Thursday, October 31, 2013

சூறாவளி

காற்று பலமாக வீச
மரங்கள் பேயாட்டம் ஆட
 மாட மாளிகைகள் சரிந்து விழ
சிறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்ல
மக்கள் குய்யோ முய்யோ என்று கதற
மின்னினைப்புக்கள் துண்டிக்கப்பட
எங்கும் இருட்டு  ஒரே கும்மிருட்டு
காற்று கொடுரமாக சுழன்று சுழன்று  ஆட
அங்கு ஒரு பெரும் போராட்டமே  நடந்தது
அச்சமுடன் அதிர்ச்சியுடன் உலகம் நின்றது
செய்வதறி யமால்   திகைப்புடன்.
காற்றி ன் கோபம் தான் என்னவோ?
ஏன்  இந்த வெறி? ஏன்   இந்த வேகம் ?
அழித்து துடைத்து  நாசம்மாக்கியது ஏனோ?
மனிதனின் பேராசையும் தான்தோன்றித்தனமும்
காரணம் என்று கொள்வோமா
வெட்கித் தலை குனிய வேண்டும்
மனிதனாகப் பிறந்ததற்கு

Wednesday, October 30, 2013

சிறப் பு ற்ற மங்கை

கல்வியில் தெளிந்தாள்
கலையில்  தெளிவுற்றாள் 
கவனத்தில் தெளிவாயினாள் .

கழுத்திலே பதக்கம் அலங்கரிக்க 
கண்ணிலே  பிரகாசம்  அழகுற
கால்களிலே  பிரமாணம்  அடிக்க 


 கனிந்து பதிய  சிறந்தாள்
கணிப்பு  பரவ  சிறப்புற்றாள்
கருத்து படர  சிறப்படைந்தாள்

வளர்க அம்மங்கை
வாழ்க அம்மங்கை
பல்லாண்டு வாழ்க

என்னவென்று சொல்ல

கண் இமைக்கும் நேரத்திலே 
ஒரு கோர விபத்து 
பச்சிளங் குழந்தை கண் முட
தாயின் மடியில் தவழ்ந்த படி  
தாயோ குழந்தையை அணைத்தப்படி
மரணத்தை தழுவ 
தந்தையோ வண்டி  ஒட்டியபடியே 
நிலை தடுமாற 
வண்டியோ முட்டி மோதி 
அப்பளமாக நொறுங்க  
போவோர் சற்றுக் கூட 
உதவாமல் விரைய  
இரத்த வெள்ளத்தில் 
தாயும் மகளும்  
 துடி துடித்து சாக  
கணவனோ   நிலைக்குத்தி 
புரியாமல் நிற்க
பெருஞ சாலையில்  
நடந்த சேதத்தை 
என்னவென்று சொல்ல 

முதலும் இரண்டாவதும் முழுவதும்

 பாட்டில் பொருள் கண்டான்
இசையில் இன்பம் அடைந்தான்
நாட்டியத்தில் சுகம் விளைந்தான்
நடிப்பில் மதி மயங்கினான்
தன்னை முதலாக  இழந்தான்

வடிவில்  அழகைக் கண்டான்
விளைவுகளில்  நிம்மதி அடைந்தான்
உடல் சூட்டில்  குலாவி மகிழ்ந்தான்
வண்ணங்களி ன்  ஜாலத்தில் மயங்கினான்
தன்னை இரண்டாவதாக இழந்தான் .

கோப்பையில் ரசனைக் கண்டான்
போதையில்  தஞ்சம் அடைந்தான்
நாகரிகத்தில்  த ன்னை மறந்து கூ த்தாடினான்
நிர்ணயத்தை தன்னை   அறியாமல்  விட்டு விடடான்
தன்னை முழுவதுமாக இழந்தான்


சகுனமும் சலனமும்

காகம் கரைகிறது
 எட்டிப் பார்த்தேன்
 சாளரம் வழியே
யாரையும் காணவில்லை .

பல்லி  சொல்லுகிறது
எத்திசையில்  இருந்து
என்று நோக்கினேன்  ஆவலாக
ஒன்றும் நடக்கவில்லை .

பூனை  குறுக்கே  போகிறது
புறப்படும் போது 
வீபிரிதம் ஏற்படுமோ என்று அஞ்சினேன்
யாதொன்றும் நடக்கவில்லை

சகுனமும்  சலனமும்  குன
ஒன்றே  கூடின்
தவிர் ப்பது தவிர வழியில்லை
நமபினால்  அவ்வாறே

நம்பாவிடில்  அவற்றை
பின் தள்ளி  செல்ல
முனைவது  அழகு
பெருமையும் அது வே.


காகமும் பல்லியும் 
   கிளியும் பூனையும்
நற் செயலுக்கும் தடை க்கும்
 எவ்வாறு காரணமாகும்.

 .Tuesday, October 29, 2013

உலகம் இவ்வளவு தான்

காட்டினதைப் பார்த்தேன் 
மிகுந்த சங்கடத்துடன்
பேசினதைக் கேட்டேன் 
மிகுதியான வருத்தத்துடன் 
நடந்ததைக்  கண்டேன் 
மிகவும்  நெருக்கடியுடன்  
நெஞ்சில் ஒரு பதைப்பு 
பிடித்துக் கொண்டேன் 
கண்ணிலே நீர் 
சுண்டி விட்டேன் 
 குமறி  வந்த 
உணர்ச்சிகளை அடக்கி
 நிலை குலையாமல்
வெளியே  வந்தேன்
எப்படி  என்று தெரியாமல் .

மனிதர்கள்   பல விதம் 
நான்  அறிந்த வகையில் 
நல்லவர்கள் மிகக் குறைவு 
நல்லவர அல்லாதவர்கள் 
என்று அறி வது மிகக் கடினம் 
கண்டு கொண்டேன்  மக்களை 
முன்னால் பெருமை  பேசி 
பின்னால் கேலி  செய்வதும் 
புறம் பேசுவதும் நகைப்பதும் 
இன்னல் விளைவிப்பதும் 
இல்லாததைச் சொல்வதும் 
வாழப் பொறுகாதவர்களும் 
   இருகிறார்கள் என்று தெளி ந்து  
உலகம் இவ்வளவு தான் 
என்று புரிந்து கொண்டேன்.

 

உலகம் இவ்வளவு தான்  Monday, October 28, 2013

கைம்மாறு

மனது நினைப்பதை 
 கை எழுத 
மனது எண்ணுவதை 
 கை செயல்படுத்த
மனது பார்ப்பதை 
கை வடிவம்  கொடுக்க 
மனது கேட்பதை 
கை எடுத்துக் கொடுக்க 
மனதால் துதிக்க 
கைகள் தொழ 
மனதே கைகளுக்கு 
என்ன செய்யப் போகிறாய் ?வாழும் கலை

நிரப்புங்கள் மனத்தை
நல்ல என்ணங்ளோடு
களையுங்கள் மனத்திலிருந்து
கெ ட்ட சிந்தனைகளை
கோப தாபங்களை  அழி த்து
நிறைகளை  கருத்தில் கொண்டு
 குறையை நோக்காமல்
நலமுடன்  வாழ  பழகுங்கள்.மணமுறிவு.

பூவாக  மலர்ந்த்தது
பழ மாகக்  கனிந்தது
முடிந்தது மண மாக
திருமணம்  கூ டியது
ஒன்றிணைந்த மனங்கள்
மகிழ்வுடன் வாழ
கண் பட்டதோ
 கால் பட்டதோ
 வந்தது வினை
சச்சரவும்  சண்டையும்
எரிச்சலும்  தோன்ற
விரிவு வேகமாக  ஏற்பட
உடைந்தது விவாகம்
 பெரியவர்கள் நுழையவில்லை
சாதி  வேறுபாடு எழும்பவில்லை 
கொடுக்கல் வாங்கல் இல்லவே இல்லை
இருப்பினும் முறிந்தது மண  வாழ்க்கை
தம்பதியரின்  இளமைத் துள்ளல்  குறைய
புரிதலும் அனுசரணையும் மறைய
பிளந்தது ஒரே ஆ ண் டில்.Sunday, October 27, 2013

வீடு என்பது

வீடு என்பது கோவில்  
இல்லம் என்று சொன்னால் 
 இல்லாதது ஒன்றுமில்லை 
மகிழ்வும் நிறைவும் 
 கவலையும்    துன்பமும் 
ஏற்றமும் தாழ்வும் 
ஒன்றே அமைந்த 
இடம்  வீடு.

மனைவியுடன் கூ டி 
குழந்தைகளுடன் கொஞ்சி 
உண்டு களி த்து 
உறங்கி எழுந்து 
உழைத்து  அலுத்து 
நிம்மதியுடன்  வாழும் 
இடம் வீடு .


