Saturday, February 27, 2016

என் வழியில் அமைதியாக

பாடம் படித்தேன் வரி பிறழாமல்
 மனனம் செய்தேன் வரி பிசகாமல்
நெஞ்சில் இருத்தினேன் பண்   மாறாமல்
 நிறைத்தேன் மனதை இடம் விடாமல்
இவ்வாறாகப் படித்தேன் என் இளமையில்
 யாவற்றையும்  முழவதுமாக   வல்லமையோடு
 இன்று படிப்புக் கை கொடுக்க  சிறப்போடு
 வாழ்கிறேன் என் வழியில் அமைதியாக. 

Friday, February 26, 2016

கண்டு களித்தேன்.

பால் போன்ற உள்ளம்
 பனி போல் மிருது
 சலனமே இல்லாத மனம்
 சட்டென்று  மலரும்  அழகு
தெளிந்த நீரோடை  போல் எண்ணம்
தெளிவாக  விரியும்  விவரம்
கும்பிடத் தோன்றும் விதரணை
 குறையாமல் அள்ளி கொடுக்கும் பக்குவம்
 கண்டேன் இவை யாவற்றையும் மிகவாகவே
 அவளிடம் வெளிப் படையாக அல்லவே
 காணின்  அவளிடம் மிக நளினமாகவே
 கண் விரிய கண்டு களித்தேன் மகிழ்வாகவே.


Thursday, February 25, 2016

மதி மயங்கி

ஆடி களைத்தப் பின் தூங்கினான்
ஆடை கலையாமல்

 பாடி முடித்தப் பின்  அயர்ந்தான்
படு வேகமாக

தூண்டி விட்ட பின் அமைதியானான் 
துடிக்க வைத்தப் பிறகு.

காட்டிக் கொடுத்தப் பிறகு   மறைந்தான்
கடித்துக் குதறிய போதாது

வாழ மறுக்கிறான் வாழ்வை  தொலைத்தவுடன்
 வடிந்து வழிந்து அடங்கியது  போதாமல்

மனிதனை  ஆட்டி படைக்கும் விதி  திரள
 மலைத்து நிற்கிறான்  மதி மயங்கி 

Wednesday, February 24, 2016

ஒட்டு மொத்தமாக

காலாற நடக்கிறேன்  கால் வலிக்காக
 கை ஓடிய எழுதுகிறேன்  கை செலவுக்காக
 கண் துஞ்சாமல் படிக்கிறேன்  அறிவுக்காக
 மனம்  போன படி போகா மல் வாழ்கிறேன்
 வெற்றி காண வேண்டும் என்பதற்க்காக
 காலும் கையும்  கண்ணும் மனமும்
 என்னுடன் ஒத்துழைக்க மறுத்தால்
 தொலைந்தேன்  ஒட்டு மொத்தமாக

  

Tuesday, February 23, 2016

இலக் கை நோக்கி

என்னே என்று நினைக்கும் போது
எது என்று ஆராயும் போது
 எவ்வாறு என்று கேள்வி கேட்கும் போது 
 தோன்றும்  எண்ணங்கள்  ஒன்றல்ல இரண்டல்ல
தேடித் தேடித் துருவிக்  கண்டறியும் போது
 கிடைத்தது பலவாக பல விதமாக
 இருந்தும்  நாம் யாவரும் கண்டு தெளிய வில்லை
 என்ற பொழுது  மனம் துவண்டு ஒடுங்கி  விட
 செல்கிறோம் ஒரு வழியாக இலக் கை நோக்கி

நடக்கிறேன் அழகாக

பாட்டி சொன்ன கதை
 மனதிலே நிற்க
 தாய் சொன்ன வார்த்தை
 மனதிலே பதிய
 படித்த கருத்துக்கள்
 மனதை மேம்படுத்த
 வாழ்விலே பல விவகாரங்கள் 
 தோன்றி    மறைய 
 எதற்கும் எதிலும்
படித்ததும் கேட்டதும்
 வழியில் நின்று அறிவுறுத்த
செம்மையாகச்  செல்லும்   வழி
 மனதில் இன்பம் துய் க்க
 செல்லுகிறேன் என் பாதையில்
 சற்றும் விலகாமல்.
 பலருக்கு கண்ணில் எச்சம்
 வாயில் மீதியும் சொச்சமும்
   கவலயில்லை எனக்கு
 நடக்கிறேன் அழகாக
 என் சிந்தனை யோடு


மகிழ்வது நீயே.

மனிதனாக  வாழப் பழகு
மிருகமாக வாழ நினையாதே

ஆசையும்  மீ சையும்  ஓரளவே
நித்தியம் வேண்டுதல்  அதுவல்லவே

செய் நேர்த்தி  செய்வது  தேவையே
 அதை பாதியிலே விடுவது அழகல்லவே


செய்வதும் செய்யாததும் உன் முடிவே 

செய்த பின் மகிழ்வது நீயே.

Sunday, February 7, 2016

தூக்கி எறிகிறாள்.

