Friday, February 28, 2014

ஒரு நிறைவு

ஒவ்வொரு நாளும் நல்ல நாளே  .
 விடியல் ஒரு பிறப்பு
தூக்கம் ஓர் இறப்பு .

எந்நாளும் கோலாகலம்
பிறந்த நாள், காதலர் நாள்.
சுதநதிர நாள், என்று அல்லாமல்.

எல்லாம் நாளும் மகிழ்ச்சி
 எதிலும் அக்கறை
பிரித்துப் பார்க்காமல்.

எல்லா நாட்களுக்கும் வேலை
முடித்தப் பின் ஒரு  ஆச்சரியம் 
ஆச்சரியத்தில்  ஒரு பெருமை.
பெருமையே ஒரு நிறைவு


கம்பிக்குப் பின்னாலே .

ரொட்டி விற்றவன்
கோடி கண்டான்.

ஐந்தும் பத்துமாகச்
சீட்டுப் பிடித்து

ஏழை எளியவர்களிடம்
கை நீட்டி வாங்கி  .

சிறுக வாங்கி
பெருகச் சேர்த்தான்.

அந்தப் பண்டிகைக்கு
கொடுக்கப்படும் என்று அறிவிப்புடன்.


ஐ ந்து கோடி ஆனது
பத்து கணக்க்ட முடியாதது ஆனது.


இரு சக்கர வண்டியிலே  சென்றவன்
பறக் கிறான் அடுத்த ஊருக்கு.

இரட்டையாகப்   பிறந்த மகன்களுக்கு
ஊர் கூட்டித்  திருமணம்.

செலவு ஐநூறு கோடி
மந்திரிகளின் வருகை யோடு.

தவற்றை கண்டு பிடித்தவுடன்
 அட்டைப் பெட்டியில்  கணக்குகளை அனுப்பினான்.


என்ன ஒரு நாடகம்
அம்பலம் ஆனது  அவன் திருட்டுத் தனம் .

மிகச் எளிதாகச் சுருட்டினான் .
இருபதாயிரம் கோடியை


இன்று அடைப்பட்டான்
கம்பிக்குப்   பின்னாலே .


நெஞ்சுறுதியுடன்

திருந்தி அமைத்த வாழ்விலே
 மீண்டும் ஒரு புயல்

தவ றிப் போனவன் திருந்துகிறான்
வெகு பாடுபட்டு .

திருந்தினவன்  நன்கு வாழவேண்டியது
முறை தானே.

வாழ்ந்து கொண்டிருக்கும் போது
குறுகிட்டது பனிப் போர்.

இடறுகிறது வாழ்க்கை  மீண்டும் 
சமாளித்துக் கொள்கிறான்.

தவறான வழிக்குச் செல்லவில்லை
எதிர்கொள்கிறான் இடரை .

நெஞ்சுறுதியுடன்  வென்றான்
வாழ்வாங்கு வாழ்கிறான்.Monday, February 24, 2014

அழகிய மலர்

அழகிய மலர் ஒன்று அங்கே 
 அழகிய பெண் ஒருத்தி அதனருகே 
மலர் புது இதழ்களுடன் பூத்துக் குலுங்க
பெண் நாணத்துடன் பூவிழி யுடன்  நிற்க
அங்கு ஓர் அழகுச் சுரங்கமே தெரிய 
கண் கவர் கவர்ச்சியுடன் சுழல்  மிளிர
அயர்ந்து போகிறார்கள் பார்ப்பவர் யாவரும்  
  

Sunday, February 23, 2014

நான் நீ

நான் நீ என்று போட்டி
எதற்கு என்று புரியவில்லை.

அடித்துக் கொள்கிறார்கள்
நான் முந்தி நீ முந்தி என்று


எதைக்  கொண்டு   போக போகிறார்கள்
எதற்கு இந்த  சண்டை ?

நிதானம் நிம்மதி கொடுக்கும்
அவசரம் விரோதம் வளர்க்கும்  

Saturday, February 22, 2014

அறிந்தால்

கட்டையில் போகிறவன்
தான் எல்லோரும் .

கட்டையை நினைத்தால்
கெடுதல் செய்யான் .

மண்ணில்  போகிறவன்
தான் யாவரும்  .

மண்ணை எண்ணினால்
கேடு விளைவிக்கான் .

சாம்பலாகி போகிறவன்
தான்  எல்லோரும்

சாம்பல் என்று கருதினால் 
வம்பு விளை யான் .

நாம் ஒன்றுமில்லை
 என்று அறிந்தால்


நாம் உயரலாம்
அதி  வேகமாக.


படித்த மனிதர்கள்

இரண்டு படித்த  மனிதர்கள்
 பாலம் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்
வெள்ளம்  மேலே ஓடுவது தெரியாமல். 

விபீரிதம்

எல்லோரும் பாடினால்
 பாட்டு வருமா ?

எல்லோருக்கும்  பாட்டு
எப்படி வரும்.?


பாடுகிறார்கள்  யாவரும்
பாடகர் போலே .


நல்ல எண்ணம்
ஆனால விபீரிதம்.

அறிந்து நடந்தால்
 நன்கு  பயக்கும் 


கடினம்

கடினம் என்று நினைத்தேன் 
கடினம் என்று உணர்ந்தேன் 
கடினம் என்ற போது  பயந்தேன் .

பயந்தது போல் மிகக்  கடினம்
நினைத்தது போல்  மிகவே கடினம் 
கடினம் என்று மலைத்து   நின்றேன்.

விட்டு விடுவோம் என்று எண்ணினேன் 
விட்டே விட்டேன் அத்தோடு 
மறந்தும் விட்டேன் அப்போதே.

நாட்கள் சென்றன  மீண்டும் வந்தது 
செய்வோம் என்று செய்தேன்  பொறுமையுடன் 
செய்து முடித்தேன் பெருமையுடன்   

சீரும் சிறப்புடன்

அடங்கி அடங்கி வாழ்ந்தேன்
அடங்கியே  போனேன் .

பயந்து  பயந்து வாழ்ந்தேன்
பயந்தே போனேன் .

இனியும் முடியாது இவ்வாறே
என்று எண்ணினேன் .

துணிந்து உடைத்தேன்  
யாவற்றையும் துணிச்சலாக

இப்போது துணிவுடன் வாழ்கிறேன்
 சீரும் சிறப்புடன் .

துணிந்து வாழ்  நிமிர்ந்து நில்
வாழ்கையில்  உயர்.

Friday, February 21, 2014

உண்மை வெல்லும்

உண்மை வெல்லும்
 என்பதே பொய்
எப்போது ?

உண்மை வெல்லும் 
என்று சொன்னவன் பொய்யன்
அவன் எங்கே ?

உண்மை வெல்லும்
என்று எண்ணுபவன்  அறிவில்லாதவன்
அவன் யார்?

உண்மை வெல்லும்
என்றாலே சிரிக்கிறான்  ஒருவன்
அவன் தான் உண்மையானவன் 

அழுகிறான்.

எதற்கு அழுகிறான் ?
 பார்ப்பவர்களிடம் எல்லாம்
அழுகிறான்.

புரட்டு பேசுபவன்
இன்று அழுகிறான்
 எல்லாவற்றுக்கும். 


ஏன்  என்று புரியவில்லை?
எதற்கு என்று தெரியவில்லை ?
அழுகிறான்  எப்போதும்.


அதைச் செய்கிறார்
இதை அவர் செய்தார்
 என்று அழுகிறான்.

விழி க்கிறேன்  புரியாமல்
 விழித்துக் கொண்டு இருக்கிறேன்
 காரணத்துக்காக.

Thursday, February 20, 2014

மா மனிதர்.

நியாயமான நீதபதி
நீதி என்றாலே நியாயம்.

 இன்று நீதி விலை போகும்
அதிகம் கொடுப்பவனுக்கு சாதகமாக 


இன்று நீதி எங்கு இருக்கிறது
 தர்மம் இருந்தால் தானே.

நீதிபதி விலை போனார்
இது தான் நடப்பு நாட்டிலே .

இவரோ எதற்கும் மசியாதவர்
நியாயம் மட்டுமே தெரியும்

பெருமை வீடு தேடி வருகிறது
சத்தமே இல்லத் மனிதருக்கு.

இவர் ஒரு முன்மாதிரி
போற்றப்படவேண்டிய மா மனிதர்.
 


