Tuesday, May 31, 2016

என்ன எதிர்பார்ப்பது?

அடித்துக் கூறினான்
 சத்தமாக

சத்தம் உணமையாக்குமா?
 அவன் எதிர்பார்ப்பு.

எதற்கும் ஒரு எதிர்ப்பு
 அவனிடம்.

 நல்லது  என்றாலும்
எதிர் மறை.

கெட்டது  என்றால்
 மறு முறை

அவனிடம் என்ன
 எதிர்பார்ப்பது?

அடி வாங்குவாள்

வடிவிலே அரசி என்ற  நினைப்பு
அழகி என்ற எண்ணம்
அறிவானவள் என்ற நோக்கம்
 எல்லாம் கூடவே  அவளிடம்.


 குட்டையாக மெலிந்து  காணப்படுவாள்
வாயும் கண்ணும் ஒன்றை ஒன்று பார்க்க
 எட்டாம் வகுப்புக் கூட தேறாமல்
 பேச்சு மட்டும் மிக அதிகமாகவே.

துச்சமாக பேசுவது அவளின் சிறப்பு
 தூக்கி எறிந்து  பேசுவது அவளுக்கு இன்பம்
  மற்றவர்கள் அவளைச் சொல்ல  நேரம் ஆகாது
அடி வாங்குவாள்  வெகு சீக்கிரத்தில

Monday, May 30, 2016

எழுத்து நயம் பார்க்கும்.

எழுதினால் தான்
 சிரமம் தெரியும்
 எழுதும் போதே
 பிழைகள்  மலிந்து
 வரும்.

உற்று நோக்கின்
 தப்புக்கள் மாளா
 திருப்பிப் பார்க்கின்
 பொருள் மாறும்.

எழுதுவது எளிது  அல்ல
 பழகப் பழக  கை வரும்
மன ஓட்டம்  கை ஓட்டம்
ஒன்றுபட்டால்   எழுத்து
 நயம் பார்க்கும்.

Sunday, May 29, 2016

ஞாயிறு போற்றி !

கோடை வெயில்
 கத்திரி வெயில்
 அக்னி வெயில்
 நாமகரணங்கள்
 எத்தனை எத்தனையோ
 உனக்கு

யாவையும் உன்
 திறனை எடுத்துரைக்க
 போதுமா ?

சுடரொளி விட்டு
பாயும் நீ
 ஓரு  நாளைப் போல
 அல்ல.

இன்று தண்ணொளியாய்
 நாளை பேரொளியாய்
 மறு நாள்  சுடரொளியாய்
காட்சி தருவாய்.

மேலாக சுட்டெரிக்கும்
 தணலை வாரி வாரி
 வீசுவாய்  பொழுதுகளிலே

தாங்கவும் தாங்காதவாறும்
 கொடுத்தும் கொடுக்காதவாறும்
 நின்று தடங்கு இல்லாமல்
 வழங்கும்  கதிரவனே
ஞாயிறு  போற்றி !  



    

Saturday, May 28, 2016

வாழ்வும் சாவும்


மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
 உடல் கிடக்கறது.

துக்க வேளையில்
 நல்லது பேசப்பட்டு
 கெடுதல் விடப்படுகிறது.


நாட்கள் செல்ல
 மாறுகிறது
பேச்சுக்கள்.

நரம்பில்லா நாக்கு
 கூடவும்  பேசுகிறது
 குறையவும்  பேசுகிறது.

வாழ்வின் அழகை
 புகழ்ச்சி  மெருகுட்டுகிறது
 இகழ்ச்சி  விகாரப்படுத்துகிறது.






   

Friday, May 27, 2016

மதி முன்னதாகவே.

கையிலே ஆயிரம்
 ஒரு வெகுமதி.
 
மண்ணிலே வைரம்
 ஒரு பெருமதி.

 கண்ணிலே கனிவு
 ஒரு முழு மதி .


மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.


திருத்தமாக  வாழ்தல்
 ஒரு புத்திமதி.

எங்கும் யாவும்
 மலர்வது  திருமதி.


எதிலும் யாவையிலும்
 தென்படுகிறது  அமைதி.







Thursday, May 26, 2016

வெப்பம் அமர்க்களம்

கடும் வெயில்
 வெப்பம்
எலும்புக்குள்ளே
தோல் வழியே
 சென்று  குடைய.

வேர்வை
எலும்பிலிருந்து
 தோல் வழியே
 வடிந்து உத்த.

 முயற்சியாக
 முன்னும் பின்னும்
பகி ர்ந்தவாறு
 நடைமுறைப் படுத்த

ஒரு இயலாமை
 முன்னிலைப்
படுத்த.

சீர் பெறும்
நிலைமை
தோன்ற.

இறப்பு
 விழி ப்புடன்
காத்திருக்க.





Wednesday, May 25, 2016

இல்லை என்பதே இருக்கு

நிலத்தில் நீர் இல்லை
 மண்ணில் சத்து இல்லை
 விளை   பொருள் இல்லை
விளைந்த  பொருளில்
சுவை இல்லை .
உடலில் தெம்பு இல்லை
உணவில் எதுவுமில்லை
நலம் பயக்க ஏதுமில்லை
ஊரில் செளிப்பில்லை
 உலகில் நிம்மதி இல்லை.











