Thursday, March 31, 2016

தன்னைவிட ஒருவனா

கட்டவிழ்த்த த்த காளை  போல் திமறி னான்
கட்டுங்கடங்காமல் பேசினான் பொழுதுமே
சாடினான்  யாவரையும்  வரை முறையிலாமல்
 இகழ்ந்தான் அனைவரையும்  திக்குத்  தெரியாமல்

எதனால் இவ்வளவு  என்று கண்ட போது
ஆத்திரம் என்று ஒரு சொல்லில்  முடிக்கலாம்
அதுவன்றே குறிக்கோள்  அதனிலும் மேலே
இயலாமை  ஒன்று உள்ளடங்கியுள்ளும்


முடியவில்லையே தன்னால் எண்ணங்கள்  திரள்
கோபம் தலைக்கேற  ஆங்காரமாக
வெடித்துச் சிதறுகிறான் மனம் குமறி
சினம்  குறையை மறைக்கும் என்றாகுக.


தன்னைவிட ஒருவனா என்று ஒரு  நினைப்பு 
தலைகுப்பற  அவனை புரட்டித்    தள்ள
இறைகிறான் ஆவேசமாக  காரணமே இல்லாது
தலை குனியும் நேரம் விரைவிலே எனறறியாமல் 







Wednesday, March 30, 2016

காணுதலும் காணாததலும்

கண்டு கொண்டேன் இனத்தை
 கண்ட தெளிந்தேன் வளத்தை
கண்டு கொண்டேன் நல்லதையே .


காணத் தவறின் குணத்தை
 காணத் தப்பியது  குதர்க்கத்தை
காணத் தவறின் நல்லதற்றவையே


கண்டு கொண்டது கைக் கொடுக்கவில்லை
 கண்டு அறிந்தது புறந் தள்ளியது
கண்டு அடைந்ததது விலகியது.


காணத் தவ றின் கை தூக்கியது
காண அறியாதது ஒத்துழைத்தது
காணாமல் போனது வந்தடைந்தது.


கண்டதும் காணாததும் வகை சார்ந்தவையே
கண்டும் காணாமலேயும்  தொகை தொங்குமா 
காணுதலும் காணாததலும்  பகை உண்டாக்குமோ



Tuesday, March 29, 2016

வயதான வேளையில்

வயது  ஒன்று நிற்காது
 மணியும் நில்லாது 
வயதும் மணியும் 
 நிற்காது  நில்லாது.


திரும்பி திருப்பி
 சொல்கிறேன்  என்றாவது 
  வயதாகும் வேளையில்
ஓட முடியாமல்.


மறதி வரும் நேரம் 
 மறந்து போகும் எல்லாம் 
 வயதான் வேளையில் 
நினைக்க முடியாமல்.

தடுமாறும் காலம் 
 வீழ்ந்து விடும் யாவும் 
 வயதான் வேளையில் 
தடுக்க முயலாமல்.

தட்டு தடவி  நீக்கி நீங்கி 
சிரித்து சரிந்து அழுது  அழுகி 
 வயதான் வெளியில் 
வாழ்ந்து நோகாமல்


சாகும் தறுவாயில் 
 கழித்து சலித்து  கவிழும் 
 வயதான் வேளையில்
 இறக்கத்   தெரியாமல்.


இறப்பதும் வாழ்வதும் 
 கையில் இல்லை என்றின் 
 வயதான வேளையில்
பட்டு படுத்திக் காட்டாமல் 










சிண்டு சிக்கலாகாமல்

ஆட்காட்டி விரலைக்  காட்டினான்
ஆளவந்தான்.

சுட்டிக் காட்டினான் கோளாறை 
ஆளவந்தான்.


தேடினான்  குறையை எங்கு என்று 
வாழ வந்தான் .

கண்டு பிடிக்க முயன்றான் 
வாழ் வந்தான்.

கோளாறும் இல்லை முதலிலே 
குறையும் இல்லை நெடுகிலே 

பிடித்தார்கள் சிண்டை   இருவரும் 
அடித்துக் கொண்டு

நடப்பது இவ்வாறே உலகில் 
எங்கும் எவ்விடமும் .


ஆளவந்தான் நானாகவும் 
 வாழவந்தான்  நீயாகவும் 

இருக்கலாம் என்றாகிய போது 
 சிண்டு சிக்கலாகாமல் இருந்தால் 
 மட்டுமே கவனி.



Monday, March 28, 2016

கண்டும் தெளியவில்லை

மண் என்று ஒர்  இளக்காரம்
 மண் தானே என்ற ஓர்  அலட்ச்சியம்
மண்ணே  பொன் என்று அறியாமல் .

