Tuesday, March 31, 2015

கொடுப்பினை யை நினைந்து

மண் வாசனை  ஈர்க்க
 வாசலில் நின்றேன்
கரு முகில  சூ ழ
வானம்  இருள
 குளிர் காற்று வீச
 சொட்டு சொட்டாக
மழை  வடிய
வெகு நாட்கள்
 தவம் கை கூட
மகிழ்ந்து நின்றேன்
 இயற்கையின்
 கொடுப்பினை யை
 நினைந்து 

சாடி நோக வைப்பது

கோபமும் தாபமும்
 செல்லும்  இடம் தான்
எல்லா இடத்திலும் அல்ல
 கண்ணிலே குரோதம்
 சொல்லிலே எரிச்சல்
 திருப்பும்  அடிகள்
 யாதும் யாவும்
 ஒரே நோக்கில்
 காரணம்  புரியாமல்
சாடி நோக வைப்பது
 எதற்கோ? 

Monday, March 30, 2015

எழு பத்து ஆண்டுகளாக

வரவிலும் செலவிலும் கணக்கு
 வரவு தன  தம்பியிடமிருந்து
 செலவு தனக்கும் தன மக்களுக்கும்
 கணக்கு முடிந்தது அவனுக்கு
எழு  பத்து ஆண்டுகளாக

ஆனந்தத்தையும் கவலையும்

பாடலிலே இன்பம்
 கு ரலிலே துள்ளல்
பார்வையிலே  மினு மினுப்பு
கண்டேன் மகிழ்ந்தேன்.


பாடலிலே  சோகம்
குரலிலே தொய்வு
 பார்வையிலே தளர்வு
கண்டேன் துணு க் குற் றேன்.

பாட்டிலே கண்டேன்
ஆனந்தத்தையும்  கவலையும்
குரலில் கண்டேன்
 விகிதமான விளைவுகள.

காட்டிக் கொடுத்து விடும்
கண் களும்   குரலும்
கண்ணீரிலும்  கலங்களிலும்
விக்கலிலும்  தொக்கலி லும்.


இன்பமும் துன்பமும் மாறி மாறி
 சிரிப்பும் அழுகையும் திரும்பத் திரும்ப
வந்த நேரத்தில் சற்று நிற்காமல்
 வந்து போய் க் கொண்டிருந்தன


Sunday, March 29, 2015

வாழ்கிறேன் வாழ்வதற்காக

மனதிலே ஒரு வெறுப்பு
 மனதிலே ஒரு சலிப்பு
 என்ன தான் செய்தோம்
 என்ன தான் செய்யவில்லை
 இருந்தாலும் ஒரு நெருடல்
 எவ்வளவு நாள் என்ற  ஒரு நொடிப்பு
எத்தனை   எத்தனை என்ற ஒரு கடுப்பு
 இருந்தும் வாழ வேண்டிய  சூ ழல்
வாழ்கிறேன்  வாழ்வதற்காக !

பொ ட்டு வைத்த முகம்

பொ ட்டு வைத்த முகம்
இன்று  காண்ப் தில்லை
 காலணா அளவு
நல்ல சிகப்பு
  வட்ட வடிவு
குங் குமம்  நிறைய
செம்மை நிறைந்த
 முகம் எவ்வயதிலும்
நாணம் படர ,
 மதிப்பு மிக்க வரை
 காண்பது அரிது
 கண்டேன் இன்று
ந ம்முரில் இல்லை
 கனடாவிலும்.ஆஸ்டேரே லியாவிலும்
 அமெரிக்காவிலும்  எங்கு சென்றாலும்
அவள் முகத்தில்   மிளிரும் குங்குமப் பொட்டை 

தாமரை மணாளன்

யோகங்கள் பெற
 யாகங்கள் வளர்த்து 
 வயது கூட
 அர்ச்சனைகள் செய்து
 பீடை கழிய 
 ஆடைகள் கொடுத்து  
 அட்டாகசமாக வாழ
 அன்னதானம் அளித்து
 வாழ்வில் சிறக்க 
 தர்மங்கள் செய்து 
வாழ்ந்தான்   தாமரை மணாளன் 
 மனம்  முழுக்க   கெட்ட எண்ணம் 
செய்கைகள் யாவும் கெடுதி 
ஒன்றை ஒன்று  நிறைவு செய்ய 
 பட்டென்று  போனான் 
 வயதாகாமல், யோகம் பெறாமல்,
பீடை கழியாமல்   தாமரை மணாளன் .

