Saturday, January 31, 2015

மரியாதை

பிற னைப் பற்றி  பேசுவது 
 புறங்  கூ று தல்.

பிறனைப்  பழிப்பது 
 ஆற்றாமை .

பிறனின்  சொத்தை  அபகரிப்பது
கேவலம்..

பிறனி ன்   உரிமையைப்     பறி ப்பது 
அவதூறு.

பிறனின்  மனையை  நோக்குவது 
அநியாயம் 

பிறனின்  வேலையாளை  அணுகுவது 
அக்கிரமம்.

பிறன்   என்று நினைத்து ஒதுங்குவது  
மரியாதை.

  

கோரமானவன்

மரியாதை இல்லாதவனை 
நகர்த்தி விடு 
 திமிர்ப்  பிடித்தவனை 
 விரட்டி விடு
 அவனை நெருங்க விடாதே 
அவன் கோரமானவன்.
   

அசந்து போனேன்

வயதை மறந்தான்
 ஓடினான்  வாசலுக்கு
 எட்டிப் பார்த்தான்
 மூன்றாம்  வீட்டை
 உள்ளே ஓடினான்
சட்டென்று
புரியவில்லை எனக்கு
 மூன்றாம்  வீட்டை
கவனித்தேன்
அலுவலகத்திலிருந்து
 வெளியே வநது
தன் மகிழு ந்துவை நோக்கிச்
 சென்றார்.
 அதை திருப்பி கொண்டு
 வந்தார்.
அவரைக் கண்டவுடன்
 இந்தஅறு பத்தெ ட்டு   மனி தன்
 ஓடுகிறான்  என்று அறிந்தேன. .
எழட்டு  வயது    மன வளர்ச்சியைக்
கண்டேன்.
தெரிந்து கொண்டேன் பின்  இருவரும்
அண்ணன் தம்பி என்று
 என்ன பாசம் என்று எண்ணு ம் போது
கேள்விப்பட்டேன் இருவரும்
 பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று
உணர்ந்தேன் காழ்ப்பை!
ஓடும் திறன்  அறு ப தெட்டடிலும்
அசந்து போனேன்  அவனின்
இளமையைக்  கண்டு
அதிர்ந்து போனேன்  அவனின்
வளர்ச்சியைக் கண்டு


Monday, January 26, 2015

இது என்றால் அது

இது என்றால் அது என்கிறான்
 அது என்றால் இது என்கிறான்
 தெளிவு அவனிடம் இல்லை
அவன் வழி  சென்றால்
 அதற்கும் இணங்க வில்லை
 என்ன  செய்வது
 முழ்கிப்  போயிருக்கிறேன்
ஆழ்ந்த  சிந்தனையோடு.

Sunday, January 25, 2015

தாய் பெற்ற மகன்

தாயை நேசிப்பது போல்
 நேசித்து
  தாயின் சொல்லை மீறாதது  போல்
 மீறி
நல்ல பிள்ளை என்று பெயரெடு க்கும் போது
தாயின் வளர்ப்பினால் அல்ல
 தன்னுடைய  நிலையால்
 என்று இறுமாந்து
 பூரிக் கிறான்  தாய்
  பெற்ற  மகன்
தாய்  புன் முறுவல்
 பூக்கிறாள்   மகனின்
நினைப்பை நினைத்து.
  

Saturday, January 24, 2015

வெற்றியை நோக்கி

தடயம் இல்லை
உண்மை இல்லை

தடிப்பு இல்லை
தாக்கம் இல்லை

துடிப்பு  இல்லை
 துட்டும் இல்லை.

உறுதி இருந்தது
 உரிமை இருந்தது

தைரியம் வந்தது
கை கூடியது .

தளர்ந்த மனம்
எழும்பியது  வீறு   கொண்டு.

 விழ்ந்தது  புனைச சுருட்டு
விழ்த் தியது  உண்மை

எழுந்தான், நடந்தான்
 ஓடினான் வெற்றியை நோக்கி
பெருமையுடன்.

Friday, January 23, 2015

ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்

அன்பும் அரவணைப்பும்
 என்று வாழ்ந்தது பொய்.

பாசமும் பிணைப்போடும்
வளர்ந்தது பொய.

மெய் பொய் ஆகிப் போனது
 மறந்தது நெஞ்சம்
மர த்தது கொஞ்சம்.

காற்றுக் கூட பட வேண்டாம்
 என்று ஒதுங்கிப் போக.