சுத்தமும்  சுகாதாரமும் 
நேர்த்தியும் நிர்மாணமும்
வளமும்  வனப்பும் 
நல்லதும் கெட்டதும் 
நன்றாகவே நடந்திட 
சுகமான வாழ்வுக்கு  ஏற்ற 
இடம் வீடு.


அருமையும் பெருமையும்  
பேசும்  கதவுகளும் 
கண்ணீரும்  கோபமும் 
பார்த்த அறைகளும் 
நறுமணமும் புகையும் 
கண்ட அடுப்படியும்  அமைந்த 
இடம் வீடு.

கல்லும் மண்ணும் 
கதை சொல்லும் 
மரமும் கம்பியும் 
கலகலப்பை  உள் வாங்கும்
வண்ணமும்  வகையுமாக 
நிலமும் தளமுமாக  நிற்கும் 
இடமே வீடு.
Saturday, October 26, 2013

இனிய காதல்

அதி காலையில் ஓர் அழைப்பு
யாரென்று அறிந்த பின் ஒரு வியப்பு
அன்பான  குரலில் ஒரு உதவி  என்று  சொல்ல
ஆதரவுடன் என்ன என்று விசாரிக்க
 ஒரு சரிகை மேல் துண்டு  வேண்டும்
தீபாவளிக்கு   அணிய தன கணவருக்கு  என்று பகர
எண்பதைத் தொடும் பெண்மணி இன்றும்
கைப்பிடித்தவரின்    தேவையை மேற்பார்க்க
அக் கோரிக்கை  எனக்கு ஒரு கவிதையாகத் தோன்ற
அதில் மிளிர்ந்த அன்பு ஒரு தெளிந்த காதலாகத  ததும்ப
அன்புக்கு வயதில்லை அளவில்லை  என்று புரிய
என்ன ஒரு அழகான் விதத்தில் தன  காதலை
வெளிப்படுத்துகிறாள் இந்த  மங்கை
இதுவே நம்  இனத்தின் பண்பாடு. என்ற  பெருமிதம்
நெஞ்சில் பொங்க நிறைவுடன்  
வாழ்த்த  வயதில்லை என்றாலும்
தன்னிச்சையாக  வருவதை நிறுத்த  இயலவில்லை.
வாழ்க நீ  சகல மங்களத்துடன்

தோற்றமும் அழகும்

கரு வண்டு கண்கள்
என்று சொல்லும் போதே
ஓர் அழகு மிளிரும்


பரந்த நெற்றி
என்று  பார்க்கும் போதே
 ஒரு  விசாலம் தெரியும்

கூர்மையான முக்கு
என்று கருதும் போதே
ஒரு சுடர்   தெறிக்கும் .

பவள வாய்
 என்று குறிக்கும் போதே
ஒரு செம்மை மின்னும்


முத்துப் பற்கள்
என்று  நோக்கும் போதே
ஒரு ஒழுங்கு விரியும்  .


சங்குக் கழுத்து
என்று வியக்கும் போதே
ஒரு பளீர் வெண்மை படரும்.


கனிவும்,  பரந்த நோக்கும்
 தீட்சனி யமும் , சிரிப்பும்
வரை முறையும்  நேர்மையும்
ஒன்று சேரக் காண்பது  அதி அற்புதம்,ஏமாற்று

ஏமாற்றுவது  ஒரு கலை
ஏமாறுவது  ஒரு தலை  விதி
ஏமாற்றுபவன்  ஓங்குகிறான்
ஏமாந்தவன் மயங்குகிறான்.
 ஏமாற்றி அடைந்த காசு
நின்று நிலைக்காது
வந்த வேகத்தில் போய்  விடும்
ஏமாந்தவன் உள்ளத்தில்    எழுந்த
பெருமூச்சு வெந்து தணியும் முன்
ஏமாற்றியவன் நோந்து போ வான் 
இது நாம் அறிந்த நடை முறை Friday, October 25, 2013

நம்பலாமா நம்பக்கூ டாதா?

எனைச் சுற்றிலும்  இருப்பவர்களை
 நம்பலாமா  நம்பக்கூ டாதா
என்று நினைக்கையில்
 நம்பாதே என்று உள்மனம்
சொல்லும் போது
சஞ்சலம் அடைகிறது .

காரியம் முடிந்த பின்
 காலை வாரும்  உறவினர்கள்
ஏமாற்றும் நோக்குடன்
செயல்படும்  இரத்தப் பந்தங்கள்
அலைக்க ழிக்கப்பட்டு
துயரம் அடைந்த நாட்கள் எத்தனையோ!


சற்று திரும்பிப் பார்க்கும் போது
நிகழ்வுகள் நெகிழ்ச்சியடையச்  செய்ய
கண்ணீர் கரை  கட்ட
துளிரும் நீரை புறந் தள்ளி
நமக்கு விதித்தது இது தான்
என்று சமாதானமாகி  வாழ்ந்து
காலத்தை  கடக்கிறேன்

புத்தகக் கிறுக்கு

படித்தல் ஒரு நல்ல பொழுது போக்கு
நான் ஒரு புத்தகக்  கிறுக்கு
புத்தகம் எனக்கு ஒரு சிறப்பு
மற்றதை மறக்க வைக்கும்  ஒரு வியப்பு.
படித்தலும்  வாசிப்பும் நான்  நாடின்
மற்ற யாவும்  என்னைச்   சாடின்
இடக்கும் நக்கலும் ஆங்காரமும்
மனத்தை  நோக வைக்க  விளையும்  போது
அவைகளைச்  சற்று அவசரமாக  நகட்டி
அனாவசியத்தை   வேகமாக அகற்றி
பயனுள்ள  வகையில்   புத்தகம்  நோங்கினேன்
 மட்டில்லா மகிழ்ச்சியும்   பெருமையும் கிட்டின
வேறு என்ன வேண்டும்  எனக்கு
 நானோ ஒரு கிறுக்கு.


Thursday, October 24, 2013

வாழ்க்கை

கடிதம் ஒன்று வந்தது
ஒரு சேதி சொன்னது
கண்ணீர் வந்தது
 மனம் பதைத்தது
துக்கம் அழுத்தியது
சமாளித்துக்  கொண்டு
அடுத்த வேலையை
பார்க்க முயன்ற  போது
தோன்றிய எண்ணம்
காசுக்கு இரண்டு  பக்கம்
 வாழ்விலும்  அதே போல்
மாறி மாறி வருவது தான்
 வாழ்க்கை  ஆகும் 

மனிதன் என்னவாக்குகிறான் ?நீரின்றி உயிர் இல்லை 
உயிரின்றி உலகம் இல்லை 
உலகம் இன்றி  யாதும் இல்லை
நீரே வாழ்வுக்கு ஆதாரம் .


நீரைப்  பழி  த்து  வீணாக்கி 
மரங்களை வெட்டி  பாலை வன மாக்கி
ஆற்றைக்  குட்டையாக்கி 
கடலைக் குடைந்து  மேடாக்கி  எல்லாம் மாறி 

பாரினை வாழ்வதற்கு    தகுதிஇல்லாமல் செய்து 
ஆசையும்  பேராசையும்   பெருக்கெடுத்து 
நிலத்தை கிழித்து குதறி புண்ணாக்கி  
மழையை  தடுத்து  வறண்ட பூமியை  சேதமாக்கி 

மனிதனை என்ன வென்று அழை ப்பது 
பேரா சை க் கா ரன்  என்று சொல்லலாமா 
பே ர ழி வுக் காரன்  என்று  சினம் கொள்ள லாமா 
எதைச்  சொல்வது எதை விடுவது புரியவில்லையே .மனிதன் என்னவாக்குகிறான் 

அன்றும் இன்றும்

வானுயர்ந்த  மலைகள்  
அழகான நிலப் பரப்பு  
அமைதியான  கடல் 
தெளிந்த நீரோடை
 பசெலேன்ற  விளை நிலங்கள் 
என்று இருந்த இந்திய  பூமி 
இன்று 
கல்லடிபட்ட குன்றுகள் 
வெடித்த காய்ந்த    நிலம் 
ஆர் பரிக்கும் கடல் 
 கலங்கிய  குட்டை நீர்  
வாடிய  நொந்த நிலங்கள் 
என்று இருக்கும்  இந்திய  பூமி 

எதனால் என்று சிந்திக்க
மனிதனின்  செயலால்  
அவனின் நடத்தையால்
 அவனுடைய  பேராசையால்
என்று  உணர்ந்து நோக்குங்கால் 
மனம் வெதும்புகிறது.


