Thursday, March 31, 2016

தன்னைவிட ஒருவனா

கட்டவிழ்த்த த்த காளை  போல் திமறி னான்
கட்டுங்கடங்காமல் பேசினான் பொழுதுமே
சாடினான்  யாவரையும்  வரை முறையிலாமல்
 இகழ்ந்தான் அனைவரையும்  திக்குத்  தெரியாமல்

எதனால் இவ்வளவு  என்று கண்ட போது
ஆத்திரம் என்று ஒரு சொல்லில்  முடிக்கலாம்
அதுவன்றே குறிக்கோள்  அதனிலும் மேலே
இயலாமை  ஒன்று உள்ளடங்கியுள்ளும்


முடியவில்லையே தன்னால் எண்ணங்கள்  திரள்
கோபம் தலைக்கேற  ஆங்காரமாக
வெடித்துச் சிதறுகிறான் மனம் குமறி
சினம்  குறையை மறைக்கும் என்றாகுக.


தன்னைவிட ஒருவனா என்று ஒரு  நினைப்பு 
தலைகுப்பற  அவனை புரட்டித்    தள்ள
இறைகிறான் ஆவேசமாக  காரணமே இல்லாது
தலை குனியும் நேரம் விரைவிலே எனறறியாமல் 







Wednesday, March 30, 2016

காணுதலும் காணாததலும்

கண்டு கொண்டேன் இனத்தை
 கண்ட தெளிந்தேன் வளத்தை
கண்டு கொண்டேன் நல்லதையே .


காணத் தவறின் குணத்தை
 காணத் தப்பியது  குதர்க்கத்தை
காணத் தவறின் நல்லதற்றவையே


கண்டு கொண்டது கைக் கொடுக்கவில்லை
 கண்டு அறிந்தது புறந் தள்ளியது
கண்டு அடைந்ததது விலகியது.


காணத் தவ றின் கை தூக்கியது
காண அறியாதது ஒத்துழைத்தது
காணாமல் போனது வந்தடைந்தது.


கண்டதும் காணாததும் வகை சார்ந்தவையே
கண்டும் காணாமலேயும்  தொகை தொங்குமா 
காணுதலும் காணாததலும்  பகை உண்டாக்குமோ



Tuesday, March 29, 2016

வயதான வேளையில்

வயது  ஒன்று நிற்காது
 மணியும் நில்லாது 
வயதும் மணியும் 
 நிற்காது  நில்லாது.


திரும்பி திருப்பி
 சொல்கிறேன்  என்றாவது 
  வயதாகும் வேளையில்
ஓட முடியாமல்.


மறதி வரும் நேரம் 
 மறந்து போகும் எல்லாம் 
 வயதான் வேளையில் 
நினைக்க முடியாமல்.

தடுமாறும் காலம் 
 வீழ்ந்து விடும் யாவும் 
 வயதான் வேளையில் 
தடுக்க முயலாமல்.

தட்டு தடவி  நீக்கி நீங்கி 
சிரித்து சரிந்து அழுது  அழுகி 
 வயதான் வெளியில் 
வாழ்ந்து நோகாமல்


சாகும் தறுவாயில் 
 கழித்து சலித்து  கவிழும் 
 வயதான் வேளையில்
 இறக்கத்   தெரியாமல்.


இறப்பதும் வாழ்வதும் 
 கையில் இல்லை என்றின் 
 வயதான வேளையில்
பட்டு படுத்திக் காட்டாமல் 










சிண்டு சிக்கலாகாமல்

ஆட்காட்டி விரலைக்  காட்டினான்
ஆளவந்தான்.

சுட்டிக் காட்டினான் கோளாறை 
ஆளவந்தான்.


தேடினான்  குறையை எங்கு என்று 
வாழ வந்தான் .

கண்டு பிடிக்க முயன்றான் 
வாழ் வந்தான்.

கோளாறும் இல்லை முதலிலே 
குறையும் இல்லை நெடுகிலே 

பிடித்தார்கள் சிண்டை   இருவரும் 
அடித்துக் கொண்டு

நடப்பது இவ்வாறே உலகில் 
எங்கும் எவ்விடமும் .


