Sunday, June 12, 2016

ஒற்றுமை குலைந்ததது

சிறு சச்சரவு
 ஊதி பெரிதாக்கி
 வெடித்துச், சிதறி
 நிர்க்கதியாக்கியது
 ஒரு குடும்பத்தை.

 புயல்  வீசியவுடன்
அமைதி தோன்றுவது போல
சண்டை ஓய்ந்த பின்
பேசுவதே நின்றது.

ஒற்றுமை குலைந்ததது

Friday, June 10, 2016

அடங்கினான் எதற்கோ?

அடங்கினான்  எதற்கோ?
 அடங்குவது  அவன்
 வழிமுறை அல்ல
 பின் ஏன் ?


தாண்டவம்  ஆடுவான்
 குதிப்பான்  தாம் தூம்
 என்று என்றைக்கும்
 இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

வாய் நீளம்   கை
அதை விட
 கத்துவான் ஏன்
 அடிப்பான் யாவரையும்
இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

எங்கோ பலமாக
வீழ்ந்தான்
  அடங்கினான்
 இன்று காரணமாகவே.


பார்வை வேறே

 விவரம் அறியாத பிள்ளை
பேசுவது மழலை
 விவரம் புரியாத மனிதன்
பேசுவது புலம்பல்.

மழலை இனிமை  பயக்கும்
 புலம்பல்   கடினம் விளையும்.


வயதுக்கேற்ற  அறிவும்
வயதை மறந்த அறியாமையும்
 நோக்கின்

 ஒன்று அழகு
அடுத்தது  அனர்த்தம்.

 ஒரே கல்
 பார்வை வேறே




  

Sunday, June 5, 2016

ஆரோக்கியம்

வளர்ந்தேன்  அருமையாக
தாயும் படித்தவள்
தந்தையும் அது போலே.

 கண்டிப்பும் பாராம்பரியுமும்
 என் இள  வயதில்
 அதிகம் கண்டேன்.

 சொகுசு வண்டியிலே
 வயதில்  மூத்த   ஓட்டுனர்
 ஆரோக்கியம்  பள்ளிக்கும்,
 வாய்பாட்டு ஆசிரியரிடமும்,
பரத நாடிய வகுப்புக்கும்
 அழைத்துச் செல்வார்.

நான் செய்த சிறு தவறுகளைக் கூட
 அறிந்து அதை என்ன தாயிடம்
 சொல்லி விட்டு, "அம்மா
 தங்கச்சியை கண்டியுங்கள்"
 என்று  எடுத்தும் கொடுப்பார்.


ஒரு நேரம் என் தாய்க்கு
 கோபம்  மிகவே என்னை
  அடித்து  விட்டார்.
அழுத என்னை அன்பாகத்
 தூக்கிக் கொண்டு
"உன் நல்லதுக்குத் தானே
அம்மா" என்றார்.

நான் கோபத்தில்
 கத்தினேன்  செய்வதையும்
செய்து விட்டு
 இது  வேறேயா !.
கறுவினேன் மனதுக்கள்ளே.

நினைத்துப்   பார்க்கிறேன்
 ஆரோக்கியத்தின் அன்பையும் ,
 என்னுடைய ஆங்காரத்தையும்
விசும்புகிறேன் என்னுள்ளே


Friday, June 3, 2016

சுகம் தனியே!

மாங்காய்  கொத்து
 கொத்தாகக்  காய்க்க
 தேங்காய் குலை
குலையாகத்  தொங்க
 வாழை குலை
 தள்ள.பரந்த
விரிந்த தோப்பில்
 குளுமை தழுவ
பசுமை படர்ந்த
நிலப்பரப்பிலே
 காலாற நடக்கும்
 சுகம் தனியே!

Thursday, June 2, 2016

கல்யாண வைபோகமே

பலகாரமும், பாயசமும்
 பனியாரமும், பொரியலும்
சட்னியும், அவியலும்
சாம்பாரும்,  ரசமும்
சாதமும்,  கூட்டும்
இரண்டு நாட்கள்  
மூன்று  வேளையிலும்
 விமர்சையாக வழங்கப் பெற
திருமணம் தடபுடலாக நடைபெற
 சமையற்  கலைஞரும்    பல
 இலட்சம் சன்மானமாகப் பெற
 சில்வர் சாமான்கள் சிறிதும், பெரிதுமாக
பல வகையில்  அன்பளிப்பாக
 வழங்கப் பெற
 ஒரு சமுகம் செலவு செய்யும்
வினோதம்.

அதே மக்கள் சாதாரண நாளிலே
 கிழிந்த பாயில் படுத்து,
 நடையன் இல்லாமல் நடந்து,
எளிமையான் உணவை உண்டு
 விட்டிலே ஒரு  சிறு பகுதியில் இருந்து கொண்டு
ஏனையப் பகுதியை வாடகைக்கு விட்டு
 வாழும் விதம் ஆச்சரியமே!

கல்யாண வைபோகமே

















Wednesday, June 1, 2016

ஏமாற்றம்

அண்ணன் என்று பாராது
தம்பி என்று நினையாது
 தமக்கை என்று எண்ணாது
பாடுபட்டதற்கு கிடைத்தது
பெரிய பரிசு--ஏமாற்றம்
 ஒரு  வழியில் அல்ல
 பல  வேளையில்.