அன்றும் இன்றும்  

நரை

தலை மூ டி  வெளுக்க 
 நரை என்று சொல்ல  
அதை மறைக்க 
செயற்கை  சாயம்  தடவ
 கரு கருவென்று தோற்றம் மிக 
வந்ததோ வினை வேறு விதமாக 
 சாயம் முகத்தில் இறங்கி 
 சிவந்த நிறம்  கரும் 
படலமாகத் தோன்ற 
அதிலிருந்த இரசாயனம் 
 உடலில் செல்ல  பல விதமான 
கோளாறுகள் உண்டு பண்ண 
 முட்டி வலி யும்  முதுகு வலியும் பீடிக்க
கண்ணும் மங்கலாகத் தெரிய 
 அஞ்சினான் வெகுவாக 
 வயதான பின்  மூடி 
 நரைப்பது இயற்கையே  
தேற்றிக் கொண்டு 
 இயற்கையின் வழியே 
 செல்வது நியாயமே  
சருகானாள்

கண்ணாக வளர்த்து 
பூவாகப் போற்றி 
பேணி பாதுகாத்து 
ஆளாக்கிய பெண்ணை 
கயவன் என்று 
அறியாமல்  மணம்முடித்து 
அவன் அவளை
சின்னா பின்னாமாக்கி 
நையப்  புடைத்து  
சுட்டுக்   குதறி 
காயப்படுத்தி 
 உயிரைக்  குடித்தான் 
அழுதாள்   மாய்ந்தாள் 
நெருப்புக்குள்  பாய்ந்தாள் 
சருகானாள்   சடுதியில் 
திக்குத் தெரியாமல் 
 வாடுகின்றனர்  பெற்றோர் 


Wednesday, October 23, 2013

வாழ்வே வசந்தம்

பையிலே பணம்  நிறைய
வாயிலே வார்த்தை  உண்மையாக
கையிலே  வேலை திறம்பட
இயல்பிலே தன்மை நன்மையுடன்
வாழ்வே வசந்தம் சிறப்பாக
நிறைவான நிழல். வேண்டிய வகையில்.

Tuesday, October 22, 2013

மாற்றாமல் மாறுகிறது

அர்த்தங்கள் மாறினால்  
அனர்த்தம்    ஆகி விடும்.
வார்த்தையை மாற்றினால்
நாணயம் மறைந்து விடும்  
நினைப்பை மாற்றுவதால்
வழி . மாறிவிடும் 
தன்மையை மாற்றி போட்டால் 
தன்னிலை  விடுபட்டு போகும்.
தகவலை  மாறிச் சொன்னால் 
 விபரிதம்  மாறி வரும் 
சொல்வதும் செய்வதும் 
உறுதியாக  இருந்தால்
வளமையுடன்  வாழலாம்..


Monday, October 21, 2013

வெண் குவியல்

அழகான் முயல் ஒன்று கண்டேன் 
வெள்ளை வெளேரென்று 
வாயில் புல்லைக் கவ்விக் கொண்டு  
துள்ளி குதித்து தாவி ஓடியது 
துள்ளாட்டம் போட்டுக் கொண்டே 
மலை மீது தாவி ஏறியது 
தள்ளாட்டத்துடன்  மெது மெதுவாக 
கிழே  உருண்டு  வந்தது 
பந்தைப் போல் 
பார்த்தேன் பரவசமாக 
பனிக்குவியல்  போல் 
தோற்றமளித்த  குட்டி முயல் 
என் மனத்தைக் கொள்ளைக்  கொண்டது 
என்னே ஒருஅற்புதமான அழகு.

Friday, October 18, 2013

ஏற்றலும் திகட்டலும்

மழையும் சாரலும்
தூறலும்  தூவானமும்
மப்பும் மந்தாரமும்
கூடிய  மேகமும்
 வானவில்லும்
நிறக் கோள்களும்
அழகெனப் பரவி
மாலைப் பொழுதை
கவின்மிகு நேரமாக
 மாற்றிக்   களிப்புடன்
நோக்குங்கால்  காற்று
வேகமாக வீசத் தொடங்க
இடி பயங்கரமாக இடிக்க
மின்னல் பிரகாசமாக  மின்ன
 மழை துரிதமாகக்  கொட்ட
மாலை இரவாக மாறும் வேளை
கண்கொள்ளாக் காட்சி
கடுமையாக சடுதியில் வேறுபட
ஒரு பொழுதின் காலம்
ஏற்றலும் திகட்டலுமாக
தோற்றம் அளித்தது

Wednesday, October 16, 2013

திரு நாட்டின் நிலை

அதியமானுக்கு நெல்லிக் கனி
அளித்து பெருமை அடைந்த  அவ்வை
சோழனிடம் நீதிக் கேட்டு
 மணியடித்த பசு
 முல்லைக்கு தேர் ஈந்த பாரி
வாழ்ந்த திரு நாட்டிலே
 இன்று கபடும் கள்ளமும் மலிவு
எதற்கும் லஞ்சம் இலட்சத்தில்
எதிலும்  சூது அநியாயத்தில்
பள்ளியில் சேர்க்க லஞ்சம்
மருத்துவ சிகிச்சைக்கு  கையூட்டு
நிலம்  வாங்க விற்க  சேர்த்துக் கொடு
அதிகாரியைப் பார்க்க பரிமாற்றம்
நீதித் துறையில் உழலின் கோர ஆட்டம்
அரசியலோ தாங்கவொண்ணா  கலப்படம்
வர்த்தகமோ மட்டில்லா மறைமுக வேட்டை
 தொழில்துறையோ புயலென மாறும் நடவடிக்கை
இங்கு உழைப்பவனுக்கு  சோறில்லை வெங்காயத்துடன்
ஆதிக்கம் செலுத்துபவனுக்கு விருந்து
வடை பாயசத்துடன்.
நாட்டின் நிலை  வெகு விமர்சை

குறை கழிந்து நிறை அறிந்து

குறை காண்கிறோம்
எதிலும் எப்போதும்
 நிறையே இல்லையா
 என்று நினைக்கையில்
 ஆயிரம் ஆயிரம்
 அலைகள் முன் நிற்கின்றன
கறுப்பு என்றால் வெறுப்பு
குட்டை என்றால் கடுப்பு
குண்டு என்றால் கேலிக்கிடம்
ஒல்லி என்றாலோ பரிதாபம்
நெட்டை என்னும் போது நகைப்பு
முக்குச் சப்பை, இடுங்கிய கண்கள்
 மேட்டு நெற்றி , தூக்கிய  பல்
 என்று  அடுக்கிக் கொண்டே
போகலாம்  நெடுகிலும்
தெரியாத பலவினங்கள்
எத்தனை எத்தனையோ
மூடியும்  மறைந்தும்
கண்டும் காணாமல்
நிறைகளை அறிந்து
நடப்பது நல்வாழ்வு.

பணம் பத்தும் செய்யும்

பணம் என்ற சொல்
மிகுந்த வளமான் சொல்
பணம் பத்தும் செய்யும்
என்ற பழைய மொழி
மிகுந்த நற்பயக்கும் .

 பணம் தூக்கி  நிறுத்தும்
 அத தூக்கியும் எறியும்
பணம்  புகுந்து விளையாடும்
 அது பிளந்தும் கட்டும்
விட்டு விளாசும்  நேரடியாக .
.
பணம் ஏற்றம் காண  வைக்கும்
 அது தாழ்த்தியும் விடும்
பணம் ஒரு ஆபத்து
 வந்தால்கெடுக்கும்
 வராவிட்டாலும்  கெடுக்கும்.


 கையாளும் விதமே
அதன் வழி முறையை
 வகைப்படுத்தும்
சான்றான்மையை  விளக்கும்.
தனித்து நிற்க வைக்கும்

மாயமும் மந்திரமும் யாவற்றிலும்

மந்திரமும் மாயமும்
எங்கும் பரவி
 மந்திரத்தால் மாங்காயும்
 காய்க்கப பண்ணி
ஆணை  பெண்ணாக்கி
பரியை நரியாகி
 வெட்டுண்டு
பின் கோர்வைக் கண்டு
ஜால வித்தைகள்
காட்டி  மகிழ்வித்த
மாயவியைப் போல்
இன்று தொழிலும்
மந்திரமும் தந்திரமும்
 வெகுவாகத தெளிய
நேற்று நட்டத்தில்
இயங்கிய வர்த்தகம்
 இன்று கொழிக்கிறது என்றால்
மாயங்களின்  வெளிப்பாடு தான் .
மாயத்தின்  குணம் தான்
 ஒரு கேள்விக் குறி?

