Saturday, April 1, 2017

தன்னை விட்டால்

சேகரித்த  புகழை
 இழந்தான் செருக்கால்.

தான் என்ற ஒருமித்த
 நோக்கு  கெடுத்தது.

 தன்னை  விட்டால் 
யாருமில்லை  என்ற போக்கு

சரித்தது அவனை
 பாதாளம் மட்டும்



Monday, March 27, 2017

ஆழ்ந்த அறிவுடையவர்கள்

படிப்பறிவு  என்பது 
 கல்வியின் சிறப்பு.

பட்டறிவு  என்கின்ற போது 
வாழ்க்கையின் பாடம் 

அறிதலும் புரிதலும் 
 நான் கண்ட வல்லம்மை 

அறிந்து செய்வது 
என்றுமே வலிமை 

புரிந்த நடப்பது 
 எப்போவுமே  அழகு 

உலகிலே  அறியாத 
மேதைகள் வலம் வரும்  போது 
 
ஆழ்ந்த அறிவுடையவர்கள் 
 காணாமல் மறைந்து போவார்கள்.  
 .


எண்ணிக் கசிந்துருகி

மழை தனைப்   பார்த்து
கண்கள் பூத்து

வெய்யில் தனைக் கண்டு
 விழிகள் சோர்ந்து

வற்றிய   ஆற்றை நோக்கி
பார்வை  தடுமாற

வறண்ட நிலத்தை நினைந்து
கண்ணீர்   பெருக

வலம் வரும் தமிழனை
எண்ணிக்  கசிந்துருகி

யாரை நிந்திக்க என்று புரியாமல்
மனம் நொந்து நிற்கிறேன்.

Friday, March 24, 2017

நீராடல்

நீராடல் ஒரு சுகம் 
அதிலும் எண்ணெய்க்  குளியல் 
ஓரின்பம்.

  இதமான  சூட்டில் எண்ணெய்யும் 
 வடித்த கஞ்சித் தனியில் 
 கலந்த சீயக்காயும் 
வெது வெதப்பான் நீரும் 
 கலந்த குளியல் 
ஒர்  அற்புதம் 

வாரமிருமுறை குளித்ஹால் 
 நோய்  அண்டாது   
அசதி  தோன் றாது
புத்துணர்வு   உண்டாகி
 உடல் அழகாக தோன்றும்.   
 
 

வெயிலின் வன்மை.

தர்க்கம் தாக்கம்  என்கிற போது 
 முதலில் நினைவுக்கு  வருவத 
 வெயில்.

ஆக்கம் ஆணவம் என்ற போது 
மனதில் தோன்றுவது 
வெயில்.

வெளிச்சம் வெளிப்பாடு  கொண்ட போது
எண்ணம் முழுவதும் கொள்வது 
வெயில். 

கொடுமை கொடூரம் சந்திக்கும் போது 
அறியாமலே காண்பது 
வெயில்.

நன்மை கோடி மறக்காமல் 
தீமையும் ஏற்றாற்  போலவே 
வெயிலின் வன்மை.

Wednesday, March 22, 2017

அன்றும் இன்றும்.

அறிவை  வெளிப்படுத்த
பல வழிகளில் முனைந்த்தான்.

ஒவ்வொரு முய ற்சியும் கூடவில்லை
அவனுக்கு, பாவம் .

எங்குமே அவனின் ஆர்வம்
 தன நிலையிழந்து  வெறிச்சோடி

அவனின்  திறமை  விளக்கமாக
பட்டொளி வீசி  பறக்க

இருப்போரும் இல்லாதோரும்
அவனை நினைந்து  நகையாட
 
அவன் இல்லை ஒரு பேச்சுக்கு
என்று  சமாளித்தது  கொள்கிறான்

அன்றும் இன்றும்.





பட்டினம் செல்

பட்டினம் செல்
 பிழைக்க வழி  அதுவே !

சென்றான் பட்டினம்
 கிடைத்தது வேலை

பிழைத்தான் நாள் தோறும்
 செத்துப் பிழைத்து!

ஊரே  நிறைவு
என்று திரும்பினான்.

உழைத்தான் நாளும்
பெருகினான் பெருக்கினான்.

பிழைக்க பட்டினம்
செல்லாதே என்று  கொண்டான்






Sunday, March 19, 2017

அப்போதும் இப்போதும்

கைத்தலம் பற்றினான்  புன்முறுவலுடன்
நாணினாள்  நங்கை   அப்போது.

கைத்தலம் பெறுவதற்கு முன்பே
 முறுவல் நாணமும் காணவில்லை இப்போது.



Tuesday, October 18, 2016

குரல் என்ன செய்யும்?

