில்  
கோபத்துடன் 
இருவரும் சிரித்தனர் 
 என்னைப்  பார்த்து 
போ போ  புரியாதவளே 
இது எல்லாம் நடக்கிறது  
விரிவாக எங்கும்.
உனக்குத் தெரியவில்லையென்றால் 
 நாங்கள் பொறுப்பல்ல
என்று சொல்லி அணைத்தப் ப்படி 
விலகினர் அவ்விடத்தை விட்டு .
கலாச்சாரம்   எங்கே செல்கிறது?
 கற்பு என்று ஒன்று இருக்கிறதா ?
 இரு பாலருக்கும் .

"நயந்து நயந்து"

நயந்து நயந்து
 சாதிக்கும் பெண்
என்று பெயரெடுத்த  ஆரணங்கே
நீ உண்மையில் எதைக் கண்டாய் ?


உன்னை நன்கு தெரிந்த எனக்கு
தெரியவில்லை உன் சாதனை
தெரிந்தது எல்லாம் உன் வேதனை
 நீ கண்டது என்னமோ வேதனை .

இப் பெயர் ஏன் வந்ததோ ?
எதனால் வந்ததோ ?
எதற்கு வந்ததோ ?
எனக்கு புரியவேயில்லை

வேதனையை  சாதனை ஆக்கினாய்
வாழ்கையில் வேதனையோடு
வெற்றிக் கண்டாய்  பெண்ணே
அதற்கு கிடைத்த வெகுமதியோ!

இன்றும் வேதனையில் துடிக்கிறாய்
மன வேதனை எப்பக்கமும்
எல்லாவற்றிற்கும் காரணம்  நீ என்று
 கூசாமல் சொல்லும்  உறவினரால்..

இருந்தும் செயல் படுகிறாய்
பேச்சுக்களைப் புறந் தள்ளி விட்டு
அதற்கு கிடைத்தப் பரிசோ
நயந்து நயந்து சாதிக்கிறாய் என்பது.

யாருக்காக  உழைக்கிறாயோ
அந்த மனிதனே உன்னை ஏசும் போது
மனம் உடைந்து போகிறாய்
இருந்தும் துடைத்து எறிந்து  எழும்புகிறாய்
அதற்கு   வந்த  சொற்றொடரே "நயந்து நயந்து"  அன்பளிப்பாக




அழகின் பிறப்பிடமோ

மலையின்  அடிவாரத்திலே
நின்று நோக்கினேன்
அதன் உயரம்  வானம் நோக்கி
அகலம் கடலை  நெருங்கி
வியந்து மலைத்தேன்
அதன் பிரமாண்டத்தை.

  வளைந்து வலிந்து சென்றது  பாதை
வழியெங்கும் அடர்த்தியான மரங்கள்
பசுமை போர்த்திய  கம்பளம்  எங்கும்
 கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு ஆனந்தம்
மலைத்து வியந்தேன்
அதன் பசுமையை.

மலையின்   உயரம் அடைந்தேன் 
காற்று அலையலையாக   வீச
உடலோ   குளிரில் வெடவெடக்க
கிழே  குனிந்து நோக்கின்   பரந்த வெளி
மயங்கி நின்றேன்
அதன் பரிணாமத்தைப்  பார்த்து.


இயற்கையின்  அழகு  ஏகமாகக்  கொட்டிக் கிடக்க
 கொஞ்சும்  எழிலில் மனம் சொக்கி நிற்க  
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும் சலசலப்பும்  
காற்று சுழற்றி  சுழற்றி அடிக்கும்  ஓசையும் 
 இது தான் அழகின் பிறப்பிடமோ  என்று நான் மறுக
பொழுது சாயும் வேளையில்  மனமில்லாமல்
 இறங்கினேன்  வேகமாக.




  

Tuesday, January 21, 2014

நிழலும் நிஜமும்

கற்பனை வளமானது
கற்பனயில் சிறகடித்து
வானத்தில் பறக்கலாம்
விண்ணையும் மண்ணையும்
ஒன்று சேர்க்கலாம்
விண்ணில்  கற்களையும்
மண்ணில் நிலவையும்  காணலாம் .

உண்மை சுடும்
உண்மை  எரிக்கும்
நினைவில் வந்த படி
நினைத்த வழி முறையை ஏற்காது
உண்மை என்ற நெருப்பு
நீலம் மஞ்சள் ஆகாது
போவது ஒரே வழி  வலியுடன் .

