Saturday, February 28, 2015

உற்சாகம் மெதுவாக உற்றெடுக்க

மனதிலே சொல்லொண்ணா  அயர்வு
 ஏன் எதற்கு என்று  தெரியவில்லை
உடலில் விவரிக்க முடியாத ஒரு தளர்வு
 ஏன் எதற்கு என்று அறியமுடியவில்லை
வெறித்துப் பார்க்கிறேன் வானத்தை
 அகன்ற வானமும் நீலம் பரிந்த தோற்றமும்
 எட்டிப் பார்க்கும் கதிரவனும் மனத்தை நிலைபடுத்த
 நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்ப  திரும்பினேன்
 கண்டேன்  பூக்கள்   மலர்ந்து  குலுங்கும்  அழகை
 உற்சாகம் மெதுவாக  உற்றெடுக்க  அமைதியானேன் 

தெய்வக் குற்றமோ

பருவமும் காலமும் மாற 
மழையும் வெயிலும்  மாற 
நீரும் நெருப்பும் கூடக் குறைய 
காற்றும் வெள்ளமும் பெருக்கோட 
வந்தது சுனாமி என்ற பேரலை 
அடித்துச் சென்றது  வீ டும் வாசலும் 
தொலைந்தது நிலமும் புலமும்
மடிந்தனர் மனிதர்களும் விலங்குகளும்  
 தி ரும்பியது அமைதி  இரண்டொரு  நாளில் 
 அழுகுரல்களும்   மருட்சியும்  விரிந்தன
சோர்வும் துக்கமும் மிகுந்தன
 இயல்பு நிலை வர வெகு நாட்களாகியது 
இது தெய்வக்  குற்றமோ என்று எண்ணு ங் கால் 
 இது மனிதனின் மடமையே என்று கொண்டேன்  

Friday, February 27, 2015

எது நடக்குமோ

இலை யுதிர் காலம்  என்றும்
வேனிற் காலம் என்றும்
 பனிக் காலம் என்றும்
வசந்த காலம் என்றும்
 பிரித்து வகுத்து
வாழ்ந்த காலம் போய்
 இன்று வெயில்  தொடர்ச்சியாக
மழையே  இல்லாமல்  நீடித்து
காலங்கள் மாறி
 நிகழ்வுகள்  மாறி
மனிதர்களும் மாறி
உரு  மாறி   இடம்மாறி
எல்லாமே மாறி
திரியும் கால்
 எது நடக்குமோ
எது நடக்காதோ
என்று உருகி
உணரும் போது
யாவும் முடித்தே போய் விடும்.



Thursday, February 26, 2015

இரண்டும் ஒன்றே

இறையன்புடன் வாழ்ந்தால்
 நெருக்கடி இருப்பின்
நெகிழ்ந்து விடும்
 பனி போல்
 என்று சிலாகிக்றார்கள்
 இறையன்பர்கள்.

நெறி வழியில்   வாழ்ந்தால்
 இடுக்கண் ஏற்படின்
சடுதியில்  நக ண்டு விடும்
 காற்றைப் போல்
 என்று வியக்கிறார்கள்
 சிந்தனையாளர்கள்.

இரண்டும் ஒன்றே
 இறையன்பு ஒரு பற்று
நெறிமுறை  ஒரு வழி
 பற்றும் வழியும்  வெவேறு அன்று
 ஒருங்கே  நோக்கிச்   செல்லும்
 ஒரே கோட்பாடு. 

கண் மூடினாள்

பாட்டிலே கீதம்
அன்பிலே  பாசம்
 அழகிலே அமைதி
வேலையிலே  சுறுசுறுப்பு
கண்ணிலே கனிவு
நடையிலே  மிடுக்கு
 என்ற வாழ்ந்த  பின்
 கண் மூடினாள்
 அதே பொறுப்புடன் 

Saturday, February 7, 2015

சுணக்கம் வரும்

தம்பியை ஏமாற்றி
வாழு ம்  அண்ணன்
 வீடு முழு வதும்
தனக்கு வேண்டும்
 சொத்து எல்லாம்
தனக்கு வேண்டும்
தன்   பிள்ளைகள்
வாழ்ந்தால் போதும்
 தனக்கு தனக்கு
என்று வாழ்கிறான்
 நன்றாக இருப்பானா
இருப்பதை  பார்த்துக் கொண்டே
 இருப்போம்.
 சுணக்கம் வரும்
 பார்க்காமாலா   போகப்
போகிறோம்?
 