மண்ணாவே போவாய்
 மண்ணுக்குள்ளே போ
 என்ற ஓர் ஆங்காரம்.

 ஒரு மண்ணும்  தெரியாது
 நீ ஒரு மண்ணு மண்ணு
என்ற ஓர் உதாசினம் .

அதோடே  மண்ணாசை
 ஒரு பேராசை  என்ற
 ஓரு நீட்டிப்பு .

அதனுள்ளே மண்
 பொன்னை விட உயர்வு
என்ற ஒரு  ஆவல்.


மண்ணின் மகிமை
மண்ணின் பொறுமை
மண்ணின் வலிமை


அறியாதார் பேசும்
பேச்சு கேட்டு
முடியவில்லை.


கண்டும்  தெளியவில்லை
 என்கிற போது மனம்
கலங்குகிறது  அனேகமாக .




நிழல் பயம்

கை வேகமாக எழுத 
 காதுகளிலோ இசை பாய 
 மனம் அலை பாயுமோ 
 என்ற நிழல்  பயம்
உருண்டோட   

தடை ஏதுமில்லாமல் 
எண்ணங்கள் ஒன்றன் பின் 
 ஒன்றாக குதித்து  வர 
கையால் எழுத முடியுமோ 
என்ற நிழல் பயம்
 உருண்டோட.
 
விரைந்து எழுதுகிறது 
 புண்ணியமான  கை 
வலி வந்து எழுத்தோவியம் 
 தடை படுமோ  என்ற 
 நிழல் பயம் உருணடோட.


எண்ணக் குவியல் 
 நிலைப்பட   சற்று ஓய்வு 
என்று கருதி கை நெட்டி 
முறிக்க நிழல் பயம் 
உருண்டோடியது முற்றாக 




Saturday, March 26, 2016

கண்ணப்பன் என்றே

கண்ணப்பன் என்ற சொல்வோம் அவனை
கண்கள் அலைபாய்வதால்

கண்ணப்பன் என்று கொள்வோம் அவனை
காலத்தையே கைக்  கொள்வதால்


கண்ணப்பன் என்று அறிவோம் அவனை
தான் கண்டதே  கோலம் என்பதால் .

கண்ணப்பன் என்று தெளிவோம் அவனை
கடுப்புடன்  எதையும் நோக்குவதால் .


கண்ணப்பன் என்று சொல்லுவோம் அவனை
கலக்குவதே குறிக்கோளாக .


கண்ணப்பன் என்றே அழைப்போம் அவனை
கண் சிமிட்டி கையை ஊதுவதால் .


கண்ணப்பன்  என்றே சிலாகிப்போம் அவனை
 களமிறங்கி குறை காண்பதால் .


கண்ணப்பன் என்றே போற்றுவோம் அவனை
கண்களிலே  ஆத்திரத்தைக்   காட்டுவதால்.


கண்ணப்பன் என்றே நினைப்போம் அவனை
கண்ணிலே களங்கமும் வன்மமும் நிற்பதால்

கண்ணப்பன் என்று பெற்றோர் இட்டப் பெயர்
 இன்று காரணப் பெயராக நிலைப்பதால்.

கண்ணப்பன்  வாழ்கிறான்  பெயருக்கேற்ப


அளவான வளத்தோடு
குறைவான  உயரத்தோடு
அதிகமான குரோதத்தோடு




இப்படியும் ஒரு பெணமணியா என்று.

அழகான்  மயில் போல
 ஆடினாள்  கோதை

 இனிமையான குயில் போல
பாடினாள்  கோதை

நன்மை பல செய்தாள்
பலனை எதிபாராமல் கோதை

நின்றாள்  நடந்தாள்  பார்த்தாள்
 சர்வமும் செய்தாள் கோதை .

பெருமைக்கும்  புகழுக்கும்
 அல்ல என்கிறாள் கோதை

நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும்
 மட்டுமே என்கிறாள் கோதை


வியப்புடன் நோக்கினேன்  கோதையை
 இப்படியும் ஒரு பெணமணியா என்று.



Friday, March 25, 2016

பூவே பூவே

பூ ஒன்று  பூத்தது  நேற்று
அழகாக விரிந்து

பூ ஒன்று வாடியது இன்று
 சோர்ந்து சுருங்கி

பூ ஒன்று நினவூட்டியது நேற்று
எல்லாமே நிறைவு என்று

பூ ஒன்று காட்டியது இன்று
 யாவுமே நிலையற்றது  என்று

பூவே பூவே எனக்கு கற்பித்தாய்
வாழ்வே மாயை என்று.


