கண் இமைக்கும் நேரத்திலே
ஒரு கோர விபத்து
பச்சிளங் குழந்தை கண் முட
தாயின் மடியில் தவழ்ந்த படி
தாயோ குழந்தையை அணைத்தப்படி
மரணத்தை தழுவ
தந்தையோ வண்டி ஒட்டியபடியே
நிலை தடுமாற
வண்டியோ முட்டி மோதி
அப்பளமாக நொறுங்க
போவோர் சற்றுக் கூட
உதவாமல் விரைய
இரத்த வெள்ளத்தில்
தாயும் மகளும்
துடி துடித்து சாக
கணவனோ நிலைக்குத்தி
புரியாமல் நிற்க
பெருஞ சாலையில்
நடந்த சேதத்தை
என்னவென்று சொல்ல
No comments:
Post a Comment