Friday, March 21, 2014

நிழல் யுத்தம்

ஒழுக்கம் இல்லாதவன்
ஓங்கிப் பேசுகிறான் .

குடிகாரன்   வா ந்தியோடு
உளறுகிறான்  உண்மையை

தேர்தலில் தோற்பது .
உறுதியானவுடன் .

பெருந்தன்மையாக மகனுக்கு
 விட்டுக் கொடுக்கிறான்  தகப்பன்.

நிழல் யுத்தம்  தொடரு கிறது
 விளைச்சலுடன் அமோகமாக


 

வேலவனும் அனு மதிக்கிறான்

ஊரைக் கொள்ளை அடித்து
கோவிலுக்கு அள்ளிக் கொடுக்கிறான் சீமான்..

ஒரு தடவை அல்ல பல முறையாக
 பல வழியாக ஏமாற்றி .

ஆயிரம் கோடியை முழுங்கிவிட்டு
பத்து இலட்சம் கொடையாக

ஏற்றுகிறான் கோவில் விமானத்தில்
 தடபுடலாக நிமிர்ந்து நிற்கிறான்.

மாலை  மரியாதைகள் சிறப்பாக
 வாத்தியம் முழங்க .

வேலவனும் அனு மதிக்கிறான்
இக் கொள்ளையை

 

Saturday, March 15, 2014

கலைஞனே ஒரு சிறப்பு

கலை என்பது ஒரு மகிழ்வு
கலை நயம் என்றால் ஒரு செறிவு
கலை  பொருள் ஒரு வியப்பு
கலைஞனே  ஒரு சிறப்பு
 

விட்டி ல் பூச்சி

விட்டி ல் பூச்சி பறந்து சென்றது
எங்கு என்று தெரியவில்லை
தேடிய போத காணவில்லை
திரு ர்ம்பி வந்தது சற்று நேரத்தில்
 எதற்கு என்று தெ ரியவில்லை
 விட்டிலின் எண்ணமே புரிபட்டது.

பொம்மை

கடை வீதியில்   பொம்மை வாங்கும்  போது
தலை யாட்டினேன் நனறாக  இருகிறது என்று
வீட்டில் அதை வைத்தப்போது
அது தலையாட்டிக்கொண்டெஇருந்தது 
 

திகைப்பு எதற்கு

திகைப்பு  எதற்கு என்ற போது
அரை நொடியில் பணம் பண்ணி
கால் நொடியில் தொலைத்து
ஒரே நொடியில் கம்பிக்குப் பின்னால்
சட்டத்துக்கு புறம்பாகவே  செயல்பட்டதால் .

 

Friday, March 14, 2014

பறந்த விமானம்

பறந்த விமானம் இறங்கவில்லை
 பறந்து கொண்டிருக்கிறது
 ஏழு நாட்களாகவே .

ஆற்றல் பொருந்திய மனிதன்

பால் ததும்பும் முலைகளை
கன்றிடம் சிறிது வீடு  கறக்கும் மந்தன்
 சுருங்கக் கொடுத்து   கன்றுக்கு
 பெருக ஒதுக்குகிறான் தனக்கு .

எதிலும் தனக்கு மிகுதி வேண்டும்
 பாலில் மட்டும் விட்டு விடுவானா மனிதன்
உதிரம் பாலாகி வரும் நேரம்
கறந்து அளந்து காசாக்குகிறான் .

ஆற்றல்  பொருந்திய மனிதன்
எல்லாவர்ரிலும்  போன் அடைகிறான் 
பெருமிதம் கொள்கிறான் தன சாமர்த்தியத்தை வியந்து
போட்ட முதலை வட்டியும் முதலுமாகத்  திருப்பிகிறான்

சாதுர்த்தியமும் பெருகி வளமும் கொழித்து
 நல விதமாக வாழத் தலை ப்ப்படும்போது
குறுக்கிடுகிறது துயரம் வாழ்விலே
 பயனே நோக்காமாக வாழ்ந்த்ததால் அல்லல் படுகிறான் .


