Sunday, January 31, 2016

காதல் காதல்

காதல் காதல் என்று சொல்வது
 காதல் இல்லையேல் சாதல் என்பது
 ஒரு புரியாத   புதிர்


அன்பு பெருகும் போது  உணர்வு
 சற்று கூடுதலாக வேலை செய்ய
மனதை ஒரு வழியில் விடாமல்  இழுக்கமனிதன் தன வசம் இழக்க
அறிவு  சில பொழுதுகளில் தடுமாற
 மனம் கொள்ளா ஆட்டம்  தொடங்க


அந்த ஈர்ப்பு  அந்த  வலிமை
 அந்த நேசம்  அந்த பிணைப்பு
 காதலாக வடிவெடுக்க

உணர்ச்சிகள் மேலோங்க
 அழகு ஒரு வகையில்
 மனதில் ஆர்பரிக்க

அன்பு மற்றொரு வழியில்
 மனதை ஆட்டுவிக்க
அறிவும் சளைக்காமல்
மனதை  வம்பிழுக்க


மனது   வயப்பட்டு
காதல் காதல் என்று புலம்ப
 சாதலும் இடம் பெற்று
 ஒரு துயரம்  அரங்கேறுகிறது.

உறவினர்கள் பல விதம்.

உறவினர்கள்  பல விதம்.

 கை கோர்த்து செல்பவர்கள்
 வெகு குறைவே
கையை  உதறி  விடுபவர்கள்
மிக நிறையவே.

கையைத்தட்டி பாராட்டுபவர்கள்
வெகு குறைவே
கை கொட்டி எள்ளி நகையாடுபவர்கள்
மிக நிறையவே .

கைக்கெட்டும்  தூரத்தில் இருப்பது
வெகு பாதகம்
கண்ணுக்கு கெட்டாத  தொலைவில் இருப்பது
 மிக நயம்,

பலர் கால் தடம் பட்டால் சிறக்காது
பொசுங்கும்  அப்போதே.
சிலர் கால் பட்டாலே பொங்கும்
சீரோடும்  செனத்தியோடும்

கண்ணாலே கொத்தி  குதறி  கொன்று
விடுவார்கள் பலர்
கண்ணாலே வாழ்த்தி வருடி போற்றி
 புகழ்வார்கள் சிலர்.

கைகளும் கண்களும் வெறும்
உறுப்புக்கள் மட்டும்  அன்று
கரங்கள் கொடுக்கும் கெடுக்கும்
கண்கள் வாழ்த்தும் வாட்டும் .


அறிந்து கொள் நல்ல நேரத்திலே
 அளித்துப் பேருவகைப்படு
 அழித்துச்  சிதறவிடாதே
 


Saturday, January 30, 2016

இசையின் திறன் அதுவே.

பாட்டு ஒன்று கேட்டது
 வெகு தொலைவிலிருந்து
காற்றோடு கலந்து
 தவழ்ந்து வந்து
 செவியுடு உரசியது.


 மொழி தெரியவில்லை
 ஏறக்குறைய நின்றேன்
 ஒரு மணி நேரம்
 அசையாமல் அங்கு
கால் வலியை மறந்து


 மனம் ஒன்றி
 பார்வை  நிறுத்தி
 உடல்  பொருந்தி
 நின்றேன் சிலையாக.
என்னை மறந்து


தென்றல்  முகத்தில் வருட
 இசை நெஞ்சைத்   தொட
 மெய் மறந்து  நிற்கிறேன்
 அடித்த கல்லைப்  போல
கண்ணில் நீர் வழிய

கல்லும் கசிந்துருகும்
 கொடியவனும் மாறுவான்
 நோயும் குணமாகும்
மனத்தைச் சுண்டும்
இசையின் திறன் அதுவே.Friday, January 29, 2016

பால் வெள்ளை

வெண்மையைக் கண்டு மயங்கினேன் 
பால் வெள்ளை என்று சொல்லவா 
என்று நினைக்கையில் 
வெள்ளை மனம் கொண்ட என் தோழி 
தோன்றினாள் தன்னிச்சையாக . 

அவள் நிறம் பால் வெள்ளை 
மனமோ அதை விட வெள்ளை 
வெளுத்ததெல்லாம் பால் 
என்று நினைப்பவள் . 

அவளின் இந்த நிலைக்கு 
ஒரு பழிப்பு வந்தது எதிபாராமல் 
சுற்றம் அவளை பந்தாடியது 
அவளின் பால் மனம் மாறா நிலையை 
பணயம் வைத்து 

சில நாட்கள் புரியாமல் இருந்தாள் 
பின் மாறினாள் நெருப்பாக 
கொளுத்து விட்டு எறிந்தாள் 
பரவினாள் தீயாகச் சுட்டாள் 
நடுங்கினர் சுற்றத்தார்கள்.


பாலும் நிறம் மாறுமோ ? 
பால் மனமும் சுடுமோ? 
அதிர்ந்தார்கள் பேசினவர்கள் 
பால் கொதிக்கும் , பொங்கும் 
மறந்து விட்டார்கள் போலும

Thursday, January 28, 2016

செங்கல் ஒன்று கண்டேன்

செங்கல் ஒன்று கண்டேன்
ஊர்க் குப்பையிலே
 கேட்பாரற்று

செங்கல் ஒன்று குப்பையிலே
 ஒரு காலம் அழகான் கட்டிடத்திலே
 இன்று கேட்பாரற்று.


செங்கல் ஒன்று வீ தியிலே
 ஒரு பொழுது ஒரு கோபுரத்திலே
 இன்று  கேட்பாரற்று.செங்கல் ஒன்று  பெயர்ந்து
ஒரு வேளையில் ஒரு மாளிகையில்
 இன்று கேட்பாரற்று.

செங்கலின்  விதி  மாற
 புகழுடன்  வாழ்ந்த காலம் போக
 இன்று கேட்பாரற்று .


செங்கலுடன்  மட்டும் போகாமல் 
மனிதனும் பிறனும்  உட்படுத்த
 நீயும் நானும் கேட்பாரற்று.