பூவே பூவே  எனக்கு புகட்டினாய்
 என் நிலைப்பாட்டை  எளிமையாக


சொல்லில்லை  உன்னிடம் அறிவுறுத்த
செயலே உன்னுடைய  திறன்.

Thursday, March 24, 2016

உக்கிரம் கூடுதலாக அனல் பரக்க

கதிரவன்கண்ணும் கருத்துமாகத்
 தொடர்கிறான் ஒரு நாளைப் போல

உக்கிரம் கூடுதலாக அனல் பரக்க
 பாய்ந்து ஒடி விளையாடுகிறான்.


"உஸ் உஷ்" என்று பெருமுச்சு எங்கும் ஒலி க்க
 மனிதன் தவிக்கிறான் தன்னாலே மயங்கி.

பானக்கம் சற்றுக் கை  கொடுத்து தூக்கி விட
 நீர் மோர்   தகிப்பை மிதப்படுத்த

இளநீர்  அருந்தி சற்று ஆசுவாசப்ப்டுத்திக்  கொள்ள
 அதன் விலையோ  ஒரு மலைப்பை உண்டாக்க

மனிதன் குளிர் பானம் நோக்கி ஓடுகிறான்
 மலிவு  என்ற போதிலும் அதில் நன்மைக் குறைவே

தெரிந்தும் மண்டுகிறான் மட மட வென்று
உயிர்க் குடிப்பான் என்ற அறிந்து கொண்டே.

வெயிலும் குறையவில்லை என்றும் போல
ஏறியது என்று குறைந்தது  அனைத்திலுமே
அனல் குறைய




ஓடித் தவிக்கிறேன் இவ்வாறு !

கையிலே பையுடன்
 புறப்பட்ட பயணம்
அதிகாலையில் ஓர் ஊர்
 மதியம் மற்றொரு நாடு
 பின் களைப்போடு
 அடுத்த ஊர்
 எல்லா வகைத் தடங்களில்
 ஏறி இறங்கி  நடந்து
  நின்று அமர்ந்து
வந்து சேருவதற்குள்
போதுமடா  போதுமடா
என்ற  ஆயாசம் மேலிட
 மாதமொரு முறை
 ஓடித் தவிக்கிறேன்
இவ்வாறு !


Tuesday, March 22, 2016

அலமேலு நூறாண்டு மேலாக

நூறு வயது வாழ்ந்தாள்
 நோய் நொடி இன்றி
நூற்றாண்டு கொண்டாடினாள்
 கோலாகலமாக

சுற்றாரைக் கூட்டி மகிழ்ந்தாள்
சுகமான விதத்திலே
தீங்கு என்பதே தெரியாது அவளுக்கு
நன்மையே  அவளின் நோக்கம்.

அழகுப் பேச்சு கையாண்டாள்
அழகி என்று கூற  முடியாது
வேகம் என்பது அவள் வழி
கோபம் ஆகாது அவளுக்கு.

வாழ்ந்து போனாள் அலமேலு
நூறாண்டு  மேலாக
இறந்து போனாள்  அலமேலு
கிடக்காமல்   வைக்காமல்
அவள்  போக்கிலே










Sunday, March 20, 2016

செட்டி மகன் கடல் கடந்து.

கொண்டு விற்கப் போனான்
 செட்டி மகன் கடல் கடந்து.

 அன்று விட்டுச் சென்றான்  வீட்டையும்
 மனைவியையும் மக்களையும்
 செட்டி மகன் கடல் கடந்து.


 அன்று விற்றான் ஈட்டினான்
 செல்வம் பல கோடி  கோடியாக
 செட்டி மகன் கடல் கடந்து.

தன்னுடன் கூட்டிச் சென்றான்
 கூட்டாளிகளை   பலரை   பழக்க
செட்டி மகன் கடல் கடந்து

தனக்கு பலமான  துணையாக
தெண் டாயுதபாணியை  கூட்டினான்
 செட்டி  மகன் கடல் கடந்து.

அவனுக்கு கோவில் கட்டினான்
 விழா எடுத்தான்  கோலாகாலமாக
 செட்டி மகன் கடல் கடந்து.


சென்றான் பாய் மரக் கப்பலிலே
செய்கோன் , மலேயா, சிலோன், பர்மா என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


வாழ்ந்தான் தாய் மண்ணில் ஒரு காலும்
 மாற்று மண்ணில் மறு காலும் என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


  வாழ்ந்தான் நல்லதுக்கும் கெ ட்டதற்கும்  பிறந்த நாடே
 உழை ப்பிற்கும் பொருள க்கும் அயல் நாடே என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


 இன்று மாறுபாடு கண்டது  மனம்
  பிழைக்க  வந்த இடமே சொர்க்கம் என்று  மேலோங்க
  துவங்குகிறான் வாழ்க்கையை  செட்டி மகன் கடல் கடந்து.