Friday, March 27, 2015

மருகுகிறேன்

பாடிக் கொண்டிருந்தேன்
குரல் கம்மியது
மேல் நிலையில்   எட்ட முடியாமல்
 சறுக்கியது  நழுவியது
 முயன்றேன்  பல முறை
 அடைய முடியவில்லை
 எளிதாக  மேலும் கீழு ம் சென்ற  குரல்
இன்று பாதியிலே நிற்கிறது
 தள்ளாடுகிறது கட்டாயமாக
 மருகுகிறேன் பாட முடியாமல்

Thursday, March 26, 2015

மா பாவிகள்

ஊருக்கு அவன் உபகாரி
 பங்குடையவனின்  பாகத்தை
 கணக்கு ஏதுமில்லாமல்
 அநுபவிக்கும் மா பாவி

அவனுக்கு ஒரு தம்பி
 அருள் வாக்கு சித்தன்
என்று அ டை மொழி
 நக்கலாக   அவனுக்கு


உபகாரிக்கு ஒரு மனைவி
பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு
தனனை தானே புகழ்ந்து கொண்டு
 திரிகிறாள் தட்டுண்டு போனதை மறந்து

அருள் வாக்கு சித் தனுக்கு
ஒரு மனை வி பல துணைவிகள்
 இங்கு இரண்டு  ஆண்  மக்கள்
அங்கு பல மக்கள்

 உபகாரிக்கு மனதில்
 ஏறவில்லை  படிப்பு
சித்தனுக்கோ  படிக்க
 படிக்க படிப்பு. பலமுறை


அரை குறைப் பேச்சு ஒருத்தனுக்கு
வல்லினம் மெல்லினம்  இல்லா
எ ழுதும் வழி  மற்றவனுக்கு
செம்மையுடன் இவ்வாறு
வாழ்கிறார்கள் அண்ணனும் தம் பியும்
 மற்றவர்களின் வாயிலே  கிடந்தது.


Wednesday, March 25, 2015

குடும்பம் நடத்து கிறான் கோலாகலமாக

கை அகல  வீட்டில்
முழு அகலத்திற்கு
 அடைத்துக்  கொண்டு
 வாழ்கிறான்
 அரை நிர்வாணமாக
  நாகரிகம்  சற்றே இல்லாமல்
 நாசூக்கு என்பதே இல்லாமல்
 காட்டுக் கத்தலும்
திருட்டு  முழியுமாக
 இரு  பத்து  ஆண்டுகளாக
 வாழ்கிறான்
 மற்ற பங்குகாரர்களை
 மறுத்துப் புறக்கணித்து
 ஆனந்தமாகக்   குடும்பம்
 நடத்து கிறான்   கோலாகலமாக 

Tuesday, March 24, 2015

படியாதவ்னும், செவிடியும்

வீடு அகலத்திற்கு
 அடைத்து வாழ்கிறாள்
 ஆண்டாண்டாக
 அவன் முகப்பிலும்
 முதல் கட்டிலும்
 ஒரு நான்கு முழ வேட்டியுடன்
 மேல் சட்டை இல்லாமல்
 அவள் அடுத்தக் கட்டில்
 அடுப்படியிலும்  நடை பழக
 மகனோ அரை குறை பேச்சுடன்
  சாதா மென்று கொண்டு
 குறுக்கும் நெடுக்குமாக
 வளைய வர
 எங்கு இருப்பது
 பொது விட்டிலே
 வாழ்கிறார்கள்
 படியாதவ்னும்,
 செவிடியும்


தாமரை Vs அல்லி

அல்லி மலர் பூத்தது
 தாமரை யினூட
 மந்தகாசமாய் சிரித்தது
 தாமரையைப்    பார்த்து
உன் அழகுக்கு நான் போட்டியா
 என்றது இறுமாப்புடன்
 தாமரை புன்னகை வழிய
 சொன்னது  மெது வாக
உன் அழகு   ஒர் அற்புதம்
செழுமையும் செல்வாக்கும்
 ஒருங்கே கண்டேன்.
 என்னிடம் என்ன இருக்கிறது
 நான் நீர் தேங்கா இல்லை மேல்
 பூக் கிறேன்  மிதக்கிறேன்
 அவ்வளவே
 என்னயும் உன்னையும்
 ஒப்பிப் பார்ப்பது
 சரியே இல்லை  
நீ தான் ஒப்பற்ற அழகு
 நான் ஒரு மிகச்  சாதாரணம்
உள்ளது போல் இருக்கிறே ன்
என்று அமைதியாகக் கூறி யது.
அடக்கம் எங்கும்  பரவும்.
 அடங்காமை ஆரிருள்
உய் த்து விடும்