  


 

சமையல் கலைஞ ர்கள்

சமைத்தார்கள் சமையல் கலைஞ ர்கள்
 கூடம் நிரம்பி நின்றார்கள் கூட்டமாக அனைவரும் 
  குழம்பை கெடுத்தார்கள்  கொதிக்காமல்.

Wednesday, January 27, 2016

நன்னூல் கையில் அவனிடம் .

நன்னூல் கையில்  அவனிடம் 
 எதற்கு என்று எனக்கு  சற்றுப் புரியவில்லை 
நல்லதே செய் யாதவனுக்கு  எதற்கு?

மெய்யன்

நிலை மாறி பேசுகிறான்
 மெய்யன்
 தன்  நிலை அறியாமல்


தடுமாறுகிறான்  அனர்த்தமாக
மெய்யன்
 தன்  நிலை மறந்து

தான் தான் என்று மார்தட்டுகிறான்
மெய்யன்
 தான் யார் என்று தெரியாமல்


எல்லாம் தெரிந்த பரமாத்மா  போல்
 மெய்யன்
 எண்ணுகிறான் தன்னை


குறையே கண்ணில் படுகிற
மெய் யனுக்கு
 தன குறை தெரியவில்லை


பேசுகிறான் விலாவாரியாக
மெய்யன்
 முறை முறையல்ல என்று.


பேசுகிற உரிமை யாவருக்கும்
மெய்யன்
 தெரிந்து கொள்ள வேண்டும்

கதிரவனும் சந்திரனும்

கதிரவனும் சந்திரனும்
 தங்கள் வேலையை
 காலையும்  மாலையும்
 என்று பிரித்துக் கொள்ள

 பகலவன் கா லை நேரம்
 சற்று அடக்கி   வாசிக்க
 உச்சிப்    பொழுதிலே
உச்சமாக  ஒளி  வீச


மாலைப் பொழுதிலே
வேகத்தை  குறைத்து
 பின் ஒரேயடியாக
 மறைந்து  விட

வருகிறான் சந்திரன்
 கோலோச்ச  குளுமையாக
 அழகு நிலாவே என்று
 அழைக்கத் தோன்ற


ஒரு வித்தியாசமான
வழக்கம் பழகினான்
 அரை மாதம் வளர
 அரை மாதம் குறைய

என்னே ஓர் அதிசயம்
 நிலாவும் தன அழகிலே
 ஞாயிறும் தன
 ஒளி  வெள்ளத்திலே .


மனிதனுக்கு இரண்டுமே
 கண்கள் போல
 விலை மதிக்காத பரிசு
என்றே  கொள்வோமாக

Tuesday, January 26, 2016

என்னோடு பேசுவதே

என்னோடு பேசுவதே
என்னோடு போக்கு
கேள்வியும் நானே
 பதிலும் நானே .

 கோபத்தில் சிடுசிடுத்து
சிரிப்பில் கலகலத்து
 துன்பத்தில் அழுதழுது
 ஆத்திரத்தில்  படபடத்து
 மகிழ்வில் துள்ளித துள்ளி.

என்னுள்ளே எழும்
 ஒலிகளும் ஓசைகளும்
 பலவாறாக வெளி வந்து
 பேசுகிறேன் இன்றும் அன்றும்
அன்று என் தாய்க்கு ஒரு பயம்
 மகளை  பைத்தியம் என்று
எண்ணுவார்களோ என்று.இன்று அவள் இல்லை  விசனப்பட


 தொடர்ந்து   பேசுகிறேன்
என்னுடன் ஆனந்தமாக
 கோபம் குறைந்து ,
ஆத்திரம் மட்டுப்பட்டு
சிரிப்பு  உதட்டில்  மட்டுமே
இன்று.


 துன்பம் கணடு  கலங்காது
என்னுள் எழும்  தாபங்கள்
அடங்கி தாகங்கள் குறைந்து
மௌனமாக அளவளாவிறேன்
என்னோடு என்னோடேயே.
வேலை வேலை

வேலை வேலை என்று அலைகிறாள்
 ஓடுகிறாள் இங்கும் அங்கும்  பல முறை
 எதற்காக அவ்வாறு?
 தெரியவில்லை யாருக்கும்.


 வேலையிலே   மும் ரமாகக் காணப்படுகிறாள்
 அது  போலிருப்பது இருப்பது அவள் வழி
 எதற்காக அவ்வாறு?
 தெரியவில்லை  யாருக்கும்.


 வேலை வேலை என்ற ஒரு பாவனை
அம்மாதிரி நடப்பது அவள் பாணி
 எதற்காக அவ்வாறு?
 புரியவிலை எவருக்கும் .

வேலை அவளுடைய சொல் போல
அது ஒரு தப்பிப்பது போன்றது
 எதற்காக அவ்வாறு ?
 புரியவில்லை எவருக்கும்.

தந்திரம்

தந்திரம் பல் நேரங்களில்
  அமோக வெற்றியை  எளிதாகத்  தேடித் தரும்
சிலபொழுது  தோல்வியையும் கூட

Monday, January 25, 2016

ஒரு பெண்ணைப் பார்த்தேன்

ஒரு பெண்ணைப் பார்த்தேன்
 பேச்சில் ஒரு நயமில்லை 
பார்வையில் ஒரு கனிவில்லை 
 நடையில்  ஒரு நளினமில்லை 
திமிர் தலை தூக்கி நிற்க  
அடம் நிலை கொள்ள மறுக்க 
 புறத் தோற்றத்திலும்  கண்டேன்  
 சற்று எதிர் மறையாக 
 தாட்டியும் உயரமும் 
 சற்றுக் கூடுதலாக 
 என்னால்  கேட்காமல்  
 இருக்க முடியவில்லை 
 மெதுவாகக் கேட்டேன் 
 உன் பெயர்  என்னம்மா? 
என்று  அதிகாரக் குரலிலே 
 சொன்னாள் அழகு  என்று. 

என் வீட்டுக் கூரையில் ஒரு பூனை

என் வீட்டுக்  கூரையில்   ஒரு பூனை
ஏறவும் இறங்கவுமாக 
 காலை  முதல் மாலை முடிய 
 வெகு வேலையாக

அதின்  மியாவ்  என்ற குரல் 
 ஒலிக்க கூடவே சில நேரங்களில் 
 குழந்தையின் அழு குரலும் கேட்க 
தடுமாறினேன்  சற்று.