நேரம் இல்லை

நேரம் இல்லை  என்ற போது 
  அரக்கப் பரக்க என்றன் போது
நினைக்கிறேன்   எவ்வாறு ?

 மணித்துளிகள் நிறையவே
 நேரங்கள் மிகுதியாகவே
 தோன்றுகிறது எவ்வாறு?


ஆண்டு நிறைய நாட்கள்
 நாட்கள்  முழுவதும் மணி  நேரமாக
இருக்கும் போது  எவ்வாறு?


நேரம் போதவில்லை என்பது
 சற்று வித்தியாசமாக
 மனதில் படுகிறதே எவ்வாறு ?

 நிதானித்துப் பார்க்கிறேன்
புரியவில்லை எனக்கு
 சொல்லுங்கள் எவ்வாறு ?




நேரம் என்றன் போது

நேரம் என்றன் போது
 நினைவில் வந்தன்
 ஒன்றல்ல  பல
அடுக்கடுக்காக
 எதை எழுதுவது
 எதை விடுவது
என்று தோன்ற 
 பகலவன் தோன்றும் நேரம்
 மனதில் எழ   கொள்கிறேன்
 நேரம் வந்து  விட்டது
இயற்கையில்  தொடங்கி 
மனித வளத்தில்  ஒடி
முடிவே இல்லாத
 நேரத்தைக்  கண்டேன்
யாவற்றிலும் ஒருங்கே.

நல்ல நேரம் கெ ட்ட நேரம்
 என்னுடைய நேரம்
 எல்லாமே நேரம்  என்ற சலிப்பு
 ஒரு பக்கம் கண்டேன்
அவற்றையும் தாண்டி
நோக்கினேன் நேரத்தை
 மழையின் அழகிலே
நதியின் பிரவாகத்திலே
 மலையின் உச்சியிலே
 நிலாவின் குளுமையிலே
நேரம்  கண் முன்னே நிற்க
 விஞ்சியது நேரம்
 தவறாமை என்ற கோட்பாடு
அதின் மின்னல் வேகம்
வயதுக்குள்ள பொலிவு.
 அறிவு சார்ந்த  வளர்ச்சி.


சொல்வேன் பன்மடங்கு
 நேரம் நேரம் என்று ஓடும்
 மாந்தர்களிடம்  பல வகையிலே
 பல்லாண்டு பல்லாண்டு
 பாடி வாழ்த்தும் நாம்
 சில நேரங்களில்  பறக்கிறோம்
 நேரமின்மை என்று நினைவுடன் 
 நேரம் நிறையவே  இருக்க
ஏன் அதிகமாகவே 
 நேரம் பலவற்றில் தாக்க
காண்பதிலும் காணாததிலும்
 நேரம் பல வழியிலே  பரவ
புறத்திலும் அகத்திலும்
நேரம் இல்லை என்ற எண்ணம்
 மாயை  என்று உரைத்து
  நிறைவுடன் வியப்படைகிறேன்
அன்று போது  இன்றும்  


  





Friday, March 18, 2016

மனதில் ஒரு கனம்

மனதிலே ஓர் உறுத்தல்
 சரியான வழியில்
செல்கிறோமோ  என்று.

மனதில் ஒரு நெருடல்
நான் பேசுவது  அர்த்தத்தோடு
தானோ என்று

மனதில் ஒரு ஆயாசம்
 நான் சாதித்தது
என்ன என்று .

மனதில் ஒரு வெறுப்பு
  கொஞ்சமல்ல வாழ்வது
எதற்கோ என்று.


மனதில் ஒரு கனம்
 இனம் தெரியாத
ஏன்,என்ன,எதற்கு என்று




Thursday, March 17, 2016

முடிந்துவிடும் தன்னாலே

எப்ப்பிரச்சனைக்கும் ஒரு முடிவு
 எ க்கலக்த்திற்கும் ஒரு தெளிவு
 முடியாது என்று ஒன்றும் இல்லை
 முடியும் என்பது ஒரு மந்திரம்
 உச்சரித்துக் கொண்டே இரு
 முடிந்துவிடும் தன்னாலே.