ஓடுகிறது மனம்

மனதை ஒருமைப் படுத்து
 என்கிற போது  தான்
மனம் ஓடி பாய்கிறது
 எங்கு  எங்கு என்று
இல்லாமல்
இலக்கே இல்லாமல்
வளை ந்து  வலிந்து
புகுந்து ஊடுருவி
 எங்கு செல்கிறதோ
 கட்டுப்படுத்து
 என்ற போது தான்
 வெருண்டு துள்ளி
 ஓடுகிறது மனம்

Monday, March 23, 2015

குறை என்றால்

குறை என்றால் எதிலும்
எ ளிதில்  கண்டு பிடிக்கலாம்
 சிறியதும் பெரிதுமாக
பிறப்பிலிருந்து  சாவு வரை
 துரு வி துருவிக்  காணலாம்
பிறந்த குழந்தைக்கு
 என்ன என்று கூடத் தெரியாது
 செத்தவர் வர்களுக்கோ
 எதுவும் தெரியப் போவதில்ல
  உயிரோடு இருப்பவர்கள்
 குறை கண்டு சண்டை
 பிடித்து பேச்சை  தவிர்க்கிறார்கள்
 

Friday, March 20, 2015

சொல்லிச் சொல்லி

நல்லதுக்கு த் தான் சொல்கிறேன்
 உன்னுடைய நல்லதுக்குத் தான்
என்று சொல்லிச சொல்லி
 செயல் பட விடாமல்
எதுவும் தெரியாத
பேதையைப்  போல
 எதுவுமே புரியாத
 மடந்தையாக
 ஆகிப் போனாள்
 என் அருமைத் தோழி
 மாறிப் போனாள்
 அறிவான சிநேகிதி
 சுறுசுறுப்பும்  சூட்டிகையும்
 நிறை ந்த    பெண்
 இன்று மக்காகிவிட்டாள்
சொல்லிச் சொல்லி

பேச்சும் செயலும்

கடிக்கிற நாய் குலைக்காது
 தெரியாமல் திருப்பி  போட்டேன்
 குலைக்கிற நாய் கடிக்காது
 இரண்டும் பொருத்தம்  தான்
இது  செய்தால் அது செய்யாது
 அது செய்தால் இது செய்யாது
 இரண்டும் ஒருங்கே செய்யும்
 நாயை காண்பது அரிது.
 மனிதனே பேசுபவன் பேசுவான்
 காரியம் செய்யான்
 தெரிந்தது தானே
 பேச்சும்  செயலும்
 பாங்குற  அமைந்தவன்
ஒரு சிலரே .

கண்ட வீ ரியன்

கண்ட வீ ரியன் கத்தினான்
 காது செவிடாகும்படி
 கண்டவனெ ல்லாம் பேசுகிறான்
 கண்டதையும் பேசுகிறான்
கண்ட வீ ரியன்  பல்லைக் கடித்தான்
கடுமையாகச் சாடினான்
 கட்டவிழ த்தக் கோபத்தில்
கைத் தூக்கி அடிக்க  விளை ந்தான்
 அடிக்கும் போது நினைவிழந்தான்
 கண்ட வீ ரியன்

வாழ்ந்து காட்டு மகனே

இன்று இருப்பது நாளை  இல்லை
நாளை உதி ப்பது மறு நாள் இல்லை
 தற்காலிகம் யாவும் என்று கொள்
இன்று ஒரு அறிவிப்பு கோ லாகலாமாக
 நாளை ஒரு மறுப்பு விரோதமாக
 உறு தியில்லாதது   வாழ்க்கை
 வாழும் வரை   நேர்மையாக
 வாழ்ந்து காட்டு மகனே  