 எங்கிருந்து வருகிறது அழுகை 
 குழந்தைக்கோ வேலை இல்லை 
 இரண் டு பேரைத் தவிர வேறு ஆள்  
அரவம் இல்லை. என்று குழம்ப 


அறிந்தேன் பின்னர் அது பூனையின் 
 மாறாட்ட ஒலி  என்று என்ன
 ஒரு குறும்பு என்று  வியந்தேன் 
என்னுள்ளே ஒரு சிரிப்பு.

 பூனைக்கு வந்தது ஒரு விருந்து 
 முரடாக  மீசையுடன்  முறுக்காக 
 இரண்டும் மாலையில் ஒரு சுற்றுலா  
என்று ஏகக் கொண்டாட்டம்.


இரவில் இரண்டும் என்   ஒட்டுக்  
கூரையில்தட தட வென்று ஓட  
மிரண்டு போனேன்  ஏகமாக 
 என் பாடு படு திண்டாட்டம் .

ஒரு நாள் மனிகூண்டை பார்க்கவும்
மறு நாள் ஆற்றுப் படுகையை  காணவும் 
 அடுத்த நாள் செம்பனை தோட்டத்தை 
 பார்வையிடவும்  சென்றன் மும்மரமாக . 
என்னே ஒரு ஈ டுபாடு  வேலையில் .

விடை பெறும் நாள் வந்த விட்டதோ 
தயங்கி நின்று எட்டிப் பார்க்கறேன் 
 இருவரும் கட்டித் தழுவி பிரியா விடை
 கொடுக்க நான் பெருமுச்சு விட்டேன் 
 அப்பாடா  என்று  வெகு நிம்மதியாக.இடுக்கண் வருங் கால் நகுக

அபாயங்கள் எங்கிருந்தாலும்
எந்நேரத்திலும்  எத்திக்கிலும்
 வந்து படுத்தும்  அப்பப்போ.


வலிமை மிகுந்த மேலை
 நாடுகளிலும்   தொன்மை வாய்ந்த
 கீழை  நாடுகளிலும்  அவை தாக்க

விஞ்ஞானமும்   செல்வமும்
 கொழிக்கும்  அமெரிக்காவில்
 பனிப் புயல்   கடுமையாக வவீச

 நிலை குலைந்து  நடு நடுங்கி
அடைந்து கிடந்தனர் மக்கள்
 இரு நாட்களாக.


சற்று ஏறக்குறைய  இரண்டு
 மாதங்களுக்கு முன சென்னை
வெள்ளத்தால்  உருக்குலைந்தது. 

பேரிடர் வருவது  நாள் பார்த்து
 நேரம் பார்த்து ஆள் பார்த்து
அல்ல என்பத தெளிவு .

நிர்ச்சலனமான உண்மைகள்
 மனதில் நெருட   வெகு நேரம்
மனம் வேதன்ப்படுகிறது.


இடுக்கண் வருங் கால் நகுக
என்று சில இடையூறுகளைத்  தள்ளிக்
 கொண்டு செல்ல வேண்டும்.

காரண காரியங்களை 
 ஆராய்ந்து  கொண்டிருந்தால்
 நேரம் வீண்

Sunday, January 24, 2016

உன்னதமான் கலை

கலையின் பிறப்பிடம்   எங்கு
 ஆராயும் போது  தோன்றிய 
 சில பல எண்ணங்கள் 
 ஒன்றொன்றாக தொகுத்து
கண்டேன் முடிவை.

அறிவும்  இதயமும் 
 ஒன்றுக்கொன்று 
 போட்டியிட   நின்றேன் 
சற்று நேரம்  அசையாமல் 
தொடர்ந்தேன் என் வழியிலே.

மனம்  தான் என்று 
 மேலோங்க  அறிவை 
ஆசுவாசப்  படுத்த 
முயன்றேன்  பல முறை 
 வலி மிஞ்சியது .


போகட்டும்  அது எப்படியோ  
இதயம் பொறுத்து  வெளி வரும் 
சிற்பமோ, எழுத்தோ,
ஓவியமோ , இசையோ 
தன்னிகரற்று திகழும். 

உள்ளிருந்து வரும் 
 உணர்ச்சிக் குவியல் 
 வெள்ளம் போல் 
உடைப்பெடுத்து பீறிட 
 கலையை வடிக்கிறான்  கலைஞன்.

அவனின் தூரிகையில் 
 வண்ணமாகக்  கொணர்ந்து 
எழுத்தில் காவியமாக 
வெளியிட்டு  இசையில் 
தெய்வீகமாக   எழும்பி 
உன்னதமான்  கலை 
 படைக்கிறான்  திறனோடு.  

  

தரையில் போடப்படும் கல்லிலே

தரை தளத்தில்  ஒரு கற்பனை
 மஞ்சள் பூக்களும்
 சிகப்பு பூ க்களும்
 அடர்த்தியில்லாமல்
 நேர்த்தியாக.

 நான்கு கற்களில்  ஒரு
 பூ விரிகிறாற் போல்
மொட்டவிழ்ந்து  மலராகும்
  அதீத தருணத்தை
மென்மையாக


வரை தீட்டுகிறான்
 கலைஞன்  தரையில்
போடப்படும் கல்லிலே
எங்கும் நோக்கின்
 மலர் கமபளமாக .


மஞ்சள் மங்களத்தையும்
 சிகப்பு   பூரிப்பையும்
அள்ளித் தெளிக்க
 கண்டேன் ஒரு
 அதிசயமான   கற்களான
தரை விரிப்பை


Saturday, January 23, 2016

கல்வெட்டு ஒன்று கண்டேன்

கல்வெட்டு  ஒன்று கண்டேன்
 அளவாக அழகாக்
 வேண்டியதை எடுத்தியம்பி
 சாட்சியாக நிற்க
வரலாறும் தேதிகளும்
 நினைவுக்கு  வர
பறை சாற்றும்  விதம்
 அமைந்த கல்லினால்
 ஆன  பலகையில்
 எழுத்து   ஓவியமாக
 கண்டேன் இன்று .