வாழ்வை முடித்து

கலங்கிய கண்ணோடு
 எழுந்திருந்த  சிறுமி
 கலக்கத்துடன் சுற்றும் 
முற்றும் கண்கள் அலை பாய
 யாரையும்  காணாது திகிலுடன்
 கண் தெறிக்க விழிக்க 
 கண்ணீர்    இப்போ அப்போ
 என்று வடிய காத்திருக்க
அம்மா என்று  கதறி
வீறிட குரல் ஓங்கி
அம்மாவைக்   காணாது
சுவரிலே சறுக்கி சாய
 கண்டேன் ஒரு சோகத்தை
 அம்மா தன் வாழ்வை  முடித்து
 சில மணி  நேரங்களுக்கு  முன்னே





வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்

ஒர்  ஊரிலே  ஒரு குடும்பம்
 வாழத் தெரியாத ஒன்று

சிக்கனம் என்று நினைத்து
 கஞ்சத்தனமாக வாழும்  குடும்பம் .


உண்ண உணவு பற்றாமல்
 உண்பதே வழக்கம்

 உடுத்தும் உடை  கசங்கலாக
உடுப்பதே  பழக்கம் .

கேட்டால் எளிமை  என்ற
பகட்டுப் பேச்சு.

குறைவில்லை இதில் மட்டும்
பேசிப்  பேசியே  வாழும் இனம்.

வாழ்கிறார்கள்  அன்றும் இன்றும்
வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்




Wednesday, March 16, 2016

மனிதனின் சரிவு

தன்  வசம் இழந்தான்
 தன்  நிலை மறந்தான்
 தன்னம்பிக்கை   துறந்தான்
  துயர்  அடைந்தான்
 கண் மூடினான்
 மனிதனின் சரிவு
 கண் முன்னாலே
 நிலை பிரண்டதனாலே 

Tuesday, March 15, 2016

காணேன் நான்

ஓடும்  நதியிலே
 காணும் அழகை
எங்கும் காணேன்.

காற்றில் தவழும்
இசையின்  அமைதியை
எங்கும் காணேன்.

மந்திரங்களின்  உச்சரிப்பில்
 எழும் ஒரு புல்லரிப்பை
 எதிலும் காணேன்.

யாவற்றையும்  விட
 குழந்தையின் சிரிப்பில்
துள்ளிய  ஆனந்தத்தை
 எதிலுமே  காணேன்.











விளக்கேற்றி வை

விளக்கேற்றி வை 
 திக்குத்  தெரியாமல் 
தத்தளிக்கிறாள் அவள் 
என்றவுடன் மிரண்டேன் 
வெகுவாக  சற்று நேரத்தில் 
 மருட்சி நீங்கி  என்னைப் புரிந்து 
 உணர்ந்தேன் நிலைமையை 
 எவ்வளவு பெரிய சொல் 
 என்று திகைத்தேன்  
 சொன்னேன்  பின்னே 
சற்று ஆசுவாசமாக 
 அவள் யாரிடம் 
 நெருக்கமாக  இருக்கிறாளோ 
 அவள்  ஏற்றட்டும்  விளக்கை
 எரியட்டும்  பிரகாசமாக 
 ஒளிரட்டும் ஒளி  விளக்காக
 நான் எங்கு வந்தேன் 
 என்று சொல்லி  திரும்பிப்
 பாராமல்  நடந்தேன் வேகமாக. 
 
 

Sunday, March 13, 2016

வாய்ச் சொல் வீரனடி அவன்

வாய்ச் சொல் வீரனடி அவன்
 சொல் ஒன்று இன்றைக்கு
மற்றோன்று நாளைக்கு!

வாய் வீச்சு நீளமே அவனுக்கு
 அளக்க முடியாத  அளவிலே
போகப் போக நீளம் கூடவே!

வாய் பேச்சு ஆணவமே அவனுடைய
 அதிகாரம் விஞ்சும்  மிகவே
அர்த்தமில்லாத அடங்காப் போக்கே!


வாய்க் கட்டு  தேவையே  அவன் பால்
 சொல்லுக்கு மதிப்பு காணுமே
கட்டுப்பாடு பேச்சிலே அவசியமே!


ஒரு சொல் போதுமே அவனறிய
நயமே உரைத்தல்  நன்மையே
 மாறாது  இருப்பது பெருமையே!

சொன்ன சொல் மாறாதவன்  அவன் என்று
சொல்படி நடப்பவன்
என்றறியப்படுவது பேரின்பமே!




கண்டு கொள்ளாதே

வீட்டைக் கட்டிப் பார்
கல்யாணம் பண்ணிப் பார்
 என்றெல்லாம்  பார்த்தால்
கட்டின வீட்டுக்கு ஆயிரம் குற்றம்
 பண்ணின கல்யாணத்திற்கு
ஆயிரம்  விமர்சனம்
 எதைச் சொல்வது மிகவே
 எதை விடுவது சற்றே
 தோன்றும் யாவருக்கும்
 நரம்பில்லாத நாக்கு
புரளும் எவ்விதமே 
 கண்டு கொள்ளாதே
 ஏறக்குறையக்  கூட
கட்டு பல வீடுகள்
 நேரே செல் உன் வழியில்  

Saturday, March 12, 2016

மனிதன் மனிதனாக

நாய் ஒன்று குரை க்கிறது
 தெரு முனையிலே
இடைவிடாமல் எதற்கோ
தெரியவில்லை.