கற்பனையில் உண்மையைப் புகுத்தி
கொஞ்சம் வர்ணனைக் கலந்து
அழகான கலவையில் வருவது கவிதை,
 கதை,  இலக்கியம் என்று கொண்டு
உண்மையைக்   காரணங்களுடன்
காரியங்களுடன்   செயல் முறையோடு
நடத்திக் காட்டுவது விஞ்ஞானம் .
நிழலும் நிஜமும் வாழ்க்கையே




எதைச் செய்யின்

எழுதுவதெல்லாம் எழுத்து அல்ல .
 பாடுவதெல்லாம்  பாட்டு அல்ல.
பேசுவதெல்லாம் பேச்சு அல்ல.
பார்ப்பதெல்லாம்  பார்வை அல்ல.


எழுதினதைப் படித்தால்  தெரியும்
 குறில், நெடில், எச்சம், என்று பல பிழைகள்
 தொக்கி நிற்கும் வெவேறு இடங்களில்
உறுத்தும் எப்போழுதுமே   கண்ணில் பட்டவுடன்.


பாடுவதைக் கேட்டால் தெரியும்
சுருதி பேதம், இராக மாறாட்டம் 
தாளப் பிசகு  சில  பல காந்தாரங்களில்
ஒலிக்கும் எந்நேரத்திலும் காதில் விழும் போது .


பேசுவதை உற்றுக் கவனித்தால் புரியும்
குரல் ஏற்றம், குறுக்கிடும் பொருள்
உச்சரிப்பு சுத்தம்  சிறய பெரிய   கருத்துகளில்
தெளிய வரும் எப்போதும் அறியும் போது.


பார்ப்பதை  அருகிலிருந்து நோக்கினால் விரியும்
எத்திசையில், எந்நேரத்தில் எந்த எண்ணத்தில
 எதற்காக என்று முனைப்புடன் கவனித்தால்
விளங்கும் அழகாக அப்போதே   ஆராயும் போது.


எதைச் செய்யின்

  

Sunday, January 19, 2014

கருத்தும் எண்ணங்களும் காணேன்

கருத்துக்கள் செறிந்த கவிதை காணேன்
எண்ணங்கள் பொருந்திய கவிதை காணேன்
வண்ணங்கள் நிறைந்த கவிதை கண்டேன்
 சொற் ஜாலங்கள்  அமைந்த கவிதை கண்டேன் .


காதல் ததும்பும் கவிதைகள் நிறைய
 ஊடலும் உறவாடுதலும் அவற்றில்  நிறைய நிறைய
இயற்கையின் கோலங்கள் கவிதையில்  கொஞ்சம் குறைய
சுற்றுப்புறமும் எழிலும் அவற்றில்   குறைய குறைய .

காதலின் உன்னதம் மிகவும் கவிதையில் அருக
 அருளும் பற்றும் அவற்றில் அருக அருக
உடல் மீது பற்றும்  ஈர்ப்பும்  கவிதையில் வழிந்ததோட
 விரசமும் விகல்பமும்  அவற்றில் ஓடோட.


புதுமையான கவிதை  புத்துணர்ச்சியுடன் ஏற்றம் பெற
புவியிலே இன்று சிற்றின்பம் தான் வேகமாக ஏற்றம்  பெற
பாரம்பரியமும்  நல்ல வழக்கங்களும்  திசை திரும்ப
கவிதை புனையும் கவிஞ ர்களும்  அப்பக்கம் திரும்ப
கருத்தும் எண்ணங்களும் கவிதைச சோலையில்காணேன் 

 


ஒர் உயிரினம் என்றே.!

கா கா என்று கரையும்
 கறுப்பான  காகத்தை
 பாடினவன் இல்லை.

பொதி சுமக்கும் கழுதையை
பரிகசித்தவன் உண்டு
பாடினவன் இல்லை.

ஆடும் மயிலையும்
பாடும் குயிலையும்
பாடினவனுக்கு தெரியவில்லை  இவைகளை.


காகத்தைக் கண்டு கரிததனர்.
கழுதையை விரட்டினர்
ஏன்   என்று புரியவில்லை .

உலகில் பிறக்கும்  உயிர்கள் எல்லாம்
ஒரு வகையில் அழகு
என்று தெளிந்து நோக்கு.


காகமும் ஓர் அழகு
அது  பார்க்கும்  விதமே
 ஒரு தனி அழகு.


கழுதையும்  ஓர் அழகு
அது உதைக்கும் தோரணையே
ஒரு தனி அழகு.

பார்க்கும் பார்வையிலே
 இருக்கும் அழகு
 பார்ப்பதிலே  தோன்றும் அழகு.

காகத்தைப் பாடினேன்
 கழுதையைப்   பாடினேன்
யாருக்காகவும் அல்ல  
அவைகளும் ஒர் உயிரினம் என்றே.!





இப்ப அவனை அறிந்து.

உயர்ந்து நின்றான்  என் முன்னே
 நெடிது உயர்ந்து நின்றான்
உருவத்தால் உயரமாக நின்றான் 
நிமிர்ந்து நோக்கினேன் அவனை.