கதை சொல்லும் விதமே

பாட்டி சொன்ன கதை
 மனதுக்குப் பிடித்த கதை

காக்கா  கதை வடை யும் அதோடு
 குரங்குக் கதை  தொப்பியும்  அதனோடு
.
ஆ மையும் முயலும்  வைத்த பந்தயம்
பூனையும் எலியும்  வாழும் வகை

என்னவெல்லாம் கேட்டாலும் அலுக்காத கதை
உலகத்தில் ஒட்டி ஓடும் கதை

கதைகளும் காரணமும் அதன் படிப்பினையும்
மனதில் படிந்து வெளிப்பட்டு விதம்
கதை  சொல்லும் விதமே


அவன் இன்று அவராக

தகமை சால்  என்றும்
மாண்பு மிகு என்றும்
  மாட்சிமை பொருந்திய என்றும்
மேதகு என்றும்
அழைப்பார்கள்  அவனை

இவ்வளவு  பெருமைகள்
 அவனுக்கு  அடை மொழியாக
வந்த பின்னும்
 நான் அவனை மரியாதை
கொடுத்து  அழைக்க விரும்பவில்லை .

தன்மையே இல்லாதவன்
பண்பே இல்லாதவன்
ஒழுக்கமே இல்லாதவன்
மேன்மையே இல்லாதவன்
அவன் ஒரு வஞ்சகன்.

இன்று அவனிடம் பணம் நிறைய
அவனிடம் பதவி பெரிய
வசதி மிகுந்த
ஆடம்பரம் அத்கம்
அவன் இன்று அவராக
திரிகிறான் வெள்ளையும் சொள்ளையுமாக 


Wednesday, February 19, 2014

அநியாயம் செய்தவன்

பணத்தைக் காட்டி
 காரியம் சாதிப்பவன்.

கணக்கு இருக்கிறது
என்று ஏமாற்றுபவன்

கணக்கில் தான் புலி
என்றே சொல்லி பிதர்ருபவன்.

பணம் எல்லாம்
 வங்கியில்  இருக்கிறது


பணம் எல்லாம்
இருப்பாக இருக்கிறது   என்றவன்இன்று பணம் இல்லை
என்கிறான் மொத்தமாக


என்ன அர்த்தம் , என்ன பொருள்
 விளங்கவில்லை.


விளங்காமல் இல்லை
பணம் காணாமல் போய் விட்டது.


எங்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்
அவன்  கணக்குக்கு.

நியாயம் பேச வருகிறான்
 அநியாயம் செய்தவன்அழுகுணி ஆட்டம்

நீதிபதியின் ஆணை
அது பதிவு செய்த
ஆணை


கையெழுத்துப்  போட்ட  ஆணை
வாதியும் ஆமோ தித்த
 பிரிதிவாதீயும் செயல் படுத்த


பிற் பிக்கப்பட்ட ஆணை
அவ்வோறே  இருக்க
மாற்றம் வேண்டி

வாதி நீதிமன்றம் செல்ல
 ஒரு மாற்றம் அல்ல
பல மாற்றங்கள் கொணர

நீதி மன்றம் என்ன
ஒரு விளையாட்டுத் திடலா
என்று நான் கார்த்த

அழுகுணி ஆட்டம் ஆடுகிறான்
வாதி பணமே இல்லை என்று
என்ன முடிவோ தெரியவில்லை 

நிலைமை மாற

துள்ளி துள்ளிக் குதித்தான்
தான் கெட்டிக்காரன் என்று.

ஆடு ஆடு என்று ஆடினான்
தான் வல்லவன் என்று.

திமிறி திமிறி  வம்பளந்தான்
தான் சாதிதததைப்  பற்றி.

இன்று நிலைமை மாற
நிற்கிறான் அந்தோ பரிதாபமாக.

குனிந்த தலையை நிமிரத்த  முடியாமல்
தாழ்ந்த நிலையை  தாங்க முடியாமல்


நாணம் மிகுந்த பெண்

வலது காலை எடுத்து வைத்தாள் .
 புகுந்த வீட்டிலே.

புது மணப் பெண்ணாய் வந்தவள்
நாணி நின்றாள் .

இன்று என்று நினைத்து விடாதே
 அன்று என்று கொள் .

தற்போது நாணம் எங்கே காண முடியும்
நாணம் என்றால் என்ன என்று கேட்கக் கூடும் .

அப்பெண் நாளடைவில் பழகி பண்பட்டு
குடு ம்பத் தலைவியானாள் .

குழந்தைகளும் பொறுப்பும் அவளை
ஒரு வலி பண்ணின .

நரை முடியும் கால் வழியும் ஒன்று சேர
இன்று மலர்ந்து  நிற்கிறாள்
 நாணம் மிகுந்த பெண்    

தனக்கு தனக்கே

தானும் வாழாமல்
மற்றவரையும் வாழ விடாமல்

தான் மட்டுமே யாவற்றையும்
தனக்கும் மட்டுமே எல்லாமும்

தன்னில்  மட்டும் சிநதிக்க
 தன்னை மட்டுமே நினைக்க

பிறந்தவனையும் மறந்து 
பிறந்தவனுக்கு கொடுக்காமல்  

தனக்கு தனக்கே என்று வாழும்
பிறவிகள் இருக்கும் போது


ஊரில் மழை  எப்படி பெய்யும் ?
ஊரில் நல்லது எவ்வாறு நடக்கும்?.  

Tuesday, February 18, 2014

பேச வராது .

கடித்து மென்று துப்பி பேசுவான் 
சரளமாக பேச வராது .

இழு இழு என்று இழுத்துப் பேசுவான் 
வேகமாகப் பேச வராது .

திக்கி திணறிப் பேசுவான் 
நேராகப் பேச வராது .

 முன் னே பின்னே  பேசுவான் 
உண்மை பேச வராது
..
திருப்பி திருப்பி பேசுவான் 
புதிதாகச் சொல்ல வராது.

  இருந்தும் பேசிக் கொண்டிருப்பான் 
அவனாகத தனக்குள்ளே.

புல் வெளியில்

புல்லின் மீது ஒரு பனித்துளி
வெள்ளி  போல் மின்ன


அதன் அருகே ஒரு குருவி
கொண்டை  சுற்று உயர .

அதன் பக்கம் ஒரு தட்டான்
பறந்து இறங்க.

அதன் நெருக்கத்தில்  ஒரு எறும்பு
கருமேமே என்று வேலை செய்ய .

 சற்று தள்ளி நான் ஒரு மனிதன்
ஏதும் செய்யாமல் வியந்து நிற்க.

அங்கு அந்த புல்  வெளியில்
அரங்கேறியது  அரிதான  காட்சி.

மொட்டு

மொட்டு ஒன்று அங்கே
அழகு கொஞ்சும்  மொட்டு


 சிறிதாகவும் அழகாகவும்
திறந்தும் திற க்காமலும்.


வண்ணமயமாகவும்  குவிந்து
குமிழா கவும்   நின்று

மலர காத்து நிற்கும்
கவின் மிகு மொட்டே

உன் அழகு என்னை ஈர்க்க 
நான் உண்ணக் கண்டு பூரிக்கிறேன் 

மகத்தான வழி

கடன் படாதே
கடன் கொடுக்காதே  
இதுவே  நல வழி .

இனாமாகக் கொடு 
திரும்ப எதிர் பார்க்காதே 
இது சிறந்த வழி 

வட்டிக்குக்  கொடுக்காதே 
வட்டிக்கு வாங்காதே
இது மிகச் சிறப்பான வழி.

இருப்பதில் மகிழ்ச்சி   
கிடைப்பதில்  இன்பம் 
இது மகத்தான வழி 

மனிதன் தானா

மாற்றி மாற்றி பேசுபவன்
 சொல்லைக்  காப்பாற்றாதவன்
மனிதன் தானா !

நேரத்திற்கு ஒன்று என்று பேசுபவன்
 வினாடிக்கு ஒன்று என்று  செய்பவன்
மனிதன் தானா !

பொய்  மட்டுமே  பேசுபவன
புறங்  கூறு பவன்
மனிதன் தானா !

வாதாடுகிறான் மேலும் மேலும் 
நியாயம் எது என்று அறிந்தும்
ஆனவன் மனிதன் தானா !

பிறர் மனம் நோகும் படி பேசுபவன்
தற்  பெருமையே பேசுபவன்
மனிதன் தானா!

இவனும் உலகத்தில் நடமாடுகின்றான்
தன்னை தானே பெரிய மனிதன் என்று நினித்து
இவனும் மனிதன் தானா !

Monday, February 17, 2014

மகிழ்வு

மகிழ்வு என்பது யாது ?
 அதை தொட முடியுமா?
அதை உணர முடியுமா?

தொடுவது  ஒரு வெளிப்படை  
அது ஒரு செயல் .
அது ஒரு பரிமாற்றம.


உணர்வு  வெளிக் கொணராது 
அது ஒரு அ னுபவம்.
அது ஒரு   உணர்த்தல்.