தோன்றாதோ இம் மாந்தருக்கு.

மகன் என்றால் ஒரு சிரிப்பு 
 மகன் பிறந்து விட்டான் 
என்றால் ஒரு களிப்பு 
 குல ம் தழைக்க  வந்த 
அரசே என்ற ஒரு பூரிப்பு .

மகள் என்றால் ஒரு வெறுப்பு 
 மகள் பிறந்து விட்டாள் 
 என்றால் ஒரு சலிப்பு 
 அகண்ட சொத்துக்கு 
 ஒரு வினை என்ற கடுப்பு .

என்று மாறுமோ இந்த 
வேறுபாடு பெண் என்ன 
 ஆண்  என்ன இருவரும் 
 சமமே என்ற எண்ணம் 
தோன்றாதோ  இம் 
 மாந்தருக்கு.

Friday, January 22, 2016

எதவாக இரு என்று

ஆண்டுகள் பல கடக்க 
குமரி கிழவியாக 
நினவு கூர்கிறாள் 
தன் மண நாளை. 

பெண் அழைக்கும் நேரம் 
தாய் தன் மகளின் கையை 
பிடித்து சொல்கிறாள் 
எதவாக இரு என்று. 

பெண்ணும் தலையை 
பலமாக ஆட்டுகிறாள் 
எதும் புரியாமல் 
கண்ணீரை அடக்கிய படி. 

அவள் நான் தான்

எதவாக என்ற சொல் 
ஆயிரம் பொருள் 
உள்ளடங்கியது என்று 
தெரியவில்லை அன்று. 

எதவாக என்ற போது 
பார்த்துப் பதிவசாக 
பொறுத்துப் பொறுமையாக 
என்று கொள்ள விளைந்தேன் 

அதே போது சொன்ன விதம் 
கவனமாக வாழ்க்கை 
நடத்து விட்டுக் கொடுத்தும் விட்டுக் 
கொடுக்காமையும் என்று அறிந்தேன் . 

ஆண்டுகள் பல் கடக்க 
என் தாயின் ஒரு சொல் 
பல விதப் பொருள் அளிக்க 
நினைக்கிறேன் பெருமிதத்தோடு. 

வாழ்கையில் பல இன்னல்கள் 
பல போராட்டங்கள் 
எதவாக எதிர்கொண்டேன் 
பெருமையுடன் பார்க்கிறேன் 
என்னையே

 

நான் கண்ட அருமை

ஒரு மலரின் மலர்ச்சி மனத்தை அள்ளும்  
ஒரு குழந்தையின் சிரிப்பு கொள்ளை கொள்ளும் 
 ஒரு  ஓவியம் மனத்தை உருக்கும்
ஒரு நேர் த்தியான கட்டிடம்  வியக்க வைக்கும் 
 ஒன்றுக்கு ஒன்று போட்டிபோடும் 
 இர அழகா அது பேரழகா என்று தோன்றும் 
 ஒன்றே ஒன்று யாவற்றையும் விட்டு 
விடுபட்டு நிற்பது இனிமை பொங்குவது 
 எது என்று கொள்வீர்கள்  
 நான்   கண்ட அருமை  ஒன்றே ஒன்று தான் 
 எது என்று புரிந்திருக்கும் என்ற நினைக்கறேன் 
 இல் லையா இது வரை  தெரியவில்லையா 
சொல்லி விடுகிறேன்  துரிதமாக 
 குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு.


பாட வந்தான் கவிஞன்

பாட வந்தான் கவிஞன் 
பாடவேயில்லை 
அலைமோதிய கூட்டம் 
ஆவலோடு நோக்க 
வாளாவிருந்தான் 
கவிஞன் 

மெய்மறந்து எங்கோ 
பார்த்தப்படி இருந்தான் 
மணித்துளிகள் மணி 
நேரமாக கண்கள் nilai 
குத்தியபடி இருந்தான் 
கவிஞன். 

மக்களும் பொறுமையு டன் 
காத்திருக்க 
சட்டென்று கவி உற்று 
வெள்ளமாக 
பெருகி வர ஆனந்தம் 
பொங்க ஆராவாரமின்றி 
மனிதத் திரள் அமைதி காண 

கவிஞன் உணர்ச்சி 
பெருக்குடன் 
பொழிந்தான் தமிழை 
எதுகை மோனையுடன் 
தமிழ் கவிதை அழகாக 
நடை பயின்றாள். 


நடையா அது 
சுழன்றாள் சுற்றினாள் 
ஓடினாள் ஒம்பினாள் 
கொண்டாடினாள் 
கூத் தாடினாள் 
அழுதாள் ஆவேசமானாள். 

கவிஞன் விம்மினான் 
விதர் விதர்த்தான் 
கொஞ்சினான் 
சிணுங்கினான் சிலிர்த்து 
எழுந்தான் பின் சட்டென்று 
அடங்கினான் 
அமைதியுற்றான்.

Thursday, January 21, 2016

கவிதை பாடி வந்தேன்

கவிதை பாடி வந்தேன்
பிழைப்புக்காக  அல்ல
 கவிதை பாடி வந்தேன்
கூலிக்காக அல்ல
கவிதை பாடி வந்தேன்
 புகழு க்காக அல்ல
கவிதை பாடி வந்தேன்
 பெருமைக்காக அல்ல
 கவதை பாடி வந்தேன்
 எனக்கே எனக்காக


Wednesday, January 20, 2016

ஒரு விளையாட்டுப் பொம்மையாக

சிட்டுக் குருவி  என்னுடயை  சாளரத்தில்
வந்து அமர
எதோ சேதி சொல் வந்திருக்கிறதோ
 என்று நான் எண்ண
அது என்னை  சற்றுக் கூட கண்டு
 கொள்ளவில்லை

ஆற அமர அது அழகாக தன்னை
 நிறுத்திக்  கொள்ள
 எதோ காரணமாகத்  தான் வந்திருக்கிறது
 என்று நான் கருத
அது  என்னை சற்றுக் கூட கண்டு
 கொள்ளவில்லை .