பேசுபவன் முகத்தைக் காணாமலே
 தெரியும்  அவனின் நினைப்பை 
 பேசும் ஒலி  காட்டிக் கொடுக்கும்.

நினைத்ததை சொல்லாமலே 
 முகம் காட்டி விடும்.

பொய் எனில் ஓர் அதிர்ச்சி   
 மெய்  எனில் ஓர்  உவகை.

 தெரியுமே முகத்தில்  அழகாக 
 மறக்க மறைக்க முயன்றாலும் 
 தெளிவாகத் தெளியும்  பார்வையிலே !

கண்ணே பேசும் என்கிற போது 
குரல் என்ன செய்யும்?  
 கண்  காட்டுமே  நன்மையையும் 
தீமையும்.




Sunday, October 16, 2016

கடிந்தேன்

கடிந்தேன் அவனை
 சொன்னதேயேச்   சொல்லி
 கோபத்தில்  தூக்கியெறி ந்து
 உணர்ச்சி வசப்பட்டதால்.

 கெடுதல் அவனுக்கும்
 அவனின் மகளுக்கும்
 என்று அறியாமல்
கத்தும் வேளையிலே.

 புகை பிடிப்பவனுக்கும்
 மட்டும் கெடுதல்
 விளைவிக்கவில்லை  புகை
 கூட இருப்பனையும் சேர்த்தே
 அழிக்கிறது.

புரியாமல் கத்துகிறவனை
 என்னென்னவென்று  நிறுத்துவது
 நான் விளங்காமல்
 மலைத்து நிற்கிறேன்
 வெகு நேரமாக.

  

Wednesday, October 12, 2016

கண்டில்லேன் வேறு எங்கும்.

ஒர் ஆறு   ஓடுகிறது
 அதில் கழிவும்
 வண்டலும் .கூடவே.

ஒரு சாலை  விரிந்து
 நிற்கிறது  அதில் ஊரின்
குப்பை  நிறையவே.

ஒரு  பொதுவிடமான் பேருந்து
நிலயத்திலோ எச்சலும்,
 சிறு நீரும்  நாற்றமாகவே

ஒரு பள்ளி, கல்லூரியிலோ
பாடம் பாதகமாக காகிதமும்,
 மையும் சிந்திச்  சிதறி.

எங்கும் காணின்
தொய்வானத்   தூய்மையும்
  நிரந்தரமான அழுக்கையும்.

 இந்தியத்  துணைக் கண்டத்தில்
மலிந்து நிற்கும் முரண் பாட்டை
 கண்டில்லேன்  வேறு எங்கும்.


ஒதுங்குவது நலமே

கடிந்து பேச வேண்டாம் என்ற போதும்
விலகி  தள்ளி நின்றாலும்
 வந்து வந்து வம்பிழுப்பது ஏனோ ?

சொல்வதையெல்லாம் சொல்லி விட்டு
 நான் அவ்வாறு அல்ல.  நான் அப்படி
நினைக்கவில்லை  என்பது ஏனோ?

வேண்டாம் என்ற போதிலும்
 வேண்டி வேண்டி வந்து
அழுத்துவது ஏனோ?

துளைத்து துளைத்துக்   கேட்டு
வாயில்  விரலை  விட்டு
 தோண்டுவது ஏனோ?

புரியவில்லை ஏதுமே
மௌனம்   மேன்மையே
ஒதுங்குவது  நலமே !

Monday, October 10, 2016

எண்ணும் எழுத்தும்

எண்ணும்  எழுத்தும் 
 கண்ணனெனத் தகும்.

 இன்று எழுதத் தெரிந்தவனை விட 
 படிப்பே இல்லாதவன் சிறக்க.

 எண்ணை   அறியாதவன் 
கணக்கில் திறம்பட

 திகழும் அதிசயம் 
 கண்டேன் கண் கூடாக 

Sunday, October 2, 2016

நேரம் தவறி.

காத்திருந்தேன் காலம் காலமாக
 விடியும் என்ற எண்ணத்தில்.

விடிவது தினம் தானே
 என்ற போதும்
 நல்ல காலத்துக்காக
 பொறுத்திருந்தேன்.

நடக்கும் என்ற நம்பிக்கை  எனக்கு
 அபாரமாக.  நம்பினவனுக்கு
 கை  மேல் பலன் என்பது
 சொல்லளவே.

மனம் பட்ட பாடு  சொல்வொண்ணா
 கண்ணில் வடிந்த நீரோ
 கட்டுக்கடங்கா.

பதற்றம் எதிலும்
 உடலோ ஓத்துழைக்க மறுக்க
 உள்ளமோ துண்டுத துண்டாகச்
 சிதற.

