Saturday, December 5, 2015

பரவலாக .

கண்டேன் சீதையை என்று மகிழ்ந்தான் 
 காணக் கிடைத் தது அவள் திரு முகம்
 குதித் தான், கொண்டாடினான் 
 ஓடினான் இராமனிடம் 
 பகிர்ந்து மகிழ்ந்தான்   செய்தியை 
 அனுமான் பரவலாக .
 
 
  

Thursday, December 3, 2015

யாருமே இல்லாமல்

கனிவான பேச்சு என்றும் இல்லை
 நேர்மையான நட த்தை எப்போதும் இல்லை
அள வான   பழக்கம் எதுவும் இல்லை
அடாவடியும்  அதிகாரமும்  வாழ்க்கை
 இன்று மறைந்தான் யாருமே இல்லாமல்   

மழை

கா ட்டிலே  மழை 
 ஏ தோ  பரவாயி ல்லை 

 நாட்டிலே மழை  
ஏதோ  ஒரு நல்லதுக்கு 

காட்டிலே கடும் மழை 
ஏனோ தெரியவில்லை 

நாட்டிலே கடுமையான மழை 
 ஏதோ  கெடுதலுக்கோ  

Wednesday, December 2, 2015

செம்மொழியாம்

செம்மொழியாம் என் தாய் மொழி
 நலிந்து போகும் விதம் சூழ்நிலை 
நைந்து போகும் விதம் இடை நிலை
செழித்து  விளங்கும் விதம் எதிர் நிலை
 அழிந்து போகாத  விதம்  உயர் நிலை
வழங்கும் விளங்கும் மொழி எம் தாய் மொழி 

மழை பெய்து

மழை பெய்து  செழிக்கும்
மழை  பெய்தும் கெடுக்கும்
 செழிப்பும் அதிகம்
கெ ட்டதும் அதிகம்
 நேற்று மகிழ்ச்சி
 மழை  பெய்ததால்
 இன்று துயரம்
 மழை பெய்ததால்
மழையின் ன் சிறப்பும்  
சீரழி ப்பும் 

கண்ணே தெரியாதவன்.

வெளிச்சம் மிக அதிகமாக
 கண் கூச்சம் மிக அதிகமாக
வெளியே செல்ல முடியாமல்
 உள்ளே இருந்துக்கொண்டே
 உற்று உற்று நோக்கினான்
 கண்ணே தெரியாதவன். 

Tuesday, December 1, 2015

சாதரணமாகவே தெரிந்தது

ஒரு வெளியே செல்லுதல்
 பெரியது ஒன்றுமில்லை
 வெகு நாளைக்குப பிறகு
 சென்றது ஒரு கூச்சம்
செல்ல ஒரு தயக்கம்
 சென்றேன் மெதுவாக
 பெரிய வேறு பாடுஇல்லை
சாதரணமாகவே தெரிந்தது