தூக்கி எறிகிறாள் எல்லாவற்றையும்
 சிறியது பெரியது என்று பாராமல்
மலிவு விலையுயர்ந்தது என்று தெரியாமல்
தூக்கி எறிவாள் யாவற்றையும் .


தூக்கி எறிகிறாள் எல்லாவற்றையும்
மிருதுவானது  கடினமானது என்று எண்ணாமல்
உயர்தரமானது   சாதாரணம் என்று அறியாமல்
தூக்கி எறிவாள் யாவற்றையும்.


தூக்கி எறிகிறாள் எல்லாவற்றையும்
அழகு அழகற்றது   என்று கருதாமல்
மதிப்புக் கூடியது மதிப்பு இல்லாதது என்று நினையாமல்
தூக்கி எறிவாள் யாவற்றையும்

தூக்கி எறிவாள் எல்லாவறையும்
முகத்திலும் நெஞ்சிலும்  புரியாமல்
வேண்டுமின்றில்லாமல் விளையாட்டாக
 தூக்கி எறிவாள் யாவற்றையும்


தூக்கி எறிவாள் எல்லாவற்றையும்
 சிறிது வலியை உண்டாக்கும்
 அவள் ஒரு  வயது குழந்தை
 தூக்கி எறிகிறாள் குழந்தைத் தனமாக.







Wednesday, February 3, 2016

நிற்கிறேன் பாவமாக

நான்  பெரிய காரியக்காரி அல்லவா
எதையும்  நன்றாகச் செய்வேன் அல்லவா
எதிலும் முதல் என்ற பெருமை  எனக்கு அல்லவா

இன்று அதற்கு  ஒரு திகட்டல்  ஏனோ
 பால் பையை எடுக்க மறந்தேன்  ஏனோ
என்றும் மறக்காதவள் இன்று மறந்தேன் ஏனோ .

அசந்தேன் சற்று நேரம் என்னுடைய உஞ்சலில்
வானரங் களுக்கோ ஏகக் கொண்டாட்டம்  மரங்களில்
பூ னகளுக்கோ அடை விடக் கும்மாளம். மதிலில்


குரங்குகள் பாலை பியித்து உற்ற
 பூனைகள் சப்பி நக்கி உறிஞ்ச
 ஒரே ஆர்பாட்டம் வாசலிலே

எழுந்து ஓடினேன் வாசலை  நோக்கி வேகமாக
ஐயோ என்று கத்தினேன் அழாத  குறையாக
இன்று பாலும் இல்லை மோரும் இல்லை ஒரேயடியாக
 நிற்கிறேன் பாவமாக









Monday, February 1, 2016

இங்கும் அங்குமாக

வாழ்கிறேன் நான்
 இங்கும் அங்குமாக

என்னைச் சுற்றி
 பூனைகளும் வானரங்களும்
மதிலயும் மரங்களிலும்
ஒடி விளையாடி  என்னைப்
பார்த்து  கெக்கிலிக்க

சிட்டுக் குருவிகள்
காலையில்  புல் தரையில்
கும்மாளமிட்டு  ஆடிப் பாடி
கூவி கூவி என்னைப்
பார்த்து நகைக்க

நாய்கள் பல கூடி
 இரவில் குரைத்து
கூக்குரலிட்டு அமைதியை
தூக்கத்தையும் கெடுத்து
என்னைப் பார்த்து கொக்கரிக்க


என் இரு பக்கத்திலும்
 சீனக் குடும்பம்
 அழகாக என்னைப் ப
பார்த்து விமர்சிக்க


என் எதிரில் ஒரு தமிழன்
 மோட்டார் பழுது பார்க்கும்
 வேலை செய்து கொண்டு  என்னைப்
பார்த்து சிரிக்க .

சற்றுத் தள்ளி  ஒரு மலேய்
 குடும்பம் நாசிக் கந்தர்
 உணவகம் நடத்தி என்னைப்
 பார்த்து  பரிகசிக்க


உறைவிடமாகக் கொண்டு
வாழ்கிறேன் மொழி
முற்றும் தெரியாமல்
அரைகுறையாக அறிந்து
கேலிக்கு இடமாக

என்னுடைய ஆங்கில அறிவு
 எனக்கு இங்கு  சிறதளவு
மதிப்பு தற்போது வழங்கி
என்னை உயர்த்திக் காட்ட
 நடக்கிறேன் சற்று ஆறுதலுடன்








அண்ணன் தம்பி

தம்பி என்று எண்ணாமல்
பொருமிகிறான்  வேலன்

தம்பி தன்னுடன் சிறப்பு
 பெற்றால் புழுங்குகிறான்
வேலன்.

தம்பியின் முன்னேற்றத்தை
எண்ணி குமுற கிறான்
வேலன்.


தம்பியோ அண்ணன் என்று
 பாசத்தைப்  பொழிந்தான்
 கொஞ்ச நாள் வரை.

 தம்பி புரிந்து கொண்டான்
அண்ணனின்   மனத்தை
 வெகு நாள் கழித்து.


இன்றல்ல நேற் றல்ல
 அண்ணனின் மனம் வெம்பி
 வெதும்பி  துடிக்கிறது
 ஏனோ தெரியவில்லை,.