தொட்டு  தொட் டுப்   பேசி 
தொட்டு தொட்டு  விளையாடி 
தொட்டு தொட்டு  அறிந்து.

 உணர மனத்தால் உணர 
உணர அகத்தில் உணர
உணர   உணர தெளிந்து .

மகிழ்வு  என்று ஒன்று இருந்தால் 
அதில் ஒரு நிறைவு,ஒரு  இன்பம் 
வெகு வாக மனதில் ததும்ப 
இன்முகத்தில் தெறிக்கும் 

 

பிறந்தேன் இறந்தேன்

ஒவ்வொரு நாளும் பிறந்தேன்
ஒவ்வொரு நாளும் இறந்தேன்.

புது மலராக காலையில் எழுந்து
வாடின மலராக இரவில் சரிந்து .

விடியும் போது  வெளிச்சம் கண்டு
பொழுது சாயும் பொது இருட்டைக்  கண்டு .

பகலிலே பரபரப்பாக  வேலை செய்து
 அந்தியிலே துவண்டு  படுத்து

ஒவ்வொரு நாளும் பிறந்து
ஒவ்வொரு நாளும் இறந்து 
போகிறது என் காலம்.
மனம்

மனதில் ஒரு அழுத்தம் 
அது பொங்கி விடுமோ என்ற ஒரு பயம் 
 பொங்கினால் விபரீதம் .


மனதில் ஒரு திடம் 
 அது நின்று பிடிக்க வேண்டும் என்ற அச்சம் 
நின்றால்  பெருமிதம்.

மனதில் ஒரு வெளிச்சம் 
அது தரும்  நம்பிக்கை  ஒரு மகிழ்ச்சி
நம்புவோம் சக்தியை . 


Sunday, February 16, 2014

தவிப்பு

இதுவோ அதுவோ என்ற நிலை  
சற்று ஏறக்குறைய  இதே போல் 
மனம் ஒரு நிலையில் இல்லை  

பொறுமை என்பதே இல்லை
பொறுப்பது  என்பதே இல்லை
தவிப்பதே ஒரு  விலை.

அலை பாயும் மனதுக்கு 
 சற்று அயர்ச்சி  வரும்.
கண் மூட நினைக்கத் தோன்றும் 

பாவம் மனம் விடாது 
தூங்க விடாது நிம்மதியாக 
அலைச்சலே வாழ்வு என்பதாகுக 

மதிப்பு

பரிகாசம்,  வம்பு 
இது  தான் அவனுடைய 
மந்திரம். 


வீண் பேச்,சு ஆகாத  சிரிப்பு  
  திமிர் த்தனம் அவனுடைய 
வழி கோல்  

நடிப்பு ,நாடகம் 
அட்டகாசம்  அவனுடைய
திறன்.

இவ்வளவு காட்டியும்  
அவனுக்கு  கிடைக்கவில்லை 
மதிப்பு

Saturday, February 15, 2014

எங்கோ இருக்கும் ஒருத்தி

எங்கோ  இருக்கும் ஒருத்தியை
பற்றி பேசுகிறான் .

அவள் இவனுக்கு உறவல்ல
பந்தமும் அல்ல

அவள் மீது ஏனோ கடுப்பு
ஏன் என்று தெரியவில்லை.

அவனை  அவள் மதிப்பதுமில்லை
முகத்தில் விழி ப்பதுமில்லை.

அவளைப் பொறுத்த வகையில்
அவன் ஒரு வெட்டிப் பைய.ன் .

இது தான் அவன் ஆத்திரமோ
இருக்கலாம் போல.

அவனின் பேச்சு தொடர்ந்தால்
அவள் கடும்  நடவடிக்கையில்  இறங்குவாள்  .


அவன் குடும்பம் வளராது இன்றிலிருந்து
 அவ்வவாறே  இருக்கும்


முடியவில்லை

காது கொண்டு கேட்க முடியவில்லை
கர்ண கொடுரம் .

கண் கொண்டு  பார்க்க  முடியவில்லை
அநியாயக் கோலங்கள் .

கையில் எடுக்க முடியவில்லை
அதித  சூடு .

தாங்க முடியவில்லை  எதையும்
அவ்வளவும்   கேடு .
வழி நான்கு

எண்ணம்  கொள்ளாதே  
யாரைப் பற்றியும்

அவன் வாழ்வு அவனோட 
அவன் போக்கு அவனோ ட  

பேசாதே எதைப் பற்றியும்  
உன் சம்பந்தம்  இல்லாமல்.

அவன் பேச்சு அவனோட 
அவன் பெருமை அவனோட .

கவலைக் கொள்ளாதே எதற்கும் 
அவை வந்து போகும் 

அவன் நினைப்பு அவனோட 
 அவன் நேரம் அவனோட .

வேலை செய்ய அஞ்சாதே  எப்போதும் 
அது தான்  வலிமை.

அவன் நிலைமை அவனோட 
அவன் வலி அவனோட. 


 வழி  நான்கு 

நன்கு நான்கு

கையை நீட்டாதே
எதற்கும் ,
வாங்குவதற்கும், கொடுப்பதற்கும்
அடிப்பதற்கும, கலகத்திற்கும்  

கொடுப்பது அறிந்து
கொடு,
நல்லதுக்கும் ,கெட்டதுக்கும்
நிலை  புரிந்து


வாங்குவது புரிந்து
வாங்கு.
வேண்டுவதற்கும் வேண்டாததற்கும்
அளவு அறிந்து.

செயல்  படுத்து
உடனே
தாமதிக்காமல்  கடத்தாமல்
முடிவுடன்.


கல்வி

கல்வி  தன்னை கொடுப்போம்
கை நிறைய.

கல்வி தன்னை கற்போம்
மனம் நிறைய.

கல்வி தன்னை காப்போம்
 கண்   போல

கல்வி தன்னை மேம்படுத்த
உழைப்போம் .

கல்வி தான்  கை மேல் பலன் தரும்
என்று நம்புவோம் 

கண் என்ற காவியம்

கண் பேசும்  என்று   சொல்வார்கள் 
கண் பேசும்  அட்டகாசமாக .
கண் சிரிக்கும் அழகாக 
கண் மின்னும் குறும்பாக 
கண்ணடிக்கும்  விளையாட்டாக.

  கண் என்ற காவியம் 
ஓவியமாகச் செதுக்குமபோது 
 வினயமாக விளக்கும் போது 
வித்தியாசமாக பார்க்கும் போது 
வினோதமாகத்  தெளியும் போது 

கண் போல் பாது காக்க 
 அது ஒரு உ யர்ந்த  பொருள் 
அழிவில்லாச்   செறிவு  
இறந்தும்  கொடுப்பது 
கண் என்பது அதன் அளவு.

Friday, February 14, 2014

நல்லதுக்குததானே !

காடு இன்று
விலை ஆகிறது
வேகமாக.

விளை  நிலம்  இன்று
வீடாகிறது
துரிதமாக .

வீடுகள் இன்று
 மாடி மேல் மாடி ஆகின்றன
அப்பபப்வே .

கண்மாய்கள் இன்று
அலுவலகம் ஆகிறது 
நேர்த் தியாக .

மாற்றம் ஏற்படுகிறது
நல்லதுக்குததானே  என்று
தெரியவில்லை 

மண்ணின் மைந்தன்

தனிமை  இனிமை
தன்னொலே  வாழ்வது
இன்பம் .

 தனியாக  நிற்பது  வலிமை
தானாகவே சாதிப்பது
வளமை  .

தன்னால் முடியும்  என்ற  எண்ணம்
ஏற்படாது எல்லோருக்கும்   ஏற்பட்டால் 
 தைரியம் ..

தானே செய்து  தன்னிகரில்லா  புகழ்
கிட்டி வாழ்பவனே மெய்யாகவே 
மண்ணின் மைந்தன்குழந்தை மனிதனாகிறான்

தத்தி  தத்தி நடந்த குழந்தை
 சப்பி சப்பி  கண்டது
 அபார ருசியை

கத்தி கத்தி அழுத குழந்தை
சப்பி சப்பி அமைதியானது
கட்டை விரலை.

சப்பி சப்பி அவ்விரல்
 சூம்பிப் போனது
விரைவிலே .


பாலும் அமுதும்
பாசமும் அன்பும் கண்டது
 அவ்விரலிலே.

பாதுகாப்பும்   அனுசரணையும்
தாயும் கண்டது  குழந்தை .
 அவ்விரலிலே.


தாதி தத்தி நடந்து
சப்பி சப்பி வளர்ந்து
மனிதனானது  குழந்.

இன்று  தத்தி தத்தி நடக்கவில்லை
சப்பி சப்பி  ருசி காணவில்லை
அவன் குழந்தையுமில்லை.

