Friday, July 29, 2016

பன்முகத் தேடலிலே

பன்முகத் தேடலிலே
 கழிக்கும் காலங்களிலே
 தோன்றும் சூழ்நிலைகளோ

பலவாறு மனத்தை
உற்சாகப்படுத்தவும்'
 ஒரு நிலைப் படுத்துவதிலும்

அலக்கழிப்பதிலும்
 கூட்டணி அமைக்க
பட்டும் படாமல்

நல்லதை எடுத்து
 தீயதை விடுத்து
 கைக்கொள்வதிலும்

கையாள்வதிலும்
திறமை காட்டுவதே
நலம் பயக்கும்.
 

Monday, July 25, 2016

சந்திரனைக் கண்டேன்

மனிதன் எதை விட்டான்?
 சந்திரனை  விட்டு வைப்பதற்கு.

ஏன் சந்திரன் மட்டும்
சிரித்துக் கொண்டு
அழகாக ஒளிர்கிறான்
என்ற எண்ணம் மேலோங்க

துவங்கி விட்டான்
 அவன் தன முயற்சியை.

கட்டினான் ஓர் ஏவுகணையை
 ஏற்றினான் வீரர்களை .

சென்றார்கள், அடைந்தார்கள்,
நின்றார்கள், நடந்தார்கள்.
 திரும்பினார்கள்.

 எதை கண்டான் மனிதன் அங்கே ?

கோடிக்கணக்கான  பணம் விரயம்
உழைப்பு வீண், நேரம் வீணடிப்பு

மார்தட்டுகிறான்
விண்ணை அடைந்தேன்
 சந்திரனைக் கண்டேன் என்று.

 சந்திரனை  இருக்கும்  இடத்திலிருந்து
காணலாமே மகிழ்வோடு.

 

Friday, July 22, 2016

இருவருமே சகோதிரிகள்!

கேட்டலும் கேட்காததும் 
 தரு வதும்  தராததும் 
 அவரவர் விருப்பம்.

கேட்டு வாங்குவதை விட 
 கேளாமல்  கிடைப்பது மேன்மை.

 கேட்டவள் இன்று 
 பெருகி நிற்கிறாளா?

கேளாதவள் அதற்காக
 குறுகி நிற்பாளா?  

 அவள் தகுதி 
 அவள் நினைப்பு 
 அடித்துப் பறித்து 
 வாங்கினால் 
 சிறப்பு என்கிறாள் 

மற்றவளோ 
 தன்மையுடன் 
 கேட்டும் இல்லை 
என்ற போது 
விலகுவதே
 நயம்   என்கிறாள்.

 இதில்  ஓர்  அழகு 
இருவருமே 
சகோதிரிகள்!


 
  

Wednesday, July 20, 2016

பச்சை

நிறங்களில் பச்சை
 பெருமிதம் கொண்டு
 அலங்காரமாக நிற்கின்றது.

  பிறந்த குழந்தையை
 பச்சை மண் என்று
 சிலாகிக்க!

செழித்து  வளரும்
 அழகை பசுமை என்று
போற்ற!

சற்று மாறாக
அப்பட்டமான  
பொய்யை
பச்சைப்  பொய்
 என்று கெக்களிக்க.

பசுந்தாழ், பசலி,
பசுமை, என்று
 வளமை  காணும்
அழகே  அழகு.


 

Monday, July 18, 2016

அன்பும், பண்பும்

அன்பால் வெல்லலாம்
 அன்பால் இழக்கலாம்

பண்பால் அடையலாம்
புகழை
பண்பால்  தொலக்கலாம்
பெருமையை .

 தக்கவரிடத்தில் அன்பு
வழி கோலும் சிறப்பை  .

தகாதவரிடத்தில் அன்பு
 வழி  விடும் கேட்டை.

நற்பண்பு தூக்கி  விடும்
 உயரத்திலே.

நன்னெறி நிலைத்து விடும்
 தன்னாலே.

மாறிய  பண்பு அலைக்கழிக்கும்
  வேகமாகவே.
 
மாற்றிய  நேரத்தில்
மறுத்தளிக்கும்   நன்மையை
கொடுத்தழிக்கும்  கொடுமையை.கை வலிக்க எழுதினால்

கை வலிக்க எழுதினால்
 மனம் வலி குறைகிறது.

மனம் துடிக்க நேர்ந்தால்
 இதய  வலி அதிகமாகிறது.