Sunday, October 13, 2013

ஒன்பது இரவுகள்

ஒன்பது இரவுகள்
 அற்புதமான  இரவுகள்
 மாலை கவியும் நேரம்
 பொம்மைகளின கொண்டாட்டம்
 இறைவனின்  அருள் குவிய
 இறைவிகளின்   அன்பு ததும்ப
தலைவர்களின் கடமை விரிய
கடை விரித்து வர்த்தகம் பெருக
கோலாட்டம் ஒங்க
நாட்டியம் துவங்க
 பூங்காவும், மைதானமும்
அழகாகப்  பொருந்த
பூக்களும் மரங்களும்
 கவாச்சியாக்த்    துலங்க
ஒன்பது நாட்களும்
 இறை உணர்ச்சி  மேலோங்க
பெண்களும் குழந்தைகளும்
 தாம்பூலம் பெற்று
வினயமாக வினவி
 கலந்து பாட்டும்
ஆடலும் கேளிக்கையும்
மனமுருகி நெகிழ்ந்து
எல்லாம் வல்ல  இறைவனுடன் உறவாடி
 மகிழ்வுடன் வாழும் இனிமை
 வேறு எங்கும் கண்டில்லோன்
இந்திய  நாட்டின் தனி வளமை
தனிப்பட்ட சிறப்பு

Saturday, October 12, 2013

மலையே விஞ்சும்

மலையைப் பார்த்து திகைக்க
 அதன் கம்பீரத்தை நோக்கி அசர
 அது தொடும் நீல வானத்தை கண்டு மிரள
அதில் குடியிருக்கும் பறவைகளின் குரலை
கேட்டு பரவசமாக
அங்கு ஏகாந்தமாக வாழும் மிருக இனத்தை சற்று
 பயம் கலந்த லயிப்புடன்  ஆனந்திக்க
அந்த கரு கரு வென்ற வளர்ந்த  மரங்களை
ஆசையுடன்  தழுவ
காய்த்து    குலுங்கும் பழங்களை எட்டி எட்டி
பறிக்க ஆவல் தூண்ட
மலையைக்   கண்டு வியந்து வியந்து  மலைத்து
 மலைத்து  விம்மிதம் அடைகிறான்
அழகை ஆராதிக்கும்  என்னைப் போன்ற மனிதன்

தங்கமே தங்கம்

தங்கத்தின் மேல் பெண்ணுக்கு ஆசை .
மின்னும் தங்கமும் மஞ்சள் முகமும்
கழுத்திலே தவழும் தாலிக் கொடியும்
 கையிலே குலுங்கும் பொன் வளையலும்
காதிலே ஜொலிக்கும்  அழகான் தோடுகளும்
  அழகு சேர்க்கும் நேர்த்தியும்
பெண்ணின் மனத்தை மயக்க
அதன்  மதிப்பும் அதன் மேல்
 உள்ள கவர்ச்சியை தூண்ட
தங்கத்தை மென் மேலும் சேர்க்க
 துடிக்கும் பெண்ணே
உன் புன்னகையை விடவா தங்கம் மேல்
உன் அன்பை விடவா  தங்கம்  உயர்வு
தங்கம் ஒரு உலோகம் என்ற நினைப்பு
தூக்கி நின்றால் அதன் மாயை
 சற்றுக் குறையும்  சற்று விலக்கி
மனம் மாறி தங்கத்தை சற்று மற
 மற்றதில் மனத்தை செலுத்து
வாழ்கையை அனுபவி
தங்கம் சேர்க்கும்  ஆசையை புறந்    தள்ளி
வாழக்   கற்றுக்கொள்

காலம் மாறவில்லை

புரட்டாசியில்  அடை மழை
கார்த்திகையில் விடாத மழை
மார்கழிப் பனி முட்டம்
தை மாதக் குளிர்  குத்தும்
என்ற காலம் போய்
இப்போது  எப்பொழுதும்
வெயில் சுட்டெரிக்கும் வெயில்
கொதிக்கும் மதிய வேளை
 சுடும் அதிகாலை
 எரிக்கும் மாலை
புழுக்கம் நிறைந்த இரவு
காலம் மாற மறந்துவிட்டது உறுதியாக
நம்முடைய  மாற்றங்களைக்  கண்டு

Friday, October 11, 2013

பெண் என்றால்.

பெண் என்றால் இளக்காரமோ1
என்றென்றும் அடிமையோ!
தந்தையை மீற முடியாது
 வயது போதாது  அவ்வேளையில்
கணவனை பகைத்துக்கொள்ள முடியாது
அவன் ஒரு சர்வதிகாரி  எப்போதும்
மகனைக் கேட்க முடியாது
அவன் ஒரு தன்ன்னப் போணி எந்நேரமும்
அவள் வாழ்வு பிணைந்து நெருங்கி
 இறுதியில் நெருக்கி  உக்கிப் போகிறது
மடிகிறாள் ஏக்கத்துடன்
என்று தான் அவளுக்கு விமோசனமோ!

நீர் இன்றி

கண்மாய்கள் கட்டிடங்கள்  ஆயின .
ஏரிகள் பெருங் கட்டிடங்கள் ஆயின.
ஆறுகள் கட்டிடங்களாக ஆகின்றன
கடலும் கட்டிடங்களாக  ஆகிவிடும்
இன்னும் சிறிது காலத்திலேயே.
நீர் ஒரு  காண  இயலாத சக்தி

ஆலிலைக் கண்ணன்

பாடினான்  பரவசமாக
ஆடினான் ஆனந்தமாக
தன்னை மறந்து
 தன நிலை மறந்து
ஆடிப் பாடினான்

கண்ணீர் மல்க
 உதடுகள்    துடிக்க
இமைகள் படபடக்க
மெய் மறந்து
 ஆடிப் பாடினான்


ஆடும் போது
கண்ணா என்று  கூவினான்
கேசவா என்று அழைத்தான்
 அவன் கண் முன்னே
தோன்றினான் ஆலிலைக் கண்ணன்
குழந்தை வடிவிலே

விமர்சனமும் தரிசனமும்

எவ்வித சலனமின்றி  நடந்த நிகழ்ச்சியில்
 ஏற்பட்டது ஒரு தடுமாற்றம்
சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
வினையாக வந்து வீழ்ந்த்தது
ஒரு விமரிசனம்,
தனியாக எடுத்து நோக்கின்
அது சாதாரணமாகத் தோன்றும்
சொன்ன நேரத்தையும்
 சொன்ன இடத்தையும்
 சொல்லிய விதத்தையும்
எடுத்துக்கொண்டால்
அது மிகவும் தாறு மாறாகத்
 தெரிந்தது மனதை நோக  அடித்தது
சொற்கள்  நாகரிமாக  பயன்படுத்தி
 நயமாக உச்சரிக்க வேண்டும்
வெளியே வந்த பின்
 அது நம்மிடையே இல்லை
 அவை சீறிப் பாய்ந்து
 கிழித்துக்   காயப்படுத்தி
மனத்தைக் குதறி விடும்.

பேசட்டும் தன்னோடு

வெட்ட வெளியில் அமர்ந்து
தன்னாலே பேசும் மனிதனை
 கிறுக்கன் என்று சொல்லலாமா
 வேண்டாம் மனிதனே
 அவன்  கிறுக்கன் அல்ல
 வம்பு வேண்டாம்  என்று
அவன் நினைக்கிறான் போலும்
இல்லை பேசி பேசி
 எதைக் கண்டேன்
என்று எண்ணுகிறான் போலும்
தன்னோடு பேசி
 மனத்தை ஆற்றிக்  கொள்கிறான்
 பாவம் அவனை விட்டு விடுங்கள்
பேசட்டும்  பேசிக்கொன்டிருக்கட்டும்
அல்லலை பகிர்ந்து கொள்ளட்டும்
 இன்பத்தில் பங்களிக்கட்டும்
அழுகட்டும் சிரிக்கட்டும்
அனுபவிக்கட்டும்  நலன் கருதி
அவன் பேசட்டும் தன்னோடே

நடப்பதும் நடந்ததும்

ஒரு பயங்கர வெடிச் சத்தம்
 காதைப் பிளந்து கொண்டு  வந்ததது
 எங்கிருந்து வந்தததோ
 எப்படி வந்ததோ
என்று அறியும் முன்
 மற்ற ஒரு  வெடிச் சத்தம்
அசையும் பொருட்கள் அதன் அகன்ற
 வாயில் புகுந்தன
அசையா வளங்கள் சிதைந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாகக்
 காட்சியளித்தன   யாவையும்.
உணர்ந்து நோக்கினால்
பொருளாதார கெடுவும் நெருக்கடியும்
 மனிதனை எவ்வாறு எல்லாம்
 அலைகழிக்கிறது
இருப்பவன் இல்லாதவனை முழு ங்குகிறான்
அதிகாரம் உள்ளவன் சாமானியனை  விழுங்குகிறான்
இயற்கையைப்  போல.

