Wednesday, September 28, 2016

கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
 என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும்   பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
 என்று  அறிந்தும்
   நீடிக்கும் எண்ணம்
 ஒரு தீமைக்கே
 என்று கொள்வோமாக.

Friday, September 23, 2016

தகுதி

தகுதி என்று நினைத்து
 தகாத காரியங்கள் செய்து
 தகுந்த எண்ணம் ஆகா

தகுதி என்று இறுமாந்து
 தாங்காத  கொடுமை செய்து
தானே பெரியவன் என்பது ஆகா.

தகுதி என்பதில்  திளைத்து
திமிராகத் தூக்கி எறிந்து
தான்  பொய்  பேசுவது ஆகா.

தகுதி ஓர்  அநீதி  அல்ல
 அது ஒரு சான்று  ஆகும்
மிகுவதும் மிகாததும்   நம் கையிலே   

Wednesday, September 21, 2016

தண்ணீருக்காகவா இவ்வளவு

தண்ணீர் தண்ணீர் 
 என்று புலம்பி 
 தடியடி  வன்முறை 
 எங்கும் பெருக.

 வழக்குரைக்க 
 நீதிமன்றங்கள் 
என்று தாண்டி ஓட.

தண்ணீரை  ஓட விடாமல்
அடக்கி  அணைகளில் தேக்கி 
பறறாக்குறை   என்று  மனிதன் 
 ஓலமிட.

 பயிரை வளர்த்து 
 நீர் வரத்து இல்லாமல் 
அவை வாட..
 
 மனமிழந்து 
 தன்னுயிரை  விட்டு 
 கதறுகிறான்  மனிதன்
இன்னொரு எல்லையில். 

.
 
உ யிர்ச் சேதம், பொருட் சேதம் 
 இழப்பு  என்று மக்கள் திக்குமுக்காட
 
 நினைத்துப் பார்த்தால் 
 தண்ணீருக்காகவா  இவ்வளவு 
என்று மயங்கி 
 துவள்கிறது  நெஞ்சம். 


 

Tuesday, September 20, 2016

தமிழின் அழகே

பாலும் கசக்கவில்லை
 பிழிந்த துணியும் கசக்கவில்லை
 என்று நயம்படச் சொன்னான்
புலவன்
 சாகும் தருவாயில் கூட.

தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.

செல்வோமா என்பதை போவோமா
 கிளம்புவோமா,  பார்ப்போமா
 என்று பல விதமாக
 நேரம் காண்பதாக
 உரைப்பது
 என்னே அழகு.

இதே போல் எத்தனையோ
 எடுத்தாள எண்ணம்  
வியப்பு மேலிட பெருமிதம்
 பொங்க  மகிழ்வுறுகிறேன்
 தாய்த் தமிழை
 உணர்ந்து.

 


 

Saturday, September 17, 2016

கண்ட இன்பம்

வம்பு எதிலும் எவையிலும்
 எப்போது என்று காத்திருந்து
 சட்டென்று தாவி
 கழுத்தைப் பிடிப்பது  போல்
 கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட  இன்பம் என்னவோ ?

Thursday, September 15, 2016

நிலம் காணுதல் நிரந்தரம்.

மேலேயும் கீழேயும்
 ஒரு சந்திப்பு.

மேலே பறக்கும் ஓர் 
ஊர்தி  வானம் பிளந்து 
 காற்றைக்  கிழித்து 
பாய்கிறது 
இராட்சத   வேகத்திலே!

வான நீல  நிறம் 
 ஒரு பொழுதிலே 
 வெண்மையாக மாறி  
மீண்டும்  நிலமாக 
 கொப்பளிக்க.


 கீழே செல்லும் 
 ஊர்திகள்
 சில அசுர வேகம் 
 கொண்டு பாய
 சில மிதமான 
கோர்வையில் செல்ல 
பல ஊர்ந்து 
 நகண்டு   நகர்ந்து 
போகும் நேரம்   
விதமான 
போக்குவரத்துக்கள் 
நிலத்தின் மேலே என்று 
அறியுங் கால் 
 நிலத்தின்  அருமை 
நெஞ்சம் நிறப்ப! 