தூசும் வேண்டாம் துடைப்புமும்
வேண்டாம்  என்று விலகிப் போக


ஊரில் போவோர் வருவோர்
நினைவுப் படுத்தும் போது

மனம் சீற
 கண்கள் துடிக்க
உடல் சிலிர்க்க
ஊரும் வேண்டாம்
ஒன்றும் வேண்டாம்
என்று ஓடத் தோன்றுகிறது

  

Tuesday, January 20, 2015

ஆள் இல்லை

காட்டிலே ஒரு பூ
 அது எ ன்ன பூ?

கவனம் கொள்ள
ஆள் இல்லை
 அழகு பார்க்க
 ஆள் இல்லை.


வளர்த்து செழித்து
அழகாக மலர்ந்து
பூ பூவாகச்  சிரித்து
நிற்கும்  வண்ணக்
கோலத்தைக்  காண
ஆள் இல்லை.   

Monday, January 19, 2015

கண் பார்வை

மாநிறத்தை வெண்மை
 என்று கொள்ளலாம் 
பார்க்கும் கண்களிலே 
 இருக்கிறது  நிறம் 
 வெள்ளையாக  இருப்பவளை 
 கறு ப்பு என்று சொல்லும் போது 
கண்  பார்வை சரியில்லையோ 
 என்று நினைக்கத்  தோன்றும்.
என்னே  என்று சொல்வது 
 தெரியவில்லை . 

Sunday, January 18, 2015

தரமற்ற படைப்பு

எழுதுவது நனநெறி க்காக
 எழுதுவது உணர்ச்சிகளுக்கு
 வடிகாலாக
 எழுதுவது பண்பாட்டின்
 மேன்மைக்காக
 எழுத்தில் கண் ணியம்
 எழுத்தில் ஒரு நேர் த்தி
எழுத்தில் ஓர் அழகு
 காணி ன்
அது ஒரு காவியம்
அநாகரிகம்  தோன்றின்
 கொச்சை  சொற்கள் இருப்பின்
 அது ஒரு
 தரமற்ற   படைப்பு
 என்று கொள்ளின்.
  

என்ன என்று சொல்ல!

பெண் பிறந்தால்
 ஆண் அழுவான்
 ஆண்  இறந்தால்
 பெண் அழுவாள்
 என்ன என்று சொல்ல!
 எதற்கு என்று கொள்ள! 

மெய் மறந்து நின் றேன்

துள்ளலுடன் வந்தாள்  
குலுங்கி குலுங்கிச்  சிரித்தாள்
கண்ணில் பெருமை
 உதட்டில் புன்  முறுவல்
பெருமிதமும் பேரு வகையுடன்
குதுகாலித்தாள்
சிறுமி என்று நினைத்தேன்
 சிறுமியே என்றாலும்
மதிப்பும் மரியாதையும்
 வியாக்க வைக்கும்
 அழகும்
 என்னைக்  கவர
 மெய் மறந்து நின் றேன்
வெகு நேரமாக! 

Saturday, January 17, 2015

பெண்ணின் மனதை

கூட்டிச் சென்றான்
 உலகத்தைக்  காண
 ஒவ்வொரு திசையும்
காட்டினான்  அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
  முழுவதும் காட்டினான்
அன்போடு
 ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின்  மனதைக்     காணவில்லை
 காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை

தெரியவில்லை

அதுவாக இருக்கும் 
 இது வாக  இருக்கும்  
என்று எண்ணி 
 மனது கவலைக் கொள்ளும்
 அதுவு ம் இல்லை 
 இதுவும்  இல்லை 
 என்று  தெளிய வந்த போது 
மகிழ்வு   கொள்வதா  
 அல்லது
துயரம் அடைவதா 
 தெரியவில்லை 
 எனக்கு!
  

Friday, January 16, 2015

ஒர் அற்புதம்

திருமணம்   ஒரு வரம்
 நடப்பதும்  நடவாதும்
 நம்மிடையே இல்லை

முனைப்பும் முயற் சியும்
இருப்பின்  கைகூடும்  என்று
கொள்ள இயலாது.

அதற்கும் மேல் ஒன்று
 இரு ப்பது மறக்க
 இயலாது.

  அதுவே  தெய் வாதினம்
கண்ணுக்குத் தெரியாத
 ஒர்  அற்புதம்!    

