Wednesday, April 8, 2015

தொடருகிறது பயணம்


    கையிலே   ஒரு விளக்கு
 மனதிலே மிக  இருட்டு
 வெளியிலே  பளபளப்பு 
உள்ளே ஒரே அழுக்கு
முகத்திலே ஒரு மினுமினுப்பு
மனதிலே துரு  வும்  களும்பும்
 பேச்சிலே ஒரு  நடிப்பு 
எண்ணமெல்லாம்   பிசகு
 இவ்வோரும் வாழ்கிறார்கள்
 எல்லாவிடத்திலும்  பெருமையாக
 எதிலும் எப்போதும்
 நிரவலாக
 எங்கும் பங்கிலும்
 நெருடலாக
 நி னைத்த லும் நினைப்பிலும்
 முள்ளாக
தொடருகிறது பயணம்
ஏற்றத்துடன்
 

கபட நாடகத்தை

நேர் முகம் நிறைந்த முகம்
 புற முகம்  வெந்த முகம்
 நேரிலே  நியாயமானவன்
 புறத்திலே  அநி யாயமானவன்
கண்களிலே ஒரு பாவம்
 மனதிலே ஒரு வெறுப்பு
போக்கிலே  ஒரு நடிப்பு
 காட்டும் துடிப்பு
 வாழ்கிறான் அவனும்
 இரட்டை வாழ்க்கை
 உலகுமும் நம்புகிறது
 அவனின் வேடத்தை
கபட நாடகத்தை 

Saturday, April 4, 2015

ஒரு தேவன்

தன்  தேவை முதல்  
தானே முதல் 
 தான் செய்வது சரி 
 தான் இடறினால்
 அது விபத்து 
 தான் கோ பப் பட்டால் 
 அது  நியாயம் 
 தான் ஒரு  நீதிமான் 
 தனக்கு  வலி வந்தால் 
 அது ஒரு பெரிய வலி 
 மொத்தத்தில் தான்  
ஒரு தேவன் என்ற நினைப்பு.
 
 

Thursday, April 2, 2015

தா யும் மகனும்

நினைந்து உருகும் தாயைக்  கண்டேன்
 வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
 தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
 இரு துருவங்களாக இருவரும் நிற்க
 குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
 எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
 தா யும் மகனும் மறை க்கிறார்கள்
 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
 காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .

சொக்கேசன்

காலனை எட்டி எட்டி உதைத்தான்
 ஆடல் வல்லான்
 காலன் திமிறி திமிறி முண்டினான்
 விடவில்லை அவனை
 தள்ளினான் புரட்டினான் விரட்டினான்
  ஞா ன்க்கூத்தன்
 இருந்தும் துள்ளிப் பார்த்தான் காலன்
சொக்கேசன் விட்ட பாடில்லை
 ஒரே மிதி மிதித்தான்
 காணாமல் போனான் காலன்.
  

Wednesday, April 1, 2015

கனவுகள் நனவாகுமா

கனவுகள் நனவாகுமா
 என் விருப்பாம் அதுவல்லவே
நினைவுகள்  பல
விருப்பங்கள்  நிறைய
எல்லாம்  நடந்தால்
 பூவுலகம் தா ங்காது
மனிதனின் கால் பாவாது
 பற ப்பான்   ஆகாயம்   வழியாக
 பரவுவான் விண்ணிலே
தாய் மண்ணை மறந்து விடுவான்
 வெகு வேகமாக.

தன கையே தனக்கு உதவி

கதவு திறந்து இருக்க
 உள்ளே ஒரு நிசப்தம்
 யாரும் கண்ணில் படவில்லை
 எங்கும் ஒரு அமைதி
 நிதானித்து  நோக்கில்
ஓசை என்பதை வெறுக்கும்
 ஒரு குடு ம்பம் போல்
 தன வேலை தா ன உண்டு
 தன்னால் முடியும் என்ற
 ஒரு விழிப்பு
 தன கையே தனக்கு உதவி
 என்ற சிந்தனை
 போற்றுவதற்குரிய
 பெருமைக்குரிய  நினைப்பு.