Tuesday, May 31, 2016

என்ன எதிர்பார்ப்பது?

அடித்துக் கூறினான்
 சத்தமாக

சத்தம் உணமையாக்குமா?
 அவன் எதிர்பார்ப்பு.

எதற்கும் ஒரு எதிர்ப்பு
 அவனிடம்.

 நல்லது  என்றாலும்
எதிர் மறை.

கெட்டது  என்றால்
 மறு முறை

அவனிடம் என்ன
 எதிர்பார்ப்பது?

அடி வாங்குவாள்

வடிவிலே அரசி என்ற  நினைப்பு
அழகி என்ற எண்ணம்
அறிவானவள் என்ற நோக்கம்
 எல்லாம் கூடவே  அவளிடம்.


 குட்டையாக மெலிந்து  காணப்படுவாள்
வாயும் கண்ணும் ஒன்றை ஒன்று பார்க்க
 எட்டாம் வகுப்புக் கூட தேறாமல்
 பேச்சு மட்டும் மிக அதிகமாகவே.

துச்சமாக பேசுவது அவளின் சிறப்பு
 தூக்கி எறிந்து  பேசுவது அவளுக்கு இன்பம்
  மற்றவர்கள் அவளைச் சொல்ல  நேரம் ஆகாது
அடி வாங்குவாள்  வெகு சீக்கிரத்தில

Monday, May 30, 2016

எழுத்து நயம் பார்க்கும்.

எழுதினால் தான்
 சிரமம் தெரியும்
 எழுதும் போதே
 பிழைகள்  மலிந்து
 வரும்.

உற்று நோக்கின்
 தப்புக்கள் மாளா
 திருப்பிப் பார்க்கின்
 பொருள் மாறும்.

எழுதுவது எளிது  அல்ல
 பழகப் பழக  கை வரும்
மன ஓட்டம்  கை ஓட்டம்
ஒன்றுபட்டால்   எழுத்து
 நயம் பார்க்கும்.

Sunday, May 29, 2016

ஞாயிறு போற்றி !

கோடை வெயில்
 கத்திரி வெயில்
 அக்னி வெயில்
 நாமகரணங்கள்
 எத்தனை எத்தனையோ
 உனக்கு

யாவையும் உன்
 திறனை எடுத்துரைக்க
 போதுமா ?

சுடரொளி விட்டு
பாயும் நீ
 ஓரு  நாளைப் போல
 அல்ல.

இன்று தண்ணொளியாய்
 நாளை பேரொளியாய்
 மறு நாள்  சுடரொளியாய்
காட்சி தருவாய்.

மேலாக சுட்டெரிக்கும்
 தணலை வாரி வாரி
 வீசுவாய்  பொழுதுகளிலே

தாங்கவும் தாங்காதவாறும்
 கொடுத்தும் கொடுக்காதவாறும்
 நின்று தடங்கு இல்லாமல்
 வழங்கும்  கதிரவனே
ஞாயிறு  போற்றி !  



    

Saturday, May 28, 2016

வாழ்வும் சாவும்


மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
 உடல் கிடக்கறது.

துக்க வேளையில்
 நல்லது பேசப்பட்டு
 கெடுதல் விடப்படுகிறது.


நாட்கள் செல்ல
 மாறுகிறது
பேச்சுக்கள்.

நரம்பில்லா நாக்கு
 கூடவும்  பேசுகிறது
 குறையவும்  பேசுகிறது.

வாழ்வின் அழகை
 புகழ்ச்சி  மெருகுட்டுகிறது
 இகழ்ச்சி  விகாரப்படுத்துகிறது.






   

Friday, May 27, 2016

மதி முன்னதாகவே.

கையிலே ஆயிரம்
 ஒரு வெகுமதி.
 
மண்ணிலே வைரம்
 ஒரு பெருமதி.

 கண்ணிலே கனிவு
 ஒரு முழு மதி .


மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.


திருத்தமாக  வாழ்தல்
 ஒரு புத்திமதி.

எங்கும் யாவும்
 மலர்வது  திருமதி.


எதிலும் யாவையிலும்
 தென்படுகிறது  அமைதி.







Thursday, May 26, 2016

வெப்பம் அமர்க்களம்

கடும் வெயில்
 வெப்பம்
எலும்புக்குள்ளே
தோல் வழியே
 சென்று  குடைய.

வேர்வை
எலும்பிலிருந்து
 தோல் வழியே
 வடிந்து உத்த.

 முயற்சியாக
 முன்னும் பின்னும்
பகி ர்ந்தவாறு
 நடைமுறைப் படுத்த

ஒரு இயலாமை
 முன்னிலைப்
படுத்த.

சீர் பெறும்
நிலைமை
தோன்ற.

இறப்பு
 விழி ப்புடன்
காத்திருக்க.