Friday, July 15, 2016

ஆடிப் பட்டம்

ஆடி தேடி  பயிரிட  
 ஆடிப்  பட்டம்  கண்டு
விதை.

பழமொழிகள் பல
ஆடியின்  புகழ் பாட
 பெருகி பெருக்கி
 வளம்   கண்டிடும்
 மாதம் ஆடி.

பயிர் பச்சை
 உயிர் பிச்சை
 என்பது போல

ஆடியில்  பயிர்கள்
 விளம்பிட
  தம்பதியர்கள்
 பிரிந்திட
 ஒரு காணல்
ஏறக்குறைவாகத்  தோன்ற.

 ஏன்  எதற்கு  இவ் முரண்பாடு
 என்று நோக்க
 புரிவது போலும்
புரியாதது போலும்
ஓர் இனம்  அறியாத
 உணர்வு எழ.

பழக்கங்கள்  காரியத்தின்
 பின் தொடர்பே!
 ஆராய்ந்து  அறிவது
 சாலச்  சிறந்தது
என்று கொள்வோமாக.
 
















Thursday, July 14, 2016

அவன் நிலை

 கருப்பைய்யா    பேசுகிறான்
பன் மாதிரியாக .

விதண்டா வாதம்
 பேசுகிறான்  விழைந்து

அன்று நடந்த
 சாதாரண  நடப்பை
 மிகைப் படுத்திப்
 பேசுகிறான்  காரணமாக

அவனாகப் பேசவில்லை
 பின்னால் ஒருவன்
உந்துதலினால்

தெரியும்  அவன்
 விளையாட்டு
 தெரிந்தே
 சந்திக்கிறேன்
அவனை.

அவன் நிலை
மாறாது  நின்றான்
 எனின்
அவல நிலை
 தானே வந்து
 நிலைத்து விடும்.




  

Monday, July 11, 2016

நெடு நேரம் கண்டேன்

நெடு நேரம் கண்டேன்
 நெடு நேரமும் 
 வியப்புடன்.

  நன்னாளில்   நடக்கும் 
 நற்பொழுதில் துவங்கும்  
விடிந்தும் விடியாததும் 
 தெரிந்த  வித்தியாசங்களை  
கண்டு அதிர்ந்தேன்.

உடல் நலம் குன்ற 
 வலி வந்து அமிழ்த்த 
 நிலை குலைந்து நிற்கிறான் 
நாயகன்.

அறிந்தும்  நாயகி 
சீண்டுகிறாள்   அவனை.

உடல் வலியும்  மன வலியும் 
 அவனை படுத்த 
 நாயகன் மயங்கினான் 
பரிதாபம்! பாவம் 
  
    

Saturday, July 9, 2016

மானம் எது? மானம் ஏது?

மானம் எது?
 மானம் ஏது?

கேள்விக் கணைகள்
 என்னைத் தாக்க
 நிதானிக்கிறேன்  சற்று.

எது என்பதற்கு
 என்ன விடை?

நேர்மை, ஒரு சொல்,
பிறழாத தன்மை
தவறினால்  மன்னிப்பு
அடக்கம்,  அருள்
 என்பது மானம்.


ஏது  என்ற போது
என்ன பதில்?

பொய், புரட்டு
புறங்கூறுதல்,
 வார்த்தை மாறுதல்,
 விலை போகுதல் 
என்ற போது
 மானம்  எங்கு
கண்டோம்.

மானம் பெரிது
 என்ற காலம் போய்
 பணமே  சிறப்பு
என்ற
 நேரம் இப்போது.

  


Thursday, July 7, 2016

எவ்வழியில் பெருக்கினான்

பணம் பத்தும்  பண்ணும்
 என்பது அவனுக்கு
 முற்றும் பொருந்தும்.

 எளிய குடும்பத்தில்
 பிறந்தும்  அவனுக்கு
 அதில் ஏற்றமில்லை.

ஏற்றம் அடைந்தான்
 படிப்பாலே  ஓரளவு
ஏற்றம் எனில்
பணத்தாலே!

 திறமை  என்று நோக்கும் போது
 பெரிதளவு  அவனிடம்
காண முடியாது. 

எவ்வழியில் பெருக்கினான்
 என்பது அவனுக்கே
 வெளிச்சம்.

 
  பணத்தை கண்டவுடன்
 அடக்கம் அற்றுப்போய்
 அடங்காமை தலை  தூக்க
 ஆடுகிறான்  ஆடுகளம்
மிக அழகாக.

Wednesday, July 6, 2016

என்ன ஒரு பெருமை!

வந்தமர்ந்தான்  அழுத்தமாக
நோக்கினான் மேலும் கீழுமாக
 பேச்சை ஆரம்பித்தான்
  அமர்க்களமாக

 அது அப்படி இது அப்படி
 என்று அளந்தான்
 பெரும் பணம் புரண்டோட
வாழ்கிறான் போலும்.

நின்றேன்  சற்று நேரம்
 மெதுவாக அவனை
 கிளப்பினேன்.
புரியாமல் பேசிக்கொண்டிருந்தான்
 நேரம் போவது தெரியாமல்
 தாங்காமல்  கை எடுத்துக்
 கும்பிட்டேன்.

 என்ன ஓர் ஆணவம்!
 என்ன ஒரு பெருமை!



Saturday, July 2, 2016

முல்லை.

ஒரு சிறு அலட்டல்
 ஒரு சிறிய  பகட்டு
 என்று இல்லாமல்
 தனித்துவமாக
 அமைதியின்  மறு
பதிப்பாக
 திகழ்கிறாள்
 முல்லை.

பெயர்க்கு  ஏற்றவாக 
மிருதுவான கனிவும்
அதிராத பேச்சும்
ஆழமான  சிந்தனையும்
 அழகான  நடையுமாக
 வலம் வரும்
 முல்லை.

யாவரும் விரும்பும்
 ஒரு அறிவு  மிகுந்த
 பெண்மணியாக
 அறிமுகமாகிறாள்
 முல்லை.