தன அலககால்   சாளரக் கட்டையை
இடை விடாமல் கொத்த
ஏதடா  இது வம்ப்பாகிப் போனதே
என்று நான் பதற
அது என்னை சற்றுக் கூட கண்டு
கொள்ளவில்லை,

தேக்கு மரத்தி லான கட்டையும் பொல பொலவென்று
கிழே கொட்ட
ஏய், ஏய், என்று விரட்டி அடிக்கும்  முயற்சியாக
கூப்பாடு போட
அது  என்னை சற்றுக் கூட  கண்டு
கொள்ளவில்லை..


ஒரு குருவியுடன் போட்டி மிக வேகமாக
நான் நடத்த
 என்னுடைய  மகன் சற்று தூரத்திலிருந்து
வேடிக்கைப் பார்க்கிறான்
  சிட்டுக்  குருவிக்கும் குட்டிச்  சிறுவனுக்கும்  நான்
 ஒரு  விளையாட்டுப் பொம்மையாக


எண்ணிக்கையில் அவன்.

எட்டூர் அழகன் என்று
 அவன் பரணி மிக்க
ஏழூர்    கடையும்
மேற் பார்ப்பான்
 என்று  பேசப்பட
 ஆறு ஊர் விவகாரமும்
தலை  யிட்டு  முடிப்பான்
என்ற பெயரும் 
ஐந்து  ஊர்  நிலைமையும்
அறிந்து தெளிந்தவன்
 என்ற  எண்ணமும்
 நான்கு ஊர்  வளமையும்
 நட ப்பும் புரிந்தவன்
 என்ற விவரமும்
 மூன்று ஊர் பெருமையும்
அழகாக எடுத்து உரைப்பவன்
என்ற கருத்தும்  
இரண்டு ஊரிலும்  வாழும்
நடைமுறை நிகழ்வும்
ஒர்  ஊரிலும்  அளவாக
வாழும் அற்புதமும்
அறிந்த உவகையுடன்
பெருமிதம்  கொள்கிறேன்.

Tuesday, January 19, 2016

மனமே நீ படுத்தும் பாடு

கட்டுக்குள் அடங்காத மனம்
 கட்டவிழ்த்து பறந்ததது

நிர்ணயம் இல்லாத மனம்
நியாயமே இல்லாமல்  கனத்தது


உறுதி இல்லாத மனம்
உறக்கமே இல்லாமல்  பிதுங்கியது .


உண்மை இல்லாத மனம்
 ஊக்கம் இல்லாமல் தவித்தது .


மனமே நீ படுத்தும் பாடு
 மனிதனை குத்திக்    குதறுகிறது .

 .

 

Monday, January 18, 2016

ஆத்தா என்று அழைத்தார்கள்

ஆத்தா  என்று அழைத்தார்கள்
 நான் சிறுமியாக இருந்த போதே

 ஆத்தா சாபிட வா ஆத்தா
என்று கெஞ்சுவான் குப்புச்சாமி

 ஆத்தா பள்ளிக் கூடத்திற்கு 
 நேரமாகி விட்டது என்பான் ஆரோக்கியம்

 பு த்தகத்தை எடுத்து பையில்
 வைக்கவா என்பான் பேயாண்டி

 ஆத்தா தலைக்கு பூவை  மறக்காமல்
 வைத்துக் கொள் என்பாஅழகம்மா

இன்று அவர்கள் யாரும் இல்லை
 நான் மட்டும் இருக்கிறேன்
ஆத்தாவாக என் குழந்தைகளுக்கு


எழுத்துக்கு விலை இல்லை

 கதிரவன் முன்னே எழுந்து
 எழுதுகிறான் ஒரு கவிஞன்

கண் துஞ்சாமல் வடிக்க்றான்
எண்ணங்களை அக் கவிஞன்


எழுத்தில் அழகும் விதரனையும்
 விஞ்ச கை நோக எழுதுகிறான்


 எழுத்துக்கு விலை இல்லை
என்பான் அமைதியாக


உணவிற்கு விலையுண்டு
 அவனுக்குத் தெரியவில்லை .

 

Sunday, January 17, 2016

மதுரையை அரசாளும் பேரழகி

மதுரையை அரசாளும் பேரழகி
பெரும் மனம் கொண்ட பேரரசி
என்றுமே திகழும் பேரின்பம்
புன்முறுவல் குவிந்த உதடுகளில்
கண்டேன் கனிவை வெகுவாக
 அகலமான் கண்களிலே மின்னிய
 சுடர் இதமாக என்னை வருட
பொற் பாதம் பணிந்து
 இறைஞ்சுகிறேன்  
உன் பெயர் கொண்ட அடியவள்
 இவ் பூவுலகிலிருந்து


  

மீனாட்சியின் மகிமை கண்டு

மீனாட்சியின் மகிமை கண்டு
 நெக்குருகினேன் அன்றும் இன்றும்
 நினத்தாலே இனிக்கும் அவள் நினவு
 எங்கிருத்தாலும்  மனதில் ஒங்க
 வலியெல்லாம் மறந்து
 இன்னலகக ள் எல்லாம்  கரைந்து
 பறந்து ஓடிடும் அவளை நினைந்து
நம்பினால்  என்று தெளிய
 அவள் திருவடி பற்றி
 இறைஞ்சுகிறேன் அவள்
பெயர் கொண்ட
மீனாட்சியாகிய நான்.

