Thursday, December 31, 2015

என்றும் போல்

என்றும் போல் இன்றும் விடிய
என்றும் போல் கதிரவன் தோன்ற
என்றும் போல் விழித்தெழுந்து
 என்றும் போல் நீராடி
என்றும் போல் உண்டு
என்றும் போல் உடுத்தி
என்றும் போல் அயர்ந்து
 என்றும் போல் உறங்கி
 என்றும் போல் இ ன்றும் முடிய.

வரவு 2016

வரவு 2016
 செலவு 2015
 இலாபம் 1
 ஆகா என்ன
கண்டுபிடிப்பு
 ஆண்டு தோறும்
அவ்வாறே
இலாபம் தான்
 நம்பிக்கை
 நல்ல ஆராய்ச்சி தானே  

கேட்டாள் செவந்தி

கேட்டாள்  செவந்தி கேள்விகள் பல
 கேட்பாள் அவள் எப்போதும்
 தன்னை நினையாமல்
தன்  நிலை மறந்து
 கேட்பாள் கேள்விகள் பல

செவந்திக்கு ஒரு சௌந்தரம்  பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
 மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா  என்ன என்ன
 கேட்கிறாள் தொடர்ந்து

சௌந்தரம்  சொல்கிறாள்  எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
 மேகலா  முதலில் வருந்தினாள்
 மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண  நிகழ்வே.

தமிழ் மொழி

பால் ஓடும் ஆறு பாலாறு
 தேனும் பாலும்  கலந்து
 பாய் ந்து ஓடும்  ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
 நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.

Sunday, December 20, 2015

மாறு வது இயல்பு

காலை எழுந்தவுடன் படிப்பு
 என்று பாடினான் பாரதி
இன்று நிலை  மாறி விட 
 குழநத்தைகள்  கையில்
 கணினி , அலை பேசி
 அதில் விளையாட்டு  
 காலை  முதல் இரவு வரை
 காற்றோட்டம் காணவில்லை
 வெயிலும் நிழலும் அறியாத
 விளையாட்டு கையிலே 
 என்று அங் காலாயக்க  தோன்ற
 அதிலும் நயம் பயக்கும்
 காலங்கள் மாறுவது போல்
 மனிதர்கள்  மாற
 சிறுவர்களும்  மாறு வது இயல்பு


Thursday, December 17, 2015

சற்று ஏறக்குறைய

சற்று ஏறக்குறைய  தோன்றிய  எண்ணம்
 சற்று மாறுபட்டதாக இருக்கும் என்ற நோக்கம்
 சற்று நாலும்  நினைக்கும்  என்ற க்ருத்து
 முயற்சியைப்    பின்தள்ள
 நினைப்புக்கள் முடங்க
 முன்னேற்றம் காண் முடியவில்லை. 

Sunday, December 13, 2015

வெட் ப தட்பம்

மனிதன் தன தேவைக்கு
இயற்கையை  வதைத்தான்
 தானாக முடியாமல்
 சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
 கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
 தனக்கு தனக்கு என்றால்
 பதக் பதக் என்கிறதோ மனம் 

தண்ணீர்

வாழ்வின் ஆதாரம் தண்ணீர்
 வீணடித்து விட்டோம் அறியாமையில்
 காப்பாற்ற தெரியவில்லை நமக்கு
 கடலில் கலந்தது அசட்டையால்  அப்போது.

வாழ்வயே  நாசம் செய்தது  தண்ணீர்
 விதரணையாக கொள்முதல் செய்யாமல்
 திறந்து விட்டோம் அநியாயமாக
 குடித்தது உயிர்களை அடுக்கு அடுக்காக .

  

Saturday, December 12, 2015

மட்டில்லா அமைதி

காகம் கரையும் காலை வேளையிலே
 கத்றவன் தோன்றும் விடியல் பொழுதிலே
எழுந்து நீராடி தொழுது   உணவு உட்கொண்டு
 வெளியில் அமர்ந்து காட்சியை காணும் பேறு
மட்டில்லா  அமைதியு ம் மகிழ்வும்  நல்கும்

கையிலே இருப்பது

கையிலே இருப்பது கோடிக்கு சமம்
 எட்ட இருப்பது ஒரு சன்மானமும் இல்லை
 அருகிலே  கிடைப்பது மிகுதியான மதிப்பு \
தூரத்தில்   இருப்பது எப்போதுமே ஒரு சிக்கல்.

Friday, December 11, 2015

அரசாங்கத்தின் ஆணையே

கவனக் குறைவு  ஓர் இடர்
 அதிகாரத்   தொனி  பேரிடர்
 இரண்டுமே சென்னையின்
 வெள்ளத்துக்கு காரணம்
அநியாய சாவுகளும்
 அக்கிரமான்   இழப்புக்களும்
 அனாவசியமான்  இடையூ று களும் 
மனக் கலக்கமும்  அழு  குரல்களும்
 அவலங்களும்  நடக்க
 அரசாங்கத்தின்  ஆணையே வேறல்ல
இயற்கையை குறை   கூற   ஒன்றுமில்லை.


கெ ட்டு பட்டினம் போ

கெ ட்டு பட்டினம் போ
 என்பது முதுமொழி
 பட்டினம் கெட்டு விட்டது
திரும்பி ஊருக்குப்  போ
 என்பது புது மொழி. 

ஆவலோடு!