சுற்றமோ  எள்ளி   நகையாட
 பிஞ்சுகளோ கரம்  பிடிக்க
துணையோ வதங்கி வாட.

ஏதோ ஒரு மனதோடு
நின்று பிடித்தேன்
கிடைத்தது வரம்
நேரம் தவறி.


 
  

Wednesday, September 28, 2016

கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
 என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும்   பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
 என்று  அறிந்தும்
   நீடிக்கும் எண்ணம்
 ஒரு தீமைக்கே
 என்று கொள்வோமாக.

Friday, September 23, 2016

தகுதி

தகுதி என்று நினைத்து
 தகாத காரியங்கள் செய்து
 தகுந்த எண்ணம் ஆகா

தகுதி என்று இறுமாந்து
 தாங்காத  கொடுமை செய்து
தானே பெரியவன் என்பது ஆகா.

தகுதி என்பதில்  திளைத்து
திமிராகத் தூக்கி எறிந்து
தான்  பொய்  பேசுவது ஆகா.

தகுதி ஓர்  அநீதி  அல்ல
 அது ஒரு சான்று  ஆகும்
மிகுவதும் மிகாததும்   நம் கையிலே   

Wednesday, September 21, 2016

தண்ணீருக்காகவா இவ்வளவு

தண்ணீர் தண்ணீர் 
 என்று புலம்பி 
 தடியடி  வன்முறை 
 எங்கும் பெருக.

 வழக்குரைக்க 
 நீதிமன்றங்கள் 
என்று தாண்டி ஓட.

தண்ணீரை  ஓட விடாமல்
அடக்கி  அணைகளில் தேக்கி 
பறறாக்குறை   என்று  மனிதன் 
 ஓலமிட.

 பயிரை வளர்த்து 
 நீர் வரத்து இல்லாமல் 
அவை வாட..
 
 மனமிழந்து 
 தன்னுயிரை  விட்டு 
 கதறுகிறான்  மனிதன்
இன்னொரு எல்லையில். 

.
 
உ யிர்ச் சேதம், பொருட் சேதம் 
 இழப்பு  என்று மக்கள் திக்குமுக்காட
 
 நினைத்துப் பார்த்தால் 
 தண்ணீருக்காகவா  இவ்வளவு 
என்று மயங்கி 
 துவள்கிறது  நெஞ்சம். 


 

Tuesday, September 20, 2016

தமிழின் அழகே

பாலும் கசக்கவில்லை
 பிழிந்த துணியும் கசக்கவில்லை
 என்று நயம்படச் சொன்னான்
புலவன்
 சாகும் தருவாயில் கூட.

தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.

செல்வோமா என்பதை போவோமா
 கிளம்புவோமா,  பார்ப்போமா
 என்று பல விதமாக
 நேரம் காண்பதாக
 உரைப்பது
 என்னே அழகு.

இதே போல் எத்தனையோ
 எடுத்தாள எண்ணம்  
வியப்பு மேலிட பெருமிதம்
 பொங்க  மகிழ்வுறுகிறேன்
 தாய்த் தமிழை
 உணர்ந்து.

 


 

Saturday, September 17, 2016

கண்ட இன்பம்

வம்பு எதிலும் எவையிலும்
 எப்போது என்று காத்திருந்து
 சட்டென்று தாவி
 கழுத்தைப் பிடிப்பது  போல்
 கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட  இன்பம் என்னவோ ?

Thursday, September 15, 2016

நிலம் காணுதல் நிரந்தரம்.

மேலேயும் கீழேயும்
 ஒரு சந்திப்பு.

மேலே பறக்கும் ஓர் 
ஊர்தி  வானம் பிளந்து 
 காற்றைக்  கிழித்து 
பாய்கிறது 
இராட்சத   வேகத்திலே!

வான நீல  நிறம் 
 ஒரு பொழுதிலே 
 வெண்மையாக மாறி  
மீண்டும்  நிலமாக 
 கொப்பளிக்க.


 கீழே செல்லும் 
 ஊர்திகள்
 சில அசுர வேகம் 
 கொண்டு பாய
 சில மிதமான 
கோர்வையில் செல்ல 
பல ஊர்ந்து 
 நகண்டு   நகர்ந்து 
போகும் நேரம்   
விதமான 
போக்குவரத்துக்கள் 
நிலத்தின் மேலே என்று 
அறியுங் கால் 
 நிலத்தின்  அருமை 
நெஞ்சம் நிறப்ப! 


உயரப்  பறக்கும் 
 வானவூர்தியோ  
 தரை  நோக்கி 
 இறங்கும் கால் 
ஒரு நினைப்பு 

உயரப்  பறப்பின்   
 நிலம்  காணுதல் 
நிரந்தரம்.