கண்டேன் மின்னுவை

கண்டேன்  மின்னுவை
 எதிர்பாராவிதமாக
 மும்முனைச்  சந்திப்பிலே
 பச்சை உடுத்தி.  

Tuesday, May 24, 2016

ஒதுங்குவது என்பது .

ஒதுங்குவது என்பது அடங்கிப் போவதல்ல
 அடக்கம் என்றால் அடிமைத்தனம்  ஆகாது.
 அடிமை என்கிற பொழுது   பயம் என்றில்லை
பயம் என்று நினைக்க பயங்கரம் என்றில்லை
 பயங்கரம் தற்காலிகமானது
சடுதியில் மறைந்து  விடும்.

எதிலும் அழகு.

ஒரு சிறு  குச்சி
 எனினும் ஓர் அழகு
நெளிந்து, வளைந்து
 விரிந்து காணும்
 அழகே அழகு.

 ஒரு புல்லோ
அதை  விட அழகு
பசேலென்று
மிருது வாக
 தளிர் போல் நிற்கும்
அழகே அழகு .

ஒரு சருகு
 காற்றிலே பறந்து
சரிந்து சறுக்கி
 தரை  நோக்கி வரும்
 அழகே அழகு.

எதிலும் அழகை
காணும் நான்
 கண்டேன் மிகவே
  குச்சியிலும், புல்லிலும்
சருகிலும்  அவைகளின்
 தனித்ன்மையிலும்




Sunday, May 22, 2016

அழுகவில்லை, பதறவில்லை

மாமியார் கொடுமை
 அக்காலத்தில் நிறையவே.
 என் அத்தை பட்ட பாட்டை
 சொல்லி மாளவே முடியாது.

அத்தைக்கு முதலில் பெண் மகவு
 ஒரு நாள் கோபத்தில் மாமியார்
 பிறந்த குழந்தையைப் பறித்து
 அறுவாள் மணையில் நறுக்க முயன்றாள்.

 என் அத்தையோ   இளம் வயது
 அழுகவில்லை, பதறவில்லை
 செய் வதை செய்யட்டும்
 என்று நின்றாள்  தையிரியமாக.

அவள் அறியாவண்ணம் பதறாமை
அவளிடம் வெகுவாகப் பற்றிக் கொண்டது
வென்றாள்  அந்த ஆயுதத் தை வைத்து.
 அவளை நோகடித்தவர்களை.

 என்னிடம் சொல்லும்   போது
 அவள் கண்களில் ஒரு மின்னல்
 ஒரு பிரகாசம் துளி நேரம் மட்டுமே
 கண்களில் கண்ணீர் பொங்க
பார்க்கிறாள்  கடந்த காலத்தை.


கண்ணேறு

கண்ணேறு  என்றால்
 என்ன என்று பார்க்கையில்
 கண்  பட்டது என்றார்கள்

கண் ஏறு  என்றால்
  ஏற்றிப்  பார்ப்பது
 ஏற்றி பார்க்கும் போது
  கண்ணிலே ஓர் ஆச்சிரியம்.
 ஒரு வியப்பு என்கிற போது
கண் உயரும் .

வியப்பு  சற்று மாறினால்
 பொறாமை , ஆத்திரம்
 எனலாம் .

பொறாமைக் கொண்டு
 பார்ப்பது அழகல்ல
ஆத்திரம் கண்டு
நோக்குவது   அடம்.

கண்ணேறு என்பது
இதனால் தான்
என்று வரக் காரணம்


Saturday, May 21, 2016

கரு நாக்கு

கரு நாக்கு என்பார்கள்
 நல்ல கண் இல்லை என்பார்கள்
 சுட்டெரிக்கும் சொற்கள் என்பார்கள்
 நான் யாவற்றையும் நம்பவில்லை
 இது நாள் வரை .

 தற்போது நம்பிக்கை கொண்டுள்ளேன்
 நல்லதற்கோ கேட்டதற்கோ
 தெரியவில்லை எனக்கே
 அனுபவங்கள்  அவ்வாறு.

விலகி வால் என்று மனம் சொல்கிறது
முயற்சி செய்கிறேன் வெகுவாக
 தெரிந்து தள்ளி நிற்காமல் இருந்தால்
 விவரம் இல்லாதவளாகி விடுவேன்.

மாற்றங்கள் தான் உலகம்

கோழி கூவி எழுந்த காலம் போய்
 பசுவின் பாலை அருத்திய நேரம் போய்
 கீரையும், பருப்பும், அரிசியும்  உண்ட
 நாட்கள் போய்.
 கோவிலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த
  வேளை போய்:  முடிந்த காலம்.

இன்று செல்போன் சிணுங்க எழும் பழக்கம்
 பாக்கெட் பாலை  குடிக்கும் வழக்கம்
 பீசாவும்,பர்கரும் உண்டு: மகிழும்  அழகு
 திரைப்படமும், தொலைகாட்சியும்
கண்டு கழித்து களிப்புற : தற்காலம் .

