Friday, May 30, 2014

ஒரு குரங்கு

எதிரிலே ஒரு மரம்
அதிலே ஒரு குரங்கு
 தவ்வி தாவி விளையாடி
மேலும் கீழும்  இறங்கி
 பழ த்தைப் பூசித்து
கொட் டையைத் துப்பி
மகிழ்ந்து ஆரவாரத்துடன்
மரத்தின் மீது அமர
 மழை  கொட்ட
 குறைன்னு பதுங்கி
 இடம் தெரியாமல்
 கொப் புக்களின் நடுவே
ஓடுங்கி பயத்துடன்
தன வாலைச்   சுருட்டிக்கொண்டு
அமைதியானது 

Wednesday, May 28, 2014

மனதினில் கவலை

 மனதினில் கவலை ஆட்கொள்ள
நெஞ்சம் முழுவதும் சோகம் கவ்வ
தன நிலையிலிருந்து மாறினான் .

வாழ்வே ஒரு போராட்டம் என்ற போதும்
 துணிந்து நின்றான்  தன்னிச்சையாக
இன்று தளர்ந்து விலகி நிற்கிறான்.

ஏன் என்று காணும் போது
வஞ்சனைகள் அவனைக் கொன்றன
ஒளியிழந்து காணப்படுகிறான்  .

வாழ்வை சூது கவ்வும்
பின் ஒவ்வொன்றாகக்  கவிழும்
உறுதியும் கடைசியாகக் கை விடும்.

Sunday, May 25, 2014

உரிமையில்லாத இடத்தில்

வழக்கு தொடர்ந்தாள் 
உரிமையாளரின் மேலே 
காவல் துறையில் 
குற்றம் சாட்டினாள் 


திருப்பி அனுப்பினார்கள் 
 நியாயம் இல்லை என்று 
ஒரு பெண்ணின் அகம்பாவத்தை
கண்டேன் அன்று நேராக .

அழிச்சாட்டியம்  செய்தவள் 
உரிமையி ல்லாத இடத்தில் 
இன்று  விழி பிதுங்கி நிற்கிறாள் 
கையைப பிசைந்தது கொண்டு..

மந்தரித்தாள்

மந்தரித்தாள்  பல வழியில் 
 பல வகையில் அடிக்கடி 
எல்லாம் தனக்கு வேண்டும் 
என்ற நோக்கத்தில் 
 மாமனார் மந்தித்துப் போனார்.
மாமியார் மருக்  கோழி யானாள்
வந்தது சொத்து  கைக்கு 
 மகிழ்ந்தாள் , அக மகிழ்ந்தாள் 

நிலைத்ததா எல்லாம் ?
 இல்லையே !இல்லவே இல்லையே. .
நின்றதா சொத்து  அவளிடம் 
குடும்பத்தில் பிறந்த பெண்ணை 
மோசடி செய்து கிடைத்தது 
சென்றது வேகமாக வந்த வழியில் 
இன்று அவள் யாவற்றை யும் இழந்து 
நிற்கிறாள் அந்தோ பரிதாபமாக! 

Saturday, May 24, 2014

விட்டுக் கொடுத்தவன்

விட்டுக் கொடுத்தவன்
 கெ ட்டுப் போவதில்லை
கெட் டுப் போவதற்கு
ஏதுமில்லாத  போது
விட்டுக் கொடுப்பது
தவறு ஒன்றுமில்லை .

விட்டு விடு

விட்டு விடு   என்று சொல்லாம் 
எளிதாகச் சொல்லாம்  .
விடுவது எளிதல்ல  
விட்டு விட்டால் என்ன
என்று வேகமாகச் சொல்லாம் 
விட்டால் ஒன்றுமில்லை 
 ஒன்றுமேயில்லை என்று 
கொள்ளலாம்  ஏமாந்தவுடன்..

கள்ளன்

காரிருளைக் கண்டு 
கலங்கினான்  கள்ளன் 
துணை வந்த இருள் 
 இன்று  அவனுக்கு 
எமனாக மாறியது.

 துணையும் நல்ல 
 துணையாக இருத்தல் 
இன்பம் சேர்க்கும் 
என்று அறிந்து 
 கொண்டான் கள்ளன்.

திருந்துவான் என்ற 
 நம்பிக்கை துளிர்க்க 
மன மகிழ்வுடன் 
 திரும்பினேன்  
வெளிச்சத்தை நோக்கி 

Friday, May 23, 2014

நல்லதுக்கு காலமில்லை

கட்டி காத்த சொத்தை
 கண் முன்னாலே அழித்தான் .

தேடி  அலைந்து கிடைத்த பெருமையை
சட்டென்று தூக்கி எறிந்தான் .

கயவனாக  மாறி னான்
கழிசடையாக திரிந்தான் .

அவனின் வழி  முறை .
அதுவெ ன்றால்  நடக்கட்டும் .

நல்லதுக்கு காலமில்லை
கெடுதியே  ஓங்கட்டும்