புல் மீது படர்ந்த

தன்  நிலை பிறழாதவன்
இன்னல் பட வேண்டியதில்லை
 அவை வரும் போகும்
செலவினம் இல்லை.
 வந்த வழியில் போய்  விடும்
 சற்று தடுமாற்றத்தைக் கொடுத்து
  தாங்கிக் கொண்டு திடமாக
 நோக்கின்
 புல்  மீது படர்ந்த
 பனி போல விலகிடும்
 சட்டென்று !

Monday, January 12, 2015

நியாயமன்றோ?

விட்டில் பிறந்த பெண்ணை
 எள்ளி நகையாடி
 நைந்து பேசி
 நோகச் செய்த
 போது   மகிழ்ந்த
 உள்ளம்
 இன்று தன மகள்
 இன்னல் படும் போது
 துடிப்பது
நியாயமன்றோ?
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
 முற்பகல் செய்யின்
 பிற்பகல் தானே வரும்
 என்ற கோட்பாடுகள்
 நினைவுக்கு வரின்
 அது ஒரு
 வேறுபாடு அல்ல! 

செல்வந்த்ரைக் காணின்

தன்னை இழந்தாள்
 தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
 தாயுக்கும்  பிறன் வழியில்
ஆதாயம்    காணும்
 தந்தைக்கும்   பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
 செல்வந்த்ரைக் காணின்
 மண்ணில் விழுந்து
 வணங்கினாள்
 அவளைக் கண்டு
 மனம் புழுங்குகிறது
 எண்ணம் துடிக்கிறது
   
 

Friday, January 9, 2015

வீடு தேடி வந்தாள்

பிறந்தாள்  மாதேவி
மகத்தினிலே
 குலவிளக்காய்
 வெள்ளி மாலையிலே
 விளக்கு வைக்கும்
 மாலைப் பொழுதிலே
 வந்தாள்  மகராசி
 திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
 அழகுப்  பெண்ணாய்
மழலைக்  குழந்தையாக!
  

Thursday, January 8, 2015

அரை தூ க்கத்திலே

துயில்  எழுந்தாள் 
 காலைப் பொழுதிலே
 கண்ணை மூடி மூடி 
 திறந்தாள் வைகறைப்  பொழுதிலே 
 சாள ரம் வழியே வந்த காற்று  
 உடலை வருட 
 சுகமாக நெட்டி  முறித்தாள்
 மங்கை சோம்பலோடு  
 மனம் பறந்து சென்றது 
 முடிந்ததை  நோக்கி 
 கவனம் ஆட்கொண்டது 
 நடப்பதை நினைத்து 
பார்வை பறிபோனது 
 எதிர்காலத்தை எண்ணி 
 சிக்கி தவிக்கிறாள் 
 மங்கை  அரை தூ க்கத்திலே 
  
 

ஒரு நெருடல்

கிட்டே வந்தால் 
 நூறு அடி ஓடுகிறான்.

தள்ளிபோனால் 
 வாலைப்  பிடிக்கிறான்.

அவனைத்  தாக்குவது 
 எளிது!
 புறந்த்தள்ளுவது 
 சுலபம்!
 அவன் என்றுமே
 ஒரு நெருடல்  

அறிவில்லை!

திசை தெரியாமல்
 திரிகிறான்
 கண்ணிருந்தும்!

பேசத தெரியாமல்
 பேசுகிறான்
வாயிருந்தும்!

பொருள் புரியாமல்
நடக்கிறான்
 காதிருந்தும்.

 ஏன்  தெரியுமா?
 அவனுக்கு
 அறிவில்லை!

Wednesday, January 7, 2015

தன் னை விட

தன் னை விட சிறந்தவன் இல்லை
 தன்னை மிஞ்ச ஆள் இல்லை
 தான்  சொல்வது சரி
 என்று வாதாடுவான்
 விவாதம் செய்து
 விவே கம் மறந்து
 காயப்படுத்தி
இரறு மாப்புக்கொள் வான்

  

கருணைத் தலைவன்

கலைஞன் அவன்
 கட்சியில்  அவன்
தலைவன்
 குடும்பத்தில்  அவன்
 தவறு
 குடும்பங் களில்  அவன்
 ( அவனுக்குப் பல)
 தலைவன்.

நின் றான் பெருமிதமோடு
 அன்று
 செல்வம் பெருகியது
 ஏன்  வழிந்தது
பொற்குவியலாக
குடும்பங்கள்  
மகிழ்ந்தன.