காளியாய் கண்ணகியாய்

அவள் அழுதாள் குலுங்கி குலுங்கி
அவளை அழுது கண்டதில்லை
திடமான மனதுடன் வளைய  வருபவள்
மனது குன்றி அழுதாள்
  வழியும் கண்ணீரைக்    கருதாமல்
சிந்தும் முக்கை நினையாமல்
 துடிக்கும் உதடை பாராமல்
சிவக்கும் கண்களை   நோக்காமல்
விரைந்தாள்  தன்னை காயப்படித்தினவனை
கேள்வி கேட்க
  கேட்டாள்  ஆத்திரமாக
நீயும் ஒரு மனிதன் தானா ?
பெண் என்று பாராமல்
 மாணவி என்றி எண்ணாமல்
முறை கேடாக நடந்தாயே
 ஆசிரியர் என்ற போர்வையிலே.
காளியாய்  சீறினாள்
கண்ணகியாய்  சுட்டெரித்தாள்
நிலை குலைந்த பெண் மணி .
எரிந்தானா அவன் ?
இன்று இல்லை
 என்றோ ஒரு நாள்
 எரிந்து சாம்பலாவான்
அவளின் காயம் அப்படி
.

விசுவநாதன் வேலை வேண்டும்

காசி விஸ்வநாதருக்கு
 தங்கக் கிரிடம்  சூட்ட
பெற்றார்கள் இலவசமாக
பவுனும் நகையும் எக்கச்சக்கமாக
பெண்மணிகள் அள்ளிக் கொடுக்க
ஊர்  ஊராக   ஊர்வலமாக
கிரிடத்தை கொண்டு செல்ல
பாதி இறைவனுக்கு  படைத்தது
மீதி  பதவியில் இருப்பவர்களுக்கு.
என்று பங்கிட்டு  செழிக்க
விஸ்வநாதன் கூர்மையாக   பார்க்க
உண்டு பண்ணினான் கலகத்தை
கலாட்டா தொடர
நான் நீ என்று ஈஸ்வரனின்
சொத்துக்கு  சண்டை நடக்க
காசி நாதன் புன்னகையுடன்
 காரைக்குடியை நோக்க
மகேசன் தீர்ப்பை  வழங்கும் நேரம்
அவன் ஆளுமை  தெரிய வரும்
 நாளை மாலையில். வெளியாகும்
தேர்தல் முடிவுகள்  ஒரு துடைப்பு
இறைவனையே ஏமாற்றும்  நடிப்பு
தேர்ந்தவனும் பதவி விலகுபவனும்
ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்
பணம் என்றால் நாணயம்
ஓடி விடும் போல்
ஆசை கண்ணைக்   கட்டும்
 இருப்பவனுக்கு இன்னும் வேண்டும்
இல்லாதவனுக்கு  நிறைய  வேண்டும்
விஸ்வநாதனின் வேலை என்ன
 என்பது தெரிய வரும்.
அவனுடைய திருவிளையாட்டு  திறனில்
  எள்ளளவும் சந்தேகம் இல்லை
 அவனுடைய  நீதி   வெள்ளிடைமலை
சொத்தை திண்டினவன் கை முடங்கும்
தின்னவன் வாய் புண்ணாகும்
அனுபவித்தவன்    நெஞ்சு வெடிக்கும்
அடைய நினைப்பவன் அடக்கம் ஆவான்

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்
 என்று புலம்பும் நாம்
 செய்த பாவம் என்ன தானோ ?
நீர் இல்லையேல் உயிரினம் இல்லை
வரப்பு   உயர  நீர் வேண்டும்
பயிர் செழிக்க நீர்  அவசியம்
மனிதன் தாகம் திர்க்க
அவனின் உடல் அழுக்கைப் போக்க
மற்ற   தேவைகளைப்   பூர்த்தி செய்ய
விலங்குகளின்  நிலைக்கும்
அவைகளின் வாழ்வுக்கும்
நீர் ஒரு அத்தியாவசியமான  செயல்பாடு
 நீரின்றி உலகம் இல்லை
நாம் அந்த தேவ அன்பளிப்பை
புறக்கணித்து புறம் தள்ளி
சீரழித்து வீணாக்கி
நச்சுப் பொருட்களை  தேக்கி
அசுத்தப்படுத்தி   கொல்லாமல்
 கொன்று கொண்டிருக்கிறோம்
 தெரிந்து  முக்கால் வாசி
தெரியாமல் கால் வாசி
செத்தவன் பிழைத்துப் பார்த்தோமா!
நீர் வளம் குன்றி  சிறுத்து
 தேய்ந்து  ஓடாகிப் போனது.
தண்ணீர் தண்ணீர் என்று ஏங்குகிறோம்
  இன்று கண்ணீருடன்

அபலையின் வாழ்விலே

பையில் துணி இல்லாமல்
கழுத்தில் தாலிச் சரடு இல்லாமல்
நெற்றியில் திலகம் இல்லாமல்
மெலிந்த உடலும்
 தளர்ந்த  நடையும்
கவலை தோய்ந்த  முகமும்
இடுப்பில் குழந்தையுடன்
 வேகையில்  காசு  இல்லாமல்
க மாக நடக்கிறாள்
அபலைப் பெண்  மிரட்சியுடன்
அதே நேரத்தில் முடிவுடன் .
எங்கு செல்கிறாள்?
 என்று பார்க்கின்
ஒரு பாழுங் கிணற்றை
நோக்கி  நடக்கிறாள்
எதற்கு என்று யோசிக்க
வேண்டியதில்லை
நினைக்கும் முன்
தொபீர்  என்ற சத்தம்
கூடவே ஓர் ஓலம்
 அவளும் பச்சிளங்  குழந்தையும்
 நீரில்லாத  கிணற்றுக்குள்
ஐக்கியம்  ஆகி முக்தி  அடைந்தார்கள்
 வாழ்க சமுதாயம்
வளர்க தமிழ் திரு நாடு.

அமைதியும் அற்புதமும் எளிமையிலே

இளங் காலைப் பொழுதிலே
 நங்கை  ஒருத்தி  தென்றல்  போல்
அன்ன நடை யுடன்
சுகந்த மணத்துடன்
நிதானமான  பார்வையுடன்
 உறுதியான  நோக்குடன்
மிகவும் ஆச்சரியாமான
உடையில் ஆம்
அழகான புடவை உடுத்தி
(இன்று புடவை ஒரு அபூர்வமான  உடை)
நேர்த்தியான நகைகள் அணிந்து
புன்னகை தவழ
சென்ற காட்சி
மனதில் நிற்கிறது
அமைதியான அழகு
என்று சொல்லலாமா
அற்புதமான அழகு
என்று கொள்ளலாமா
எவ்விதத்திலும் அவள்
ஒரு தெய்விகமான
அழகாகத்   தோன்றினாள் .
யாவருக்கும்  ஒரே நேரத்தில்
அழகு  ஆர்பாட்டத்தில் இல்லை
அதித அலங்காரத்த்ல்  இல்லை
விலை மதிப்புடைய அணிகலன்களில் இல்லை
எளிமை ஒரு தனிப்பட்ட அழகு
 அதனுடன் சாதுர்த்தியம் கூட்டும்
அவற்றுடன் கனிவு சேர்க்கும்
இதமான  பேச்சு ஏற்றும்
உணர்வப்   பூர்வமான எண்ணம்  போற்றும் அழகை ஆற்றலுடன்  வழங்கி
 அழகுக்கு அழகு அளித்து
வளமாக கொண்டு செல்லும்
இயற்கை தரும் வெற்றி
இதுவன்றோ !

ஆலோசனையும் பிரசங்கமும்

சற்று நேரம் பொறுங்கள்
 சிறிது நேரம் பாருங்கள்
சில மணித்துளிகள் காத்திருங்கள்
நல்லது நடக்கும்
 நல்லதே நினையுங்கள்
 நன்றாகவே நடக்கும்
என்று பார்க்கிறவர்கள் யாவரும்
 சொல்லும்  பொது  ஆத்திரம்  உண்டாகிறது
பொறுத்திருந்து  என்ன நடந்தது
 இழப்பு தான் மிச்சம்
காத்திருந்து என்ன ஆனது
 பேரிழப்பு தான் மீந்தது
 நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால்
கெட்டது தான்  விரைந்து வருகிறது
சொல்வது மிக எளிது
 அன்பவித்தால்   தான் தெரியம்'
 வலியும் வேதனையும்
பிரசங்கம் செய்பவர்களும்
அலோசனை கூறுபவர்களும்
தங்கள் வாழ்வில்
இருக்கிறார்களோ அவ்வாறு?
ஆயிரம்  பொற்காசு பெற வேண்டிய கேள்வி