இருந்தும் தடுமாறுகிறான்  அவ்வப் ப்போதே
சப்புக் கொட்டுகிறான்  அவ்வவப் போதே
குழந்தை போலே.


குழந்தை மனிதனாகிறான் 


  

அவளும் கண்ணாடியும்

கண்ணாடி முன் நின்றாள் 
பார்த்தாள் வெகு நேரம் 
 தன்னையே .

இது அவளின் பழக்கம் 
தன்னை நோக்குவது 
 என்பது.

தன அழகிலே  அதன் தோற்றத்திலே 
 அவள்  நினைப்பு  அதுவாக 
மயங்குவான் போல் 

பேரழகி என்ற நினைப்பிலே 
 பாவம் வாழ்கிறாள் 
 வெகு நாளாக .


கண்ணாடியும் துணை போகிறது 
அவளுடன் கை கோர்த்துக் கொண்டு 
வேடிக்கை .


உண்மையைச்  சொல்கிறேன் 
 அவள் புரிந்து கொள்ளவில்லை
என்ற முணு முணு ப்பு .

எங்கே என்று திரும்பினால்  ?
கண்ணாடி பேசுகிறது 
விநோதமாக 

இப்போது தான் நான் 
தனித்து இருக்கிறேன் 
என்று அழு தது.

அதற்குள்  அவள் வந்தாள்
கண்ணாடி கண்ணைக்  காட்டியது 
 ஒரே அமைதி.  
எத்தனை நாட்கள்


உடலும் தளர்ந்து
 மனமும் தளர்ந்து
 இன்று ஒரு நாள்
 வித்தியாசமாக விடிய.
எழுந்திருக்க முடியாமல் எழுந்து
 தள்ளாடி செய்து
 பிறகு எதை தள்ளுவது
எதை விடுவது
 என்று நிலையில்
 கட்டாயமாக செய்து
 பொழுதை ஒட்டி
படுக்கையில் விழும் முன்
தோன்றியது இன்னும்
எத்தனை  நாட்கள்
இவ்வாறு வாழ வேண்டும் என்று.
 

Thursday, February 13, 2014

விரிவு

பரம்பொருளே என்கிறான் இந்து
பரமபிதாவே என்கிறான் கிருத்துவன்.
பிரம் மமே என்கிறான்  . முகமதியன்
 புத்தம் சரணம் என்கிறான்  ஒருவன்
புத்த மத த்தைக்  கடை பிடிப்பவன்
யாவரும் வழி  படுவது ஒன்றே
ஒரு பொருளே ஒரு தீர்வையை
ஏனோ அதில் ஒரு வேறுபாடு
 அதில் ஒரு சந்தேகம்
 அதில் ஒரு கசப்பு
 நினைத்தது ஒன்றுதான்
 என்று கொண்டால்
 விரிவு இல்லை
 வலி யில்லை   

கவலை

கவலை யில்லாத மனிதன் எங்கே ?
சொல்லு என்று கேட்டான்.

கவலை என்பது ஒன்று இல்லை.
அது ஒரு மன வெளிப்பாடு.

கவலை என்பது ஒரு சிறை
அதுனுள்ளே  இருப்பது முறையல்ல.

இருப்பதில் ஒரு மகிழ்ச்சி  என்றால்
கவலை எங்கும் இல்லை .

இல்லாததை  நினைத்தால்  துயரம் 
கவலை கவ்வும் நெஞ்சிலே .

கிடைத்தது  லாபம்  என்று நினைத்தால்
பெருத்த  இன்பம் .

கிடைக்காததை    எண்ணினால்   
வலுத்த மனச் சரிவு.

கவலை நம்மிடையே வராமல்
பார்த்துக் கொண்டால்
நிம்மதி பெருகும்


 

நாடினான் நாடியை

நாடியை வைத்துக் கண்டான்
உடலின்  நிலைமையை .

நாடி  பிடித்து  கண்டான்
அதன் கோளாறை

வாதம் ,பித்தம்,கபம் 
 என்று பிரித்தான்

ஒன்று மிகுந்தால் வரும்
 நோயை அறிந்தான் .

ஒன்று குறைந்தால்  வரும்
பிணியைக்   கண்டான்.

அவற்றைக் குறைக்கவும்
கூட்டவும்  வகுத்தான்  வழி.

சம்மானம் காண முயன்றான்
 கற்றான் சுவடியிலிருந்து.

தெளிந்தான்  நல்விதமாக
மருத்துவனானான்    கை தேர்ந்த

நாடி கண்டு அறிந்த படிப்பு
இன்றும்  அன்றும்  சிறப்பு.
Wednesday, February 12, 2014

ஆறே !

காடு மேடு  ஓடி 
கரை சேரும் 
 ஆறே !

வளைந்து ஓடி
ஊருக்குள் புகுந்து  ஓடும் 
ஆறே !

பாய்ந்து ஓடி 
வளம் காணும் 
ஆறே !

தேங்காமல் ஓடி 
மனிதரைத் தாங்கும் 
ஆறே!

தடை காணாமல் ஓடி 
தனக்கில்லாமல் பயன் தரும்  
ஆறே!

உன்னிடம் ஓடி 
 வரத் துடிக்கிறேன் 
ஆறே !

நெல்லுக்கு பாயும் நீர்

  

அறி யாதவன் என்று நினைத்தேன் 
அவனோ அறிந்தவன் போல் காட்டினான் 
கையை ஆட்டி பேசும் அவன் 
கரகரப்பான குரலில் பேசும் அவன்  
புரியாத பேச்சு பேசும் அவன்
பள்ளி பக்கமே  செல்லாத அவன் 
 காசை எண்ணிக்  கொண்டே  இருக்கும்  அவன் 
கை நாட்டு வைக்கும் அவன்
நான்கு பேருடனே சுற்றும் அவன்
காலம் எல்லாம் ஒட்டி விட்டான் 
 புறம் பேசி  ,பொய் பேசி
உடன்  பிறந்தவர்களின் சொத்தை தின்று     
நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் போகும்  அல்வா 

Tuesday, February 11, 2014

பார்வை

விளக்கின் ஒளியில்
 தெரியும் பல குறைபாடுகள்
 குறைவான்வெளிச்சத்திலே
எடுப்பாகத் தெரியாது .

குறை காணும் நோக்கிலே கண்டால்
 நிறை  தோன்றாது
 இல்லாத குறையெல்லாம்
மிகுதியாகத் தோன்றும் .

நிறை கண்டு நோக்கினால்
குறை கண்ணுக்குப்  புலப்படாது .
குறையும் நிறையாகத்   தோன்றும்
மகிழ்வு ஏற்படும் .


கண்ணிலே இருக்கிறது
 நிறையும் குறையும்
சாளரம் வழி பார்ப்பவனுக்கு
 மண்ணும் தெரியும்  வானமும் தெரியும்.
Monday, February 10, 2014

இறப்பு ஒன்றே.

பா தி நாட்கள் இங்கே 
 மீதி நாட்கள் அங்கே  
 என்ன வாழ்க்கையோ 
 தெரியவில்லை எனக்கு 
 புரியவில்லை எனக்கு.


அங்கே  மூடி 
இங்கே திறந்து 
இங்கே   சுருக்கி 
அங்கே  விரித்து 
விளங்கவில்லை எனக்கு.


 .விட்டதை தொடங்கி  
 தொடங்கியதை விட்டு
பாதி பாதியாக 
இங்கும் அங்கும்
தலை  சுற்றுகிறது எனக்கு  .

ஆதரவாக கை  நீட்ட 
கனிவாகப்    பேச 
நின்று கேட்க 
நிலைத்து ஓர் இடத்தில் 
என்னால் முடியவில்லை 

எங்கு சென்றாலும் 
பிக்கல்  பிடுங்கல் 
பொறாமை ,போட்டி
வஞ்சகம்,  கடுப்பு 
என்னால் தாங்க முடியவில்லை 

இதற் கெல்லாம் ஒரே இடம்  
மன அமைதியும், நிம்மதியும்  
நிதர்சனமான்    நிரந்தரம்
எங்கே என்று மனம்   அலைய 
தோன்றுகிறது  இறப்பு  ஒன்றே.
 
 
என் அருமை மனிதன்

சற்று தள்ளி நின்று உலகத்தைப் பார்த்தால் 
சுற்று உயரே இருந்து நோக்கினால் 
தெரியும் முறை ஒரு படிப்பினை .

மனிதனி ன் வேகம்  ஒரு உதாரணம் 
எங்கு செல்கிறான் தினப் பொழுதும் 
எங்கு விரைகிறான் எப்போதும் 
ஆழ்ந்த  யோசனையுடன் .