ஆளவந்தான் நானாகவும் 
 வாழவந்தான்  நீயாகவும் 

இருக்கலாம் என்றாகிய போது 
 சிண்டு சிக்கலாகாமல் இருந்தால் 
 மட்டுமே கவனி.



Monday, March 28, 2016

கண்டும் தெளியவில்லை

மண் என்று ஒர்  இளக்காரம்
 மண் தானே என்ற ஓர்  அலட்ச்சியம்
மண்ணே  பொன் என்று அறியாமல் .

மண்ணாவே போவாய்
 மண்ணுக்குள்ளே போ
 என்ற ஓர் ஆங்காரம்.

 ஒரு மண்ணும்  தெரியாது
 நீ ஒரு மண்ணு மண்ணு
என்ற ஓர் உதாசினம் .

அதோடே  மண்ணாசை
 ஒரு பேராசை  என்ற
 ஓரு நீட்டிப்பு .

அதனுள்ளே மண்
 பொன்னை விட உயர்வு
என்ற ஒரு  ஆவல்.


மண்ணின் மகிமை
மண்ணின் பொறுமை
மண்ணின் வலிமை


அறியாதார் பேசும்
பேச்சு கேட்டு
முடியவில்லை.


கண்டும்  தெளியவில்லை
 என்கிற போது மனம்
கலங்குகிறது  அனேகமாக .




நிழல் பயம்

கை வேகமாக எழுத 
 காதுகளிலோ இசை பாய 
 மனம் அலை பாயுமோ 
 என்ற நிழல்  பயம்
உருண்டோட   

தடை ஏதுமில்லாமல் 
எண்ணங்கள் ஒன்றன் பின் 
 ஒன்றாக குதித்து  வர 
கையால் எழுத முடியுமோ 
என்ற நிழல் பயம்
 உருண்டோட.
 
விரைந்து எழுதுகிறது 
 புண்ணியமான  கை 
வலி வந்து எழுத்தோவியம் 
 தடை படுமோ  என்ற 
 நிழல் பயம் உருணடோட.


எண்ணக் குவியல் 
 நிலைப்பட   சற்று ஓய்வு 
என்று கருதி கை நெட்டி 
முறிக்க நிழல் பயம் 
உருண்டோடியது முற்றாக 




Saturday, March 26, 2016

கண்ணப்பன் என்றே

கண்ணப்பன் என்ற சொல்வோம் அவனை
கண்கள் அலைபாய்வதால்

கண்ணப்பன் என்று கொள்வோம் அவனை
காலத்தையே கைக்  கொள்வதால்


கண்ணப்பன் என்று அறிவோம் அவனை
தான் கண்டதே  கோலம் என்பதால் .

கண்ணப்பன் என்று தெளிவோம் அவனை
கடுப்புடன்  எதையும் நோக்குவதால் .


கண்ணப்பன் என்று சொல்லுவோம் அவனை
கலக்குவதே குறிக்கோளாக .


கண்ணப்பன் என்றே அழைப்போம் அவனை
கண் சிமிட்டி கையை ஊதுவதால் .


கண்ணப்பன்  என்றே சிலாகிப்போம் அவனை
 களமிறங்கி குறை காண்பதால் .


கண்ணப்பன் என்றே போற்றுவோம் அவனை
கண்களிலே  ஆத்திரத்தைக்   காட்டுவதால்.


கண்ணப்பன் என்றே நினைப்போம் அவனை
கண்ணிலே களங்கமும் வன்மமும் நிற்பதால்

கண்ணப்பன் என்று பெற்றோர் இட்டப் பெயர்
 இன்று காரணப் பெயராக நிலைப்பதால்.

கண்ணப்பன்  வாழ்கிறான்  பெயருக்கேற்ப


அளவான வளத்தோடு
குறைவான  உயரத்தோடு
அதிகமான குரோதத்தோடு