நீண்ட நெடும் வடிவமாக நின்றவன்
 உயர்ந்து நின்றான் செய்கையிலும்
மலைத்து நின்றேன் அவனைப் பார்த்து
அண்ணாந்து நோக்கினேன் இப்ப அவனை .

தன்னில் உயர்ந்தான் அவன் முற்றிலும்
குணத்தால் வானம் தொட்டான்
 வியப்புக்குள் ளானேன்    அவனைக்  கண்டு 
 எட்டி எட்டி கண்ணகலக்   கண்டேன் இப்ப அவனை.

படிப்பில்  சிறந்தான் அவ்வுய ரமானவன்.
வேலையில் சிறப்புற்றான்  அவ்வ்யுர்ந்தவன்
 ஈகையில்  சிறப்படைந்தான்  அவ்வுய ர்ந்து  நின்றவன்
தள்ளி நின்றே சிலாகித்தேன் இப்ப அவனை.


சிகரம் தொட்ட அந்த உயர்ந்த மனிதன் 
 குனிந்து சென்றான் கதவின் நுழை வாயிலேலே
உனர்த்தினான் உயரம் தாழ்ந்து போவதற்கே
 அஞ்சி நின்றேன் இப்ப அவனை அறிந்து.



Saturday, January 18, 2014

மெய் என்று அறிந்தால்

நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பி னார் கெடுவதில்லை
 நம்புவது யாரை?
 நம்புவது எதை?
அதை  செய்தால் சரியாக
 அதுவே வழி காட்டும் பாதை.


இறைவனை நம்புவன் ஆத்திகன்
 என்று கொள்ளலாம்  அநேகமாக
அருளைக் கண்டவன்
தொழுகிறான்  கூப்பிய கைகளோடு
அவன் வழி  அதுவே.

இறைவனே இல்லை என்பவன் நாத்திகன்
என்று அனுமானிக்கலாம்   பெரிதுமாக
வாழ்வைக் கண்டவன் 
படிகிறான்  மனச்சாட்ச்சிக்கு  நெறியோடு
அவன் பாதை அதுவே.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
ஆத்திகனும் நாத்திகனும்  நம்புவது  உண்மை
ஒருவன் பணிகிறான் பரம் பொருளுக்கு
 மற்றவன் நடக்கிறான் மெய்யான  நோக்கிலே
அதவும் இதுவும் ஒன்றே 
யாதும் , யாவதும் ஒன்றே
 அது  இது மெய் என்று அறிந்தால் 

காண வாரிர் திரளாக.

கோலாகல கொண்டாட்டம் 
 தெருவெல்லாம்  ஒளி  வெள்ளம்
வீதியெல்லாம் ஒலி  முழக்கம் 
 பாரெல்லாம் மக்கள்  கூட்டம் .

கடல் கடந்த  திருவிழா 
 தண்டாயுதா பாணிக்கு   பூசத் திருநாள் 
பிறந்த நாள்  ரத ஓட்டம் 
மலைக்க வைத்த  விழாக் கோலம்.

காவடியும் பால் குடமும் 
தேங்காயும், பாலும்
 பூவும்  பழங்களும் 
மலை மலையாகத திரள 

பினாங்கில் பூசம் 
கண் கொள்ளாக்   கா ட்சியாம் 
இனம் பாரா திருநாளாம் 
காண வேண்டிய திரு நாளாம் .

காவடி பார்த்துள்ளோம் 
 வேல் காவடி, அலகு  காவடி,
மயில் காவடி  கண்டோம்  இங்கே 
வகை வகையாக .தன்னை வருத்திக் கொண்டு.

வேல் வேல் என்ற முழக்கம்  
ஆயிரம் , பத்தாயிரம் தேங்காய்  
ஆசை தீர உடைக்க  மட மடவென்று 
சீனனும் தமிழனுக்கு போ ட்டியாக.

அறிந்தேன் திருஅருளை 
வேறு வகையாக  வேறு மாதிரியாக  
முரட்டு ஆவேசம் கண்டேன் இங்கே
ஆணவமான அன்பைக் கண்டேன் மிகுதியாக.

  
பன்னிரண்டு மாதங்களில் முருகனுக்கு விழா 
ஒவ்வொரு ஊரிலும் நகரத்தார்கள் எடுக்கும் விழா 
 பூசம்,மகம், உத்திரம், பௌர்ண மி, விசாகம்,
ஆடி வேல், என்று மாதந்தோறும்  தண்டாயுதபாணிக்கு 
கடல் கடந்த கொண்டாட்டம் காண வாரிர் திரளாக.  

 





Tuesday, January 14, 2014

புகையை வாங்கி

புகை வந்தது
அலை அலையாக
கண்ணைக் கரிக்கவில்லை.
எக்காரணம் கொண்டும்.