நாளை எப்படி மாறுமோ என்று சிந்திக்கையில்
மாற்றங்கள் தான் உலகம் என்று எண்ணி
யாவற்றிலும் நல்லது இருக்க அதைப் பற்றி
 கொண்டு வாழ்தலே சிறப்பு .

Thursday, May 19, 2016

ஒட்டைப் பானை

உடையப்பன் என்று  அழைக்கப்படுவான்
 உண்மையே பேசுவான் அல்ல.
தான் பெரிய செல்வந்தன் என்பான்
கூட்டிக் கழித்துப்   பார்த்தால்
 ஒரு நூறு ஆயிரம் தேறும்.

பங்குச்சந்தையில் தான்
 ஒரு பெரிய நிபுணன்  என்று  பேசுவான்
தான்  ஒரு வாரன் பபெட்
என்ற நினைப்பு.

ஆகமம், இந்துக்களின்  வழி பாட்டு

முறைகளை ப்  பற்றி பேசுவான்
 விலாவா ரியாக.
 விவேகனந்த சுவாமி என்ற எண்ணம்.


அகவை அறுபதை கடந்தும்
 குழந்தையைப் போல்
 நடந்து கொள்கிறான்.
 எல்லோரும் அவனை அழை
 ஒட்டைப் பானை என்றே
அழைக் கின்றனர்.







Monday, May 16, 2016

திருகலும், கொட்டும்

காலங்கள் மாறும்
 வயது  ஏறும்
மனம் மாறும்
 நினைவுகள் தொடரும்

இன்று ஏனோ
 திரும்பிப் பார்க்கிறேன்
 என் பள்ளிக்   காலத்தை
 நிறைவு தன்னாலே.

திருமதி டேவிட்
 என்னுடைய ஆசிரியர்
வீ ட்டுக்கு வருவார்
அதி காலையில் .

எடுத்தவுடன் ரென்  & மார்டின்
ஆங்கில இலக்கணம்
 வினைச் சொற்களை
காலங்களில் எழுத  பணிப்பார்.


ஓரளவு எழுதி விடுவேன்
"புட்"க்கு  இறந்த காலத்தில்
புட்டட்  என்று
எழுதி விட்டேன்
 காதைத் திருகினார்
 சற்று பலமாக.

நினைத்தால் இன்று கூட
 வலிக்கிறது. அத்தவறை
 என்றுமே   பின்
 செய்ததில்லை.


தமிழில் அதற்கு மேலே
 பெற்றுக் கொள்
 என்பதற்கு  பெற்றுக் கொல்
 என்று எழுதியவுடன்  தலையில்
 ஒரு கொட்டு .


புடைத்த தலையின் வலி
  இன்றும் என்னை பயமுறுத்த
 கவனம் மிக அதிகமாக
லகரம், னகரம்  என்கிற
வேளையில்.

அதே நேரம்
 தவறில்லாமல்
 பெருக்கல்  வாய்ப்பாட்டை
 சொன்ன போது அள்ளி
அணைத்துக்   கொள்வார்.


ஏனோ இன்று நான்
ஆங்கிலத்தில்  நிறையவே
 தம்ழில் குறைவாக
 எழுதுகிறேன்
 கணக்கை முற்றிலும்
மறந்து

திருகலும்,  கொட்டும்
 செய்யும் வேலையோ?

 .
















காலத்தே செய்தால்


உழைப்பவன் 
 நேரம்  நோக்கின் 
 சிறுமை 

 உழவன் 
இலாபம் கண்டின் 
 பெருமை .


 வணிகன் 
 அயர்ந்தால் 
 நட்டம்.

படிப்பவன் 
 துவண்டால் 
 தோல்வி.

யாரும், எவரும் 
ஏதும், எதுவும் 
 செய்வதை 
 காலத்தே 
 செய்தால் 
 வெற்றி.





 





 




 


Sunday, May 15, 2016

எலியும் பூனையுமாக

எலியும் பூனையுமாக
விளையாடிய  விளையாட்டு
மனதில் தோன்ற
 சென்றேன் கடந்த
 காலத்திற்கு.

நான் எலியாக
என் நண்பன் பூனையாக
 ஆடினோம்   ஒரு முறை.
பள்ளியின் விளையாட்டு
 திடலில்.

 என் நண்பனோ
 உடல் உறுதியும்
 மன உறுதியும்
ஏராளமாக வாய்க்கப்
 பெற்றவள்.

நானோ ஒரு பயந்தவள்
உடலோ மெலிவு
இருந்தும் அவளை
 எதிர் கொண்டேன்
 துணிச்சலாக.

ஓடினேன் சுற்றி
 சுற்றி குனிந்தும்
 நிமிர்ந்தும்  அவளுடைய
  பிடியை விட்டு
 சாமர்த்தியமாக.

ஓரு   நேரத்தில்
 அவள் என் அருகே வந்து விட
 பிடிபட்டோம் என்று
நான்  நினைக்க
 பாவம் அவள்
தடுமாறி  விழுந்தாள்.

