Thursday, October 10, 2013

என் வெளிப்பாடு

தனித்து வாழ்கிறேன் 
தனிமையில் ஒரு இனிமை காண்கிறேன் 

எதிலும் ஒரு தனித்துவம் 
அதிலே ஒரு நிறைவு அடைகிறேன் 

பிறரை எதிர் பார்க்காத 
தனி வழிப் பயணம் போகிறேன் 

உதவியை நாடாத 
ஒரு உறுதியான ஏற்பாடு உள்ளடக்கினேன் 

தன கையை நம்பி 
வாழப் பழகிய நெருடலான் நேரங்களில் 

தன காலில் நின்று 

தன உழைப்பில் சம்பாதித்து 
கௌரவமாக வாழும் அனுபவம் பெற்றேன் 

எனக்கு எல்லாமே ஒரு சவால் 
வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றாகியபோது 

எதிர் நீச்சல் போட்டு 
தவ்வி தாவி குதித்து ஓடுகிறேன். 

வெற்றியை நோக்கி செல்கிறேன் 
கிட்டி விடும் என்ற உறுதியான நம்பிக்கையில் 

வாழ்ந்து விட்டேன் இந்நாள் வரை 
வாழ்வேன் சாகும் வரை.



சுயமாகத் நிமித்தங்களை எதிர்கொண்டேன் 

No comments:

Post a Comment