நிற்கிறான்   பெருங்கவலை யோடு
 இன்று
பதவிக்குச் சண்டை
 தாரங்களின்  ஆக்கிரிமிப்பு
 செல்வங்களின்   கொந்தளி ப்பு
  திக்கு முக்காடிகிறான்
கருணைத் தலைவன்

வைகை

கடலாடி  குதிப் போட்டு
 துள்ளி  விளையாடி
 கண்ணா  மூச்சி ஆடி
உருண்டு  புரண்டு
  குலுங்கி அலு ங்கி
 மகிழ்ந்து பரவசமாக
 கரை நோக்கிச்
சென்றாள்    வைகை

Monday, January 5, 2015

என் பொம்மை தாயும் தந்தையும்.

என் சிறு பிள்ளை விளையாட்டு
மரப்பாச்சி பொம்மைகளுடன்
 தாயகவும்  தந்தையாகவும்
நினனத்து  பேசுவேன்
  அழுவேன், சிரிப்பேன்
குறைகளைக்  கூறி  கதறுவேன்
 நிறைகளைச் சொல்லி நிரப்புவேன்
  பாடுவேன் , ஆடுவேன், கொண்டாடுவேன்
என் தாயும் தந்தையுமே மறந்தாலும்
என் மரப்   பெற்றோர்  மற க்கவில்லை
தந்தை சிவனடி சேர்ந்தார்
 தாய் தவறி  விட்டார்
என் பொம்மை தாயும் தந்தையும்
உள்ளனர்   இன்றும்  என்னோடு
இருப்பார்கள்  எனக்குப்  பிறகும்  கூட.
   

ஒரு தாய் மக்களிடம் கூட!

பார்வைகள் வெவ் வேறு
 தாயுமாயின் தனயனுமாயின்
 தங்கை போல் அக்கா இல்லை
பண்பில், படிப்பில், தோற்றத்தில்
 அக்கா வெடித்து விம்முவாள்
 தங்கை மடித்து மறு குவாள்
பெரியவள் கடித்துக் குதுறு வாள்
 சின்னவளோ  முழுங்ஙி   மறைப்பாள்
 முத்தவள்  எல்லாம் தனக்கு
 இளையவள் கிடைத்ததில் மகிழ்ச்சி
 அடங்காத ஆசை அக்காவுக்கு
 ஆறாத மனதும்    கூட!
போதுமென்ற   வழி  முறை தங்கைக்கு
அமைதியான மனதும் கூட!
 பார்வை வேறு, முறை வேறு
 ஒரு தாய் மக்களிடம்  கூட!
     

விழி வழியாக

காட்டிலே காண்டாமிருகம்
பெரிய  மாமிச மலையாக
நாட்டிலே நட்டுவாக்களி
பெரிய விஷக்   கொடுக்காக
மலையிலே மலைப்பாம்பு
விரிய வேக சூரனாக
 கடலிலே கடல் புறா
அமைதி வேள்வியாக
பெரிதும் சிறிது மாக
கொடுமையும் கனிவுமாக
பயங்கரமும்  பரிதாபமுமாக
நடைபெறும்  நடவடிக்கை
 கண்டும் காணாமலும்
 நிகழும் நிகழ்ச்சிகள்
 மனத்தைக் குடைய
 வாழா விருத்தலும்
வாழ்த்தியும் வாடியும்
  நிறுத்தலும் நிற்காமலும்
இருத்தலைக் கண்டேன்
விழி வழியாக    


ஆட்டமும் பாட்ட முமாக

ஆடல் வல்லான்
 ஆடினான்
 இர வும்  பகலுமாக
 தரிசனம் தந்தான்
 ஆதிரை அன்று
 கால் மாறி
 மாறி  ஆடினான்
  இடது வலது என்று
 மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
 வையைத்தில்
தோன்றும் கதிரவன்
 கிழக்காலே
 மறையும் ஞாயிறு
 மேற்காலே
 இரவும்  விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
 ஆட
 மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்




 




சற்றுப் பொழுதிலே


அன்றொரு நாள்

காற்று  வீசியது
கோராமாக
 பிய்த்துக்  கொண்டு
 பிளறிக் கொண்டு
 தாண்டவமாடியது
அலறியது, பதறியது
 அமைதியானது  சற்றுப்
பொழுதிலே.


மறு நாள்

காற்று  பரவியது
 தென்றலாக
உரசிக்  கொண்டு
உறவாடிக்கொண்டு
  நடனமாடியது
பாடியது, அழைத்தது
சுகமாக சற்றுப்
பொழுதிலே




ஒரு கேள்வி

வந்தவன் கேட்டான்
 ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
 பதில்   சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா  உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
 அந்தக் காரணமும்
 எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.