Sunday, April 19, 2015

கலந்தது சோகம் .

சோகம் கண்டேன்  முகத்திலே
கண்ணிலே துளிர்த்த  கண்ணி ரிலே
 துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
 வாடிய  வதனம்
 வதங்கிய தோற்றம்
 மிறிய சிரிப்பிலே
 கலந்தது  சோகம் .

Tuesday, April 14, 2015

சிறு சிறு தொந்தரவுகள்

சிறு சிறு தொந்தரவுகள்
கட்டுக்கடங்காமல்
 தொல்லைப் படுத்த
 மனம் வெதும்பினாள்
 பெரிய இடிகளைத்
 தாங்கிக் கொண்டவள்
 நிலை குலைந்து நிற்கிறாள்
 சிறிது என்று நினத்தது
 பெரிய முள்ளாக
 தைக்கும் பொது
 வேதனை மிகவாகிறது.
 

சாலச் சிறந்ததது

போனவன் திரும்பினான்
 பூ மண த்தோடு
 எதற்குப் போனான்?
 ஏன் திருபினான்?
அவனுக்கே தெரியாது
 பிறகு அல்ல
 மற்றவர்களுக்கு
 அன் அப்படித் தான்
என்று முடிவெடுக்க
 அவன் வேண்டுமென்றே
 என்று புரியம்  போது
 அவனை விட்டு
 விலகி நிற்பதே
 சாலச் சிறந்ததது


Monday, April 13, 2015

வந்த படி

வாய் வந்த படி பேசும்
 பேசினால் விபரிதம்
 கண் விரும்பியபடி பார்க்கும்
 பார்த்தால்   அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
 நடந்தால்  துன்பம்
 கை நினைத்தபடி  எழுதும்
எழுதினால்   துயரம்
 யாவற்றையும் அவை
 நினைத்த படி விட்டால்
 கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்

   

Saturday, April 11, 2015

காதோடு ஒரு செய்தி

காதோடு ஒரு செய்தி 
 காற்றோடு வந்தது 
 காதிலே விழுந்தது 
 காற் றோடு  கலந்தது  
காதோடு நில்லாமல் 
 காற்றோடு போனது 
 காதுகள் பல கேட்டன 
 காற்று ஊ தியது 
காதுகள் புடைத்தன
காற்று பற்றிக் கொண்டது 
காதோடு  வந்து 
 காற்றோடு பரவி 
 கொழுந்து விட்டு எரிகின்றது.

வலியோடு வலி

 காலிலே  வலி
வி ண் வவி ண் என்று
 எழுந்தால் வலி
 உட்கார்ந்தால்  வலி
நடந்தால் வலி
படுத்தால் வலி
 எந்நேரமும் வலி
 தாங்க வில்லை  வலி
 வலியோடு வலி  

Wednesday, April 8, 2015

பல முறை

படித்தான் பல முறை
மனதில் ஏறவில்லை
படித்தான்  பல முறை
 புரியவில்லை
படித்தான் பல முறை
 என்ன  என்று தெரியாமல்
 படித் தான் பல முறை
புரியாமல்
தெரியாமல்
பல முறை
 பல முறை