Thursday, March 19, 2015

கூலியாக அளந்தான்

கள த்து  மேட்டில் நின்று
 போரடித்தான் கண்ணன்
நெற்  குவியலை  கண்ட
 பெருமிதத்தோடு குவித்தான்
கண்ணன்  ஒரே  அளவாக
விளைச்சல் நன்றாகவே என்று
 நினைத்து விம்மினான்
 கண்ணன் மகிழ்ச்சியாக
 கண்ட பலனை
 கூலியாக அளந்தான்
 கோவிலுக்கு  கொஞ்சம்
 வண்ணானுக்கு கொஞ்சம்
 கொஞ்சம்  தொட்டிக்கு
 என்று அளக்க
 கொஞ்சம்  கொஞ்சமாக
 குறைந்தது நெல்
 மிஞ்சினதா கண்ணன்
 எதுவும்.?

Wednesday, March 18, 2015

ஆத்திரபடுவது

சிறுகச்  சேர்த்து
 பெரு  வாழ்வு
சிறு துளி
 பெரு  வெள்ளம்
 மூர்த்தி சிறிது
கீர்த்தி  பெரிது
 என்று சிறிது
 மிகப் பெரிதாக
 தோன்ற
சிறியவனுக்கும்
 அறிவு  மிகுதியாக
 இருக்க முடியும்
என்று எண்ணு வதே
சிறப்பாகும்
ஆத்திரபடுவது
அழகு ஆகாது


இராமாயணக் காவியம்

இராமயாணம் வால்மீ கியின்  ஆதாரம்
 கதையைச்  சொன்னான் வால்மீகி
 நடந்தததை அவ்வ்வாறே

மெருகு  சேர்த்தான் கம்பநா  ட்டான்
 எதுகையு ம் மோனையோடு
இனிமை வழிந்தோட.

தந்தை சொல்  மிக்க மந்தி ரமில்லை
 தனயன் இராமன் சென்றான் காட்டுக்கு
 தம்பியுடனும் மனைவியுடனும்.


நேற்று அவனுக்கு மூடி சூ ட்டுதல்  என்ப
 இன்று அவன் கானகத்துகுச்  செல்ல
 நிலையாமை நம்மை நிலைகுலைய வைக்க


இராம  காதை  தன அடுத்த   பகுதி தொடங்க
 அறிவது மிகுதி மனிதனின் மனம்
செல்லும் விகுதி அறியாமையை   நோக்கி.

கைகேயின் வரங்கள் மந்தரையின் தூண்டுதல்
 தசரதனின் காதல் கௌ ல்யையின் தவம்
 இராமனின் பலம் யாவும் நெகிழ்ந்து  தொடர

 இராமாயணக் காவியம்  உலகின்  நிகழ்வை
 மானுடனின் இயல்பை நிலவும்   நிலயற்ற
ஆக் கரிமப்பை   வெளிக்  கொணரும் விதமே அலாதி
 

தலை வணங்கினேன்

 மலையைக் கண்டேன் 
 சிகரம் நோக்கினேன்
 ஆதியும் அந்தமும் 
 இல்லா அருட் செல்வம் 
 போல் தோன்ற 
மலைத்து நின்றேன்
 அதன் பரப்பளவைக்  கண்டு 
 கண்ணை வீட்டு அகல மறக்க  
கூவினேன்  பெரிய குரலெடுத்து 
 உன்னின் அழகுக்குக் காரணம் என்ன?
 மலையோ என்னைப் பார்த்து  மெல்ல சிரிக்க 
 அதிக ஒலியுடன் மேலும் குரல் எழுப்பினேன் 
 எ வ்வளவு காலமாக  நீ  இங்கு நிற்கிறாய்?
மலை தொடர்ச்சியோ மீண்டும் பாங்குற புன்னைகைக்க 
 அசந்து நின்றேன் அதன் மேன்மையை  அறிந்து 
 அமைதியும் அடக்கமும் ஒருங்கே இணைய 
 பெருமையும் பேருவகையும் ஒன்றே அமைய 
 பெரியார்களின் மாட்சிமையை எண்ணி 
 தலை வணங்கினேன்  மலையின் அடிவாரத்தில்.