நாய் தானே என்று நடக்கிறோம்
திரும்பிப் பாராமல்
 அதுவும் ஓர் உயிர் என்று
 நினையாமல்.


 அந்த மெத்தனம் ஏனோ
 புரியவில்லை
 அசட்டையாக இருப்பது
 நியாயமே   இல்லை .


நாய் என்று ஒதுக்குவது
 சரியில்லை
உயிர் என்று மதிப்பது
நியமம் கூட


இதற்கு காரணங்கள்  கண்டு
 பிடிக்க முடியவில்லை
ஏனோ
மனிதன் மனிதனாக
 நிறைவு பெறவில்லை



பலமுக இலக்கை

தேனே மானே கற்கண்டே 
 என்று விழித்தக்  காலம் போய் 
 ஸ்வீடி டார்லிங்  பிலொவெட் 
 என்று கூப்பிடும் வேளையிலே
 கணவன் பெயர் சொல்ல மறுத்து 
சொல்வதற்கு பல சாட்சிகளை அழைத்து 
 நாராயணன் என்றால் பெருமாளைத்  தேடி 
 முருகன் என்றால் குமரனை துணைக்கு கூ ப்பிட்டு
 வாழ்ந்த காலங்கள் மலையேற 
இன்று சீனு, சிவா என்று பெயர் சொல்லிக்  கூவ 
 வாடா போடா  என்று  கொஞ்சிக் குலவ 
 இலை மறை காய் மறைவாக  நடந்தவை எல்லாம் 
 வெட்ட வெளியில் அரங்கேற 
 பாரதமும் பன்முகத் தொழிலில்  சிறக்க 
கலாச்சாரமும் பலமுக  இலக்கைத் தொட 
 முன்னேற்றம் என்று நாமும் கைக் கொட்டி 
 ஆர்பரித்து சிலாகிக் றோம் மகிழ்வோடு 



.

Friday, March 11, 2016

புதிய உயிர்

குருவி ஒன்று  மரம் மேலே
பழம் தின்று  போடுகிறது
 ஒன்று ஒன்றாக
 முதலில் தோலை
 பின் கொட்டையை
ஈஒன்று பறக்கிறது
  உறிஞ்சுகிறது  கொட்டையை
விட்டுச் செல்கிறது
 அங்கேயே
மண்ணில் புதைகிறது
 கொட்டை
நாட்கள் செல்ல
 வெளியில் வருகிறது
 இளம்
 பச்சையாக
 புதிய உயிர்
 கண்டேன்
 அழகாக




Wednesday, March 9, 2016

கவிதை எழுதுகிறேன்

கவிதை எழுதுகிறேன்
 இலக்கணமே தெரியாமல் 

 எதுகை மோனை துடிப்பு 
 எது வுமே  இல்லாமல் 

மனதில் தோன்றியதை 
 அவ்வவ் வாறே எழுதுகிறேன் 

ஒரு நேரம் குழந்தை அழுகிறது 
 எதற்காகஇருக்கும் என்று எழுதுகிறேன்   

ஒரு பொழுது   அழகிய மலரைப் பற்றி 
 பவளமல்லியோ குண்டு மல்லியோ 
 எழுது கிறேன் எனக்கு தெரிந்ததை  



மறு நாள் குடு ம்பம் அண்ணன் தம்பி  
 என்று எழு துகிறேன் நான் அனுபவித்ததை 


என்னென்ன எழு துவது என்ற வரைமுறை  
இல்லை என்னிடம்  எழுதுகிறேன் 
 நான் பாட்டுக்கு நேரம் தெரியாமல்.




செயல்படுவோம் அவ்வழியே


கற்றேன் என்பது மிகை
 கற்றது குறைவு
 கல்லாதது  நிறைய
 கேட்டதும் கற்றதே
 கண்டதும் கற்றதே
அனுபவித்தலும்  கற்றதே
 ஆழ்ந்த சிந்தனை  ஒரு கல்வி
ஆராய்ந்த  முடிவு ஒரு நிலையான  கல்வி
 அற்புதமான அழகு ஒரு செல்வம்
நிறைந்த  மனது ஒரு  தடையில்லா செல்வம்
அடக்கம் ஒரு பேருண்மை
  அமைதி ஒரு  உறுதியான பேருண்மை
உயர்வு   தனில்  ஒரு ஏகாந்தம்
உன்னதத்தில் ஒரு மலர்ச்சி
நின்று நிதானித்த   செயல்
 ஒரு எழிலான  கோலம்
செயல்படுவோம் அவ்வழியே
பொறுமையின்  வழியிலே  


Tuesday, March 8, 2016

உண்மைக்கும் உழைப்பிற்கும்

காடு வெட்டிப் போட்டவனுக்கு
கையிலே தழும்பு

 கவிதை  எழுதினவனுக்கு
  கையிலே  வலி

வாய்  ஓயாமல்  பேசினவனுக்கு
 கை மேல் பலன்

வாய் நிறைய  பொய் யை அள்ளி விட்டவனுக்கு
 கை  நிறைய பணம் .