புகை  சன்னமாக
சுருண்டு சுருண்டு  வந்தது
நெடி தூக்கலாக  இருந்தது
 வித்தியாசமாக .

புகை ஊடுருவியது
மிகுந்த வேகத்தில்
நெஞ்சுக்குள்
சுருண்டுக் கொண்டே

புகை  அரித்தது
நெஞ்சைக் கூட்டுடன்
அடைத்தது   முழுவதும்
மூச்சு  புக முடியாமல்.

புகை தின்றது
சுவாசப்பையை
கோளாறு கண்டது
 சுவாசம் திணறலுடன்.

புகை வலிய வரவில்லை
விலைக் கொடுத்து
வாங்கிய பின்னே
வந்த கெடுத்தது.

கண்டேன் ஆற்றாமையுடன்
வம்பாக வாங்கிய பழக்கம் 
உயிர் கொல்லியாக மாறிய
 வினையை  துயரத்துடன்.
 
   

வாழ்ந்து காட்டு.

பண்டிககைளும்  நல்ல நாளும்
வந்து போகும் அவ்வப்போதே
பொங்கலும் வந்தது  தை பிறந்தவுடன்
உழவர்களையும் கதிரவனையும்
 போற்ற வரும் திருநாளே.

மாதந்தோறும் விழாக்கள் பெருகும்
 நம் தமிழ் திரு நாட்டிலே
அருளுக்கு  குறைவில்லை
 செலவுக்கும் குறைவில்லை
என்று அறிந்தேன் நாளடைவிலே.

நல்ல நாள் என்றால் புத்தாடை
 விழா என்றால் விருந்து
திருமணம் என்றால் பரிசு
என்ற பகட்டுக்கு வழி வகுத்து
வாழும்   தற்காலத் தமிழனே


சற்று ஆற அமர  யோசி
ஆடையில் பணத்தைக்  கொட்டி
 விருந்தில் பணத்தை  இறைத்து
திருமணத்தில் பரிசு மழை  பொழி ந்து
எதைக் கண்டாய் என் நண்பனே?

கடன் பட்டாய் மீள முடியாமல்
நாளை வந்து விடும் என்றே நம்பி
நாளை என்னவோ வந்தது
 பணம் ஏனோ வரவில்லை
அமிழ்ந்தாய்    கடன் சுமையிலே !

சட்டென்று புரிந்து கொள்
சிக்கனம் கடைப் பிடித்து
செம்மையாக வாழக் கற்றுக் கொள்
இருக்கும் இடம் தெரியாமல்
கொடுக்கும் கை அறியாமல்
அருமையாக வாழ்ந்து காட்டு. 









Monday, January 13, 2014

கைகளின் கதை கேட்டிரோ !

தாலாட்டு பாடி
தோளிலே சாய்த்து
கைகளால் ராராட்டி
அணைத்தேன் என் செல்வத்தை 
முதற் படியாக.

என் கையைப் பிடித்து
தத்தி தத்தி 
விழுந்து எழுந்து
 நடக்கப் பழகினான்
இரண்டாம் நிலையாக

அவன் கையைப் பிடித்து
 எழுதினேன்   மெதுவாக
 பெரிதும் சிறிதுமாக
 கிறுக்கி பின் எழுதினான்
மூன்றாம் படி வமாக.

என் கையால் அவனைப்
பேணி வளர் த்து
ழுமுமையாக்கினேன்
ஆனான்  பெரிய  மனிதனாக
 நான்காம் நிலையாக

வளம் தேடி பறக்க
 நினைத்தான் என் மகன்
என் கையை விட்டான் 
நானும் அகன்றேன்
 கடைசி தடவையாக.


 நோக்கினேன் என் கைகளை
திடமான்  மிருதுவான்  கைகள்
 இன்று சுருங்கி , தேய்ந்து .
 நடுக்கும் நிலை கண்டு
அழுதேன் பின் சிரித்தேன்.

கைகளின் கதை கேட்டிரோ
 காலம் காலமாக நடப்பவையே
கைகள் சொன்ன விதம்  புதுமை
 முந்தியவர்களும்  இன்றுள்ளவர்களும்   
 வருங்காலத்தவ்ரும் சொல்வது அதுவே.
 


  



Sunday, January 12, 2014

கழுதை தேய்ந்து கட்டெ றும்பு ஆனது

கழுதை தேய்ந்து கட்டெ றும்பு ஆனது
கட்டெறும்பு என்ன ஆனது ?
கேள்விக்கு  என்ன சொல்வது.
கட்டெறும்பு  கடித்தது.
 பின் வலித்தது வெகுவாக
.வீங்கியது   பெரிதாக
என்று சொல்லிக் கொண்டே போகலாம்
எதற்கும் ஒரு முடிவு
 எதிலும் ஓர் குதர்க்கம் என்றால்
 அதற்கும் ஒரு எல்லை  உண்டு.