 தப்பித்தேன் பிழைத்தேன்
 என்று நான்  குதிக்க
 நினைத்தேன்  ஒரு முகமாக
 வெற்றிக்கும் தோல்விக்கும்
திறமையோ வலிமையோ
காரணம்  அல்ல
 நேரம் தான் என்று தெளிந்தேன்,.








Saturday, May 14, 2016

அறியாமை எனலாம் முடிவாகவே

செயலில்  என்ன விதம்?
 நன்று தீயது என்பது மீதம்
நோக்கம் என்பது நெறி
 சரியோ தப்போ என்பது
 ஒரு  வெறி.

எடுத்தக் காரியம்
முடிய வேண்டும்
 சீக்கிரத்தில் என்பதே
 ஒரு கோட்பாடு.

அதில்லாமல்  இழுப்பதும்
வலிப்பதும் தடுப்பதும்
 ஓர் எண்ணம்  கெட்ட
  என்பதை விட  கொடுமை.

நேரம் தவறினால்
 பாலும் புளித்து விடும்
கொதி நீரும் ஆறி  விடும்
 திரியும் எரிந்து விடும் .


ஏதும் செய்யாமல்
 வாளாவிருந்து  எல்லாமே
 செய்வது  போல்
 காட்டுவது நடிப்பு.
பகட்டான் ஒன்று.


அல்ல அல்ல!
 அது ஒரு தீய எண்ணம்
 இல்லாவிடில்
 ஒரு அறியாமை
 எனலாம் முடிவாகவே






Thursday, May 12, 2016

கைக்கு எட்டியது

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
என்று அழுதாள்
 பாவம் !

புரியாமல் பேசுகிறாளே
 என்று தோன்ற
 கேட்டான் மேலும்
கூர்மையாக

வேலைக்கு   முறச்சி செய்தேன்
 யாவும் நலமே முடிந்தது
 மாறி விட்டது என்று
 அங்கலாய்த்தாள்.

இது முடிவல்லவே
 மீண்டும் முன்று பார்
 வெற்றி உறுதி
 அறிவுறுத்தினேன் .

வெளியேறினாள்
 கோபமாக
 சிரித்துக் கொண்டேன்
 என்னுள்ளே

பழமொழிகள்   பல
எவ்வாறென்று
 திரித்து திரிந்து
உணரப்ப்டுகின்றன.





















முடியுமா மறக்க?

ஒன்றல்ல  மூன்று
 குழந்தைகளை 
இழந்தனர்  ஒரு தம்பதி 
 கொடுமையடா! 

விமானம் சுட்டு
 தள்ளப்பட 
 குழந்தைகள்  மடிந்தனர்.
பரிதாபமாக 


தாய் கதறினாள்  
 தந்தை விம்மினார் 
 வரவில்லை குழந்தைகள்.
போனது போனது தானே.

ஆண்டு ஒன்று உருண்டோட
மிண்டும் உண்டானாள்
 தாய்.
ஒரு விளையாட்டோ!

 பிறந்தாள்  ஒரு பெண் மகவு 
மகிழ்ந்தனர் பெற்றோர் 
ஓரளவே!
முடியுமா மறக்க? 

 மறைந்த மூன்று  செல்வங்களும் 
 கண் முன் நிழலாட  எதிரே 
 நிற்கும் மகவில் கிடைத்தது 
 அமைதி!














Wednesday, May 11, 2016

அற்று அற்று

மலிந்து கிடந்தன
பொருட்கள்
 தேடுவாரற்று .

பிரிந்து  வாழ்ந்தன
 உறவுகள்
 ஆதரவற்று.

வாடித்   தெரிந்தன.
 பயிர்கள்
 நீர் ஆதாரமற்று.

பாடித் திரிந்த
 குயில்
நோயுற்று

 ஆடி அழிந்த
 மனிதன்
 கேட்பாரற்று.


குடித்து  குலைந்த
 குடிகாரன்
 காப்பாரற்று

  கட்டுக்கடங்காத
   மகன்
பிறபானற்று

அற்று அற்று
 ஓதும் போதே
கவனம் சற்று.




















 





வாழ்வாதாரம்

திருவிழாவுக்கு வந்தேன் நான் 
கண்டேன்   விமர்சையாக 
பத்தாண்டுகளுக்கு முன் 
  
செம்பனை  தோட்டத்திற்குள் 
 சென்றேன் என்னவென்று அறிய
ஆவலுடன் 

 பனை மரம் நின்றது உயரமாக  
ஆடாமல் அசையாமல்
ஓர் அச்சம்  .