  

Tuesday, March 17, 2015

மகிமை

இறைவன் உன்னுள் இருக்கிறான்
 எங்கும் தேடாதே
 உன்னுள்ளே தேடு
 தெரியு ம் உனக்கு
 அவனின் வெளிச்சம்
 தெளிவாகத் தெரியம்
 அவன் குணம்
 கண்டுபிடி  கவனமாக
 அவனின் மகிமை
 உன்னுடைய உண்மையில் 

வேகம் விவேகம் இல்லை

சொன்னவள் லெட்சுமி
 தனக்கு நி கர் தானே
 ஓர்  இடத்தில் நில்லாள்
ஒரு நிலையில் இல்லாள்
 சாதா ஓடிக் கொண்டு
 ஏதோ  தன்னை  விட்டால்
 ஆளில்லை என்று திமி ரிக் கொண்டு
வேகம்  வேகமாகத்  திரிகிறாள்
 வேகம் விவேகம் இல்லை
 என்று அறியாமல்
செல்கிறாள் லெட்சுமி.


Monday, March 16, 2015

சரியாக வராது

சொன்னாள்  லெட்சுமி
கெட்டிகாரத்தனம்  
சரியாக வராது என்று 
எவளாது   சொல்வாளா 
 அறிவைக்  குறைத்து 
லெட்சுமியின் 
 மதிப்பு அவ்வளவே 
 சூ ட்சமம்  நல்லதல்ல
சாமர்த்தியம்  கெடுதல்  
  கேள்விபட்டிருக்கோமா 
 தெரிந்து கொள்ளுங்கள் 
 லெ ட்சு மியிடமிருந்து 

கெடுதல் செய்தவன்

கெடுதல் செய்தவன்
 கெடுதலையே அடைவான்
கேடு நினைப்பவன்
 கேட்டை அனுபவிப்பான்
இது நான் சொல்வதில்லை
காலம் காலமாக வருவது
அறிந்து  கொள்ளாதவர்களை
என்னே என்று சொல்வது 

Sunday, March 15, 2015

அர்த்த நாரியைப் போல

பாதி தூக்கம் பாதி விழிப்பு
 என்ற கண்  துடைப்பு
பாதி நினவு பாதி மறதி
என்ற நாடக நடிப்பு
பாதி பொய் பாதி மெய்
என்ற வாழ்க்கை விரிப்பு
பாதி செயல் பாதி தள்ளுபடி
என்ற வளர்ச்சிக்  குறிப்பு
 பாதி ஆண்  பாதி பெண்
என்ற அர்த்த நாரியைப்  போல   

காலிலே சக்கரம்

காலிலே சக்கரம்
ஓடுகிறான் அங்கும் இங்கும்
ஓய்வு என்பதில்லை
 எதிலும் ஒரு அவசரம்
 இதைச்  செய்வான் என்று
 நம்ப முடியாது
அதை முடிப்பான் என்று
எண்ண  முடியாது
அரைகுறையாகவே
விட்டு விடுவான்
 யாவற்றையும்
இருப்பினும் ஓடுகிறான்
 எதையோ சாதிக்கப்
 போவது போல்.


கண்களி ன் வழியாக

சென்ற பொழுது கண்டேன்
 பெரிதும் சிறிதுமாக
 ஒரு மனிதனின் பார்வையை
 கண்களே மனதின் கண்ணாடி
 அன்பைக்   காண  முடியும் ஒரு நோக்கில்
கண்களில் ஒரு கனிவு  தெரியும்
 பண்பைக்  கண்டு பிடிக்க முடியும்
 கண்களின் வழியாக ஒரு ஆதரவு
கோபத்தை அறிய முடியும்
 கண ல் தெறிக்கும் விழிகளிலே
கண்களின் வாயிலாகத்   தெரிய வரும்
ஆத்திரமும்  அதிகாரமும்
 கண்களி ன் வழியாக  வாயில் திறக்கும்
கூடவோக் குறைவாகவோ

Friday, March 13, 2015

வாழ்கிறான் அவனும்

வாழ்கிறான் அவனும்
 ஏமாற்றிக்   கொண்டே
 அறியாதவன் அவன்
என்பது அறிவு   சற்றும்
 இல்லாதவன் என்றே கொள்
ஏமாற்றுபவன் எவ்வாறு \
அறிவில்லாதவனாகி  இருத்தல்
 என்று நீ விழி க்கலாம்
 அது  அப்படியே
 கணக்கு பொய்
 வழக்கு வெட்டி
 நாணயம்  இல்லை
 நன்றி இல்லை
 இல்லை என்பதை அடுக்கலாம்
அவனிடமும் உண்டு  சில
 அரைகுறை  பேச்சு
 அடித்துப் பேசுவது
 திருட்டு  அமோகமாக.
வாழ்கிறான் அவனும்
 இப் பூவியிலே

