Tuesday, August 30, 2016

பரிதாபமாக

வளர் பிறை சந்திரனைப் போல்
வளர்ந்து கொண்டே போனது
 அவன்தன் பேச்சு.

தன்னை   விட என்ற
இறுமாப்புடன்  வலம்  வரும்
 அவன்தன்    நடப்பு .

நிகரில்லாதவன் என்ற  பெருமிதம்
 ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.

மேற்போனவன்  மேல் நோக்கி
 நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .

கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.

நிற்கிறான்  தானாகவே
பெருமையும்  இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !


பலவாறாக

பல கோடி வேண்டி
 பலப் பல வியூகங்கள்
 வகுக்க

பல சக்தி வேண்டி
பலப்பல  ஹோமங்கள்
செய்து.

பல காரியங்கள் நடக்க
பலப்பல  வேண்டுதல்கள்
 அர்ப்பணித்து.

பலப் பல என்று பெருக்கி
 பலவற்றையும்  கூட்டி
பலவாக அளந்து.

பலவாறாக வாழ்ந்தான்
இங்க்கொன்றும் அங்கொன்றும்
 குடும்பமாக

பல தாரங்கள் பல பழக்கங்கள்
பலமுறை  தடுமாற்றங்கள்
என்று பலமிழந்து கொண்டு

பல வாகில்  பலவழியில்
 சிறுமைப்பட்டு  வாழ்கிறான்
 பலவேந்தன்  என்றவாக்கில்.






Sunday, August 28, 2016

எந்த நன்மையையும் இல்லாமல்

காலமும் பொழுதும் போக 
 வயதும் கூட 
 இளைஞன் இன்று முதியவன் 
 குழந்தை இன்று  மனிதன் 
மாறும் யாவையும்  வேகமாக 
ஒன்று மட்டும் மாறவேயில்லை 
 அது ஒரு குடும்பத்தின்  சொத்துக்கள் 
 வழக்கு வ ம்பு கணக்கு 
 என்று பல விதம் 
 பஞ்சாய்த்து   எல்லாவிதமும் 
 குறையில்லாமல்  ஆண்டுகள் 
 உருண்டோட நடக்கின்றன
 பணமும் நேரமும் உழைப்பும் 
முயற்சியும்  விரயமாக 
 யாருக்குமே எந்த நன்மையையும் 
 இல்லாமல் .

ஒரு மனிதனின்  புரியாத்தனத்தால்.

 

Saturday, August 27, 2016

அரிதிலும் அரிது.

தேடினான்  ஊசியை
 வைக்கோல்  போரில்
உறுதியாகக் கிடைக்காது
 என்று தெரிந்து.

தேடுபவனை என்ன என்னவென்று
குறிப்பது. அவன்  ஒரு  புரிந்தவனா
 புரியாதவனா  என்று நிர்ணியக்க
 முடியவில்லை.

அறியாத  கூட் ட்டத்தில்
 அறிந்தவனைக்  காண
படிக்காத குழுவில்
 படித்தவனைத்  தேடுவது  போல்.

நெறியில்லாதவர்கள் நிறைந்த
 நேர்மையின்றி  வாழும்
குழாமில்  நியாயம்
 எதிர்பார்ப்பது அரிதிலும்
 அரிது.





Monday, August 22, 2016

நகைப்புக்கு இடமாக விளங்கும் காட்சி

காக்கையும் கரைந்து
 தலை  தூக்கி  ஒன்றாக கண்ணால்
 கழுத்தைச்  சாய்த்து
பார்க்கும் கால்
அதன் பெருமை
 அதற்கே பிடிபடவில்லை.

சோளக்   கருது   பொம்மையோ
தானே அழகு என்று நினைத்து
 தலையைத்  திருப்பி திருப்பி
 காட்டும் விதம்  அதற்கே
 பெருமிதம்   என்றும் போது .


இரண்டுமே கை கோர்த்து
 போவோர்  வருவோரை
 நையாண்டி  செய்த   காலம்
 மலையேற. தற்போது
 இரண்டுமே நகைப்புக்கு
 இடமாக  விளங்கும் காட்சி
 வலித்து  வலிந்து தொடும்
 நேரம் மனவெழுச்சியை
அடக்கி சிரிக்க முடியாமல்
 தவிக்கிறார்கள்  மக்கள்.




Sunday, August 21, 2016

நிலையில்லாத மனம்

மனதில் ஒரு சலனம்
 எதற்கு என்று தெரியவில்லை
 ஏன்  என்று புரியவில்லை
 .
சடுதியில் தெளிந்து  விடுவேன்
ஏனோ  அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம்  புரட்டுகிறது.


 தளர்வடையாதவள்  நான்
 என்று இறுமாந்திருந்தேன்
 சற்று பின்னடைவு .

 நிலையில்லாத மனம்
 என்னை  ஆட்டுகிறது
 வெற்றிக் கண்டு விடுவேன்
 உறுதியாக.


Friday, August 19, 2016

நியாயம்.

வாரம் முடிந்தால் 
 ஊதியம் என்ற போது 
 மனம் நிறைந்த  
 பெருமிதம்.

மாதங்கள் உருண்டோடினால் 
ஊதிய உயர்வு  என்றவுடன் 
 மகிழவு  பெரும்பான்மையாக 
கச்சிதம்.

இவ்வளவும் முன்னே 
 நாம் செய்தது என்ன 
என்று நினைத்தால்  
 எரிச்சல்.

உதியத்திற்கு  உள்ள 
 வேலை  செய்தோமா 
 என்று  எண்ணினால் 
சலிப்பு.

இது போலே தான்  
அதுவும் என்று 
 சமமாக இருப்பது 
 தானே  நியாயம்.