Sunday, November 15, 2015

எமகாதகன் எமனிடம்

களவாடினான்  கொள்ளை கொள்ளையாக
 தனக்கு  தனக்கு மட்டும் என்று
 பகிர்ந்தளித்தான்  தன்  பிள்ளைகளுக்கு
 ஏமாற்றினான் தம்பி களைச்  சுளையாக
 தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
 அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
 காலன் வந்தான் சடுதியில்
 வீசினான் கயிற்றை
 சுருண்டான்  எமகாதகன் எமனிடம்
 காலனுக்கே பொறுக்கவில்லை போலும் 

Saturday, November 7, 2015

செதுக்கினான் உளியை

செதுக்கினான் உளியை
 வடித்தான் சிலையை
 அருமையாகத்   திகழ்ந்தது
 அதித  அழகாக
 அற்புத வடி வமாக
 தெய்வப்  பொலிவொடு
கண் கொள்ளாக்  காட்சியாக

  

திருமண ஆசை

காலம் கடந்த பிறகு
திருமண ஆசை
 கொடி  கட்டி பறக்கிறது
  ஓடி ஓடிச் சென்று
பதிகிறான் வேகமாக
திருமண  சேவை  மையத்தில்
 பதில் வரவில்லை இன்று வரைக்கும். 

மனம் வெதும் பியது

செய்த உதவிக்கு
 பலன் எதிர்கொள்ளவில்லை
 நன்றியை நோக்கவில்லை
 நிராகரிப்பு கிடைக்க
மனம் வெதும் பியது

Tuesday, November 3, 2015

என்ன ஒர் எதிர்பார்ப்பு.

காலைப்  பொழுதிலே 
 கதிரவன்  தோன்றும்   வேளையிலே 
பறவைகள் எழும் பொழுதிலே 
ஒரு அலை பேசியின் அழைப்பு 
 பதறிக் கொண்டு எடுத்தப்  போது 
 தவறான அழைப்பு என்று துண்டிக்கப்  பட்டது 
 என்ன ஒரு பரபரப்பு !  என்ன ஒர்  எதிர்பார்ப்பு.

Sunday, November 1, 2015

அண்ணனும் தம்பியும்.

பின் தொடர்வதே பழக்கம் 
 இருவரும் கை கோர்த்துக் கொண்டு 
 என்ன மகிழ ச்சியோ ! 


புற ங் கூறு வதே   தொழில்  
இருவரும் அதிலும் ஒற்றுமையாக 
 என்ன நினைப்பிலோ !.

யாரையும் பற்றி அல்ல 
 கூடப்  பிறந்தவனைப் பற்றி 
 ஏன் தானோ !

 அவனின் அழகைக் கணடு  பொறாமை 
 அவனின் இயல்பை  அறிந்து கடுப்பு 
 அவனின் செல்வாக்கைக் பார்த்து  ஆத்திரம் .

பின் தொடர்ந்து புற ங்  கூறி   பழித்துப் பேசி 
 நேரத்தையும் பொழுதையும் 
 ஆண்டா  ண்டாகக் கழித்து
 வாழ் கி றார்கள்  அண்ணனும்  தம்பியும். 



என்ன நியாயமோ

தாயும் அணைக்கவில்லை
 தந்தையும் கண்டு கொள்ளவில்லை
 வாய் மூடி மௌனம் காத்ததற்கு  பலனோ
 எதிர்த்து ஆடினவளுக்கு கரிசினம்
அமைதி காத்தவளுக்கு விமர்சனம்
 என்ன நியாயமோ
 என்ன தர்மமோ