Thursday, March 12, 2015

சம அறிவு சம நிலைமை

வளர்ந்தேன்  செல்வத்தில்
கடும் சொல் கண்டறியேன்
 பள்ளியில் சிறந்த மாணவி
 கல்லூரியிலும்   அவ்வாறே
 புகுந்த இடத்தில்
 தேவையில்லாப்    பேச்சு
வன்மம் மிகக் கண்டேன்
 பொறுத்துக் கொண்டேன்
 என் குழந்தைகளுக்காக
 சம அறிவு  சம நிலைமை
 இருந்தால் கவலைக்  கொள்ள  வேண்டும்
 எதுமே இல்லாத போது
 ஒதுங்கி ஒதுக்கி வாழ
 பழகிக் கொண்டேன் 

Wednesday, March 11, 2015

செயலற் றவள்

நான் ஒரு செயலற் றவள்
 செயல் திறன் இல்லாதவள்
 என்று நினைகிறார்கள் சிலர்
 செய்வதை சொல்வதில்லை  நான்
செய் ததையும்   சொன்னதில்லை
 முடிந்ததை முடித்துக்கொடுத்து
 முடியாததை தவிர்த்து வாழும்
 என்னை ச்செயல ற் றவள்
 என்கிற போது   மகிழ்வு  அடைகிறேன்
 என் செயலாக்கத்தை எண்ணி.

பூக்காரி

பூக்காரி வந்தாள்  தினமும்  
பூக்  கொடுத்தாள் சில தினம் 
பணம் கேட்டாள்  பல தினம்  
 வாங்கினேன் பூ சரத்தை
 கொடுத்தேன் தொகையை   
பின் பூவைவிட பானம் அதிகம் கேட்டாள் 
பாவம் என்று எண்ணி கொடுத்தேன் 
அதையே வழக்கமாகக் கொண்டாள்
 பார்த்தேன் சரியாகத் தோன்றவில்லை 
 நிறுத்தினேன் பூ வாங்குவதை அவளிடம் 
 உதவி சில நேரத்தில்  தொல்லையாகி விடும்   

செய்தி ஒன்று சொன்னான் சேதுராமன்

செய்தி ஒன்று சொன்னான்  சேதுராமன்
சேர்த்துச் சொன்னான்  சேது
 குறைய அல்ல நிறைய வே அடுக்கினான்
சொல்லும் போது து விசனப்பட்டான்
 அதே நேரம் சிரிக் கவும் செய்தான்  சேதுராமன்
பாவனையும் செய்தியும் பொருந்தி வர
 நாடகமாகவே நடித்துக் காட்டினான் சேது
 இராமர் கதை போல் நீண்டு
 அனுமார் வால்   போல் நீளமாக
 இலக்கியம் படைத்தான் சேதுராமன்
 இராமன்  பாலம் அமைத்து இலங்கை சென்றான்
 சேது ராமனோ  சொற்களால் இணைத்தான்
 மொடடை த் தலையையும்  முழங்காலையும்
கேட்க நன்றாகவே இருந்தது
கேட்டேன் முழுவதையும் இணக்கமாக

Tuesday, March 10, 2015

பரிணாமம் கண்டேன்

ஆறிலும் அழகு 
 அறு பதிலும் அழகு 
 வயது கூடக் கூட
அழகு மிளர
 வயது ஏற ஏற 
 மனம் மிளர 
 வயது போகப் போக   
அறிவு  மிஞ்ச 
 வயதும் அனுபவமும் 
 ஏறக்குறைய  வளர 
அழகும் அறிவும் 
 முழுமை அடைய 
 ஒரு மேலான 
 பரிணாமம் கண்டேன் !
 