உயரப்  பறக்கும் 
 வானவூர்தியோ  
 தரை  நோக்கி 
 இறங்கும் கால் 
ஒரு நினைப்பு 

உயரப்  பறப்பின்   
 நிலம்  காணுதல் 
நிரந்தரம்.  Sunday, September 11, 2016

இயம்பு என்ற போது

தாய் நாட்டை விட்டு
வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

ஊரை விட்டு உறவை விட்டு
 வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

பணப்  பெருக்கம் இனப்  பெருக்கம்
 தேடி வர  வாழ்க்கிறான்
பெருமைக்காக

பதவியும் அனுகூலங்களும்
பெருகி நிற்க  வாழ்கிறான்
பெருமைக்காக

வாழ்கிறான் என்ற போது
ஒரு கேள்வி
எழும்புவதாக

கலாச்சரம் இழந்து  களையிழந்து
நிம்மதி இல்லாத
வாழ்க்கைக்கா ?

இயம்பு என்ற போது
வாயடைத்து நின்றான்
பொதுவாக.Saturday, September 10, 2016

பட்ட மரம் துளிர்க்காது!

பட்ட மரம் துளிர்க்குமா?
ஆராய்ச்சி எதற்கு?
எனில்
சில நோக்கங்களுக்காக!

 செத்தவன் எழுவானா ?
 வரி காட்டுவானா?
 கட்டினான்
 எனக்கு தெரிந்த
 ஒருவன்.

அவன் உயிர்பிக்கப்பட்டானா?
 அருவமாக வந்தானா?
 அவனுக்கே வெளிச்சம்.

வந்தவன் கட்டினான்
 அதற்குரிய காசோலையைக் கொடுத்து
 கட்டினதற்கு  அத்தாட்சியை
 வாங்காமல் சென்று விட்டான்
பரலோகத்துக்கு மீண்டும்.

என்னே ஒரு பித்தலாட்டம்
 இதற்குப் பின்னும்
சொல்லுங்கள் ஏன்
பட்ட மரம் துளிர்க்காது
என்று?
Friday, September 9, 2016

அவன் அறிவு

விம்பு  செய்கிறான் 
 புரிந்தோ 
 புரியமாலோ!

அழகாக்கப்    பிரிப்பதை 
 அலங்கோலமாக்கி 
 துண்டாடி. கிழித்தான் 
எதற்கோ! .

ஆண்டுகள் பல ஒடியும்  
செய்வதறியாது 
 தத்தளிக்கிறான் 
 ஏனோ?

அவன் அறிவு 
 அவ்வளவு தான்  
தானும் வாழாமல் 
 பிறனையும்  நசித்து
 எதனாலோ!
 

எத்தனை பேரோ?

கண்ணிலே விளக்கெண்ணெய்
 ஊற்றி
 குற்றத்தை  துழாவிக்
 கண்டறிந்து.

காலிலே வெந்நீர் ஊற்றி
அங்குமிங்கும்
 நிலை கொள்ளாமல்
ஒடி

கண் பார்க்க கை
 செய்து
இயலாததையும்  இழுத்து
முடித்து

திரை கடலோடி திரவியம்
தேடி
 திரட்ட முடியாத  செல்வத்தை
திரட்டிவாழ்ந்தேன்  என்று பெருமிதம்
பொங்க
நிறைவோடு  வாழ்கிறவர்கள்
 எத்தனை பேரோ?
 

Thursday, September 8, 2016

என் வழியிலே

முகம் காட்டி சிரித்த அழகு
 இன்று
முகம் திருப்பி அலக்கழிக்கும்  கோலம்
 நினைக்கையில்
இது உண்மையா? அது நிழலா?
என்று தோன்ற,
 சற்று நிதானித்து நோக்கின்
 இதுவம் அல்ல,
 அதுவும் அல்ல.
 என்று கொண்டு
 நேர்மையான  எண்ணம்
 மனதில் எழும்ப
சற்றும்
அசராமல்  செல்கிறேன்
 என் வழியிலே

Wednesday, September 7, 2016

மகிழ்ந்தேன்! மறந்தேன்!