மெய்யும் பொய்யும்

உண்மையை சொன்னால்
கோபம் கொள்கிறான்.
அடிக்க வருகிறான்
உண்மை கசக்கும்
கசந்து கண்ணைப் பிடுங்கும்
பொய்யும் ம் நடிப்பும் அமர்க்களம்
தக தக என்று மின்னும்
குளுகுளு என்று குளிர்விக்கும்
வருடினாப் போல் தொடும்
 இதமும் சுகமும் வெகுவாக அளிக்கும்
எவ்வளவு நாட்கள் என்பது தான்  கேள்விக் குறி
 நிழல் மறைந்தவுடன் வெயில் தகிக்கும்
பொய் குறைந்த நாள் வாழ்ந்து
 வெளிக்   கொணர்ந்த பின்
நாய் அடி பேய் அடி பட்டு
 தோலுரித்து தண்டவாளம் ஏறி
மானம் மரியாதை  களைந்து
கழுவேறி  தூக்கிலடப்படும்.
கசந்த உண்மை கசப்பாக  இருந்து
 காலம் வரும் போது  கனிந்து
திகட்டாத இனிமையை நல்கும்
கசப்பு நாளடைவில் இனிமையாக மாறும்
நடிப்பு காலப்போக்கில் நரகமாகத்   தாழும்

இரத்த பந்தம்

உறவு என்று சொன்னால்
 எனக்கு மிகுந்த சொந்தங்கள்
 இரத்த பந்தம் நிறைய
 பிறந்தவர்கள்  ஐந்து
  பாசம் சற்றும்  கண்டதில்லை
இளமையில் கொஞ்சம் இருந்து
 வயதாக முற்றிலும் மாறி
அன்னியனைக் கண்டால் கூட
 ஒரு புன்னகை மலர
 உடன்  பிறந்தவர்களை நோக்கின்
 மட்டில்லா வெறுப்பு
பிறந்தவர்கள் இப்படி
 வந்தவர்களோ மேலும்
 விருத்தி  இணைவில்
வெறுப்போடு காட்டமும் சேர்க்கை
வாழ்ந்தேன் இவ்வுலகில்
மிக வேறுபாட்டுடன்
தனி மனிதன் தோப்பாகாது
ஆனேன் நான்
குழந்தைகளுடன் கணவருடன்
நட்புடன் உண்மையுடன்
பூத்துக் காய்த்து  கனிந்து
குலை தள்ளி விருட்சமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
சுற்றத்தை விட்டு
வெகு தூரம் தள்ளி
இடத்தால் மிக நெருக்கத்தில்
மனத்தால்   தொலை தூரத்தில்
கண்ணுக்கு எட்டாத  என்றால்
 நகைப்புக்கு  இடமாகும்
காதுக்கெட்டாத என்றால்
சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்
 ஏனெனில் அடுத்த வீட்டில்
 அடுத்த சாலையில் இருப்பவர்களை
இல்லாதவர்கள் என்று நினைத்து
வாழ முயன்று  வாழப் பழகி
வெற்றிகரமாக   வாழும் என்னை
 நானே பாராட்டிக் கொள்ள வதுண்டு
பல நேரங்களில் சில வேளைகளில்

காதலின் இலக்காக

காதலித்தது இல்லை
காதலிக்கத்   தெரியவில்லை
காதலிக்க வாய்ப்பில்லை
  காதலிக்க தொடங்கினேன்
மணவாளனை கைப் பிடித்த பின்.
காதல் பெருகி ஓடியது
 வளர்ந்த சூழ்நிலை அவ்வாறு
கண்டிப்பும் கண்காணிப்பும்
இடைவிடா தாயின்  அருகாமையும்
குடும்பப் பாரம்பரியுமும்
காதலுக்கு வழி கோலவில்லை
பெரியோரின் நோக்கிலே திருமணம்
அதன் பின் காதல்  வளர்ந்தது
மிகுந்த  மறைமுகமான பரிமாற்றங்கள்
அதில் ஒரு வெட்கம்
வயது ஏற ஏற அன்பு பெருக
 இன்று ஒருவர்  இல்லமால்
ஒருவரால் வாழ முடியவில்லை
வாழ்கிறோம் காதலின் புனித இலக்காக

பதவியும் பவுசும்

பதவி  ஒரு காமச் சொல்
காமத்தைவிட இழிவான ஒரு காணல்

 பசி உடலிலும் மனதிலும்  தகித்து
உண்ட பின் கழிந்து
 அடைந்த பின்  களித்து
 சில நேரங்களில்  குளித்து
பல நேரங்களில் சலித்து
கடந்து விடும் வெறுப்போடு

பதவியோ  பொழுது முழுவதும்
காலம் நெடுகிலும்  கொடி கட்டி பறக்கும்
ஆணவம் தலை விரித்தாடும்
திமிர்  கோரத் தாண்டவமாடும்
செல்வச் செழிப்பு  பெருக்கெடுத்துக்  கிளறும் .
அலட்சியமும்  அகங்காரமும்  முரசு கொட்டும்
பதவி நீடுழி வாழ வகைக்   கொடுக்கும்
வீழ்ந்தால் தான் மோகம் குறையும்
ஆனால் வீழ்வது எப்போது?

கை தட்டு

கண் பார்க்க
கை செய்யும்
மனம் எண்ண
 கை எழுதும்
இரக்கம் தோன்ற
 கை ஈயும்
அன்பு பொங்க
கை அரவணைக்கும்
இறைப்பற்று மேலோங்க
 கை குவிக்கும்
கோபம் மேலிட
கை அடிக்கும்
தப்பு நேர
கை சுட்டிக் காட்டும்
 திருட நினைக்க
கையும் களவாடும்
கை இல்லாமல்
 எதுவும் இயலாது
கைக்கு ஒரு  பலத்த
கை தட்டு

மாறும் மாற்றம்

மாறும் சிந்தனைகள் 
மாறும் எண்ணங்கள் 
மாறும் காலங்கள் 
ஆக 
மாற்றம் நிரந்தரம் 
மற்றவை தந்திரம். 

மாறாத மனம் 
மாறாத சொல் 
மாறாத உன்னதம் 
ஆக 
மாறாதது நேர்மை 
மற்றது தாழ்மை. 


மறக்கும் இயல்பு 
மறக்கும் வலிமை 
மறக்கும் தன்மை 
போன்ற 
மறப்பது நன்மை 
மற்றது தீமை 


மறக்காத கடும் சொல் 
மறக்காத இடையூறு 
மறக்காத தாக்கம் 
போன்ற 

மற்றது மேன்மை. 


மாறாதது மாறும் 
மாறுவது மாறாது 
மறப்பது மறக்காது 
மறக்காதது மறக்கும் 
மாறி மாற்றி 
மறதி மறுகி 
வாழ்கிறோம்

மறக்காத கொடுமை 

Thursday, October 10, 2013

தமிழ் பயணம்

தாயை நேசிக்கிறேன் 
தமிழைத் தலை வணங்குகிறேன் 
தமிழும் தாயும் கலந்து 
நினைக்கிறேன் எம் வாழ்வை 
இரண்டுக்கும் நிகர் இல்லை 
வாழ்வுக்கும் குறை இல்லை 
தமிழ் பற்று நிரம்ப 
தாய் அன்பு மேலோங்க 
நீ நன்றாக இருப்பாய் 
என்று தாயின் குரல் 
தமிழில் ஒலிக்க 
சீருடன் வாழ்கிறேன் 
தமிழ் மொழியோடு. 
செம்மையாக எழதப் பழகி 
கவிதையுடன் நடை பயின்று 
காவியமாகப் பறந்தோடி 
உயர எண்ணம் கொண்டு 
துவங்கியுள்ளேன் என் தமிழ் 
பயணத்தை உவகையுடன்காற்றின் நிலைப்பாடு

காற்றீனிலே வரும் கீதம் 
என்று கூறும் போது 
காற்றே ஒரு இசை 
என்று தோன்றிய தருணம் 
காற்று வீசியது குளுமையாக 
மெல்லத் தவழ்ந்து 
முடி கற்றை கலைத்து 
முகத்தை வருடி 
காதிலே இசையுடன் கொஞ்சி 
பரவிச் சென்றது மென்மையாக 
கிறங்கி மயங்கிய நிலையில் இருக்கும் போது 
காற்று வேகம் பிடித்து வீசத் தொடங்கியது 
உஸ் உஸ் என்று கோரத் தாண்டவமாடியது 
முகத்திலே அடித்து கதவுகளைக் காயப்படுத்தி 
விறு விறு வென்று பாய்ந்து தாக்கி சூறையாடி 
இயல்பு வாழ்வைப் பாதித்து 
நிலை குலையவைத்தது 
சற்று நேரத்தில் குறைந்து மிதமாக வீசியது 
சோகமாகப் பாடியபடி 
செல்லும் போது மரங்கள் தள்ளாடின 
இலைகள் போல பொலவென்று உதிர்ந்தன 
மழையும் துளித் துளியாக சொட்டு சொட்டாக 
கசிந்து கவலையோடு இணைந்து 
காற்றுடன் கலந்து மறைந்தது.அடி பலமாக

