Monday, April 11, 2016

ஒரு படிப்பினையே!

கண்கள் கரு விழிகள் 
 அச்சம் சூழ 
நோக்குகிறேன்.

இரு கண்கள் 
பொறாமையை  உமிழ 
என் முன்னால் .

இரு கண்கள் 
 ஆத்திரத்தைக்  கொட்ட
என் பின்னால்.  

இரண்டுக்கும் நடுவே 
என் கண்கள் முழிக்க 
 பயத்துடன்.


கண்களுக்கு ஒரு சக்தி 
அதிதமான்  வலிமை
பார்வையில்.

வீரியம் கொல்லும் 
அக்கணமே 
அடிப்படையிலே.


விலகி விடு என்ற
கூச்சல்  அருகிலே 
நல்லதற்காகவே.


ஒடி விடு  என்ற 
கூவல் தொலைவிலே  
நன்மைக்காகவே 


எனக்கு மட்டும் அல்ல 
 உனக்கும் உலகத்தாருக்கும்  
ஒரு படிப்பினையே!
   

  





Sunday, April 10, 2016

முகம் ஒன்று தான்

முகம் ஒன்று தான்
 அதில் தான் என்ன 
 என்ன வெளிப்பாடுகள்.

புன்சிரிப்பிலே விரிந்து
 பூவாக மலர்ந்து
பொலிவுடன் திகழும்.

கவலையிலே  சோர்ந்து
கசங்கி வாடி
சோபையிழந்து  தோன்றும்.


ஆச்சரியத்தில்  வியந்து
 பரவி ஒளி  கூட்டி
கொள்ளாது விளங்கும் .


வெறுப்பில்  வதங்கி
ஒடுங்கி ஒளி குறைந்து
குணங்கி  சொடியும்.


அன்பில்  மலர்ந்து
ததும்பி  தடவி
 கருணை வடிவாகத் திகழும் .


ஆத்திரத்திலே பொங்கி
 வெடித்துச் சிதறி
ஆவேசத்தைக்   காட்டும்.


முகம் ஒன்று தான்
 அதில் தான் எவ்வளவு
கோடுகள்  குறுக்கும்
நெடுக்குமாக.






Saturday, April 9, 2016

இன்று ஒன்றும்

இன்று ஒன்றும் செய்ய வேண்டாம்
 முழு நேரமும்  விட்டத்தைப பார்த்தபடி.

இன்று ஏனைய  நாளைப் போல் இல்லை
ஒடித்   திரிய வேண்டிய அவசியமில்லை .

இன்று யாருக்காகவும் இருக்க வேண்டியதில்ல
எனக்கே  எனக்கே என்று நினைத்த்ப் போது 

வந்தது அட்டகாசமாக ஒரு விருந்து
 முழு நேரமும் வேந்தேன்  அடுப்படியில்.

வந்தது  மற்ற நாட்கள விட அதித வேலை
ஓட முடியாமல் ஒடி அவசியத்தோடு.

வந்தது நிகழ்வுகள் எனக்க்காக ஏதும்  இல்லை
எதுவும் எனக்கே என்று  வராது போல்








கண்டோம் பாவினிலே !

கை வளை குலுங்க 
 கொடி இடையாள்
பால் செம்பு ஏந்தி 
நாணம் படர
 வலது காலை 
எடுத்து வைத்து 
 புகுந்தாள் அகத்தில் 
தேவகி . 


கை குலுக்கி 
இடை தெரிய 
மதுவேந்தி 
நிமிர்ந்து 
காலணிகளோடு 
எடுத்து வைத்து 
 புகுகிறாள்  இல்லத்தில் 
அதிதி .

முந்தி விலகாமல் 
அதிராத நடையுடன் 
கண்ணாலே பேசி 
 கணவனை புரிந்து 
அணைந்து நாடி 
அழகாக விரித்தாள் 
தேவகி.  


முந்தியே காணாமல் 
 தடதடவென்ற நடையுடன் 
உரக்க அறை   கூவி 
கணவனை விழித்து 
கும்மாளமிட்டு   ஆடி 
 வேகமாக  விரிகிறாள்
அதிதி .


இருவருமே பெண்கள் 
 காலமும் நேரமும் 
 இன்றும் நேற்றுமாக 
 தேவகியும் அதிதியும் 
 வாழந்த வாழ்கின்ற 
பக்குவ   மாற்றங்களை 
கண்டோம் பாவினிலே !

 
 




 

Friday, April 8, 2016

ஏகாந்தம்

ஏகாந்தம்  எனில்
ஒரு சக்தி 
 எங்கும்  ஒளி 
யாவும் அமைதி 
 பரவலான  ஆனந்தம் 
பேரானந்தம்  
ஒரு நிர்ச்சலனாமான
பேருவகை .


கண்டேன் அச்சுகத்தை 
 ஒரு நாள் யானும் 
என் குழந்தைகள்  மட்டும்  
 கொஞ்சவில்லை 
பேசவில்லை  
நோக்கினேன் அவர்களை  
நேரம் அறியா  வண்ணம் 
அடைந்தேன் பேருவகை 
ஏகாந்தம்   அதுவே.




Wednesday, April 6, 2016

நன்றல்லவா?

கண்டதும் கேட்டதும் பொய்
என்றின் எது மெய் ?

காதுகளை நம்பாதே
 என்றின் எப்படி?


கண்களை நம்பாதே
 என்றின் எவ்வாறு?


சொல்லும் செயலும் பொய்யா
தெரிந்து கொள்வது
நன்றல்லவா?







எவ் நிலையும் .

எளிது என்று எதுவும் இல்லை
 எளிமை என்று ஏதும் இல்லை


கடினம் என்று ஒன்றும் இல்லை
 பகட்டு என்று ஏதுமில்லை.

 ஒருங்கே நினைக்கின்  கண்டது
மனதளவில் தான் எவ் நிலையும் .


மனதை தாண்டின் யாவுமே  நன்று
 செய்யும் செய்யாததும்  அவ்வளவே.