Saturday, January 16, 2016

அப்பனும் ஆத்தாவுமாக

செங்கோல் ஏந்திய கைகளும்

அப்பனும் ஆத்தாவுமாக
பாதி நீ யும் பாதி நானுமாய் 
தேகம்  பகி ர்ந்து  ஆட்சி 
 பகுத்து  உள்ளம் விரிந்து
காட்சி தரும் வரமே
 கூடல் நகரிலே   பரந்த
 நிலப் பரப்பிலும்
 மதுர வனத்திலும் எழுந் தியருளிய
பாங்கை கண்டு
 நிலை மறந்து தாள் பணிந்து
 இறைஞ்சுகிறேன் வையகம் நலம்
 பெற உன்  பெயருடைய 
 அடி  யவள் மீண்டும் மீண்டும்
 

மீனாட்சி கல்யாணம் கண்டேன்

மீனாட்சி  கல்யாணம்  கண்டேன்
 சொகேசென் கைத்தலம்  பற்ற
 முகம் சிவக்க கண்  இமைகள்
 துடிக்க நாணம் மேலிட
 அம்மி மிதிக்க ஏழு  அடி
 எடுத்து வைத்து   அக்னி சாட்சியாக 
 மங்கல் நாண்  பூ ட்ட 
கண்ணேறு  படாமல்
 காக்க திட்டி  பரிகாரம்
 செய்து   தம்பதிகளா க
 இருவரும் வல் ம் வந்த
 திருக்கோலம் கண் முன் தவழ 
 மெய்மறந்து உடல் சில்ர்த்து
 இறை ஞ்சுகிறேன்  உன் பெயருடைய
அடியவள்  நின் திருவடி பற்றி.
 

Friday, January 15, 2016

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
 வாண  வேடிக்கை கவர மக்கள் திரளும் 
 பாலிகை தூவும்    செம்மண் கோலத்தில் 
மலர் மேடையிலே  வீ ற்றிருக்கும்  தாயே 
செம்மை முகத்தில் படர நாணம் வெகுவாக  
 சொகேசெனி ன் வரவை  எதிர் நோக்கும் 
 ஆரணங்கே உன் தாள் பணிந்து 
இறைஞ்சுகிறேன் உன்னுடைய 
 பெயர் கொண்ட அடியவள் 
 

எங்கும் கண்டேன் உன் எழில் வண்ணக் கோலத்தை

பரந்த சுற்றளவில் விலாசமான
நிலப்பரப்பில் ஓவியமிக்க
  நெடிய கோபுரங்களும்
 எங்கும் கண்டேன் உன்
 எழில் வண்ணக் கோலத்தை
 மெய் யுருகினேன்   மனம்
உவந்தேன்  நிமிர்ந்தேன்
 சரணடைந்தேன்  உன்
 திருவடியே போற்றி
 பற்றினேன் உன்
 பெயருடைய   அடியவள்

Thursday, January 14, 2016

வைரமும், வைடுரியமும்

நின் அழகுக்கு அழகு
 எதைச்  சொல்ல
 நின் கண்ணின் சுடருக்கு
 எதைப் பொருந்த
 வைரமும், வைடுரியமும்
 ஒளி  இழக்க
தங்கம்  மாற்றுக் குறைய
 சலனமில்லா உன் பூரிப்பில்
 மனதை பறிகொடுத்து
 கை கூப்பி நிற்கிறேன்
 உன் பெயர் கொண்ட
 அடியவள்
 நெக்குருகிறேன் உன்
பாதம்  பணிந்து
 

நான்மாடக் கூ டலிலே

ஆண்டுதோறும் திருவிழா காணும்
மாதந்தோறும் கோலாகலம்  காணும்
கொடிஏற்றதலும்   காப்பு கட்டுதலும்
 தினம் தினம் கொண் டாடப் பெற
வளைய வருகிறாள்  மீனாட்சி
 சுந்தரே சனுடன்  நாணம் மிக 
நான்மாடக் கூ டலிலே 
கண் கொள்ளாக் காட்சி  கண்ட
 உன் அடியவள் உன்னுடைய
 பேரால் அறியபட்டவலள்
 இறைஞ்சுகிறாள் உன் திருவடி பற்றி  

 

Wednesday, January 13, 2016

சித்திரை விதிகளில் உலா வர

சித்திரை விதிகளில்  உலா வர
 சொக் கேசனுடன்  சுற்றி வர
மாலையும் கழுத்துமாக 
 சொக்க வைக்கும் ஏழி லுடன்
 பேரின்பமாக பவனி வர
 காணக் கண் கோடி  வேண்டின்
கை கூப்பி மெய் மறந்து
 நிற்கும் உன் பெயர் கொண்ட
 அடியவள் உன் பொற்  பாதம்
 பணிந்து உருக. 

Tuesday, January 12, 2016

பூக்கள் கொண்டையில் மிளிர

பூக்கள்  கொண்டையில்  மிளிர 
 சந்திரனும் சூரியனும் 
 கூந்தலை  அலங்கரிக்க 
நெற்றிச் சூடியும் மின்ன 
 கண்களின் கூர்மை 
ஊ டூருவ  அலை பாய்ந்த 
 மனம்  சட்டென்று அமைதியுற 
உன்னுடைய பெயருடைய 
அடியவள் உன் காலடி 
பணிந்து  இறைஞ்ச  

 

உன் காருண்ய பார்வைக்கு

அகண்ட வாயிலும்  நீண்ட  வழித்   திடலும்
அழகான் பொற் றாமரை பூத்திருக்கும்
 நவீன் மிகு குளமும்
நினைத்ததை நடத்திக் கொடுக்கும்
 வி பூதி பிள்ளையாரும்  
 பை ங் கிளிகளின் கூடாரமும் 
வண்ண ஓவியங்களும்   க்கவர்
உன் காருண்ய பார்வைக்கு
 தவம் தவமாய் காத்திருக்கும்
உன் பெயரிட்ட  அடியவள்
இறைஞ்சுகிறேன் உன் காலடி பற்றி


Monday, January 11, 2016

கையிலே கிளி கொஞ்ச

கையிலே கிளி  கொஞ்ச
முக்கிலே வைரம் சொலிக்க
 கண்ணிலே ஒளி   மின்ன
 மெலிதான் உதட்டிலே 
 புன்முறுவல் பூக்க
தாயோடு நான் குலவ
 சொக்கி நிற்கிறேன்
 நின் பெயர் கொண்ட
 அடியவளே
 உன் பாதம் பணிந்து.மதுரையில் மீனாட்சி

மதுரையில்   மீனாட்சி
மரகத  நிறத்திலே
 கவின் மிகு தோற்றத்திலே
அழகு நிலையிலே
 கனிவான கண்களாலே
 காந்தமும்  சுடரும்
கள்ளமில்லா நட்பும்
 அற்புதமான அரவணை ப்பும் 
 நல்கும் மாதேவி
 மினாட்சி தாயே
 உன் போர்  பாதங்கள்
 வணங்கும் உன் பெயருடையாளே நியா யமமும் அநியாமமும் இந்தக் கலி யுகத்தில்

வேலை இருக்கும் போது
 விடுப்பு வேண்டின்
 நியாயமா என்று தோன்றும் .