சாட்டையடி,கசையடி 
நெற்றியடி ஓடோட அடி 
உன் அடி என் அடி 
இல்லை அது 
அது ஒரு பயங்கரமான அடி 
மனதில் அடி மிகப் பலமான அடி 
சாய்த்து அவனை வெகுவாக 
வீழ்ந்தான் மரண அடியில் 
எழுந்திருக்கவேயில்லை அவன் மீண்டும் 
வாங்கின அடிகளில் மீள முடியாமல் 

கல்லும் காசு ஆகலாம்

சிறு சிறு மலைகள் 
வான்யுர்ந்து நிற்க 
அகன்றவெளியில் 
பயிர்கள் விளைய 
நீர் ஏற்றலும் 
குலவைப் பாட்டும் 
கும்மி அடி கோலாட்டமும் 
நிறைந்த மகிழ்ச்சியை நிரப்ப 
கண்டதெல்லாம் ஒரு மாயையோ 
ஒரு பொய்யோ என்று நினைக்க 
மலைகள் எல்லாம் உடைபட்டு 
கற்களாக மாற 
மாறிய கற்கள் 
பணமாக குவிய 
பசேலேன்ற நிலங்கள் 
புண்ணாக்காக திரிய 
மக்களை காச நோய் பிடிக்க 
இருமலும் சளியும் பாடாப் படுத்த 
தொடர் இருமலும் வலிமையான் இழுப்பும் 
வறண்ட பூமியும் வற்றின ஆற்றுப் படுகையும் 
வெறிச்சென்று தோன்ற 
செல்வச் செழிப்புடன் வாழ்ந்தான் 
கற்கள் ஆலையை உருவாக்கிய 
அதிபன் பழனிச்சாமிகண்ணேறு காழ்ப்பு உணர்ச்சி கலங்கின மனம்

கண்ணேறு என்று சொல்வார்கள் 
நான் எப்போதும் நம்பவில்லை 
வாயேத்தம் என்று கூறுவார்கள் 
நான் நினைக்கவில்லை 
காழ்ப்புணர்ச்சி என்று கொள்வார்கள் 
நான் எண்ணவில்லை 
வயிற்றெரிச்சல் எனறு ஆதங்கப்படுவார்கள் 
நான் எடுத்துக்கொள்வதில்லை 
எல்லாம் நம் மனதிலே தான் 
யாவையும் நம் பார்வையிலே தான் 
என்று கருதி வந்தேன் இந்நாள் வரை 
மாறியது மனம் ஒரு சந்தர்பத்தில் 
பெருமூச்சுடன் கொடுத்த சாபம் 
நடந்தது துரிதமாக 
கண்ணீருடன் அரற்றின சொற்கள் 
கச்ச்தமாக பலித்தன அப்பவே. 
அயர்ந்து நின்ற போது 
கண் பார்வையும் வாய் பேச்சும் எரிச்சலும் தகர்த்தன நல்ல உள்ளங்களை 
கெடுத்தன நிறைந்து வந்த கொடுப்பினையை 
அழித்தன துலங்கிய நற்பெருமையை 
மண்ணிலே புதைத்தன செல்வாக்கை அதிர்ச்சியுடன் கலங்கி நிற்கிறேன் செய்வதறியாமல்எப்போது புரியும்?

கட்டியங் கூறுகிறான் 
கட்டிளம் காளை 
வந்தேன் வந்தேன் 
என்று குரல் கொடுக்கிறான் 
பொருட்படுத்தவில்லை அவனை 
மிண்டும் குரலை உயர்த்தி அழைக்கிறான் 
கண்டு கொள்ளவில்லை அவனை 
சத்தமும் ஜால்க்கும் எத்தனை நாளுக்கு ? 
நடிப்பும் வெட்டி பேச்சும் எதற்கு? 
திமிரும் அதிகாரமும் நின்று பிடிக்காது 
புரளியும் வெட்டிப் பெருமையும் 
நிலைக்காது எப்போதும் 
அமைதி நிரந்தரமாக நீடிக்கும். 
அடக்கம் அமரருள் உய்க்கும் 
மந்திரமான தொடர்களை வெறுத்து 
போலியான நிகழ்வுகளை நமபி 
வாழ்கிறான் கட்டிளங் காளை 
கத்திக் கொண்டு ஆடிக் கொண்டு 
ஆர்ப்பாட்டமாக வலம் வருகிறான் 
எப்போது புரியுமோ ?விலைவாசி

விலையேற்றம் விண்ணைத் தொடுகிறது 
காய்கள் தாறு மாறாக விற்கப்படுகிறது 
அரிசி பருப்பு எண்ணை மும்மடங்காகியுள்ளது 
தங்கம் வெள்ளி விலையால் தக தகக்கின்றன 
பூமி , நிலம் அதிரடியாக விலை ஏறியுள்ளது 
எரிபொருள் சுர்ரென்று எரிக்கிறது 
எதை வாங்குவது . எதை விடுவது 
உணவுப்பொருட்கள் அவசியம் 
வீடு வாசல் மிகத் தேவை 
எரி பொருள் இன்றியமையாதது 
தங்கம் வெள்ளியை நினைக்காமல் இருக்கலாம் 
இன்று குடி நீர் கூட காசாகிறது. 
விலை வாசியாகி இருந்த காலம் போய் 
விலை வக்கிரமாகி விட்டது என்னவோ உண்மை,
குயிலின் இசை

காற்றோடு கலந்த வந்த 
குயிலின் இசை 
மழையோடு இணைந்து 
சன்னமாக ஒலிக்க 
பகலவன் தோன்றும் போது 
கேட்ட கீதம் 
நாள் பொழுதும் 
நின்று இதமாக வருட 
சுக போகமான இன்பம் நல்க 
ஓர் ஒளி மயமான காலத்தை 
சுட்டிக் காட்டுவது போல்அமைய 
ஒரு தன்னிச்சையான 
செயல் போலே தோற்றமளிக்க 
அந்த நிகழ்வு மிகுந்த 
சலனமே இல்லாத ஏறக்குறைய 
நிரந்தரமான இதத்தை 
நிர்ச்சலனமான அமைதியை 
அன்போடு அரவணைத்து 
முத்தமிட்டு அளிக்க 
இந்த் மகா அனுபவம் கொடுத்த ஆற்றல் 
மனதை இலகுவாக்கி 
புளாங்கிதமடைய வழி கோல 
அன்று முழவதும் ஒரு 
உணர்வு தன்னிலை மறக்க 
ஒஒரு குட்டிக் குயிலின் இசை 

என்று பலர் உதாசினபடுத்த 
என் போன்ற இசை பைத்தியங்களுக்கு 
அது தேவ கீதமாக பரவி 
நெஞ்சுருக வைத்தது. .எழுதுகிறான்

எழுதுகிறான் 
 

எழுதும் வழி 
வலியாகத் திரிய 
எழுதும் பொழுது 
இரவாக மாற 
எழுதும் நிகழ்வு 
சோர்வாகத் திரும்ப 
எழுதும் நிலை 
படுக்கையாகத் தெளிய 
எழுதும் எண்ணம் 
கனவாக ஊசலாட 
எழுதினான் வேகமாக 
ஆழ்ந்த உறக்கத்தில்.என் வெளிப்பாடு

தனித்து வாழ்கிறேன் 
தனிமையில் ஒரு இனிமை காண்கிறேன் 

எதிலும் ஒரு தனித்துவம் 
அதிலே ஒரு நிறைவு அடைகிறேன் 

பிறரை எதிர் பார்க்காத 
தனி வழிப் பயணம் போகிறேன் 

உதவியை நாடாத 
ஒரு உறுதியான ஏற்பாடு உள்ளடக்கினேன் 

தன கையை நம்பி 
வாழப் பழகிய நெருடலான் நேரங்களில் 

தன காலில் நின்று 

தன உழைப்பில் சம்பாதித்து 
கௌரவமாக வாழும் அனுபவம் பெற்றேன் 

எனக்கு எல்லாமே ஒரு சவால் 
வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றாகியபோது 

எதிர் நீச்சல் போட்டு 
தவ்வி தாவி குதித்து ஓடுகிறேன். 

