Tuesday, April 5, 2016

கோபமும் தாபமும்.

கோபம் தாண்டி வந்தான்
 தாவித் தவ்வி நுழைந்தான்
 கத்தி குத்தி வதைத்தான்.


கோபம் தலைக்கேற வந்தான்
கண் சிவந்து புகுந்தான்
மனம் நோகச்   சாடினான்.

 கோபம்  அடங்காது  ஆடினான்
உடல் முறுக்கேறி  குதித்தான்
 தாண்டவமாடினான்  கோரமாக,


விழித்தனர் குடும்பத்தினர்
நின்றனர்  சற்று நேரம்
 மனம் துணுக்குற.

நடந்தனர் அவ்வி டம் அகன்று
இது ஒரு பழகிய பழைய
 ஆட்டம் புதிதன்று.



கத்தட்டும் முடிந்தவரை
ஆடட்டும் இயன்றவரை
போகட்டும் அவனோடு
 கோபமும் தாபமும்.

  


Monday, April 4, 2016

வென்று விடலாம் உலகத்தை

மனது  வலிமை இழந்த பொது
 உடலும் சோர்ந்து கண்டேன்
 உடல் வலு விழந்த பொது
 மனது  திடமாகக் கண்டேன்


மனது   அலை பாயும் போது
 உடல் ஓரிடத்திலே
 உடல் அலையும் போது
 மனமும் ஓடும் கூடவே.


அடக்கி ஆளத்  தெரிந்த
மனதுக்கு  ஒடுக்கி
 வாழவும் வேண்டும்
 என்று அறியவும்.


அறிந்து கொண்டேன்
என்ற ஆணவமும்
புரிந்து கொள்ளவில்லை
என்ற பேதமையும்


காட்டுகிறது  மனதின்
தன்மையை  வெளிப்படையாக
அதிகாரமும்  அசட்டுத்தனமும்
விம்மி வெளியேறும்

  மனதின் உள்ளேயுள்ள
எண்ணங்களைக்  கொணரும்
 வழி தெரிந்தால் வென்று
விடலாம் உலகத்தை.





   .


மனம் வலிக்க

கணவனும் மனைவியும்
 அடித்துக் கொண்டார்கள்
 தினமும் எந்நாளும்

ஒரு முறை அல்ல
 ஒவ்வொரு நாளும்
வேளையும்   எப்போதும்

எதற்கு எனின்
ஒரு காரணம் அல்ல
 பலப் பல   எவ்விதமும் .

பற்பசை முதல் படுக்கை
வரை பலப்ப்ரிட்சை  என
ஏச்சும் பேச்சும்  யாவற்றிலும் .

கணவன் பிடித்தால்
 ஒரே பிடி  மனைவியோ
சுற்றி  வளைத்தல்  எவ்வகையிலும்.

முடிவே இல்லையா  என்று
 மனம் வலிக்க  எண்ண 
 விடிவே இல்லையா எக்காலமும்.








Saturday, April 2, 2016

எப்போதும் எதுவுமாக

வானளாவிய  பொய்யும்
 உலகளாவிய  பேச்சும்
அளவில்லா தற்பெருமையும்
 அன்பில்லா நடிப்பும்
 வழக்கும் வாதமும்
கலகமும் கலாட்டாவும்
வாழ்வின் ஆதாரம்  என்று
 வாழ்கிறான் அவனும்
 தன்னுடைய  நிலை
அறியாது  இன்றல்ல
 நாளையல்ல எப்போதும்
எதுவுமாக


Friday, April 1, 2016

சங்கரனுக்கு ஆபரணம்

சங்கரனுக்கு ஆபரணம்
 சங்கராபரணம்
 என்று கண்டேன்

வைரம் வைடுரியம்
 தங்கம் என்ற
 பல விலை மதிப்புள்ள
 ஆபரணங்கள் அணிந்து


முத்து பவளம்,
 மரகதம் நீலம்
 இரத்தினம்  பதித்த 
அணிகலன்கள் சூடி
 

கங்கை சந்திரன்
 மூடியில் தரித்து
உமையம்மை
 உடலில் ஒரு பாகமாக



மரவுரி கட்டி
 திருநீறு  பட்டையிட்டு 
 காலைத்  தூக்கி  ஆடும்
வேளையில்.
 
 பண்ணோடு இசை பாடி
சங்கராபரணம் இராகம்
 பிரவாகம் எடுத்து
 உற்றாகப்  பெருக

கண்ணிர் மல்கி
 அமைதி  கொண்டு
 தனை மறந்து
 பணிகிறான் அடியவன்.







சங்கரா பரணம்

இராகத்தின்  உடே சென்று 
 உள்ளே நின்று நெருடி 
ஊடுருவி  அறிந்து 
தெரிந்து குழைத்து 
 கொஞ்சி   பருகி 
 பிணைந்து  படிந்து
அதட்டி அதிகாரமாக  
 ஆனந்தித்து  குதகாலமாக  
 நெக்குருகி  இன்பமாக 
 இழைத்தான்   அழகான
 சங்கராபரணத்தை.
 
 
 
 

மோகன இராகம்

 மோகன இராகம் தவழ்ந்து ஓட 
 சில் நேரம் விர்ரென்று பாய
 மேலே ஏறி  குதித்து ஓட 
கிழே  இறங்கி சுற்றி வர 
 மத்திமத்தில்  நின்று அசை போட
நெஞ்சை உருக்கி கனிந்து உருக 
 கண்களில் நீர் கசிந்து வழிய 
சிலை போல் ஆடாமல் 
அசையாமல் நின்று  
கரைந்ததது மனம்.