 பனம் பழமோ   மிகப் பெரிதாக 
 இராட்சத  அளவிலே 
ஒரு பிரமிப்பு 

தோட்டமோ அமைதியில் உறைந்து 
மௌனமாக  நின்றது.
ஓர் உதறல் 

புழுக்கமோ  மிக அழுத்தமாக  
வியர்வை  வழிந்தோட 
ஒரு புகைச்சல் 

சுற்றி வந்தேன் செம்பனை  
 தோட்டத்தில் 
என்னது என்ற பெருமையுடன் 

அன்று தெரியாது எனக்கு 
 இதுவே தொழில் ஆகும் என்று.
ஓர் ஆச்சரியம் 

அன்று தொடங்கியது இன்று வரை 
 என்னை விடவில்லை  
தொடர்கதையாக 

சிநேகமாகி விட்டோம்  கூடுதலாகவே 
 பிரியாமல் இருக்கிறோம். 
ஒரு நாளை போல் 

வாழ்கிறேன்  பல மணி நேரம் 
செம்பனை மரத்தின் கீழே
காசுக்காக 

என்னுடன் குரங்கும்,பாம்பும்  
 அட்டையும், உடும்பும் .
பங்கு போட

வாழ்வாதாரம் அது  என்கிற போது  
 வலியே  வலிமையாக 
 வலுவான வாய்ப்பாக  உணர்ந்து 
கழிக்கிறேன்  காலத்தை  
களைப்புடனும் களிப்புடனும் .


 
 


 



Monday, May 9, 2016

காலமே காலம்


காலமே காலம்
என்று கூறுவாள்
 என் அத்தை அடிக்கடி.

காலம் தான் இது
 என்பாள் மூச்சுக்கு
 முன்னூறு முறை!

எனக்கும் அவ்வழக்கு
 தன்னாலே வந்து
 விட்டது.


காலத்தை  நோகுவாள்
அவள் நேரத்தில்
 பட்ட  வேதனையை கழிப்பதற்கு


வெந்து தணியும்
மனத்திலே  சீற்றம்
எள்ளளவுமில்லை  அவளிடம்

 விரக்தியும் குமறலும்
யாரிடமுமில்லை
 எதற்கோ காலத்தின் மேல் மட்டுமே!

அநீதி  இழைத்தவர்களை
கடியவில்லை கடிந்தாள்
 என்னவோ காலத்தை.

தூக்கியெறிந்தவர்களை
 கோபிக்கவில்லை  கோபம்
ஏனோ  காலத்தின் மேலே!

பெற்ற பிள்ளைகள்
 நினைக்கவில்லை அவளை
 ஆத்திரம்  காலத்தின் மீதே! எதனாலோ?

அறியாமல் அவளிடம் கற்றது
இன்று எனக்கு கை கொடுக்க
 காலமே என்று  நினைந்து  மகிழ்வாகவே


நன்மைக்கும் தீமைக்கும்
 காலத்தின் மீது பழி போட்டு
வாழ்கிறேன்  நிம்மதியாகவே!


  

அமிர்தம் என்னவென்று அறிய

பாலை புகட்டுவாள்
 கூடவே  பண்பையும்

அன்புக் காட்டுவாள்
 அதனுடையே   கண்டிப்பும்

ஆதரவை நல்குவாள்
 வழியிலேயே சுதந்திரமும்


யாவையிலும்  இருப்பாள்
 கண்டும் காணா மாலேயும்


தள்ளியிருக்கிறாள்  என்றாலும்
 தகமையில்  நிற்பாள்

தன மகன் என்பதில் பெருமை
 உள்ளுக்குளேயே  அடங்கி


மகனைப் பார்த்து பூரிப்பாள்
கண்ணாலே காட்டுவாள் பரிவை

அமிர்தம் என்னவென்று  அறிய
   கண் குளிர காண்  தாயை .






Sunday, May 8, 2016

வாழ்வே மாயம்

பற்றி எரிகிறது
 ஓர் ஊரே

கொழுந்து விட்டு
நெருப்பு பிழம்பாகவே,

 ஓடுகிறான், பறக்கிறான்
 ஒரே வழியிலே

 நெருப்பும் வேகமாக
 பின் தொடர்கிறது

 நூறு , ஆயிரம்,
இலட்சம்  என்று

 தப்பித்தப போக
 தெற்கும் வடக்குமாக

 கூரைகள் எரிந்து
 சாம்பலாகி  விழவே

நெடிதுயர்ந்த  மரங்கள்
 குபு  குபு  என்று எரிய

காய்ந்த  இலைகள் சருகுகள்
சேர்ந்து எரியவே

எங்கும் தீ எவற்றிலும் தீ
 நெருப்பே எத்திக்கிலும்


எண்ணெய்  வளமிகுந்த
ஊர்   மேக் முர்ரே  கோட்டை

தொண்டினால் எண்ணெய்
 உற்றெடுக்கமே

செல்வமும் இன்பமும்
 நிறைந்த ஊரே

 இன்று தீக்காடாக
எறிந்த சாம்பலாகவே

நேற்று ஒரு அழகான ஊராக
இன்று ஒரு புகைந்த  காடாக

வாழ்வே மாயம்
 வாழ்வோம் நியாயமாக!









மரம் போல்

மரம் போல
 வாழ்.

பொறுத்து, தணிந்து
 பெருகி நில் .

கிளை விரித்து
 பல்கி நில் .

இலைகள் நிறைய
 சுற்றிலும்

 பூக்கள் மலர
 அழகிலும்


காய்கள்  காய்த்து
நிரக்கவும்.

பழமாகப் பழுத்து
 தொங்கவும்.