குறும்பு  ஒரு அளவுக்கு மேல் போனால்
குசும்பு என்று கொண்டு கலகம் தோன்ற
ஏதுவாய்  நிலைப்   பெற்று வெடித்து
சிதற தூண்டுகோலாக அமைய 
விளையாட்டு வினையாக
வன்முறை தலை விரித்தாடும் அபாயம்
வெகு அருகில்  வந்துவிட  சற்று
 எதிலும் நிதானம் இருக்க  வேண்டியதின்
அவசியத்தை   காட்டுவதே என் நோக்கம்.

மேலே  குறிக்கப்பட்டது ஒரு சான்று





ஆதவனே அழகனே!

கதிரவனைக் கண்டேன் காலையிலே
அவன் எழும்பும் அழகைக் கண்டேன்  விடியலிலே
மெல்ல மெல்ல மேலே ஏறும்  ஓயிலைக் கண்டேன் வைகறையிலே.

செந்நிறத்  தன்னோளியை   உணர்ந்தேன்  உச்சிப் பொழுதிலே
சுடரும் வெப்பத்தை உணர்ந்தேன்  மதிய வேளையிலே
தகிக்கும்  பகலவனை  சட்டென்று   உணர்ந்தேன் நடுப் பகலிலே

 
அறிந்தேன்  ஞாயிறுவின் வீச்சுக் குறைவதை சாயரட்சையில்
வண்ணக் குவியலாகப் பாய்ந்தோடும்  குளிர்ச்சியை  அறிந்தேன் மாலையில்
படிப் படியாக தணியும் நேர்த்தியை  புரிந்துகொண்டேன் சாயும் பொழுதிலே

நோக்கினேன்  சூரியனை  வெகு நேரம் வாய் பிளந்து
 மகிழ்ந்தேன்   ஒளி  விசும்  தன்மையைக்  கண்டு  அகமகிழ்ந்து
  பொழியும்  ஒளிப் பிழம்பே  உன்னை வணங்குகிறேன் மனங் கனிந்து. 

Saturday, January 11, 2014

நான் ஊருக்குச் செல்கிறேன் .

நான் ஊருக்குச் செல்கிறேன்
கையில் காசில்லாமல்
கையில் பெட்டியில்லாமல்.

நான் ஊருக்குச் செல்கிறேன்
இன்று அல்ல நேற்று அல்ல
எப்போதும்   எந்நாளும்

நான் ஊருக்குச் செல்கிறேன்
பார்க்கிறேன் யாவற்றையும்
கண்ணாலே  முழுவதுமே.

நான் ஊருக்குச் செல்கிறேன்
பயணமாக வெகு நாட்கள்
ஊர் ஊராகப் போகிறேன்.

தாஜ் மகாலைக்   கண்டேன்,
பொற் கோவிலைக் கண்டேன்
வாராணா சியையும் கண்டேன்.

லண்டன் மாநகரைக் கண்டேன்
ஈபில கோ புரத்தைக்  கண்டேன்
வெள்ளை  மாளிகையும் கண்டேன்.

சீன பெருஞ்ச சுவரைப்  பார்த்தேன்
சிட்னி பாலத்தைப்   பார்த்தேன்
அமேசான் ஆற்றையும் பார்ததேன்.


மணி நேரங்களில் கண்டு கழித்தேன்
 காசில்லாமல் , பறக்காமல், வெளியே போகாமல்.
மனதினிலே கண்டேன் யாவறையும்
  படித்ததை நினைவுப் படுத்தி கொண்டு.


நான் ஊருக்குச் செல்கிறேன்
  மனதளவிலே  வேகமாக
காண்கிறேன் அற்புதங்களை 
 மனக்கண்ணாலே வெகு விமர்சையுடன்

     
  

இருளில் முழ்கிய இருளன்

இருட்டிலே துழாவிக்  கொண்டு
கும்மிருட்டிலே தடவிக் கொண்டு
காரி ருளிலே   தடுமாறிக் கொண்டு
 மெதுவாக மிக மெது வாக
நடந்தான் இருளன் .

கையிலே ஒரு தடியுடன்
தட் தட் என்று ஓசை எழுப்பிய படி
பார்த்து பார்த்து நடந்தான்
வேகம் இல்லாமல் மெதுவாக
நடந்தான்  இருளன்

விளக்கு ஒன்று இருந் திருந்தால்
வழிக்கு துணை வந்திருக்கும் 
தெரியாமல் வருகிறான்
 தடுமாறிய படியே  மெதுவாக
நடக்கிறான் இருளன்.


பட்ட அறிவும் இல்லை
படிக்கவும்  இல்லை  காலத்திலே
இருந்தும் பகட்டில் குறைவில்லை
வீழ்ந்து எழுந்தும் புத்தியில்லை
நடக்கிறான் இருளன்.