ஆறு மருமகளும் அழகு

ஆறு மருமகளும் அழகு
 பெரியவள் இரண்டுக்கும் இடையில்
 அழகுக்கும் பொறுமைக்கும்
 இரண்டமவளோ   குமரி  போல
 சிரிப்பும் சிணுங்கலும்
 கமலம் போன்ற மூன் றாமவள்
 செந்தாமரை மலர் ஒத்தவள்
 அமர்த்தலான் அழகு  நாலாவதாக
 வந்த பெருங்குடு ம் ப ப் பெண்
 அறிவ சால் தகைமையு டன்
 அட்டகாசமாக  பேசும்  அடுத்தவள்
 அழகுக்குச்  சிகரம் என்று பெருமைக்
 கொள்ளும்  ஆக இளையவள்
 என்று பெருமிதம் கொள்ளும்
பிள்ளைக் குட்டிக்காரக் குடும்பம்
கண்டேன் அடிக்கடி  பல முறை
 வியந்தேன் தற்பெருமையைக்  கண்டு.


   

நினைந்து நினைந்து

தந்தையும் தாயும்  ஒரு நேரத்தில்
மனைவியும்  பிள்ளைகளும் சில நேரத்தில்
மனிதன் தனக்குத் தானே எல்லா நேரத்திலும்
நினைந்து நினைந்து  வாழ வகை காணின்

Sunday, March 8, 2015

எங்கு கேடபது

பாட்டைக் கேட்டேன்
 பாட்டு என்றவுடன்
 இசை என்று கொள்ளாதே
 இசை மட்டும் அல்ல
  வயிற்றுப் பாட்டு
 முதலில் தோன்ற
 அறிந்தேன் பலரின்
 துன்பத்தை   வயிற்றுக்காக
 அலையும்  பாடு
 உழைக்கும்  பாடு
 நினைத்துத்  துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
 நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
 கண்ணிர்  தளும்பும்
மேற்கொண்டு
 மன வேதனை  அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
 உறவுகளால்  சொத்தால்
பேச்சால் அடையும் வலி
 சொல்லி மாளா
 இவ்வளவும் தரும்
 துயரம்  கணக்கிலடங்கா
 பாட்டும் இசையும்
 எங்கு கேடபது
வெல்வாய் உறுதியாக

படிக்கும் எண்ணிக்கை குறைவு
 படிப்பார்கள் ஒரு  முறை
 எண்ணம் நன்று
எண்ணுவது நல்லதல்ல
 படிப்பார் படிக்கட்டும்
 கவலைக்   கொள்ளா தே
 எழுத  நினைத்ததை
 அழ்காக  நயமாக எழுது
 வெல்வாய் உறுதியாக 

மகராசி மாதரசி

தோடும்  கண்டசரமும்
முக்குத் தியும்    வளை யலும்
 காஞ்சி பட்டும்   கொண்டைப்   பூவும்
 புன்சிரிப்பும் குங் குமப்  பொ ட்டும் 
 மங்கள நாணு டன்  வந்தமர் ந்தாள் 
 மகராசி மாதரசி லெட்சுமிகரமாக 
 ஒரு பூச்சு இல்லை  ஓர் அலங்காரமும் இல்லை 
ஒரு அதிக அலட்டலும் இல்லை 
 யதார்த்தமாக இயற்கையாக 
தோற்றமளித்தாள்   பெண்ணரசி .
 வியந்தேன் அவளைக்  கண்டு 
 கைக் கூப்பி னேன் பரவசத்துடன் 
அவளின் அடக்கத்தைக்  கண்டு  
படிப்பில் மேதை  எழுத்தில்  தெளிவு 
கருத்தில் சிறப்பு கவிதையின் உற்று 
 இருப்பினும் ஒரு அவையடக்கம் 
 கண் கொள்ளாக்  காட்சி 
கண்டேன் பிரமிப்புடன் .

Saturday, March 7, 2015

அன்று மலர்ந்த

 அன்று மலர்ந்த மலரும்
அன்றே செய்த உணவும்
அன்று நடந்த நிகழ்வும்
 அன்றே முடிந்து விடும்
மலர் வாடிப் போகும்
உணவு சலித்துப்  போகும்
 நிகழ்வு  மறந்து போகும்
அப்போதைக்கு அப்போது
தோன்றி மறைந்தது விடும்
நினைவில் நிற்கா

சாதா வட்டி அல்ல

வட்டி வாங்கி வாழ்கிறான்
 சாதா வட்டி அல்ல
  தடி வட்டி அநியாயம்  என்பது
மிகக்  குறைவு அதற்கும் மேலே
 சொல்லத் தெரியவில்லை
வட்டிலிலே உண்ணும் போ து
 வட்டி பளிரென்று தெரியவில்லையா
 கட்டிலேலே உறங்கும் போ து
வட்டி கடுகளவும் குத்தவில்லையா
வண்டியிலே பயணிக்கும் போது
வட்டி வம்பாகத்  தெரியவில்லையா
 வட்டி வட்டி என்று அலையும் போது
 வடிக்கும் கண்ணீரைக்  காணவில்லையா
 மாளாத வட்டி பாழாகப் போக
 அடங்காத ஆசை பொசுங்கிப் போக
 வட்டி வாங்கும் தேட்டாளன்
ஆரவாரித்து நிற்கிறான் குதுகாலமாக.