 செழிப்பான தோற்றம்
கண் முன்னே

மரம் போல்  என்றால்
 மரத்துப் போய்

 அல்லவே அல்ல
 வளமான பெருக்கமே

நவில்கிறேன் நல்விதமாக
 அறிந்து கொள்.











Saturday, May 7, 2016

சாதனை

தாய்  தந்தையைச் சுற்றி
 கண்டான் உலகத்தை
 ஆனைமுகத்தான்.

சிலுவையில் அறையப்பட்டு
முக்தி அடைந்தான்
இயேசு.

போதி  மரத்தடியில்
 ஞானத்தை அறிந்தான்
 புத்தன்.


ஈற்றடியில்  உலகளாவிய
வாழ்வியல்  முறைகளை
எழுதினான் வள்ளுவன்.


சோதனை  யாவருக்குமே
 எடுத்தாளும்  விதமே
 சாதனை.

வேதனை எல்லாருக்குமே
 காணும் விதமே
சாதனை.

கையில் உள்ளது கோடி
அணுகும் முறையே
 சாதனை.

இருப்பதிலே மகிழ்வு
 காணும் நெறியே
சாதனை.

.







என்னுள்ளேயே

அன்பு சிறக்க 
 கோபம் குறை 
 கோபம் குறைக்க 
 சிரிக்கப் பழகு.

நானே எனக்குச் 
 சொல்லிக் கொள்வேன் 
 ஒரு முறை அல்ல
 பன்முறை .

முதலில் என்னைப்  பற்றி 
பேசுவேன் குறைவாக 
 செய்வேன்  நிறைவாக 
 அமைதி என் வழி.

கோபம் வராது 
 சட்டென்று 
 வந்து விட்டால் 
 போகாது சட்டென்று. 


யாரையும்  நோக 
 மாட்டேன்
  சீண்டினால்  ஒதுக்கி 
விடுவேன் முற்றாக.


தாயாக இருந்தாலும் 
 அதுவே முடிவு 
 பகைவனாக் இருந்தாலும் 
அதுவே.
   


என்னுடைய வலிமை 
அமைதி 
 என்னுடைய குறையும் 
 அதுவே!

வாழ்கிறேன் நானும் 
 என்பாடு 
 பேசாமல்  பார்க்காமல் 
 என்னுள்ளேயே 


  





Friday, May 6, 2016

தாய்ப் பாசம்

தாயின்  மடியில்
 குழந்தை 

 தாய்ப் பாலை 
 சுவைத்துக் கூட்ட 

 தாய் தலையைக் 
கோதி 

 காலை நீவி 
சுகமாக 

 குழந்தை  கண் 
 உறங்க 

தாயும் களைப்பு 
மேலாக 

கண் அசர 
இருவருமே 

மணி நேரம் 
 தெரியாமல் 

ஒன்று, இரண்டு மூன்று
மணி நேரமாக  

அயர்ச்சியில்  ஆழ்ந்து 
 உறங்க 


தாயின் பால்  உற்றெடுத்து 
 முதலில் 

சொட்டு சொட்டாக  
 உதிர

 பின்   வேகம் எடுத்து 
 கூடுதலாக  கொட்ட

தாய் ஈரம் 
 அறிந்தவுடன் 

எழுந்து  தன்னை 
நேர் செய்து 

 குழந்தையை வாரி 
 எடுதது 


பாலைப்  புகட்டி 
 மகிழ


 எப்படி   வந்தது?
   முயற்ச்சியே இல்லாமல் 


எவ்வாறு அந்த 
 அமிர்தம்  சொட்டியது?


மணி தவறாமல் 
கச்சித்மான் நேரத்திலே  


பரவசமானேன்  கூடவே 
 தேடினேன்  ஏதென்று ?



ஆழ்ந்தேன்   சிந்தனையில் 
 தொனித்த  கரு 


  யாவற்றிற்கும் மேலாக 
ஓரு   சக்தி, ஒரு பொருள்  

 கேளுங்கள் எந்த 
 மருத்துவரிடமோ?

 அலசுங்கள்  எல்லா 
 வலைதளங்களிலும் .

ஓடுங்கள் மேல்நாட்டு 
விஞ்ஞானிகளிடம் 


கிடைப்பது என்னவோ 
 ஒரு பொருந்தாத பதில் 
இதனாலோ, அதனாலோ
என்று இழுக்கும் குரல்கள்  

 சொல்லிவிடுவாள்   
ஒரு  பெண்.

இது தான் பாசம் 
தாய்ப்  பாசம்  -
 அதி அற்புதம்.












  



Thursday, May 5, 2016

படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

அவசரம் இல்லை அவனுக்கு
 இழுத்து விடுவான் பெரும்பாலும்
 தனக்கு என்றவுடன் துடிப்பான்
அள்ளித் துள்ளி முடிப்பான்.


தான் ஒரு நிபுணன் என்பான்
 கணக்கிலும் தொழிலும்
 வெகு விரைவில் விற்பான்
 தன் பங்கை அல்ல  தம்பியின்.

வாழ்கிறான் ஓர்  ஊரில்
அவனைப் போல் பல பேருடன்
 திருமணம், சாவு என்றே சென்று
 அன்றாடப் பொழுதை போக்குவான்.