ஒளி என்பது இங்கே
அறிவொளி  என்றே கொள்க
கல்வியின்  மேன்மையை   அறியாமல்
இருளில் முழ்கிய இருளனின்
நிதர்சனத்தைக் கண்டீர் இப் பாவாக்கத்தில்




எனக்கே எனக்காக,

பரிசுக்காக எழுதவில்லை
பாராட்டுக்காக எழுதவில்லை
பெருமைக்காகவும் எழுதவில்லை
புகழுக்குகாகவும் எழுதவில்லை .

பரிசும் கிடைக்கவில்லை
 பாராட்டும் கிடைக்கவில்லை.
 பெருமையும் அடையவில்லை
 புகழும் அடையவில்லை


மனதில் தோன்றியதை எழுதுகிறேன்
மனதிற் க்கு உவந்ததை எழுதுகிறேன்
மனத்தால் எண்ண ப்படுவதை பகிர்கிறேன்
மனதுக்குள்ளே ஆராய்ந்து பகிர்கிறேன்.

வாசிப்பார் யாருமில்லை
 கேட்பவரும் யாருமில்லை
பகிர்ந்ததை  விட்டு விடுகிறேன்
ஆராய்ந்ததை  மறந்து விடுகிறேன்.

பட்ட அனுபவங்களை எழுதுகிறேன்
படுத்திய அனுபவங்களையும்  எழுதிகிறேன்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
 தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் .


யார் காதிலும் எ ன் பாட்டு விழுவதில்லை
யார் மனதிலும் என்னுடைய கவி தைகள் பதிவதில்லை
இருந்தும் எழுதுகிறேன் யாருக்காகவும் அல்ல
எழுதி  எழுதி  நிரப்புகிறேன் எனக்கே எனக்காக, 







  

Thursday, January 9, 2014

தம்பிக்கு

 பொது வாழ்க்கை என்ற வந்த போது தம்பி
சிறப்பும் கவனமும் கருத்தில் கொண்டு
  நாணயத்தை  கண் போல கருதி
அடக்கத்தைக்  கையாண்டு
அமைதி காத்து    சாந்தமாக
அனுசரித்து வாழக் கற்றுக் கொள்
கணக்கில் தப்பிதம் இல்லாமல்
பேச்சில் கோபம் இல்லாமல்
நேர்மை தவறாமல்
நிதானம் பிசகாமால்
நேரம் பாராமல்
தொலை நோக்கு பார்வையோடு
உடன் பணியாற்றுபவர்களை
வஞ்சிக்காமல்  ஒழுக்கத்தோடு
நடந்து கொள்  தம்பி.
இதுவே ஒரு கோட்பாடு
 நினைத்து செயல்படு.




 
  

Wednesday, January 8, 2014

என்னவென்று அழைப்பது?

கானல் நீராகத் தெரியும் வாழ்க்கை
 கலங்கிய நீராக மாரம் நாள்
 வெகு அருகில் , மிக சீக்கிரத்தில்
 என்று கண்டு கொண்ட நீஜந்தா
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு
கொந்தளிக்கும்  மனதை அமைதிப் படுத்தி
 தெளிவான இலக்கை நோக்கி  விரையும் முன்னே
 திரும்பிப் பார்க்கிறாள் தான்  கடந்து வந்த பாதையை
சறுக்கல்கள் எத்தனை எத்தனை 
காலை வாரி விட்டவர்கள் எத்தனை எத்தனை 
மனதை நோகடித் தவர்கள் எத்தனை எத்தனை
நோக்கில் கொண்டால் கணக்கிலடங்கா
திசை திரு ம்பாமல் நெறியிலே கோட்பாட்டிலே
வாழ்ந்த நிஜந்தா இன்று  இடையூறுகள்  கு றுக் கிட்டும்
நிலை பிறழாமல்  நீதிக்குட்பட்டு     வாழ்கிறாள்
வாழ்க்கையைக் குலைத்த  கயவர்களையும்
 உரிமையைப் பறித்த  பே ராசைக்கா ரர்களை யும்
கழு விலேற்றா மல்  மன்னித்து  வாழும்
 நிஜந்தாவை நிஜமாகவே என்னவென்று அழைப்பது?