புண் படுத் துவதிலும்

அரசை ஆள்வான்
 பட்டுக் கிடப்பான்
என்று என் பாட்டி
கோபமாக  சீறும்  போது
தெரிந்து கொண்டேன்
ஆத்திரத்திலும்   நல்ல
வார்த்தைகள்
 மே ன்மையான் சொற்கள்
 சொல்ல வேண்டும்
 புண் படுத் துவதிலும்
 ஒரு நயம் வேண்டும்  என்று   

சீரும் சிறப்போடும்!

கூட்டினான்  கூட்டத்தை
அண்ணன் தம்பி என்று
பாராது பேசினான்
 வாய்க்கு வந்ததை
கையெழுத்து   போட்டான்
 அவனுக்கு அதிகாரம்
இல்லாத போது
நியாயப்   படுத்துகிறான்
ஆணவத்தோடு
 அவனும் வாழ்கிறான்
 இவ்வையகத்தில்
 சீரும் சிறப்போடும்!  

Monday, February 2, 2015

பச்சிள ங் குழந்தைகள் முகங்களும்

பால் நினைந்து ஊட்டும்
 லிங்கத்திற்கு  பாலால்
 நன்னீராட்டு
தயிரால் ஆராட்டு
 தேனால் பாராட்டு
 இளநீரால் குளிர்விப்பு
 சந்தனத்தால்  வசமாக்கி
 மஞ்சளால் குளியாட்டி
அரிசி மாவால் துடைத்து
 நன்னீரால் மீண்டும்  கழுவி
வண்ண மலர்களால்
 அலங்கரித்து
 ஆராதித்து
 தீபம் காட்டி
 பரவசத்துடன்   திரும்பிய
 பக்த கோ டிகளை   கண்ட போது
மனம் கனியவில்லை வெதும்பியது
ஆதரவற்ற சீறார்கள்   உண் ண
 ஒன்றுமில்லாமல்  வாடி மடியும்
துயரைப்  போக்க  பசியைக்  குறைக்க
 பாலும், தயிரும், தேனும், மாவும்
 அளிக்கலாமே.
 லிங்கோத்பவர்    மனமும் குளிரும்
 பச்சிள ங் குழந்தைகள்  முகங்களும்
மகிழ்ந்து வாழ்வு பெருகும் .

பொருள் தெரியவில்லை

நமக்கு மேலே  ஒருவன்  '
 அவன் இறைவன்  எனலாம்
இறைவன் என் கிறது  ஆன்மிகம்.

நமக்கு மேலே ஒருவன்
அவனோ அதுவோ இயற்கை
என்பது யதார்த்தம் .

நமக்கு மேலே யாரும் இல்லை
நாமே அதயும் அந்தமும்
என்கிறது நாத்திகம்.

எது சரி, எ து தவறு
 என்று ஆராயலாம்
 தெரிய வருவது யாதொன்று மில்லை.

காற்று சீறு ம் போது
 கடல் கொந்தளிக்கும்  போது
 வெயில் காயும் போது
இறைவனைக் காணவில்லை
இயற்கை கட்டுப்பாட்டில் இல்லை
 மனி தன  தத்தளிக்கிறான்.

ஆன்மிகம் போன இடம்  எங்கே?
யதார்த்தம்  சென்ற திசை   எது?
நாத்திகம் கண்டது தான் என்ன ?

பொருள் தெரியவில்லை






புல்லுக்கும் சிறிது பாயும்.

வாயில் வந்ததைப் பேசி  
தனக்குத்  தான் எல்லாமே தெரியும் 
மற்றவர்கள் ஒன்றுமே அறியாதவர்கள்
 \என்று திரிகிறான் ஒரு வன் 
 படிப்பே இல்லாதவன் 
 வளர்ச்சி அறிவிலும்  இல்லை 
 உடலிலும் இல்லை 
 அவனுக்கு சாலரா க்கள் 
அவனுக்கு சலாம்  செய்பவர்கள் 
என்று ஒரு பட்டாளம் .
 வாழ்கிறான் அவனும்
  பயிருக்கு  பாய்ச்சிய 
 நீர் புல்லுக்கும் 
 சிறிது பாயும்.