Tuesday, June 28, 2016

கற்றாழை

அழகான தோட்டத்திலே
 ரோஜாவும் , மல்லிகையும்,
 பிச்சியும் , சூர்யகாந்தியும்
 மணம் கமழ
 தன்னந் தனியாக நின்றது
 ஒரு சோற்றுக்  கற்றாழை

 அழகின் ஊடே ஒரு அழகற்றதாக
 பச்சை நிறத்தில் இலைகள் கனமாக
 கோணலாக  நிற்கிறது  கற்றாழை.

வேரோடு பிடுங்க நினைத்துப் போது
 தடுத்தாள்   என்  தோழி.

அதன் பயன்களையும்,அதனின் சக்தியையும்
 கூறியவுடன் மலைத்து நின்றேன் .

தீயனவற்றைக் கழிந்து, தீமையைப் போக்கி
 நலம் பல செய்யும் செடியைப்  பழித்தேனே
 என்று வருந்தினேன்.

  

Sunday, June 26, 2016

தூங்கினான்

தூங்கினான்  தூக்கம்  வராமல்
 கண் மூடி    அசைவில்லாமல் .
மணவறை   மறந்தான்
 அசதியிலே!


பெண்ணின்  மனத்தை
 தொடாமல்   உடுருவினான்
 மயங்கினாள் மாது
நினைவில்லாமல்.

 அவன் தந்தையோ
 அள்ளி வீசினான்
சொற்களை.

தாயோ  மெச்சினாள்
 மகனின்  அறிவை.

பெரிய தகப்பனோ
 கூவினான்  அதிகமாக

கோடியில் புரள்கிறேன்
 ஆள் பலம் அதிகமாக.
எனக்கு என்று.

 வாங்கினார்கள்
 யாவரும்  மிகவாக
ஏச்சும் பேச்சும்
 அடியும்!





Monday, June 20, 2016

மாட்டினான் வசமாக

மாட்டினான்  வசமாக

சீராக  வாழ்கிறான்
என்ற நினைப்பு.

"கோடியில்  புரள்கிறேன்
 ஆள் பேர் அரசாங்கம்
 என்று எனக்கு
 எல்லாச் செல்வாக்கும்"
நிறையவே   என்று
 மார் தட்டினான்  நேற்று.

இன்று கதை மாற
 நிலை குலைந்து நிற்கிறான்.

தடம் புரண்டான் பல் நேரங்களில்
 மகனின்  திருமணத்தில்  முற்றுமாக
 பழக்கம்  தவறிய
 மகனுக்கு ஒரு கல்யாணம்.
அவன் மனைவியும் தெரிந்தும்
 உடந்தை.

 மகன்  கடைசி நேரத்தில்
 தூங்கி  காரணமாகவே
 துக்கம் உண்டாக்க.
 கதறி ய பெண்ணும்
 அவள் வீட்டாரும் வெகுண்டு
 அவனை ஏச.

வாய் மூடி கை கட்டி
 தலை குனிந்து
 நிற்கிறான் .

நிமிர்ந்து விடுவான்
 சில நாட்களிலே
பணம் முழுவதுமாய்
 அவனை விட்டுச்
 செல்லும் வரை.

  






   

Tuesday, June 14, 2016

நன்று பல கூறின்

 நன்று பல கூறின்
நாளும் பொழுதே
 நன்று எனின்
 நலம்   பயக்குமே!.

 நன்மை  விளையும்
 நன்னாள் முழுதுமே
நற்செயல் செய்யின்
நட்பு   நகுமே!.

 நாவிலே சொல்
 நடப்பிலே செயல்
நல்லவை  வழங்க
நவில்வது நற்பண்பே! 

Monday, June 13, 2016

பனியில் மலர்ந்த பூ

பனியில் மலர்ந்த  பூ
 நிகரில்லா ஒளியுடன் திகழ
 பனி விலகிய வுடன்
 மட்டில்லா  பொலிவுடன்
 சொர்ணமயமாக  விளங்க
  ஒரு பலமான் காற்றுடன்
 பேய் மழை  பொழிய
 அழகிய மலர்
 பறந்து மறைந்தது.

Sunday, June 12, 2016

ஒற்றுமை குலைந்ததது

சிறு சச்சரவு
 ஊதி பெரிதாக்கி
 வெடித்துச், சிதறி
 நிர்க்கதியாக்கியது
 ஒரு குடும்பத்தை.

 புயல்  வீசியவுடன்
அமைதி தோன்றுவது போல
சண்டை ஓய்ந்த பின்
பேசுவதே நின்றது.

ஒற்றுமை குலைந்ததது

Friday, June 10, 2016

அடங்கினான் எதற்கோ?