கண்டேன் பெருமிதத்துடன்

ஒரு குண்டு மல்லிகை
வெள்ளை வெளேரென்று  
பச்சை  அருகோடு
மெல்லிய தென்றலில்' 
 அசைந்து ஆட

ஒரு மஞ்சள் ரோஜா 
தங்கம் போல பளிச்சென்று  
கரும் இலையின் மேல் 
தவழ்ந்து  தழுவி
அழகு நடை போட   

ஒரு சிகப்பு செம்பருத்தி 
 சற்று உயரே  இருந்து 
 எட்டிப் பார்த்து
குனிந்து  குவிந்து 
மகிழ்வுடன்   கும்மாளமிட 

வாடா மல்லியும் தன பங்குக்கு 
வாடாமல்  குலுங்க 
சிவந்திய்ம் அரளியும் 
பெருமிதத்துடன்
அழகாய் எடுத்துக் கூட்ட 


கண்டேன் பெருமிதத்துடன்  
இயற்கையின்    பேரழகை 
கண்களும் மனமும் 
பொங்கிக் ததும்ப 
மயங்கி நிற்கிறேன்  
பரவசமுடன் .

Monday, January 6, 2014

பெற்ற தாய் .

அன்பை மறந்தார்கள் 
வயதை மறந்தார்கள் 
இயலாமையை  எண்ணவில்லை 
கைமையை எண்ணவில்லை 
 பொருட்டாகக்  கருதவில்லை
உயிருள்ளவளாகக்   கருதவில்லை  
பெருமையுடன் வாழ்ந்தா தாய்  
இன்று தேடுவாறின்றி 
 அலக்கழிக்கப்  படுகிறா ள்  
அங்கும் இங்குமாக
மகன்களுக்கும் மகளுக்கும் நடுவில்
திகைத்து நிற்கிறாள் 
பெற்ற பிள் ளை களைப்  பார்த்து
பின் தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள் 
 பிளைகளா  அல்லது  பிழைகளா  என்று




Sunday, January 5, 2014

எதையும் தாங்கும் மனமே

முள் மீது அமர்ந்த ரோஜாவே
உன்னை முட்கள் குத்தவில்லையா..

தரை மிது விரித்தக்   கம்பளமே
மிதி படுவது  உனக்கு சிரமமில்லையா..

நிலம் மிது கிடக்கும் மண்ணே
உன் மீது காறி  உமிழ்வது  வருத்தமில்லையா .


மரமிது  இருக்கும் கனியே
கிழே  விழும் போது அடிபடவில்லையா .

பாலைக்  கொடுக்கும் பசுவே
உன் மடியைக் கறக்கும்  போது  தெறிக்கவில்லையா. 

பிள்ளையைப் பெற்ற தாயே
உன் பிள்ளை உன்னை  உதைக்கும் போது வலிக்கவில்லையா .


எதையும் தாங்கும் மனம் வேண்டும்
உம்மைப் போல் பலவற்றைக்  கண்டவுடன்  தெளிவாக .



  

Saturday, January 4, 2014

புதிய பாதையை நோக்கி

அன்பு வடிவமான்  தாய்
ஆசையுடன் மகனை
எடுத்துக் கொஞ்சினாள்
எச்சிலை துடைத்தப்படி.

எட்டி உதைந்த
 குட்டி கால்களை
 மிருதுவாக வருடினாள்
தூசியை தட்டியபடி.

விரல் சூப்பிய  படி
சிரித்த குழந்தையை
உச்சி முகர்ந்தாள்
வலி யாமல் அணைத்தால்

கண்ணே குலக் கொழுந்தே
வாய்  நிரம்ப அழைத்து
விண்ணில் தூ க்கிப் போட்டு
 பிடித்தாள்  தாய்மையோடு

நாளொரு மேனியும்
 பொழுதொரு  வண்ணமுமாக
வளர்ந்தான்  செல்வன்
வலுவுடனும் தீர்க்கமுடனும்


படித்தான்  சம்பாத்திதான்
பெரிய மனிதன் ஆனான்
குடும்பம் ஏற்பட
வாழ்கையில் கலந்தான் .

ஒதுங்கினாள்  தாய்
அவள் வேலை முடிவுற்றது
தன வழி செல்கிறாள்
பழையதை மறந்து
புதிய பாதையை  நோக்கி




     

Friday, January 3, 2014

நிலவும், சோறும், ஞானமும்

நிலவைக் காட்டினாள்  தாய்
சோறு ஊட்டும் போது
நிலாவை பார்த்த மகனிடம்
பாடினால்  இராகத்துடன்

 வெண்மையான நிலாவே
பஞ்சை  விட இலகுவான நிலவே
இரவில் எட்டிப் பார்க்கும் சந்திரனே
குளுமை படர் தெறிக்கும் சுடரே.

வட்ட வடிவமான்  பிறையே
பாதி நாட்கள்  தேய்ந்து மறைந்து
பாதி நாட்கள்  தோன்றி வளர்ந்து
வித்தை காட்டும் வெண்ணிலாவே.


