Tuesday, October 18, 2016

குரல் என்ன செய்யும்?

பேசுபவன் முகத்தைக் காணாமலே
 தெரியும்  அவனின் நினைப்பை 
 பேசும் ஒலி  காட்டிக் கொடுக்கும்.

நினைத்ததை சொல்லாமலே 
 முகம் காட்டி விடும்.

பொய் எனில் ஓர் அதிர்ச்சி   
 மெய்  எனில் ஓர்  உவகை.

 தெரியுமே முகத்தில்  அழகாக 
 மறக்க மறைக்க முயன்றாலும் 
 தெளிவாகத் தெளியும்  பார்வையிலே !

கண்ணே பேசும் என்கிற போது 
குரல் என்ன செய்யும்?  
 கண்  காட்டுமே  நன்மையையும் 
தீமையும்.




Sunday, October 16, 2016

கடிந்தேன்

கடிந்தேன் அவனை
 சொன்னதேயேச்   சொல்லி
 கோபத்தில்  தூக்கியெறி ந்து
 உணர்ச்சி வசப்பட்டதால்.

 கெடுதல் அவனுக்கும்
 அவனின் மகளுக்கும்
 என்று அறியாமல்
கத்தும் வேளையிலே.

 புகை பிடிப்பவனுக்கும்
 மட்டும் கெடுதல்
 விளைவிக்கவில்லை  புகை
 கூட இருப்பனையும் சேர்த்தே
 அழிக்கிறது.

புரியாமல் கத்துகிறவனை
 என்னென்னவென்று  நிறுத்துவது
 நான் விளங்காமல்
 மலைத்து நிற்கிறேன்
 வெகு நேரமாக.

  

Wednesday, October 12, 2016

கண்டில்லேன் வேறு எங்கும்.

ஒர் ஆறு   ஓடுகிறது
 அதில் கழிவும்
 வண்டலும் .கூடவே.

ஒரு சாலை  விரிந்து
 நிற்கிறது  அதில் ஊரின்
குப்பை  நிறையவே.

ஒரு  பொதுவிடமான் பேருந்து
நிலயத்திலோ எச்சலும்,
 சிறு நீரும்  நாற்றமாகவே

ஒரு பள்ளி, கல்லூரியிலோ
பாடம் பாதகமாக காகிதமும்,
 மையும் சிந்திச்  சிதறி.

எங்கும் காணின்
தொய்வானத்   தூய்மையும்
  நிரந்தரமான அழுக்கையும்.

 இந்தியத்  துணைக் கண்டத்தில்
மலிந்து நிற்கும் முரண் பாட்டை
 கண்டில்லேன்  வேறு எங்கும்.


ஒதுங்குவது நலமே

கடிந்து பேச வேண்டாம் என்ற போதும்
விலகி  தள்ளி நின்றாலும்
 வந்து வந்து வம்பிழுப்பது ஏனோ ?

சொல்வதையெல்லாம் சொல்லி விட்டு
 நான் அவ்வாறு அல்ல.  நான் அப்படி
நினைக்கவில்லை  என்பது ஏனோ?

வேண்டாம் என்ற போதிலும்
 வேண்டி வேண்டி வந்து
அழுத்துவது ஏனோ?

துளைத்து துளைத்துக்   கேட்டு
வாயில்  விரலை  விட்டு
 தோண்டுவது ஏனோ?

புரியவில்லை ஏதுமே
மௌனம்   மேன்மையே
ஒதுங்குவது  நலமே !

Monday, October 10, 2016

எண்ணும் எழுத்தும்

எண்ணும்  எழுத்தும் 
 கண்ணனெனத் தகும்.

 இன்று எழுதத் தெரிந்தவனை விட 
 படிப்பே இல்லாதவன் சிறக்க.

 எண்ணை   அறியாதவன் 
கணக்கில் திறம்பட

 திகழும் அதிசயம் 
 கண்டேன் கண் கூடாக 

Sunday, October 2, 2016

நேரம் தவறி.

காத்திருந்தேன் காலம் காலமாக
 விடியும் என்ற எண்ணத்தில்.

விடிவது தினம் தானே
 என்ற போதும்
 நல்ல காலத்துக்காக
 பொறுத்திருந்தேன்.

நடக்கும் என்ற நம்பிக்கை  எனக்கு
 அபாரமாக.  நம்பினவனுக்கு
 கை  மேல் பலன் என்பது
 சொல்லளவே.

மனம் பட்ட பாடு  சொல்வொண்ணா
 கண்ணில் வடிந்த நீரோ
 கட்டுக்கடங்கா.

பதற்றம் எதிலும்
 உடலோ ஓத்துழைக்க மறுக்க
 உள்ளமோ துண்டுத துண்டாகச்
 சிதற.

சுற்றமோ  எள்ளி   நகையாட
 பிஞ்சுகளோ கரம்  பிடிக்க
துணையோ வதங்கி வாட.

ஏதோ ஒரு மனதோடு
நின்று பிடித்தேன்
கிடைத்தது வரம்
நேரம் தவறி.