மரத்தின் மீது ஏறி  அமர்ந்தேன் 
சில மணி நேரம் ஒரு ஆர்வதத்துக்காக  
கண்டேன் மனிதர்களை  ஆசவாசமே இல்லாமல் 
எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.

நிதானம் என்பதே இல்லாமல்  ஓடி ஓடி 
பணம் பணம் என்று அதன் பின்னே சென்று 
 அதை அடைய வழிகள்  பல தேடி 
நிம்மதியிழந்து வலுவிழந்து போகிறான் .

பல அற்புதங்களை காணாமல் 
பல அறிவார்ந்த நிகழ்ச்சிகளை தவறவிட்டு 
நல்ல தூக்கம்  இல்லாமல் கண் சிவக்க 
 நிற்கிறான் என் அருமை மனிதன் 

Sunday, February 9, 2014

தன் வேலை

ஊருக்குப் போகிறேன்
 என்று சொன்னான்
 போகும் போது
விட்டைப்  போய்  பார்
என்ற போது
நான் போகவில்லை
நீ இருக்கும் போது
வருகிறேன்
என்றவனை
என்ன சொல்லுவது
ஆள் புழக்கமில்லா
வீட்டை பார்ப்பது தேவையா
நான் இருக்கும் போது
வருவது என்ன பயன்
மனம் வெதும்ப நிற்கிறேன்
எதைச் சொல்லுவது
என்று புரியாமல். 
எல்லோரும்  தன்  வேலை
 முக்கியம் என்று நினைத்தால்
எனக்கும் அவ்வாறே நினைக்க
தோன்றுகிறது  முக்கியமாக.

  

பத்து முகமாக

பத்துப் பேராக ஊ ர் சுற்றிப் பார்க்க 
திரண்டு  ஒற்றுமையாகக் கிளம்ப 

பல ஊகள் ர் பார்க்கப் போகிறோம் 
 என்ற எண்ணத்தோடு  கிளம்ப 

சென்ற ஊர்களிலெல்லாம்  
நினைத்த படி  வரவேற்பு  இல்லை.

எங்கு கிடைக்குமோ என்று நினைத்த இடத்தில்  
கிட்டவில்லை  சற்றுக் கூட .

எங்கு கிடைக்காதோ என்ற இடங்களில் 
கிடைத்தது பெருமை .

பார்க்க வேண்டும் என்ற கட்டாயாத்திற்காக 
சுற்றிப் பார்த்தார்கள் 

பத்துப்  பேரிடம் புறப்படும்  போது இருந்த 
ஒற்றுமை விரிசலடைய .

அரசல் புரசலாக பேச்சுக்கள் நிகழ்வுகள் 
 நிறையத் தோன்ற .

பயணம் முடியும் போது  மனங்கள் வேறுபட 
வீடு திரும்பினர்  பத்து முகமாக 

Saturday, February 8, 2014

கை பேசி

கை பேசி  இன்று கை நாட்டிடம் கூட
அலை அலையாக வரும் ஓசைகள்
கூப்பிடும்  ஓசையோ பல மெட்டுக்களில்
  பக்திப் பாடல்கள் என பலர்
கை உயர்த்தி   அழைக்க 
 திரைப்படப்  பாடல்கள்  என்று பலர்
கூப்பிடும் குரலாக வைக்க
எங்கும் எதிலு இப்ப ஒலிக்கிறது
பாட்டுக்களும் மெட்டுக்களும்
 உலகமே இன்று நாதம் மயமாக
இசை இன்பம் பெருகி  கும்மாளமிடுகிறது.

  

எங்கள் தமிழ் திரு நாடு.

காவிரி பாயும் நாடு
வை கை ஓடும் நாடு
 தாமிரவரு ணிதுள்ளி  ஓடும் நாடு
 எங்கள் தமிழ் திரு நாடு.

நெல்லும் கனியும் விளைந்த நாடு
பூவும் மொட்டும் பூத்த நாடு
காயும்  கரும்பும்  கவிந்த நாடு
எங்கள் தமிழ் திரு நாடு.

காவிரி  விரிந்த செல்கிறது
ஒரு பெரும் மண ற்பரப்பாக
வைகை காய்ந்து கிடக்கிறது
தாமிரவருணி  தேய்ந்து  நிற்கிறது..

கல்லும் மண்ணும் விற்கப்பட்டு 
காசும் பணமுமுமாகி
நிலமும்  கிணறும் கண்மாயும்
கட்டிடமாக   ,உயர்ந்த நிற்க 

குடிக்கத் தண்ணீருக்குத் தவிக்கும் நாடாகி
 ஒரு துளி நீர் என் கூக் குரல் ஒங்க
கண் கெட்ட பிறகும்  வேண்டுவது
என்னமோ தமிழனுக்கு கை வந்த கலை


ஜல்லிக்கட்டில்

கட்டினான் காளையை கம்பத்திலே 
ஜல்லிக்கட்டில் வென்ற  சிங்கக் குட்டியை .

நெய்யும் சோறும்  படைத்தான்
பழ மும் தேனும்    கொடுத்தான் .

திமிறி ஓடிய காளை  
அலுத்துச் சலித்து படுத்தது.

போட்டிக்காக  அதை ஆட்டுவித்த ஆட்டம்  
கொஞ்சமா நஞ்சமா  பாவம் .

ஓட ஓட விரட்டி  மேடும் மலையும் ஏறி 
கொளுத்த  உணவை அளித்து .

தின்ன முடியாவிட்டாலும் திங்க வைத்து 
உடல் வலுவை பெருக்கி  ஒரு வழியாக்கி

போட்டியில் பங்கேற்ற போது   தூண்டி 
 வேகப்படுத்தி  வெற்றிக் கொள்ள வைத்தான்.


வெற்றியை தேடிக் கொடுத்த காளை 
மறு நாள் எழுந்திருக்கவில்லை   


Friday, February 7, 2014

சிலேடை

சிலேடை என்ற ஓரு பயன்பாடு
மிகுந்த இடர்பாடு
 வேணுமென்றே தரும் வெளிப்பாடு .

சொல்லுவதை சொல்லும் பொருட்டு
 தற்செயல் வந்த குறுக்கிட்டு
 வெளி வரும் ஒரு திரட்டு .

சொல்லுவதில் ஒரு புலமை அதில் ஒரு சொருகல்
ஆழ்ந்து நோக்கின்  ஒரு  பெருக்கல்
அருகே சென்றால்  அதிலும் ஒரு வருடல் .

நல்லவிதம் என்று கொண்டால் நன்று
 வேறு முறையாக  சிந்தித்தால்  ஒரு குளறு
 எல்லாவற்றிற்கும் ஒரு சான்று .

நீ அழகான பெருமாட்டி  என்று கொள்வோம்.
பெருமாட்டி என்பது நயம் என்று  கொள்ள லாம்
பெருத்த  உடம்ப்போடு உள்ளவள் என்றும் புரியலாம்


சிலேடை என்பது இதுவே
 ஒரு சொல்லில் பல அர்த்தங்கள்
நல்ல விதமாகவும் நல்ல  விதம் அல்லாதா கவும்

ஒரு கூட்டம்

ஒரு சாரார்
ஒன்று சேர்ந்து
பாராட்டுகிறார்கல்.

கவிஞகனே ! கவியரசனே
என்ன வரிகள்
 என்ன சிந்தனைகள்  .

ஒரு கூட்டம்
ஒன்று கூடி
பாராட்டுகிறது.

ஒருவனை அல்ல
அந்தக் கூட்டத்தில்
 உள்ளவர்களை .

இந்திரனோ! சந்திரனோ!
அஹ்ஹா  ஓஹ்ஹோ
என்று .

தள்ளி நின்று
 பார்க்கும் போது 
நகைப்பு ஏற்படுகிறது.

நகைப்போம்
மனதுக்குள்ளே சன்ன மாக
பலத்த விமர்சனமில்லாமல்


  

  

எழுதினான

எழுதினான்  அவன் பாட்டுக்கு 
 பக்கம் பக்கமாக .

எழுதினான் அவன் நோக்குக்கு 
 பத்தி பத்தியாக .

எழுதினான் அவன் வழியில் 
 கவிதை கவிதையாக..


எழுதிக்  கொண்டிருக்கிறான் 
யாரையும்  எதிபார்க்காமல்.


எழுதவான் அவன் அப்படியே 
 படிக்கிறார்களோ இல்லையோ எனற  
கவலை யில்லாமல் 


கணேசன்

தெரிந்த மனிதன்
 உனக்கும் எனக்கும் .
தெரியாமல் வாழ்கிறான்
யாவருக்கும்.

இருக்கிற இடம்
எனக்கும் தெரியும்
 உனக்கும் தெரியும் 
உலகிற்கு தெரியாது.

