நெடு நேரம் கண்டேன்
நெடு நேரமும்
வியப்புடன்.
நன்னாளில் நடக்கும்
நற்பொழுதில் துவங்கும்
விடிந்தும் விடியாததும்
தெரிந்த வித்தியாசங்களை
கண்டு அதிர்ந்தேன்.
உடல் நலம் குன்ற
வலி வந்து அமிழ்த்த
நிலை குலைந்து நிற்கிறான்
நாயகன்.
அறிந்தும் நாயகி
சீண்டுகிறாள் அவனை.
உடல் வலியும் மன வலியும்
அவனை படுத்த
நாயகன் மயங்கினான்
பரிதாபம்! பாவம்