இது தான்  உலகம் இன்றைய நாளிலே
உண்மைக்கும்  உழைப்பிற்கும்
விலை இல்லை உண்மையிலே



  

பெரிய மனிதனாகி விட்டான்

பெரிய மனிதனாகி விட்டான் 
 அவளுடைய  கடைசி மைந்தன் 

பேச்சில் அளவு நடப்பில்  வித்தியாசம் 
 சீற்றம் மிகும் போது  கனல் தெறிக்கும்  பார்வை 

இது போல் என்றும் இல்லை அவன் 
 இப்போது  வெகுவாக மாறி விட்டான் 

வயது ஒன்று காரணமா அறியவில்லை  
வாழ்க்கைத் துணையாலா  புரியவில்லை

 பாவம் விழிக்கிறாள்   திரு திருவென்று
 என்ன சொல்லி தேற்று வதோ  தெரியவில்லை   
முழிக்கிறேன்.

    

Sunday, March 6, 2016

வெற்றி திண்ணம்

மனமே சற்று நேரம் பதறாதே 
 சில மணித் துளிகள் அலறாதே
 நின்று நிதானமாக யோசி 
 கிடைக்கும் அற்புதமான தீர்ப்பு
 ஆசுவாசப்படுத்தி  அடங்கி 
 ஒன்றுக்குப் பல முறை ஆராய்ந்து 
 முடிவெடு  வெற்றி உறுதி 
 மனமே சற்று நேரம் அழாதே
 ஆழ்ந்து அழகாக  நினைத்து 
முயன்று  செயல்படு 
வெற்றி திண்ணம் 

தற்பெருமை பேசித் திரியும்

தலையைப் பிய் த்துக் கொள்ள நினைத்தேன்
 ஒரு முறை அல்ல பல முறைகள்
 தற்பெருமை பேசித் திரியும்   பெண் அவள்
 இன்றல்ல  நேறல்ல பல  ஆண்டுகளாக
 தானே அழகு  தன பிள்ளைகளே அறிவாளிகள்
 தன கணவனே உலக மகாக் கெட்டிக்காரன்
 என்று சொல்லி சொல்லியே வாழ்கிறாள்

காதால் கேட்க முடியவில்லை அவள் பெருமையை
 ஓட்டை தகடு போல் சொன்னதே சொல்லிக் கொண்டு
தலையை தலையை ஆட்டிக் கொண்டு  பேசும் பாணியே
 அவள் யார் என்று சுட்டி காட்டும் தெள்ளத் தெளிவாக.

கை பிடித்தவனோ  ஒரு அரை குறை  உடலாலும்  உள்ளத்தாலும்
 பேசுவான் இரட்டைக் குரலிலே யாருக்கும் புரியாதவாறு
 படிப்போ  ஐந்தாம் வகுப்புத் தேறவில்லை உறுதியாக
அவனை  இவள் புகழும் முறையோ அநியாயம்.

 இவர்கள் தம் மக்களோ சொல்ல வேண்டாம் முழுவது மாக
 பெரிய பெண்ணோ ஒரு புரியாதவள்  போக்கும் குணம் மிகவே
 இரண்டாமவளோ  கற்பைத தாண்டியவள்  நிறுத்திக் கொள்வது
நயம் அதற்கு மேலே சொல்லவே  கூடாது
 பெரிய மனோ படித்தான் படித்தான்   பல வழியில்
இறுதியில் பணம் வாங்கிக் கொடுத்தது அவனுக்கு ஒரு பட்டம்
கடைசி மகனோ ஒரு ஆணும் அல்ல பெண்ணும் அல்ல
அவன் குறை அல்ல ஆ னால் மித  மிஞ்சிய திமிர் .