செய்யும் வேலை
 எனக்கு தெரியும்
 உனக்கு தெரியும்
மற்றவர்களுக்கு தெரியாது.

அவன் யார்
 என்று புரிந்ததோ
 உனக்கு இப்போது
 புரியவில்லை என்றால்.

குறித்துக் கொள்
அவன் எதையும்
 எதிர்பார்க்காத
 தனி மனிதன்.


பெரும் செல்வந்தன்அல்ல
அதற்காக வறியவனும் அல்ல
அவன் தான் என்னிடம்
வேலை பார்க்கும் கணேசன்


பேருந்து

 நின்றிருந்தேன்  பேருந்து
நிற்கும் இடத்திலே  வெகு நேரமாக

வந்தது பேருந்து
ஊ ர்ந்து தள்ளிக் கொண்டு.

முண் டியடித்து   ஏறப் பார்த்தேன்
திணறலுடன் ஏறினேன் .

ஏ றினவுடன் திக்குமுக்காடினென்
முச்சு விட முடியாமல்.

பிதுங்கிச்  சென்றது பேருந்து
தெருத் தெருவாக

ஆடிக் கொண்டே நின் றபடி சென்றேன்
 என் இலக்கை  நோக்கி..

நி ற் கும் போது து தோன்றியது ஏனோ எனக்கு
 வாழ்கையும் இதே முறையில் செல்கிறதே என்று

 
வீழி பிதுங்கி, மன ம் கரைந்து, உழைத்து
 எவ்வளவு முயன்றும் கிட்டவில்லை எதுவுமே.


பிறந்த நாள் கொண்டாட்டம்

ஒளி மயம் எங்கும்  
வான் வேடிக்கை எங்கும் 
பிறந்த நாள் 
 தலைவருக்கு .

தலைவர் வாழ்க
 ஒலி  முழக்கம் 
 விண்ணைத் தொட 
வந்தார் தலைவர்.


கூப்பிய கைகள் 
 மலர்ந்த முகம்   
தளர்ச்சி  வந்தும் 
வெளிக் காட்டாமல்.

மகிழ்ச்சி அலை எங்கும்  
திணறும் கூ ட்டம் 
 தாய்மார்கள் அதிகம் 
 முளி  பிதுங்கும் காவல் துறையினர்..


பெருந் தலைவர் எழ  
முய ற்சிக்க கடுமையாக 
கைத்தாங்கலாக தூக்கி 
நின்றார் தடுமாறி .


என்னே ஒரு பேரின்பம்
வாழ ஆர்வம் 
மக்களுக்காக  என்ற அறைகூவல்
உண்மையில் தன குடும்பதுக்காக .

தெரிய வில்லை மக்களுக்கு 
 புலப்படவில்லை தாய்மார்களுக்கு .
அவனுக்கு  வாழ்த்துக்கள் 
இன்னம் நீண்ட  நாள் வாழ 
  
 
பிறந்த நாள் கொண்டாட்டம் 
விமர்சையாக  நடக்கி றது 
தொட்டு விடுவாரன்  நூறை 
 ஐயமே இல்லாமல்.

 


விழுந்தது யார் ?

மலர் ஒன்று விழுந்தது 
ஓசையில்லாமல் .
அதற்கும்  வலியில்லை 
 மண்ணுக்கும் வலியில்லை .

குழந்தை ஒன்று விழுந்தது  
அழுகையுடன் .
கதறியது வலியுடன் 
தரைக்கோ யாதுமில்லை .

பெண்  ஒன்று வீழ்ந்தாள் 
கசங்கி
நைந்து  உடல் முறையிலும் 
மனதளவிலும் .  
சாயந்திரம்

மாலை சாயும் பொழுது
 ஓர் அமைதி எங்கும் நிலவ
தளர்ச்சி தொங்கி நிற் க்கும் வேளை   
வேலை முடிந்த கையோடு 
 மக்கள்  விடு திரும்பும் நேரம் 
 அலைந்து பறந்து சேகரித்த 
உணவோடு கூடு திரும்பும்  குருவிகள் 
சட்டென்று ஏற்படும் ஆயாசம் 
யாவும் கூடி  நிற்கும்  சாயந்திரம்
 ஒரு சாய நினைக்கும் பொழுதாக 
ஒரு அயர்ச்சி மிக்க நேரமாக 
ஒரு அமைதியை  நாடும் பொழுதாக 
இருப்பதனால் தான் அந்தி படும் காலம் 
 சாயும்  சாயந்திரம் எனப்பட்டதோ 

காதிலே பூ

காதிலே பூ  வைக்கிறான்
சுற்றி சுற்றி   வளமும் இடமுமாக
பலவாகச் சுற்றுகிறான்
பல முறை சுற்றுகிறான்
காது கிழியும் வரை

சுற்றுபவன் சுற்றுவான்
 பொய்யை அழகாக
சுருட்டி  பந்தாக
கேட்பவனுக்கு இனிமையாக
புனைவான் பொய்யை .


இல்லாததை சுழுட்டுவான்
இருப்பதை மறைப்பான்
சுண்டி இழுப்பான் கவர்ச்சியாக
பொய் பேச்சாலே
பந்தாடுவான்  நன்றாகவே.


அவன் தனியன் அல்ல
அவனுடன் பல் பேர்
சுற்றுகிறார்கள்  அங்கும்
இங்கும் சழன்று கொண்டே
வைக்கிறார்கள்  பந்தமாகவே
பூ காதிலே..

Thursday, February 6, 2014

தலை ஆட்டி

தலை ஆட்டி பொம்மை 
 ஆட்டும் தலையை 
 எதற்கு என்று தெரியாமலே.

காற்று அடித்தால் 
ஆ ட்டும் தலையை 
வேகமாகவே.

இல்லாவிடின் 
ஆங்கு ஒரு முறை 
என்று ஆடும் .

சில வேளை 
தலையை ஆட்டிக் 
கொண்டிருந்தாலே 

நடக்கும்  காரியங்கள் 
நடக்கும்  
சரியோ தவறோ 

பல முறை 
தலையை ஆட்டினாலே 
விபிரிதம்.


நடக்க கூடாதது 
நடந்த விடும்  
தலை   குப்பற .

எப்போதோ  ஆட்டு 
தலையை 
எப்பொழுதும் ஆட்டாதே 
தலையை .கைலாசபுரியில்

கை எதற்கு எல்லாம்
 கை என்னவெல்லாம்
 கை  சைகை  என்போம் .

எழுத கை
எழுத்துக்கு கை
 எழுவதற்கு கை .

உண்ணக்  கை
 உணவுக்கு கை
 உட்படுத்தவதற்கு  கை .

கட்ட  கை
கட்டுவதற்கு கை
காட்டுவதற்கு கை .

கை வேலை
கைக்கு வேலை
 கையூட்டும்  வேலை

கை நீட்டி
கை யை அடியில்
கை கொடுத்து

  கையொப்பம்  இடாமல்
கை மேலே வராமல்
 கைக்குள்ளே .

இடது கையில் வாங்கி
 வலது கைக்குத் தெரியாமல்
கை மேலே   வாங்கி .

கை காட்டி
 கையோடு செய்து
 கை குலுக்கும்.
  .

கையாட்கள்  நிறைந்த
கைலாசபுரியில்
கை கூப்பி  நிற்கும்
  கை இல்லா  ஆசாமி.
 .
வெறுத்துப் போய் .

கவிதை ஒன்று எழுதினேன்
மனம்  சொன்னது நன்றாக  இல்லை  என்று.

 மாற்றி எழுதினேன் எதுகை மோனையோடு
இதுவும் நன்றாக இல்லை என்றது  .

திரும்பவும் எழுதினேன்  சொல் நயத்தோடு
 அதை விட மோசம் என்றது .

விளக்கம் கூட்டினேன் வர்ணித்து மெருகு ட்டினேன் 
அய் யையோ என்றது.

விட்டு விட்டேன் வந்தது வரட்டும் என்று
வெறுத்துப் போய் .

மனம் சும்மாவா விட்டது  தட்டி எழுப்பியது
எழுது   விமர்சையாக  இருக்கிறது என்று

அவனும் அவளும்

கனிந்து உருகி 
 கசிந்து நின்று 

கலந்து உறவாடி 
கரைந்து பாடி 


காட்டினான் பரிவை 
ஈந்தான் காதலை.

பார்த்தாள்   அவள் 
பரிதாபத்தோடு .

சிரித்தாள்  அவள் 
குறும்பாக 

இயம்பினாள்   மெது வாக 
நானும் தான் .


Wednesday, February 5, 2014

தமிழன் எங்கெல்லாம்

தமிழன் படு கொலை
ஈழத்தில்  மட்டும்.