கொஞ்சம் பணம் கையிலே புரள
 நடை போடுகிறான்  முறுக்காக
 ஆமாம் சாமி போட ஓரிருவர்
பொழுதைக் கழித்து விட்டான்

மிச்சம் சொச்சம் நாட்களில்
 வெட்டிப் பேச்சு  பேசி கலந்து கழிப்பான்
அவன் வாழ்க்கையே ஒரு மாதிரி
 படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

கை காட்டி மரம்

கை காட்டி மரம்
 சாய்வாக  நிற்கிறது
 ஏதும் சந்தேகமோ
காட் டுமிடம் இல்லையோ?


செல்வதா வேண்டாமா
 காட்டும் வழியில்
நிதானிக்கிறேன் சற்று
 வழி  தெரியாமல்.


 போகும் இடமே
 கேள்விக் குறியாக
இருக்கும் பொழுது
 எங்கு செல்வது ?


நிற்கறேன்  நேரமாக
 புலப்படாத  மனதுடன்
வாழ்விலும் அது போலவே
புரியாமல் .தடுமாறுகிறேன்.

பாதி வழி .  க்டந்து விட்டேன்
எவ்வாறு என்று அறியாமல்
 மீதியும் கடந்து விடும்
 இது போலவே  புரியாமல்.

நினைத்துப் பார்க்கிறேன்
 எதற்குப் பிறந்தேன்?
பிறந்து என்ன செய்தேன்?
 வாழ்ந்து என்ன செய்கிறேன்?


ஒரு கை காட்டி மரம்
 எனக்கு புத்தனாக
 பகவத் கீதையாக
திருக்குறளாகத் தோன்ற


நிற்கிறேன் கால் கடுக்க
 வெகு நேரமாக
 மரம் போல்
 கை  காட்டி மரமாகவே!


 





கதிரவன் எழுகிறான்

கதிரவன் எழுகிறான்
மசண்டையிலே 

ஏனோ அவனுக்கு 
 அவசரம் .

உறங்க  முடியவில்லை 
போலும் 

எழும் போதே  அவனுக்கு 
 வேகம் 

அசாத்தியமான் வேகம் 
 ஏனோ?

பலபலவென்று  விடியும் 
 என்பதற்கு  மாறாக 

பளபளவென்று தெரிகிறது 
 வானம் அதி  காலையிலே


பகட்டுகிறான் கதிரவன்
 ஏனோ?   


போகப் போக  கொளுந்து 
விட்டு  ஒளி  வீசுகிறான்.


திறமையைக் காட்டுகிறானோ?
 இருக்கலாம். 


ஓய்வு ஒழிச்சல் இன்றி சுட்டெரிக்கிறான் 
சாயும் பொழுது வரை. 


என்ன விளையாட்டோ இது ?
புரியவில்லை .


கடுமை என்று சொல்ல 
 மனம் வரவில்லை 

கொடுமை என்று கூற
 மனம் இடம் தரவில்லை .


ஒரு வேளை   பழிக்குப் பழி 
இருந்துவிடுமோ ?


 வினை விதைப்பவன் 
வினை அறுப்பான் 

என்பது முதுமொழி 
அதற்கு ஈடாக 

 நாம் மாசுபடுத்தியதற்கு 
 இணையாக 


 இன்று  இயற்கை 
 செயல் படுகிறதோ?

 பதிலுக்குப் பதில் 
நடத்துதோ?











  


நிதானம் எதிலும்

கணக்கிலே ஒரு தவறு
 ஒரு ஐம்பத்தி முன்று  காசு
 விடப்பட்டது  கவனக் குறைவால்


காசு தான் என்று  நான்
சமாதன்மடை யவில்லை
 என்னையே கடிந்து கொண்டேன்.


காசு தானே என்றாலும்
 தவறு தவறு  தானே
 என்னை என்னவென்று சொல்வது


 நேர் செய்து விட்டால்  வம்பு இல்லை
 வம்புக்காக இல்லை எனக்காக
 அதை கணித்து  திருத்தி  விட்டேன்.


அவசரம்    என்பது   கூடாது
 நிதானம் எதிலும் இருத்தல்
அவசியம் என்று உணர்ந்தேன் .



Wednesday, May 4, 2016

கசிந்து படுத்துவதற்கு

படுக்கிறேன் காலை நீட்டி
 ஆயாசமாகத் தோன்ற

 கண் அயரும் முன்
 தலை முழு வதும் ஈரம்

துவட்டிக் கொண்டு
சாய்கிறேன் அனாயசமாக

கண்களைப் பொருத்தும் போது
கழுத்து இடுக்குக்குள்  ஈரம்.

 எழுந்து அமர்கிறேன்
பிரயாசையுடன்  மெதுவாக

கண்களோ முடி திறக்க
கைகளில்  ஈரம் .

நிற்கலாம் சற்று நேரம்
 எனறு  தோன்ற

 நிற்கிறேன்  ஒரமாக
 கால்வழியே  வடிகிறது ஈரம்.