இவள் பாடுகிறாள்  பாட்டு இவற்றை எல்லாம் மறந்து
கேட்கிறவர்கள் கேட்கிறார்கள் தன்னை  மறந்து
 வாழ்கிறாள் அவளும் எல்லாரையும் போல அல்ல
ஆகாததைப்  பேசிக் கொண்டு   நாளொரு மேனியாக நலமே





Friday, March 4, 2016

எட்டு முறை அடிக் கிறது கடிகாரம்

எட்டு முறை அடிக் கிறது   கடிகாரம்
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் 
 ஓங்கி ஒலிக்கிறது  உலகளாவிய விதம்.

காலை அவசரம் திணறடிக்க
எட்டு திக்கில் ஓட்டம்
 வாயில் கொஞ்சம்  வயிற்றில் மிச்சம்
 கால் ஒன்று இங்கே மற்றொ ன்று அங்கே
 கையில் பை குடை  உணவு  என்று பறக்க
 கடிகாரம் டன்  என்றுகாரசாரமாக  ஒலிக்க
  காதில் வீழாது பரபரவென்று ஓடுகிறான்.

இதே எட்டு மணி இரவில் அறை கூவ
ஆடிக் களைத்து  ஒடி அலைந்து  வரும் மனிதன்
 கடிகாரமோ  நேரம் தவறாமல் வேலையை
 அழகாகச  செய்ய   கண்ணில்  உறக்கம்
 குடி கொண்டு ஊடலில் அசதி ஆட்கொள்ள
எட்டு மணி ஆனதே தெரியாமல் சாய்கிறான் மனிதன்.

கடிகாரம்  டன்  டன்  என்று அடிக்கிறது தன பாட்டுக்கு 



 

அப்பாடா

பேசுவான் மணிக் கணக்காக
எதற்கு என்று  அறியவில்லை
 என்ன என்ன என்று அரற்று வான்
  பல முறை ஒன்றுமே இல்லாத போது 
குறு க்கிடாகவும்    தொல்லையாகவும்
 தென்பட்டாலும்  பொறுத்துப போனதற்கு
 இன்று பேசுவதில்லை முழுவதுமாக
 காரணம் தெரியவில்லை எனக்கு
 ஒழிந்தது  தொல்லை ஒரேயடியாக
 என்று மகிழ்ச்சி கொள்கிறேன்
அப்பாடா என்ற பெருமூச்சுடன்!


Thursday, March 3, 2016

வளர்ச்சியின் பரிணாமமே

சாய்ந்து நின்றேன் சாயங்கால வேளையில்
சரிந்து கண்டேன்  கதிரவனின் மறைவை
நெருப்பு பிழம்பாக  கிழே சறுக்கிறான்
 மஞ்சள் ஒளி வெள்ளம் எங்கும் பரவ
 மெய் மறந்து நிற்கிறேன்  ஓரமாக
மறைவிலும் ஓர் ஒளி மயமான  அற்புதம்
நினைவில் கொண்டேன் மறைவும்
ஒரு வகை வளர்ச்சியின் பரிணாமமே

Wednesday, March 2, 2016

ஒட்டுண்ணி

ஒட்டுண்ணி உறிஞ்சி வாழும்
தன்னாலே  உணவைத் தேடாது
அரசியல்வாதி பறித்து  வாழ்வான்
 தன்னாலே   உழைக்காமல்
 தொழிலதிபன் உருவி வாழ்வான்
 தன்னாலே  முடிந்த வரை
உழவன் உழைத்து வாழ்வான்
தன்னாலே  வியர்வை  வடிய.

Tuesday, March 1, 2016

நானும் நம்பினேன்

நானும் நம்பினேன்  என்னுடய உற வுகளை
 பிறந்தவர்களையும் சேர்ந்தவர்களையும்
 ஒன்றுக்கு ஒன்றாக நினைத்தேன் மனதார
 நம்பினார் மோசம் போவதில்லை
 போனேன் படு மோசமாக  ஒரு வழியில் அல்ல
 இரத்தமும் கசிந்தது  ஏகமாக
 உணர்வுகளும்  நசிந்தன் மிகவாக
 கண்ணீர்  வற்றி  வெறுப்பு நிரம்பி
 ஒதுங்கி வாழ்கிறேன்  நானாக
பந்தமும் விலகி பாசமும்  சரிந்து.

பிரிவு என்பது

பிரிவு என்பது தவிர் க்க முடியாதது என்று  கொள்ள 
 மணி நேரப் பிரிவுகள் தாங்கிக்கொள்ளவும் 
 பல நாட்கள் பிரிதல் பொறு த்துக் கொள்ளுதலும் 
பலஆண்டுகள் பிரிவு  தளர்ச்சி அளித்தலும்
 காணப் பெறின்  வாழ்க்கை  ஏறக்குறைய 
 பிரிவுகள் அடங்கிய முறையே கொண்டு 
 காலங்கள்  செல்லும் என்று  அறிதல்  காண்க