தமிழர்கள் செய்த பாவம்
தான் என்னவோ?

எங்கு சென்றினும்
 ஒரு கொடிய செயல்.

மியன்மார்  பர்மாவாக
இருந்த பொழுது

வளம் காத்த தமிழன்
 நிலம்  இழந்து நின்றான்.

புலம் பெயர்ந்த தமிழன்
 மலேயாவில்   இன்று

தடம்  புரண்டு தடுமாறி
நிற்கிறான் பாவமாக.


ஊரை மறந்து  வாழும்
 தமிழன்  இடர்கி றா ன் எங்கோ ?


உற்றாரை துறந்து வாழும்
 தமிழன் வீழ்கிறான்  எதற்கோ ?


ஒற்றுமை என்பது தமிழனுக்கு
என்ன வென்றே  தெரியாதொ

அது தான் காரணமோ
அவனின் கொலைக்கும், அரட்டலுக்கும்


.


தெரிந்தும் என் செய்ய?

ஊருக்கு நல்லவன்
வீட்டில் எப்படி ?

ஊருக்கு  அமைதியானவன்
 வீட்டில் எவ்வாறு?

ஊருக்கு  அன்பானவன்
வீட்டில் என்னவோ?

எதிர் மறையோ  என்று
கொண்டால் வியப்பில்லை .

அதுவே  நடைமுறை
அனுபவம் சொல்லும்

நல்லவன் தீயவன்
என்று அல்ல

நல்லவன்  மட்டும்
அமைதி மட்டும்

அன்பு மட்டும்
என்று இல்லாமல் .

கோபம், நிறைய
குத்தல் நிறைய

வெறுப்பு அதிலும் கூட
என்று  காட்டி

ஊருக்கு ஒரு வாழ்வு
வீட்டில் ஒரு   நுழைவு

தெரியாமல் இல்லை
 தெரிந்தும் என் செய்ய?வெட்கம்

வெட்கம் என்பதை வெக்கம்
என்று  கொள்ள வது சரியா

சரி என்றால் எல்லாம்
சரி தான் என்று கொண்டேன் .

 பேச்சு  வழக்கில் வெக்கம்
 எழுதும் போது   வெட்கம்

நான் அறிந்தது அதுவே
மாற்றுவது சரியல்லவே.

 மாற்றுவதற்கு நாம் யார்
உண்டாக்கினவர் அல்லவே.

தமிழில்   பிற மொழிச   சொற்கள்
எக்காரணம்   கொண்டும் கூடா
.
ஆங்கிலம் வளர உலகளவும்
  பிற சொற்களை  ஏற்றல் . காரணமே.

வெட்கம் வெட்கமாகியே  இடம்  பெற்றால்
வெட்கம் ஒன்றுமில்லையே


போகும் வழி

வழியிலே  ஒரு நெருக்கடி
தாமதம் மிகவே
 சென்றேன் குறுக்கு வழியிலே
போகாத வழியில்
போகும் போது
கண்டேன் ஒரு
அதிசயத்தை.

ஒரு  கலைக்  கூடத்தை
அருமையான வேலைப்பாடு
 செந்நிறக் கற்களாலே
தூணின்உயரமும்  கம்பிரமும்
உத்தரத்தில் தெரிந்த
நுணுக்கமான அலங்காரமும்
கண் கொள்ளா அழகு

தேக்க மரத்தில் இழையோடிய
 ரேகையும், செம்மையுமே
அதன் வனப்பும்
தரையிலே கண்ட
பளபளப்பும்
பேசின  பல  கதைகள்  
மௌனமாகவே.


இனம் தெரியாத
 புல்லரிப்புடன்
 கிளம்பினேன்  மனமில்லாமல்
போகும் வழி  தடை
இல்லாமலிருந்தால்
இவ் வழி  வந்து
கண்டிருக்க மாட் டேன்
இந்த மாண்பினை 
  

பூங்கா

பூவும் காயும் சேர்ந்தது பூங்கா
இளைப்பாற மனிதன்  செய்தது  பூங்கா.
அள்ளிக் கொடுக்கும் அழகினில்
ஆய்ந்து  ஓய்ந்து  களைப் பினிலே
மடிந்து அமர்ந்து சாய் வதனில்
நிறை காணும் பூங்கா .

காலாற நடக்க புல்  படுக்கை விரிவாக
குழந்தைகள் குதித்து விளையாட பரவலாக
  ஆற அமரப் பேசி சிரிக்க நாற்காலிகள்  ஆங்கா ங்கே
காதலர்கள் கொஞ்சி மகிழ மரங்கள்  ஒதுக்குப்புறமாக வே
பசுமையும்  வண்ண ஓவியமாக காட்சியளிக்கும்
 அழகு மிளிரும் பூங்கா.
  

பேறு

 பஞ்சணை யிலே  கண் துஞ்சாமல்
பிரண்டு  பிரண்டு  படுத்தாள்.

 கண்ணிலே நீர்  வழிய
குமைந்து குமைந்து அழதாள் .

தோளிலே கை வைத்து
 மெதுவாக கன்னத்தை  திருப்பினான் .

முகம் சிவக்க  உதடு துடிக்க
குலுங்கினாள்  அவன் மடியில் விழுந்து.

பூப் போன்ற கைகளை  எடுத்து
 வருடினான்   இதமாக .

கதறினவள்  சற்றே அமைதியானாள்
அவனின் தோளிலே .

திணறி திணறி உடைந்த குரலிலே சொன்னாள்
கரு கலைந்ததை.

 மனம் பதறிய அவன்  அவளை மேலும்
தன்னோடு இறுக   அனைத்துக் கொண்டான்.

இருவருக்கும் வயது இருக்க வருத்தம் களைந்து
மிண்டும்  கிட்டும்   அபபேறு   சடுதியிலே என்று வாழ்த்துக .

.


பிறந்தது மகா கவி.

வாயினுள்  புகுந்த  ஈ
போய்  வந்தது
பல தடவை.

 அறியாமல்   இருந்தான்
 பன் மொழிப் புலவன்
கவனம் சிதறி .

கையிலே   பெரிய போத்தல்
 கண்ணிலே கிறக்கம்
அறிவு மழுங்கி

வெளியாயின  வரிகள்
அணி சேர்ந்து
அமுதமான்  கவி.

இலக்கணம் தட்டாமல்
இலக்கியம்  பொங்க
பிறந்தது  மகா கவி.


.நிலையில்லா நிலமையில்
 மதுவின்  கையில்
தோன்றியது ஒரு அற்புதம்

பன் முகத் தேடலிலே

ஒரு முகம்  கண்டு
 மயங்கினாள்.

மறு முகம்  நோக்கி
மருண்டாள் .

எம்முகம் உண்மையோ
எம்முகம் உறுதியோ

முகம் பார்த்து
பழகும் முறையோ

முகம் சொல்லும்
 மனதின் உணர்வை

முகம் சொன்னது
இன்று ஒன்றாக.

முகம் சொல்லவில்லை
நாளை எனதாக.

முகமும் பொய் சொல்லும் போல்
பன் முகத் தேடலிலே

ஆறிலும் ஆறு

கடந்து செல்
 துன்பத்தை  .
கவர்ந்து செல் 
நேசத்தை 

கடைந்து எடு 
சாமர்த்தியத்தை .


கண்டு பிடி 
வித்தையை 

 களைந்து . விடு 
 அசிரத்தையை .

காட்டி விடு
அமைதியை .


 கலங்கடி 
வெற்றி  கொண்டு ..

Tuesday, February 4, 2014

துடிப்பு

வலது கண் துடித்தால்
இடது கண் துடித்தால் 
என்று துடிப்பைப் பற்றிப் பேச 

எது துடிக்காவிட்டாலும் 
போகிறது நமக்கென்ன 
 இதயம் துடித்தால் சரி..

துடிப்பு உயிர் வாழ 
 .அதில் ஒரு நடிப்பு 
இல்லாமல் நேர்மை காண .

மகிழ்ச்சி  பொருந்திய  துடிப்பு 
 ஒர ஈர்ப்பு 
அதிலே  ஒரு ஆச்சரியம் 

கவலயுடன் துடிக்கும் 
 துடிப்பு 
ஒரு  ஒன்றிய கவனிப்பு.

துடிப்பு என்றாலே நெஞ்சம் 
 இரக்கம்  நிறைய 
தோன்றும்   வஞ்சமில்லாமல் 


  

Monday, February 3, 2014

ஒர் அக்கிரமக்காரன்

பறந்து ஓடினான்
 பயம் என்பதாலோ
.

பாய்ந்து ஓடினான்
பித்தலாட்டம் என்பதாலோ 


பதுங்கித் திரிந்தான்
தவறு  என்பதாலோ.