இதயம் இயக்க மறுத்தால்
 உயிர் பலியாகிறது.


உயிர்  பிரிந்தால்
  ஏதும்  யாதும்  எதுவும்  
அறியாது.

 குமுறல்கள் குறுகி விடும்.
 உண்மை மரித்துப் போகும்
 உடல் மணணோடு   புதையும்.

Saturday, July 16, 2016

சிறந்த உபாயம்.

வானத்தில்  பறக்கும் மனம்
வானத்தையே  எல்லையாகக்
கொண்ட  எண்ணம்


கீழே  இறங்கி வராது
 பெரிதாகவே  நினைக்கும்
 பெருமிதமாகவே பேசும்.

எதிரில் இருப்பது தெரியாது
அறியும் உயரே  பறப்பதை.

 தன்னை நிகழும்  காரியங்கள்
 தாக்காது   பார்க்கும் வகை
 ஒரு விதமான   ஆடுபுலி ஆட்டம்

கண்ணை   திறந்த கொண்டே
 தியானிக்கும்  வழக்கம்
ஒரு அற்புதமா ன்  வித்தை
 ஒரு கண்கூடான விலகு.

கை கூடி னவுடன்   சேர்ந்து
தன்னை முன் நிறுத்துவது
ஒரு சிறந்த  உபாயம்
ஒரு ஆற்றலான  திறன்.
Friday, July 15, 2016

ஆடிப் பட்டம்

ஆடி தேடி  பயிரிட  
 ஆடிப்  பட்டம்  கண்டு
விதை.

பழமொழிகள் பல
ஆடியின்  புகழ் பாட
 பெருகி பெருக்கி
 வளம்   கண்டிடும்
 மாதம் ஆடி.

பயிர் பச்சை
 உயிர் பிச்சை
 என்பது போல

ஆடியில்  பயிர்கள்
 விளம்பிட
  தம்பதியர்கள்
 பிரிந்திட
 ஒரு காணல்
ஏறக்குறைவாகத்  தோன்ற.

 ஏன்  எதற்கு  இவ் முரண்பாடு
 என்று நோக்க
 புரிவது போலும்
புரியாதது போலும்
ஓர் இனம்  அறியாத
 உணர்வு எழ.

பழக்கங்கள்  காரியத்தின்
 பின் தொடர்பே!
 ஆராய்ந்து  அறிவது
 சாலச்  சிறந்தது
என்று கொள்வோமாக.
 
Thursday, July 14, 2016

அவன் நிலை

 கருப்பைய்யா    பேசுகிறான்
பன் மாதிரியாக .

விதண்டா வாதம்
 பேசுகிறான்  விழைந்து

அன்று நடந்த
 சாதாரண  நடப்பை
 மிகைப் படுத்திப்
 பேசுகிறான்  காரணமாக

அவனாகப் பேசவில்லை
 பின்னால் ஒருவன்
உந்துதலினால்

தெரியும்  அவன்
 விளையாட்டு
 தெரிந்தே
 சந்திக்கிறேன்
அவனை.

அவன் நிலை
மாறாது  நின்றான்
 எனின்
அவல நிலை
 தானே வந்து
 நிலைத்து விடும்.
  

Monday, July 11, 2016

நெடு நேரம் கண்டேன்

நெடு நேரம் கண்டேன்
 நெடு நேரமும் 
 வியப்புடன்.

  நன்னாளில்   நடக்கும் 
 நற்பொழுதில் துவங்கும்  
விடிந்தும் விடியாததும் 
 தெரிந்த  வித்தியாசங்களை  
கண்டு அதிர்ந்தேன்.

உடல் நலம் குன்ற 
 வலி வந்து அமிழ்த்த 
 நிலை குலைந்து நிற்கிறான் 
நாயகன்.

அறிந்தும்  நாயகி 
சீண்டுகிறாள்   அவனை.

உடல் வலியும்  மன வலியும் 
 அவனை படுத்த 
 நாயகன் மயங்கினான் 
பரிதாபம்! பாவம் 
  
    

Saturday, July 9, 2016

மானம் எது? மானம் ஏது?

மானம் எது?
 மானம் ஏது?

கேள்விக் கணைகள்
 என்னைத் தாக்க
 நிதானிக்கிறேன்  சற்று.

எது என்பதற்கு
 என்ன விடை?