என்னைச் சுற்றி ஈரமே இல்லை
வறண்ட காற்று  வீச

நிலம்  நீர்இன்றி  வெடிக்க
வெயில் சுட்டெ ரிக்க

எங்கிருந்து ஈரம் என்னிடம் .
கசிந்து படுத்துவதற்கு?















Tuesday, May 3, 2016

வாழ்க் இருவரும் வளமுடன்.

குறை காணுவதே அவன் எண்ணம்
 நிறையே அவனிடம் காணவில்லை
 எண்ணம்  குறுக மனம் நோக
 பேசுவதே அவன் வழக்கம்

தானே பெரியவன் தானே நியாயம னவன்
 என்று மார் தட்டி பேசும் விதமே அலாதி
 தன்னை   விட யாரும் இல்லை என்ற நினப்பே
 மேலோங்க மேலும் கீழும்  பார்த்து  நொ டிப்பான்

தன்மை என்பதே அவனிடம் இல்லை
 பொறாமை ஆற்றாமை அவனைச்  சூழ
 அதோடு  இல்லாமல் தற்போது இயலாமையும்
 அவனைப் பிடிக்க   புழுங்குகிறான்  அனலாக

அவனுக்குத் துணையாக  மற்றொருவன்
எடுத்துக் கொடுக்க   சொன்னதைச  செய்ய
 கிளிப் பிள்ளை போல்  பேசுவதற்கு
 ஏனோ அவன் தட்டுத் தடுமாறி  பேசுகிறான்.


இருவருமே ஒரு சேர்க்கை  நல்லதற்கோ
கெ ட்டதற்கோ   என்று எனக்கு விளங்கவில்லை
எங்கும் எவ்வாறும் எடுத் தெறிந்து பேசுவதே
 குறிக்கோள்  வாழ்க் இருவரும் வளமுடன்.

எல்லாம் இருக்க எதுவும் இல்லை.

வசிக்க ஆவல்
 வாழ இல்லை 

பாட  எண்ணம் 
படிய  இல்லை .

நடக்க  விருப்பம் 
நழுவ  இல்லை.

வினவ  நோக்கம்
வழுவ  இல்லை


எல்லாம் இருக்க
 எதுவும் இல்லை.












நன்றி மறப்பது நன்றன்று.

செய்ததை மறந்தான்
 இன்று அதை
 அனாவசியம் என்றான்.


சொன்னதை மறந்தான்
 இன்று அது
 தேவையற்றது என்றான்.


சொன்னதும் செய்ததும்
 எனக்கு நன்றாகவே
 ஞாபகத்தில்.



மறந்ததை  நினைத்து
 மறுகவில்லை
 வியப்புற்றேன்.


மனதைச்  சமானப்ப்டுத்த
 முடியவில்லை
 எவ்விதத்திலும்.


அவ்வளவு தான் மனிதன்
 இன்றை  நேற்று என்பான்
 அவனுக்கு  ஏற்றவாறு..


சொல்லட்டும்  அவன்
  நன்றி  மறப்பது
நன்றன்று என்று  அறிந்தால்
 சரி.


















Monday, May 2, 2016

நானாகவல்ல

இடத்தை விடாதே
 பிடித்துக் கொள்
 சட்டென்று.

கேட்டவுடன் சற்று
 துணுக்குற்றேன்
 சில மணித் துளிகள்.

பின் சிரித்தேன்
 எனக்குள்ளே
 அதிராமல்.

இடமே இல்லை
 எதைப் பிடிப்பது
 சிந்தித்தேன்.


நேராக அனுபவித்தால்
 தான் தெரியும்
 நினைத்துக் கொண்டேன்.


சிறுமையும்  சீற்றமும்
மோத  முட்ட
 விலகினேன் .


தாங்க முடியாத போது
தள்ளப்ட்டப் போது
 வெளியே வந்தேன் .

நானாகவல்ல  என்பது
சொன்னாலும்  புரியாது
புரியவே வேண்டாம்
யாருக்கும்.




 

Sunday, May 1, 2016

ஒரு நிலைப்படுத்தும்

மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை  உன்னதமானது

நிலைப்டுத்துவது சாமானியமல்ல
 அது ஒரு  வழிமுறை .

நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.

 நொடித்துப் பார்ப்பவனை
 மறந்தும்   கருதாமல்.


வெடித்து  விளம்புவனை
 எவ்விதத்திலும்  அறியாமல்

புறம் கூறுபவனை
 ஒதுக்கி  சகியாமல்


தன நோக்கிலே
 குறியாகி வாழும் நோக்கு


மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.







ஒவ்வவொரு செயலும்

மாவைக் கரைத்து 
 மறு நாள் காணி ன் 
 ஒரு புளிப்பு 
 பெருக்கம்.

தயிரை  தோய்த்து 
மறு நாள் காணின்   
ஒரு புளிப்பு 
 ஒடுக்கம். 

இன்றைய வேலையை 
 முடித்து  நாளை  காணின் 
 ஒரு நிறைவு
ஊக்கம் .


ஒவ்வவொரு செயலும் 
இன்று போல் 
நாளை இல்லை  
மாற்றம்.