அடங்கினான்  எதற்கோ?
 அடங்குவது  அவன்
 வழிமுறை அல்ல
 பின் ஏன் ?


தாண்டவம்  ஆடுவான்
 குதிப்பான்  தாம் தூம்
 என்று என்றைக்கும்
 இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

வாய் நீளம்   கை
அதை விட
 கத்துவான் ஏன்
 அடிப்பான் யாவரையும்
இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

எங்கோ பலமாக
வீழ்ந்தான்
  அடங்கினான்
 இன்று காரணமாகவே.


பார்வை வேறே

 விவரம் அறியாத பிள்ளை
பேசுவது மழலை
 விவரம் புரியாத மனிதன்
பேசுவது புலம்பல்.

மழலை இனிமை  பயக்கும்
 புலம்பல்   கடினம் விளையும்.


வயதுக்கேற்ற  அறிவும்
வயதை மறந்த அறியாமையும்
 நோக்கின்

 ஒன்று அழகு
அடுத்தது  அனர்த்தம்.

 ஒரே கல்
 பார்வை வேறே




  

Sunday, June 5, 2016

ஆரோக்கியம்

வளர்ந்தேன்  அருமையாக
தாயும் படித்தவள்
தந்தையும் அது போலே.

 கண்டிப்பும் பாராம்பரியுமும்
 என் இள  வயதில்
 அதிகம் கண்டேன்.

 சொகுசு வண்டியிலே
 வயதில்  மூத்த   ஓட்டுனர்
 ஆரோக்கியம்  பள்ளிக்கும்,
 வாய்பாட்டு ஆசிரியரிடமும்,
பரத நாடிய வகுப்புக்கும்
 அழைத்துச் செல்வார்.

நான் செய்த சிறு தவறுகளைக் கூட
 அறிந்து அதை என்ன தாயிடம்
 சொல்லி விட்டு, "அம்மா
 தங்கச்சியை கண்டியுங்கள்"
 என்று  எடுத்தும் கொடுப்பார்.


ஒரு நேரம் என் தாய்க்கு
 கோபம்  மிகவே என்னை
  அடித்து  விட்டார்.
அழுத என்னை அன்பாகத்
 தூக்கிக் கொண்டு
"உன் நல்லதுக்குத் தானே
அம்மா" என்றார்.

நான் கோபத்தில்
 கத்தினேன்  செய்வதையும்
செய்து விட்டு
 இது  வேறேயா !.
கறுவினேன் மனதுக்கள்ளே.

நினைத்துப்   பார்க்கிறேன்
 ஆரோக்கியத்தின் அன்பையும் ,
 என்னுடைய ஆங்காரத்தையும்
விசும்புகிறேன் என்னுள்ளே


Friday, June 3, 2016

சுகம் தனியே!

மாங்காய்  கொத்து
 கொத்தாகக்  காய்க்க
 தேங்காய் குலை
குலையாகத்  தொங்க
 வாழை குலை
 தள்ள.பரந்த
விரிந்த தோப்பில்
 குளுமை தழுவ
பசுமை படர்ந்த
நிலப்பரப்பிலே
 காலாற நடக்கும்
 சுகம் தனியே!

Thursday, June 2, 2016

கல்யாண வைபோகமே

பலகாரமும், பாயசமும்
 பனியாரமும், பொரியலும்
சட்னியும், அவியலும்
சாம்பாரும்,  ரசமும்
சாதமும்,  கூட்டும்
இரண்டு நாட்கள்  
மூன்று  வேளையிலும்
 விமர்சையாக வழங்கப் பெற
திருமணம் தடபுடலாக நடைபெற
 சமையற்  கலைஞரும்    பல
 இலட்சம் சன்மானமாகப் பெற
 சில்வர் சாமான்கள் சிறிதும், பெரிதுமாக
பல வகையில்  அன்பளிப்பாக
 வழங்கப் பெற
 ஒரு சமுகம் செலவு செய்யும்
வினோதம்.

அதே மக்கள் சாதாரண நாளிலே
 கிழிந்த பாயில் படுத்து,
 நடையன் இல்லாமல் நடந்து,
எளிமையான் உணவை உண்டு
 விட்டிலே ஒரு  சிறு பகுதியில் இருந்து கொண்டு
ஏனையப் பகுதியை வாடகைக்கு விட்டு
 வாழும் விதம் ஆச்சரியமே!

கல்யாண வைபோகமே

















Wednesday, June 1, 2016

ஏமாற்றம்

அண்ணன் என்று பாராது
தம்பி என்று நினையாது
 தமக்கை என்று எண்ணாது
பாடுபட்டதற்கு கிடைத்தது
பெரிய பரிசு--ஏமாற்றம்
 ஒரு  வழியில் அல்ல
 பல  வேளையில்.