நேர்மை, ஒரு சொல்,
பிறழாத தன்மை
தவறினால்  மன்னிப்பு
அடக்கம்,  அருள்
 என்பது மானம்.


ஏது  என்ற போது
என்ன பதில்?

பொய், புரட்டு
புறங்கூறுதல்,
 வார்த்தை மாறுதல்,
 விலை போகுதல் 
என்ற போது
 மானம்  எங்கு
கண்டோம்.

மானம் பெரிது
 என்ற காலம் போய்
 பணமே  சிறப்பு
என்ற
 நேரம் இப்போது.

  


Thursday, July 7, 2016

எவ்வழியில் பெருக்கினான்

பணம் பத்தும்  பண்ணும்
 என்பது அவனுக்கு
 முற்றும் பொருந்தும்.

 எளிய குடும்பத்தில்
 பிறந்தும்  அவனுக்கு
 அதில் ஏற்றமில்லை.

ஏற்றம் அடைந்தான்
 படிப்பாலே  ஓரளவு
ஏற்றம் எனில்
பணத்தாலே!

 திறமை  என்று நோக்கும் போது
 பெரிதளவு  அவனிடம்
காண முடியாது. 

எவ்வழியில் பெருக்கினான்
 என்பது அவனுக்கே
 வெளிச்சம்.

 
  பணத்தை கண்டவுடன்
 அடக்கம் அற்றுப்போய்
 அடங்காமை தலை  தூக்க
 ஆடுகிறான்  ஆடுகளம்
மிக அழகாக.

Wednesday, July 6, 2016

என்ன ஒரு பெருமை!

வந்தமர்ந்தான்  அழுத்தமாக
நோக்கினான் மேலும் கீழுமாக
 பேச்சை ஆரம்பித்தான்
  அமர்க்களமாக

 அது அப்படி இது அப்படி
 என்று அளந்தான்
 பெரும் பணம் புரண்டோட
வாழ்கிறான் போலும்.

நின்றேன்  சற்று நேரம்
 மெதுவாக அவனை
 கிளப்பினேன்.
புரியாமல் பேசிக்கொண்டிருந்தான்
 நேரம் போவது தெரியாமல்
 தாங்காமல்  கை எடுத்துக்
 கும்பிட்டேன்.

 என்ன ஓர் ஆணவம்!
 என்ன ஒரு பெருமை!Saturday, July 2, 2016

முல்லை.

ஒரு சிறு அலட்டல்
 ஒரு சிறிய  பகட்டு
 என்று இல்லாமல்
 தனித்துவமாக
 அமைதியின்  மறு
பதிப்பாக
 திகழ்கிறாள்
 முல்லை.

பெயர்க்கு  ஏற்றவாக 
மிருதுவான கனிவும்
அதிராத பேச்சும்
ஆழமான  சிந்தனையும்
 அழகான  நடையுமாக
 வலம் வரும்
 முல்லை.

யாவரும் விரும்பும்
 ஒரு அறிவு  மிகுந்த
 பெண்மணியாக
 அறிமுகமாகிறாள்
 முல்லை.


Friday, July 1, 2016

தீர்ப்பு சொல்பவன்

தீர்ப்பு  சொல்பவன் 
 தீர  விசாரித்து 
 ஆராய்ந்து  
 எப்பக்கமும் சாராது 
 நியாயம்  வழங்குவதே 
 சிறப்பு.


தீர்ப்பு  கூறும் 
ஒருவன் 
சொந்தம் என்றால் 
பொறுப்பிலிருந்து   விலகி 
விட்டு

அன்பு 
ஒருவனிடம்  மிகுந்தால் 
மற்வறொருரிடம்  ஒப்படைத்து 
 ஒதுங்க வேண்டும்.

இல்லாமல் விடாது 
கொம்பை 
பிடித்த்துக் கொண்டே இருந்தால்
ஒன்றும் ஆகாது. 
.அநியாயத்துக்கு துணை போய்.

வாழ்கிறான் அவனும்
 நன்றாகவே.

நியாயம் இல்லாமல்
 நியதி அற்று .

 செல்வம் நிறையவே
என்னிடம்  என்று  பேசிக்கொண்டு .

அவனுக்குத் துணை
நான்கு பேர்.

கூடவே  சென்று குலவி
 கூத்தடித்து  கெடுத்து

 வாழ்கிறார்கள் அவர்களும்
அவனோடு
அநியாயத்துக்கு
 துணை போய்.