Thursday, March 5, 2015

தறி கெ ட்டு

வாய்க்கு வந்ததைப் பேசுகிறான்
 வரம்பு க்குள் இல்லை
 முறையாக இல்லை
 சினம் கொண்டு சீறி விழுகிறான்
 மனம் ஒரு நிலையில் இல்லை போலும்
 கறுக்கச் சிவக்கப் பார்த்து
 உருட்டி உருட்டி  விழி கள் பிதுங்கத்
திரிகிறான் தன்னோத்துப்   போ கிறான்
 தன் போல் தறி  கெ ட்டு அலையும் மனிதர்களுடன்


வாழ்க்கை முறை

நடிப்பு எதிலும்
 நகாசு எதிலும்
 பசப்பு எதிலும்
 பகடை எதிலும்
ஆழம் இல்லாத  படிப்பு
ஆழந்து  கருதாத  கருத்து
 மேலெ ழு ந்த  பேச்சு
 இதவே வாழ்க்கை முறை
என்று ஆகும் போது
 அதை  நடை முறை
  படுத்துபவர்களை
 நோக்கின் மனம்
 வெதும்புகிறது.

நக்கிரன் யாரென்று

நன்றி யாருக்கு?
நக்கீரனுக்கு எதற்கு
 தமிழ் நெறிக்கா
 வழி  முறைக்கா
அவன் நேர்மைக்கா
 சீறுகிறான் பெரும் புலவன்  
காயப் படுத்துகிறான் இராமன்
நக்கிரன் யாரென்று அறியாமல்
புலப்படும்  உண்மை ஒரு நாளில்
ஓடுவான் தலை தெறிக்க இராமன் 

Wednesday, March 4, 2015

இராமனாகவோ சுப்பனாகவோ

காரியம் இல்லாமல்
 தட்டு தூக்க மாட்டான்
 விவரம் இல்லாமல்
 வால்  பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
 சாதுர்த்தியம்  நிறைந்தவன்
தன்  வேலையே குறி
பணமே வெறி
 அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
 சுப்பனாகவோ   இருக்கலாம்


சொல்லவொண் ணாச் சிறப்பு

மூம்மொழி  கற்றேன்
 ஆங்கிலத்தில் கல்வி
 தமிழோ தாய் மொழி
 பிரெஞ்சோ  அடுத்த மொழி
 மூன்றும்  அழகு
 செம்மொழி கள்   என்று கண்டு
 உலக மொழியான ஆங்கிலம்
பழந்தமிழும்  அதன்  இலக்கணமும்
பிரெஞ்சும்  அதன் இனிமையும்
ஒன்றுடன் கோர்த்த  சரமாக
பொருந்தி உட்படுத்தி
 என்னை  வழி  நடத்தும் பாங்கு
 சொல்லவொண் ணாச்    சிறப்பு
 அளவிடமுடியாத  மகிழ்வு


Tuesday, March 3, 2015

நிற்கிறேன் சிலையாக

எல்லாமே ஓரு நிலையில்
முன்னும் போக முடியவில்லை
 பின்னும் சரிய முடியவில்லை
 ஏன்  இந்த நிலை?
 தெளியத் தெரியவில்லை
சட்டெ ன்று  புரியவில்லை
 நிற்கிறேன் சிலையாக.

Sunday, March 1, 2015

கட்டாயம் என்று

கட்டாயம்  என்று சொல்லப போக
கடினமாகத்  தோன்ற முயலும்
கடினம் மேற்கொண்டு  இடையூறாக
இடையூறு  ஓர் இயலாமையாக மாறி
 நடப்பதே  உறுதி யி ல்லாமல் விலகி விடும்
 திணிக்க  நினைக்காமல் எடுத்து இயம்பி
முடிவைக் காண விழைதல் சிறப்பு