படகிலே வந்தான் பணக்காரன்
 அதில் ஒரு நாற்காலி போட்டு
 வெள்ளம் அவன் மாளிகையைச்  சூ ழ
 படகிலே பயணித்தான்  மனைவியுடன்
கைலியுடன் சென்றான் செல்வந்தன்
 வெள்ளத்திற்கு ஏழை  எளியவன்
 வித்தியாசம் தெரியவில்லை
 இவனையும் அவர்களோடு
ஒன்றாகச்  சுற்றினான்
 ஆவலோடு! 
  

Thursday, December 10, 2015

அளவுக்கு மிஞ்சினால்

கதிரவன் வந்து  விட்டான்
 மகிழ்வு தானே பொங்குகிறது
 மழை  ஒரு இனிய இராகம்
 நெகிழ வைக்கும் அழகு
 அளவுக்கு மிஞ்சினால்
 மழையும்  கசக்கும்
 வெயிலும் எரிக்கும் 

Tuesday, December 8, 2015

மனம் ஒரு நிலையில் இல்லை

மனம் ஒரு நிலையில் இல்லை
 அதிக துணிச்சல் சில நேரத்தில்
மிகுதியான பயம் சியல் நேரங்களில்
அமைதிப்படுத்த   முடியவில்லை
 நினைத்து நினைத்து வழி  தேடுகிறேன்
 கிட்டும் என்ற நம்பிக்கையுடன்

Monday, December 7, 2015

அழிவு திண்ணம்.

தீ என்றால் வாய் வெந்து விடு மா ?
 நெருப்பு என்கிற போது து ஒரு பயம்
நீர் என்றால்  உதட்டிலே ஒரு சிரிப்பு
 தண்ணீர் என்றாலே ஒரு மகிழ்ச்சி
தீ அழிப்பது வேகமாக  ஒரே பொழுதில்   
நீர் இழுப்பது பல விதத்தில்
இரண்டுமே மிகுதியானால்
அழிவு திண்ணம். 

Sunday, December 6, 2015

அவனின் சொற்கள்

கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல்
கனல் தெறிக்கும் அனலைப் போல்
பொதியாக கொட்டும் பனி யைப் போல்
 அவனின் சொற்கள்  வெகுவாகப் பாதித்தன்
 சுட்டன எரித்தன உருக்கின பலவாறாக
விறைத்தன் நிமிர முடியாமல்.  

Saturday, December 5, 2015

எனக்கு மட்டுமா ?

கண்டதும் பொய்
கேட்டதும் பொய்
பிறந்ததும் பொய்
  வளர் ந்ததும் பொய்
 வாழ்ந்ததும் பொய்
 இறந்ததும் பொய்
 எனக்கு மட்டுமா ?

பரவலாக .

கண்டேன் சீதையை என்று மகிழ்ந்தான் 
 காணக் கிடைத் தது அவள் திரு முகம்
 குதித் தான், கொண்டாடினான் 
 ஓடினான் இராமனிடம் 
 பகிர்ந்து மகிழ்ந்தான்   செய்தியை 
 அனுமான் பரவலாக .
 
 
  

Thursday, December 3, 2015

யாருமே இல்லாமல்

கனிவான பேச்சு என்றும் இல்லை
 நேர்மையான நட த்தை எப்போதும் இல்லை
அள வான   பழக்கம் எதுவும் இல்லை
அடாவடியும்  அதிகாரமும்  வாழ்க்கை
 இன்று மறைந்தான் யாருமே இல்லாமல்   

மழை

கா ட்டிலே  மழை 
 ஏ தோ  பரவாயி ல்லை 

 நாட்டிலே மழை  
ஏதோ  ஒரு நல்லதுக்கு 

காட்டிலே கடும் மழை 
ஏனோ தெரியவில்லை 

நாட்டிலே கடுமையான மழை 
 ஏதோ  கெடுதலுக்கோ  

Wednesday, December 2, 2015

செம்மொழியாம்

செம்மொழியாம் என் தாய் மொழி
 நலிந்து போகும் விதம் சூழ்நிலை 
நைந்து போகும் விதம் இடை நிலை
செழித்து  விளங்கும் விதம் எதிர் நிலை
 அழிந்து போகாத  விதம்  உயர் நிலை
வழங்கும் விளங்கும் மொழி எம் தாய் மொழி 

மழை பெய்து

மழை பெய்து  செழிக்கும்
மழை  பெய்தும் கெடுக்கும்
 செழிப்பும் அதிகம்
கெ ட்டதும் அதிகம்
 நேற்று மகிழ்ச்சி
 மழை  பெய்ததால்
 இன்று துயரம்
 மழை பெய்ததால்
மழையின் ன் சிறப்பும்  
சீரழி ப்பும் 

கண்ணே தெரியாதவன்.

வெளிச்சம் மிக அதிகமாக
 கண் கூச்சம் மிக அதிகமாக
வெளியே செல்ல முடியாமல்
 உள்ளே இருந்துக்கொண்டே
 உற்று உற்று நோக்கினான்
 கண்ணே தெரியாதவன். 

Tuesday, December 1, 2015

சாதரணமாகவே தெரிந்தது

ஒரு வெளியே செல்லுதல்
 பெரியது ஒன்றுமில்லை
 வெகு நாளைக்குப பிறகு
 சென்றது ஒரு கூச்சம்
செல்ல ஒரு தயக்கம்
 சென்றேன் மெதுவாக
 பெரிய வேறு பாடுஇல்லை
சாதரணமாகவே தெரிந்தது