 

Thursday, March 13, 2014

காதலும் மண மும்

காதல் என்ற போது
மின்னும் கனண் களும்
 துடிக்குமுதடுகளும்
பட பட க்கும் நெஞ்சமும்
செம்மை படட ரும் கன்னங் களும்
வழியும் அசடும்
 நினைவுக்கு வரும்  ,

திருமணம்  ஆனவுடன்
கவலைத் தோய்ந்த கண்களும்
காய்ந்த உதடுகளும்
அசந்த நெஞ்சமும் 
கருத்த கன்னங்களும்
வழியும் சோகமும்
நினைவில்  தோன்றின .

காதலும் மண மும்
ஆணும் பெண்ணும்
உணர்ச்சியும்  உருக்கமும்
 நினைவும் வாழ்வும்
நிழலும் நடப்பும்
 நினைவை விட்டு  அகலவில்லை  

 

எதில் கண்டோம் ?

முலிகை மருந்து  ஏற போடு நகைத்தார்கள்
 நம் தளசி  மாத்திரையாக  வண்ணங்களில் காணும்  போது 
நகைப்பு சங்கடமாக மாறுகிறது.
நம் வேப்பிலை திரவ   மருந்தாக  வெளி வரும் போது
நெளிகிறோம் வெட்கத்துடன்.
நம் கற்றாளை  பிதுக்கு மருந்தாக விற்கப்படும் பொது
சிரிப்புக்கு இடமாகிறோம்.
முக்கனியில் இல்லாத குணமும் 
வேம்பில் இல்லாத  நச்சழி ப்புத் தன்மையும்
இஞ்சியில் இல்லாத செரிமானமும்
கீழா  நெ ல்லியில் இல்லாத  சுத்தக்ரிப்பும்
எதில் கண்டோம்  ?

நேரிலே கண்ட போது

தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை
பாட்டியைப் போல் பேத்தி
 ஒருத் மட்டும் அல்ல
 இருவர் என்ற போது
மலைத்து நின்றேன் .

உருவத்தில் மட்டுமே என்று நினத்தே ன்
 பழக்கத்திலும் என்று அறிந்தேன்
தன்மையிலும் என்று புரிந்தேன்
நடத்தையிலும் என்று கண்டேன்
இரு பேத்திகளும் என்ற போது
அயர்ந்து நின்றேன் .

உறவினர்கள் சொன்னார்கள்
பொருட்டாக எடுக்கவில்லை
நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள்
சரி என்று ஒதுக்கி விட்டேன்
நேரிலே கண்ட போது 
 விக்கித்துப் போனேனே
 

Wednesday, March 12, 2014

நேர்மை

நேர்மை  இல்லாதவன்
நேரிலே வந்தான்
நேருக்கு நேர்  பார்த்தோம்
நேராகவே சந்தித்தோம்
நேராகச் சென்று
 நொடியிலே விலகினேன்
நேராக நோக்காமல்
அவனும் நேரம் கடந்த பின் 
வேருடளுடன் விலகினான்
 

ஒரு பாராட்டு

கவிதை ஒன்று படித்தேன்
 மனதை பிசைந்தது
கண்ணில் நீர் மல்கியது .
தொண்டை அடைத்தது.
மனம் வலித்தது..
நெருடலான் நிகழ்வை
நெக்குருக அளித்த
கவிஞகனே  உனக்கு
 ஒரு பாராட்டு.

நிறைவு இல்லை

பாடலில்  குறை ஒன்று கண்டேன் 
குரல் வளமோ  அருமை.
பாடும் திறனோ வழமை.
 பாட்டில் பொருள் இல்லை .
 பன் இருந்தும் நிறைவு இல்லை.


 

Saturday, March 1, 2014

மனிதத் தன்மை

உறுதிப் படுத்திய  பின்
 நிலை மறப்பது
தரம் அல்ல.

உறுதி செய்த பின்
 பின் வாங்குவது
மரபு அல்ல.

உறுதி கொடுத்தப்  பின்
விட்டு விலகுவது
சரியல்ல .

உறுதியானதை   எவ்வழி யாலும்
செய்து முடிக்க வேண்டும்

முடியவில்லை என்றால்
 மன்னிப்புக் கோரி விலக வேண்டும்  .

இதுவே மனிதத் தன்மை
மனிதனின் மேன்மை.