பரத  முனிவரின்  நாட்டிய சாத்திரம்
 பல்கி பெருகி விதம் விதமாக
 செழிக்க

ப  என்பது முக  பாவத்துக்கும்
ர   இராகத்தை   மேற்கோளிட
த தாளத்துக்கு நிற்க
 பரத  நாட்டியம்
 ஒரு சுகானுபவ மாகத்  திகிழ

சுருதியும்  ஜதியும்
ஒன்று கூட
ஆரணங்கு   ஆனந்தம்
 மேலிட  குவிந்து மகிழ்
 அதிகாரம் காட்ட
 அடித்து உந்த.

   வீரம் வெளிப்பட
 குதித்து ஆர்ப்பரிக்க
வெகுண்டெழுந்து
கனல் கணக்ளில் தெறிக்க
ஆடுகிறாள்.
 
 கனவும்  கண்டு
 வெட்கி நாணி
 உயிர்ப்பித்தெழுகிறாள்
 நாட்டிய பெண்மணி.

பரவசத்தில் தன்னை
அறியாது  கண்ணீர்  மல்க
இறைவனை நினைத்து
கூத்தாடுகிறாள்.

என்னே ஓர் நாட்டியம்
 ஓர் அற்புதம்
கண்டேன்
 மகிழ்ந்தேன்!
 மறந்தேன்!
 என்னையும், ஏன்
 யாவறறையும்.


Monday, September 5, 2016

பாமரன் பரிணமிக்கிறான்

பாமரன்  பரிணமிக்கிறான்
உலகிலே
 பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
 வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.

நல்வழியில் செல்லாமல்
 கோணலாகப்   போகிறான்
 ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
  தடத்திலே!

பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை    என்றும்
நாடாமலே
 பயணிக்கிறான்  வேகமாக
விளைவறியாமலே!

அழியும் செல்வம்
 எத்தனை  நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!
Sunday, September 4, 2016

பரந்த உலகிலே

வீணாகப் பேசுகிறான்
அவன் தான் சமர்த்தன்
 என்ற நினைப்பில்.

வெட்டியாகக்   கழிக்கிறான்
காலத்தையும் பொழுதையும்
புரியாமல்.

அவனின் முரண்பாட்டினால்
ஒரு குடியே பிரண்டது
முழுமையாக.

வாழ்கிறான் அவனும்
பரந்த உலகிலே  அவனுக்கும்
 ஓர் இடம்.  Friday, September 2, 2016

கைகூடும்

கையில் தடியுடன்
 இடுப்பில் ஒரு முழத்
துண்டுடன்   இருந்தவனை
 மகாத்மா  என்கின்றனர்.

திருவோட்டுடன்
நீள அங்கியுடன்
 அலைந்தவனை
புத்தன் என்று  அழைக்கின்றனர்.

மாட்டுக் கொட்டிலில்
ஆடு மேய்ப்பவனுக்குப்
 பிறந்தவனே
யேசுநாதர்  என்பார்.

வெளித் தோற்றம்
 ஓரளவே
 உள்ளார்ந்த எண்ணமே
 கைகூடும் அதிகமேThursday, September 1, 2016

நல்லவனும் தீயவனாகிறான்

பூ  ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்

பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப்  பார்த்து.

புன்னகையுடன்  குவிந்தது
அழகாக .

நெருங்கினேன்  ஒலியெழுப்பாமல்
மெதுவாக.

மருண்டது  அண்மையில்
 என்னைக் கண்டு.

பறித்துப்   பிரித்து  ஒடித்து
 விடுவேனோ  என்றாகி

குனிந்தது  அருண்டு
சற்று நேரம்.

மனிதனின்  நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்

வன்மையின்  துடிப்பை
 மென்மை உணர

நல்லவனும்  தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!