வேலை இல்லாத போது
வேலைக்கு வரும் ஆர் வம்
 நல்லதா என்று கேட்கத் தோன்றும் .


நியா யமமும் அநியாமமும்
 இந்தக் கலி யுகத்தில்
நினைப்பது  எதற்கோ?

Sunday, January 10, 2016

கண்டேன் என்னுடைய மகிழ்வை

கண்டேன் என்னுடைய  மகிழ்வை

குழந்தையின் சிரிப்பில் மலரின் மலர்ச்சியை
மழலை யின்  பேச்சில் குயிலின் குரலோச யை

தத்தி தத்தி நடக்கும்  நடையில் மயிலின் அழகை
 கண்டேன் என்னுடைய மகிழ்வை
 குழந்தையிடம் 

காலையில் ஒரு பரபரப்பு

காலையில் ஒரு பரபரப்பு
 எவ்வித்திலும் அது மாறாது
 எவ்வயதிலும்  அதில் ஒரு
மாற்றம் இல்லை

அதைச்  செய் இதைச் செய்
என்ற  ஒரு விறுவிறுப்பு
 எப்போதும் அது  மாறாது
 மாற்றம் இல்லை.


ஒரு குளியல் ஒரு ஓட்டம்
 ஒரு அரக்கப் பரக்க   பசியாற 
 எப்போதும் அது மாறாது
மாற்றம் இல்லை.


கல்லுக்குள் ஈரம்

கல்லும் கனிந்து உருகும்
 கல்லும் கவி பாடும்
 கல்லுக்கும் இர க்கம் உண்டு
 கல் என்று ஒதுக்கி விடாதே
அதற்குள்ளும் ஒரு நேயம்
 அது
 கல்லுக்குள் ஈரம்

Saturday, January 9, 2016

காலை ப் பொழுது

பறவைகள் கச் கச் என்று பேச
காகம் கா கா என்று கரைய
 வை கரைப் பொழுதில்
 பஞ்சணையை விட்டு
 சோம்பல் முறி த்து
 கண்ணைக்   கசக்கி
 எழ  முய ற்சிக்கும்  நேரம்
ஒரு தொலை பேசி அழைப்பு
 சலிப்புடன் எடுக்க
 தொடர்பு துண்டிக்கப்பட
 ஆத்திரத்துடன் முனக
 காலை ப் பொழுது
 ஒரு வழியாக
 விடிய.

கல்லாகிப் போனாள்

உறைந்து போனாள்
 பனிக் கட்டியாக
 சமை ந்து போனாள்
 கல் லுக் க் கட்டியாக
அசைவற்று போனாள்
மட்டியாகிப் போனாள்
 பேதை யாகி விழி க்கிறாள்
 மண்டுகம் என்று விளிக்க
 கல்லாகிப் போனாள் 

மழையால் கெடுக்கவும்

பு ல்லும்  காய்ந்து விடுமோ
 அதி க மழையால்
 கேட்டவுடன் ஒரு திகைப்பு
 நோக்கின போது
 புல்லில் இடை வெளி
 ஆங்காங்கே
 மழையால் கெடுக்கவும்
முடியும் போல் 

நல் வழியில்

எண்ணாதே ஆற்ற்மையாக
கருதாதே ஆத்திரமாக
 பேசாதே வஞ்சனையாக
 நல்  வழியில் போய்
 நல்ல வழியில்  சென்று
 நல்ல மாறுதல்களை
 செய்து வாழ்   

வேறுபாடு

தமிழா தமிழ் பேசு
 தமிழை டம்மில்
 என்று சொல்லாதே
 அழகான் மொழியை
 பின்னப்படுதாதே
லகரம்  ளகரம்
 நகரம் னகரம்
 என்ற வேறுபாடு
 கண்டில்லேன்
வேறு எந்த மொழியிலும்    

ஒரு கொலை.

காமாட்சி மீனாட்சி , விசாலாட்சி
 என்று பெயரிட்ட காலம் போய்
இன்று ஐஸ்வரியா   தேஜச்வரி
 என்று பெயர்கள்  காண
 பல பேருக்கு வாயில் நுழையா
 தட்டு  தடுமாறி   ஐஸ் ,
தெசஸ்  என்று சொல்ல
பொருளும் மாறி
 பொருத்தமும் வேறுபட்டு
என்ன விதமான
ஒரு கொலை.

Friday, January 8, 2016

அன்பும் அறமும்

வெயில்  கொளுத்தும்  போது
 உடல் தளர
 தாகம் ஒங்க
 மயக்கம்  வருத்த
கால்கள் து வள
 கீழே  சாய்ந்தான்.

கண்கள் இருட்ட
 விழுந்தான்
கிடந்தான்  அங்கே
 வெகு நேரமாக
ஆள் அரவம் இல்லாத
 இடத்தில்.

பெரிய செல்வந்தன் அவன்
 அவனுக்கு வந்த விதி என்ன
தன்னோடு பணமும்
 பெருமையும்  வாராது
 அன்பும் அறமும்
 துணை வரும்.

 

இன்று ஒரு நாள்.

சற்று அயர்ச்சிய்டன் கண்டேன்
 இன்று  ஒரு நாள்
 சற்று மனதில் திடம் இல்லாமல்  இருக்கிறேன்
 இன்று ஒரு நாள்
சற்று ஒரு தெளிவு பிறக்கவில்லை
 இன்று ஒரு நாள்.
நான் நானாகவே இல்லை
இன்று  ஒரு நாள். 