அதில் மலை தெரிகிறதா பார்
தெரியும் நீர்  திவிலையை உற்றுப் பார்.
செடி கொடிகள்   தென் படுகிறதா  கவனி
.உயிரினத்தைக் காண முடிகிறதா நோக்குங்கால்


சோறு  ஊட்டும் போது தாய் பச்சிளம் பாலகனுக்கு
நிலவின் அழகை வர்ணித்து  மகிழ்கிறாள்
அதன் வடிவத்தை  சிலாகித்து பாடுகிறாள்
நிலவு சார்ந்த அறிவியலையும்  இயம்புகிறாள்
சோறும்  உள்ளே செல்கிறது அதனுடன்  ஞானமும .





  

Thursday, January 2, 2014

இயற்கையும் செயற்கையும்

 காரிருளைக்  கிழித்துக் கொண்டு
 கருமேகங்கள்  திரண்டு
 ஒன்றுடன் ஒன்று  மோத
பளீர் பளீர் என்று
வெள்ளி  போல் மின்னல் வெட்ட
தடால்  தடால் என்று
பெரும் ஓசையுடன்  இடி இடிக்க
காதுகள் செவிடாகுமோ
கண்கள் குருடாகமோ
என்று அஞ்சி நடுங்கி
ஒரு மூலையில்  ஒதுங்கி
நின்ற  போது
வீட்டிலும் இருள்  கவ்வ
மின் தடை ஏற்பட
இயற்கையை வெல்ல
 செயற்கையால்   முடியாது
எப்போதும்
என்று நிதர்சனம் புரிய
செய்வதறியாது  
மௌனமாக நின்றேன்
சிலை போல

அகில கோடி பிரம்மாண்டமாக

அதி காலையிலே
விடியும் நேரத்திலே
கா கா என்று
 காகம் கரைய
ட்வீட் ட்வீட் என்று
குருவிகள் கூவ
வீடுகள்  விழிப்பு  காண
 கதிரவன் மெல்ல
புவியில் நுழைய
ஒரு பக்கத்தில்
உலகம் துயில் கொள்ள
 மறு பக்கத்தில்
கண்ணைக் கசக்கிக்
சோம்பல் முறித்துக் கொண்டு எழ
இந்த மகா  இயக்கம்
மீண்டும் தொடர
 இயற்கையும் மனிதனும்
 பின்னி பிணைந்து
 வாழும்  காலம்
அழகான காட்சியாக  விரிய
எந்நேரமும் இவ்வியக்கம்
 எதற்கும்  எ ன்ன காரணத்துக்கும்
மழை, புயல், பேரலை
போன்ற சீற்றங்களுக்கு
அடி பணி யாமல்
சுற்றிக் கொண்டே  இருக்கும்
நேர்த்தி  பிரமிப்புட்ட
அகில கோடி பிரமாண்டத்தை
நோக்கி மலைத்து நிற்கிறேன்
ஒரு சிறு குறி யிடாக !





  

சொற்களில் வடிக்க இயலாமல்.

சாரல் மழை
சன்னலோரத்தில்
சொட்டு சொட்டாக
 விழுந்து தெறிக்க

சுகமான தென்றல்
சாளரம் வழியே
சொகுசாக
சடுதியில்  நுழைய

மேகக் கூட்டங்கள்
பரந்த விரிந்த வானில்
அலை அலையாக
வெளியே  தோன்ற

அறையின் ஓரத்திலே
தனிமையில் அமர்ந்து
எழிலைக்  கண்டு
மயங்கி நிற்கிறேன் .

இனிமையான  இயற்கை
நல்கும்  இன்பம்
மனத்தைக் கொள்ளை கொள்ள
சொற்களில் வடிக்க இயலாமல்
திக்கு முக்காடி நிற்கிறேன். 





  

Wednesday, January 1, 2014

ஒரு புது நாள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 
என்ற கூக்குரல்  காதில் 
ஒலித்துக் கொண்டிருக்கும் போது 
மனதில் தோன்றியது 
ஒரு சிறு நெருடல் 
எந்நாளும் நன்னாளே !   
 எவ்வாண்டும்   நல்ல ஆண்டே !
இன்று ஏதும் பெரிதல்ல 
பெரிதெனின்  விடியலும் 
அதன் துவக்கமும்  
அதன்  முடக்கமும் 
இன்று ஏதும் குறைவில்லை 
 குறை என்ற போது
  பொழுது சாயலும் 
அதன்  சரிவும்  
அதன் முடிவும்
விடியலும் சாயலும் 
மாற்றி மாற்றி 
வருதல் ஒரு 
கனவு போல 
இன்று இருப்பவன் 
 நாளை  இல்லை 
 நாளை நடப்பது 
 என்ன என்று  அறியாது 
நம்பிக்கையின் அடிப்படியில் 
வாழும் நாம் 
எதையும் ஒரே வாகில்
ஒரே   எண்ணத்தில் சிந்தித்து  
திடமாக முடிவெடுத்தால் 
ஒவ்வொரு நாளும் 
ஒரு புது நாளே