வெற்றியை நோக்கி செல்கிறேன் 
கிட்டி விடும் என்ற உறுதியான நம்பிக்கையில் 

வாழ்ந்து விட்டேன் இந்நாள் வரை 
வாழ்வேன் சாகும் வரை.சுயமாகத் நிமித்தங்களை எதிர்கொண்டேன் 

ஞாயிறு விடிகாலைப் பொழுது

விடியலிலே வைகறைப் பொழுதிலே 
காகம் ஒன்று கரைந்தது 
இடை விடாமல் கா கா என்று 
விடிந்த சற்று நேரத்திலே 
குருவிகள் குரல் கொடுத்தன 
நொடிக்கொரு வினாடியில் 
சற்றுத் தள்ளி கழுதைகள் கத்தின 
சுருதி பேதத்துடன் 
எதிர் முனையில் குதிரைகளின் 
குளம்புச சத்தம் டக் டக் என்று 
ஒலித்தன தாள லயத்துடன் 
நாய்களோ செல்லமாக 
குரைத்தன விட்டு விட்டு 
தெருவிலே காய் விற்பவர்கள் 
காயோ காய் என்று 
இராகத்துடன் அழைத்தார்கள் 
தாய் குலமோ சமையலில் 
நிதானத்துடன் செயல்பட்டார்கள் 
குக்கரின் ஒலிக்கும் 
மிக்சியின் கரகரப்பான 
இரைச்சலுக்கும் நடுவில் 
ஆண்களோ செய்திதாளின் 
தலைப்புக்களை அலசி ஆராய்ந்து 
காப்பியை உறிஞ்சிக் கொண்டே ரசிக்கிறான் 
ஒரு அற்புதமான ஞாயிறு 
விடிகாலைப் பொழுதைதிருந்த மாட்டான்

திருந்த மாட்டான் 
 

திருந்த மாட்டான் அவன் 
சிறு வயதிலே வழி தவறியவன் 
பெற்றோர்கள் மூடி மறைத்து 
அவன் தடத்தில் விட்டு 
அவனை நெறிப்படுத்தாமல் 
தடம் புரள உதவி 
இளமையில் பெற்றவர்களையும் 
பின் கட்டின மனைவியும் 
பெற்ற குழந்தைகளும் 
அவனை மாற்றாமல் 
அவன் பின் சென்று 
பெற்றவர்கள் பணத்தைக் கொடுத்து 
வெளியே தெரியாமல் பாதுகாத்து 
மனைவியோ எது எப்படி போனால் என்ன 
எனக்கு செலவுக்கு கொடுத்தால் சரி 
குழந்தைகளோ தந்தையைத் தாண்டி 

மகளோ பலருடன் பழகி 
வீட்டை விட்டு ஓடி 
மகனோ நல்லவன் போல் நடித்து 
இல்லாத பழக்கங்களைப் பழகி 
இன்று தந்தைக்கோ பல குடும்பங்கள் 
மனைவியோ தனியாக வாழ 
பெண்ணோ வறுமையில் வாட 
பையனோ திமிருடன் திரிய 
குடும்பம் சின்னா பின்னாமகிவிட்டது. 
திருந்த மாட்டான் அவன்

பாதை மாறி 

அந்தோ பரிதாபம்

அந்தோ பரிதாபம் 
 

கடை வாயில் எச்சி ஒழுக 
கண்ணிலே நீர் வடிய 
காய்ந்த உதடும் 
சிந்தின முக்கும் 
சிடுக்குப் பிடித்த முடியும் 
கிழிந்த ஆடையும் 
அழுக்குப் படிந்த தேகமும் 
கொண்ட ஒரு சிறு பெண் 
சாலை ஓரத்தில் கிடந்தாள். 
மயக்கமுற்று 

நாதியற்ற குழந்தை அவள் 
தாயும் இல்லை 
தந்தையும் ஓடி விட்டான் 
அவளைத் தவிக்க விட்டு 
கேட்பார் யாரும் இல்லை 
பார்ப்பார் எவரும் இல்லை 
சோறும் இல்லை தண்ணீரும் இல்லை 
காய்ந்து சருகாகிப் போனாள் 
பூவாக மலர வேண்டிய பெண். 
அந்தோ பரிதாபம்மரணம் ஒரு பயம்

மரணம் ஒரு பயம் 
 

எது நினைக்காத போது வரும் 
எது நினைத்த போது வராது 
வெகு நேரமாகச் சிந்தித்தேன் 
அது மரணம் என்று தெளிந்தேன் . 


சிறு குழந்தையையும் தனியே விடாது 
இளம் வாயதினரையும் வாழ விடாது 
முதியவனை தவிக்க விட்டுச் செல்லும் 


வாழ் நினைபவனின் வாழ்வை பறித்து விடும் 
வாழ வெறுப்பவனை அணுகவே அணுகாது 
மரணத்தின் தன்மை அதுவே, 


மரணம் ஒரு புலப்படாத புரியாத நெறி. 
யாவரையும் உறுத்தும் உணர்த்தும் ஒரு ஐயம் 
மரணம் உண்டாக்குவது ஒரு பயங்கரமான் பயம்.பிரித்து ஆள்

பிரித்து ஆள் 
 

வேண்டியது கிடைத்த உடன் 
வேண்டாத நினைப்பு வந்தது 
வேண்டியவருக்கு ஒன்று 
வேண்டாதவருக்கு இன்னொன்று 
என்று பாகுபடுத்தி 
ஒளித்து மறைத்துக் கொடுத்து 
தெரியாமல் பங்களித்து 
பகையை வளர்த்து 
வெறுப்பை வரவாக்கி 
வெகுண்டு எழச் செய்து 
கெடுத்து குட்டிச் சுவராக்கி 
ஒன்று சேர விடாமல் நாசமாக்கி 
குழப்பத்தை ஏற்படுத்தி 
கலக்கம் உண்டாக்கி 
கலாட்டா பண்ணினான் 
பெருந் தலைவன் 
பிரித்து ஆள் என்ற கூற்றுக்கு 
வழி அமைக்க ஏதுவாகபோட்டி நிறைந்த போட்டி

போட்டி நிறைந்த போட்டி 
 

போட்டிகள் தான் வாழ்க்கையா 
தேர்வுகள் தான் வாழ்வா 
திருப்தி ஒரு வளமான 
சிந்தனை இல்லையா 
ஏன் எதற்கும் போட்டி ? 
பாட்டுக்குப் போட்டி 
ஆட்டத்துக்கும் போட்டி 
எழுத்துக்கும் போட்டி 
படிப்புக்குப் போட்டி 
விளையாட்டுக்கும் போட்டி 
வாழ்க்கைக்கும் போட்டி 
விற்பனைக்கும் போட்டி 
வாங்குவதற்கும் போட்டி 
உற்பத்திக்கும் போட்டி 
உண்பதற்கும் போட்டி 
அண்ணன் தம்பிக்குள் போட்டி 

மனம் விட்டு கேட்கிறேன் 
போட்டி இல்லாத 
களமே இல்லையா? 
உலகமே இல்லையா?பூமியின் விகாரம்

பூமியின் விகாரம் 
 

பஞ்சமும் பட்டினியும் 
காண்கிறோம் ஒரு பக்கத்தில். 
வெள்ளமும் சாவும் 
கண்டோம் மறு பக்கத்தில் 
யார் காரணம் இதற்கு 
என்று வினவுகிறோம் ? 
நீங்களும் நானும் தான் 
நம்மை போல் எத்தனை 
முகங்களோ இந்த 
பொலிவான பூமியை 
வளமான செழிப்பை 
அழகற்ற விகாராமான 
முகமாகக முயலுகிறோம்சருகாக உதிர்ந்த இலைகள்

சருகாக உதிர்ந்த இலைகள் 
 

இலைகள் சலசலவென்று காற்றில் 
அசைந்து ஆடின 
ஆடும் போதே ஒன்றிரண்டாக 
உதிர்ந்தன 
பழுப்பும் பச்சையும் கலந்து 
மண்ணில் பரவின 
பழுத்த இலைகள் மிகுதியாகவும் 
பச்சில இலைகள் குறைவாகவும் 
வீழ்ந்தன சருகாக 
நியதிகளை சீர் தூக்கின் 
வேறுபாடு விரியும் 
இயற்கையே மாறுபட்டு நிற்குங்கால் 
மனித இனம் அறிய 
முதியவர்கள் இறப்பதோடு 
பால் மணம் மாறா குழந்தைகளும் 
கண் இமைக்க மறக்க முடியம் போல் 
கேட்பதற்கு சங்கடம் 
பார்ப்பதோ துன்பம் 
நடக்கிறது கொடூரங்கள் 
நிறுத்த முடியாத தருவாயில்.ஆலிலைக் கண்ணன்

ஆலிலைக் கண்ணன் 
 

பாடினான் பரவசமாக 
ஆடினான் ஆனந்தமாக 
தன்னை மறந்து 
தன நிலை மறந்து 
ஆடிப் பாடினான் 

கண்ணீர் மல்க 
உதடுகள் துடிக்க 
இமைகள் படபடக்க 
மெய் மறந்து 
ஆடிப் பாடினான் 


ஆடும் போது 
கண்ணா என்று கூவினான் 
கேசவா என்று அழைத்தான் 
அவன் கண் முன்னே 
தோன்றினான் ஆலிலைக் கண்ணன் 
குழந்தை வடிவிலே