Thursday, January 7, 2016

மானம் காக்க

கண்ணிலே ஏக்கம்
 கையிலே காகிதம்
 பொறு க்கி  பொறு க்கி
 கை நோக
 உண் ண  உணவில்லை
உடுத்த  உடையில்லை
 உடம்பை மூட
 ஒரு சிறு துணி
 மானம்  காக்க
 என்று கொள்வோம் 

வாழ்கிறான் அவனும்

நான்  நான் என்ற பெருமை
 தான் தான் என்ற அகந்தை
 தனனைத் தானே  போற்ற
 தனக்கு மிஞ்சியது எதுவுமில்லை
 என்று வாழ்கிறான் ஒரு மனிதன் 
அவன் ஒரு   மாந்திரிகன்
கண்ணிலே சூன் னியக்காரன் 
 மனதிலே ஒரு கபந்தன்
 எண்ணத்திலே ஒரு கசடு
 வாழ்கிறான் அவனும்
 குழந்தையும் கு ட்டிய்மாக 

கேட்டு மாளவில்லை

அமைதியாக வாழ்ந்தால் குற்றமா
 தன நிலை தெரிந்து வாழ்ந்தால் அவமானமா
நெறி தவறாமல் வாழ்ந்தால் கேவலமா
 நிமர்ந்து நின்றால் திமிரா
என்னென்ன  பேச்சுக்கள்
 ஏன் னென்ன  விவாதங்கள்
 என் னென்ன  விசாரணைகள்
 கேட்டு மாளவில்லை
 வாளாவிருக்க முடியவில்லை..

Wednesday, January 6, 2016

அரட்டலும் உருட்டலும்

பட பட வென்று  பொரிந்து தள்ளினான்
எதற்காக என்று அறிய முடியவில்லை
 ஏதாவது ஆகி விடும் என்று பதறு வான்
 எதற்காக என்று புரிந்து கொள்ள முடியவில்லை
 தான் தான் எப்போதும் நியாயம் என்று பேசுவான்
 எதற்காக என்று தெ ரிந்து கொள்ள முடியவில்லை
 வாழ்ந்து விட்டான் அறுபதுக்கு மேல் ஆண்டுகளாக
 அரட்டலும் உருட்டலும்  தன்னோடு உறவாட.  

ஆசை அற்ற

எல்லாமே நல னுக்காக
யாவுமே நன்மைக்காக
எதிலும் தீமை இல்லை
 எவற்றிலும் தீது காணேன்
 என்று பேசிப் பேசி
 தன்னை ஆசை  அற்ற
மனி தனாகக்  கான்க்ரான்ன்.

இறை யருள் தானே துணை

உள்ளம் சோர்ந்த போது
 உடல் கை கொடுக்க
 உடல் தளந்த போது
 மனதும் வலுவிழக்க
 கண்கள் தொய்வடைய
 இறை யருள்  தானே துணை

கவிந்து நிற்கிறேன்

மனதில் நிறைய கற்பனை
 ஏதாவது நிறைவேறுமா
 எண்ணங்கள் சுழல
 கவிந்து  நிற்கிறேன்
 நிழலைப் பார்த்தப் படி  

Tuesday, January 5, 2016

அவள் மீது மட்டும் ஏன்

அவள் மீது மட்டும் ஏன்
 இந்த கண்ணடியும்
வயிற்ரெரி ச்சலும்


அவள்  மீது மட்டும் ஏன்
இந்த வேக்காடும்
 வெடிப்பும் .

அவள் மீது மட்டும் ஏன்
இந்த பொறாமையும்
புற ங்கூறு தலும்


எனக்கு புரியவில்ல
அவளுக்கும் புரியவில்லை
யாருக்கும் புரியவில்லை.
 

Monday, January 4, 2016

அரை மணி நேரத்தில் அரை லட்சம்

அரை மணி நேரத்தில் அரை லட்சம்
 ஓரு  சில மணித்துளியில்
 மருத்துவ ஆலோசனை
ரூபாய் ஐ நூறு  கட்டணம்
அரை மணியில்  நூறு  சிகிச்சை
 பை நிறைய பணம்
குழந்தை பேறின் ன்மைக்காக
 மிரண்டு போனேன். 

நகை சொத்து பணம்

நகை சொத்து பணம் 
 மூன்றுமே  குறிக்கோள் 
 எங்கும் எதிலும் 
 பார்வையிலும்  பேச்சிலும் 
 முச்சிலும் முத்திரையிலும் 
கனவிலும் நனவிலும் 
இது தான் வாழ்க்கையா?
 இதற்கு அப்பால் ஒன்றுமில்லையா?

Friday, January 1, 2016

இறைவன் அருளால்

கெட்டவனுக்கு காலம் 
கெடுதல் செய்பவனுக்கு காலம்
 வாழ்கிறான் சீரோடும் சிறப்போடும்
இறைவன் அருளால் . 

அன்று போல் இன்றும் வாழ்வாங்கு.

பேசும் போ து ஒரு கரகரப்பு
நட க்கும் போ து  ஒரு இழுப்பு
கையை ஆட்டி ஆட்டு வதில் ஒரு  சிலிர்ப்பு
வாழ்கிறான் அவனும் குழந்தையும் குட்டியயு மாக
 அன்று போல் இன்றும் வாழ்வாங்கு.

என்றுமே அவ்வாறே

கண்ணிலே ஒரு செயற்கை மின்னல்
 மனதிலே முழுவதும் இன்னல்
நல்லவன் வேடம் வெளியே
 கொடுமை  உள்ளம் உள்ளே
வாழ்கிறான் சகோதர சொத்தில்
இன்று அல்ல நேற்று அல்ல
என்றுமே அவ்வாறே 

விலகி விட்டேன்

அவனுக்கு ஆத்திரம்
சொல்லொண்ணா    ஆத்திரம்
 கனன்று கொதித்து தெறிக்க
 வெந்து புழுங்குகிறான்
கொஞ்சம் நஞ்சமல்ல .


இன்னொருவனுக்கு  பொறாமை
மட்டில்லா பொறாமை
திரண்டு  மேவி  கொப்பளிக்க
பொங்கி மயங்குகிறான்
இன்று நேற்றல்ல.

காண்கிறேன் இருவரையும்
 வியப்புடன் சற்று நேரம்
ஏன்  என்று புரியாமல் விழிக்க
விலகி விட்டேன்  ஒரு வழியாக
எப்போதும் எந்நேரமும்.