பம்மி ஒளிகிறான் 
அம்பலம் ஆகி விடுமோ என்று
.
உண்மையை சொல்லி
வெளியே வந்த விடலாமே .


தெரியவில்லை அவனுக்கு
பிறந்த போதே  அவன் ஒர்  அக்கிரமக்காரன் 

தாயின் அன்பு

சற்று முன் கண்டேன் 
 ஒரு தாயையும் அவள் தன குழந்தையும்
பாசமும் பரிவும் அரவணைப்பிலே.

இதனை விட எது பெரியது 
காசா  பணமா  சொத்தா 
 என்று நினைத்தேன்  உண்மையாக .


 மற்றொரு நாள் கண்டேன்
ஒரு குரங்கையும் அதன் பச்சிளங் குட்டியும்
 பிணைப்பும் கனிவும் தவறாமல்  .

வியந்தேன்  மனிதப் னை போல் தான் குரங்கும்
வியக்கமிகு அன்பும்  ஆறுதலும்  அங்குத் தெரிய 
இதை  விட என்ன வேண்டும்  என்று உணர்ந்தேன் ..

அடுத்த நாள் என் கண்ணால் கண்டேன்
குருவியும் அதன்  சிறு குஞ்சும் 
கொஞ்சலும் வருடலும்  இதமாக 

தாயின் அன்பை விட மிகுந்தது  
யாதுமில்லை யாவருக்கும் 
 மனிதனோ விலங்கோ பறவையோ திருமணங்கள்

மனதும் மனதும்  கூடினால்
 காதல் கூடும் .

உடலும் உடலும்  கூடினால் 
இச்சை  மிகும்.

பணமும் பணமும் கூடினால்
வளம்  பெருகும் .

படிப்பும் படிப்பும் கூடினால் 
புரிதலும் அதிகம் 

பின்னர் ஆளும்  காலமும் பொறுத்து 
சண்டையும்  நிறைய .

நட்சத்திரமும் நட்சத்திர,மும்  கூடினால் 
சிறப்பு என்று கூறி  

திருமணங்கள் மனப்  பொருத்தம் காணாமல் 
மற்ற  பொருத்தங்கள் கண்டு நிகழ
முறிவுகள்  தோன்று கின்றன  கூடுதலாகவே 

அழைப்பு தொலை பேசியில்

 தொலை பேசி கூப்பிடுகிறது
ஒரே ஒலியில் நிறுத்தப் படுகிறது 
காசு போய் விடுமாம்.

முடிவு செய்தேன் இனி கூப்பிடுவதில்லை
தவறிய அழைப்புக்களுக்கு 
 எனக்கும் காசு காசு தானே .
   

கோபமே அவனுக்கு விலங்காக

கடு கடு என்று இருந்தான்
வள்  வள்  என்று விழுந்தான்
 கறுக்க சிவக்கப் பார்த்தான்
கோபமே உருவானான்.

கோ ப ம் ஊ ரைக் கெடுக்கும்
 பகைமை வளர்க்கும்
சுற்றமும்    நட்பும் விலகும்
என்று அறியவில்லை அவன்.


அவன் தகாத கோபம் கண்டு விலகினர்
பேசுவதைக் குறைத்தனர்
 அவனைக் கண்டால் ஒதுங்கினர்.
அவன் வட்டம் சுருங்கியது.

மாறாமல் வாழ்ந்தான் இறுதி வரை
கோபமே அவனுக்குத் துணையாக
 தனிமையில் முழு நேரம் இருந்தான்
கோபமே அவனுக்கு விலங்காக 

Sunday, February 2, 2014

அறியாத எனக்கு

பதவிக்கும் பெருமைக்கும்
போட்டி வந்தால்
 பதவி பிடிக்கும் வெற்றியை

பணத்துக்கும் பதவிக்கும்
 மோதல் வந்தால்
பணம் வெல்லும்.

பதவிக்காகப் பெருமை
பணத்துக்காகப் பதவி
நியாயத்துக்கு எது ?.

அறியாத எனக்கு
 அறிந்தவர்கள் சொல்லுங்கள்
கேட்டுத் தெளிகிறேன் .

முதல் இடம்

எழுதுகிறான் தேர்வை
படிக்காமல்.
வெளியான  முடிவுகளில்
நிற்கிறான் முதலில்.
படிக்காமல் முதன்மை என்றால்
 படித்தால் .

அதுவல்ல கோட்பாடு  என்று காண்
வெற்றிக்கு தேவை  
படிப்பு என்று கனவு காணாதே
முதலிடம் உறுதி
 பணம் இருந்தால் என்று புரிந்து கொள்.

தமிழுக்காக தமிழுக்காக.

பரிசு வேண்டி
பாடில்லான் தமிழ் கவிஞன்
.
வெகுமதி  சென்றடைந்தது
அவனை  இல்லம் நெருங்கி

வறுமையில் தோய்ந்தாலும்
தமிழ் அவனை விட்டு விடவில்லை .

வாடினாலும் ,பட்டாலும்
அவன் யாரையம் நாடவில்லை.

என்னே அவனின் தன மேல் நம்பிக்கை
வாழ்ந்தான் அதோடு .

பொருள் இரந்து நாக்கு புரளாது
தயையும்  வேண்டாது.

பரிசுக்காக , பெருமைக்காக, தேர்வுக்காக
 பாடினான் என்று சான்று இல்லை

பாடினான் இறுதி வரை
தமிழுக்காக தமிழுக்காக.

பூஞ் ஜாடி

கண் எதிரே ஒரு பூஞ் ஜாடி
வண்ண மிகுந்த ஜாடி
 கண்ணாடியிலான ஜாடி
 அழகான ஜாடி  கண்டேன் .

பூக்கள்  அழகாக கொலுவிருக்க
வண்ணத் தோகையாக விரிந்து இருக்க
காற் றுக்கு க்கு  இதமாக அசைந்து ஆட
 இனிமையான காட்சி  கண்டேன்

அழகு நிரந்தரமானது அல்ல  என்றதால்
 ஜாடியில் தெரிந்த புள்ளியை துடைக்க எடுக்க
 எதனாலோ பதற்றம் ஏற்பட
ஜாடி கை தவறி கிழே விழ . கண்டேன்
.
கண்ணாடி என்றதாலே  அது உடைய
சுக்கு நூறாகி கிழே தெறிக்க  
 கேட்பாரற்று பூக்கள்  கிடக்க
ஜாடி அடையாளம் இல்லாமல் போனதடா

நாற்பதாண்டுகள்

நாற்பது ஆண்டுகள்
நீண்ட  காலம்
 என்று கொள்ளாலாம்
வாழ்ந்த நாட்கள் 
 பலவாகின் 
 பலவகையாயின் 
 திரும்பிப்  பார்க்கும் பொழுது 
 தோன்றுவது  என்ன 
 என்று கூற இயலவில்லை .

குழந்தைப் பேறு 
 அவர்களின் வளர்ப்பு  படிப்பு 
என்று ஓடிய காலம்  
பொறுப்புகள் வரிசையாக  இருந்த நேரம் 
நான் யார்  நீ எப்படி என்று
 அறிந்து கொள்ள கூட நேரம் இன்மை 
வேகமாக பறந்து திரிந்த வேளை 
யாது ஒன்றையும் நினைக்க முடியாத நிலை 
 ஓடினது வாழ்க்கை 
.
இன்று ஒருவரோடு ஒருவர் 
என்ற தொடக்கம் வேறுபாடாக 
விரியும் போது புரிந்து கொள்ள 
பொறுமை இல்லாத போது  
வாழ வேண்டிய கட்டாயம்   
இடர்கிறது   மனது , தடுமாறுகிறது எண்ணம் 
பொறுப்புக்கள் குறைந்த பின் 
நேசம் பிறக்கிறது வயது ஏறுகிறது 
 உடல் சோர்வடைய 
முடிவு நெருங்குகிறது 

காடு

காடு  என்றால் பயம்
கும்மிருட்டு , கொடிய விலங்குகள்
 நிறைந்தது   என்ற எண்ணம் .

காடு என்றால் ஒரு பின்வாங்கு
அங்கு ஒரு பயங்கரம்
என்ற நினைப்பு மேலோங்க.

காடு  என்றால் ஒரு நடுக்கம்
தாக்குதலும்   பதுங்குவதும்
ஒருங்கே சேரும் என்ற  வண்ணம் .


காடு என்றால் ஒரு திகைப்பு
அக்கிரமும் அதிர்ச்சியும்
 விளைவிக்கும்  ஒரு கலக்கம் .

காடு என்றால்  ஏன் தயக்கம்
அதில் வசிப்பது  உயிரினமே
அச்சம் வேண்டாம்   எப்பொழுதும்
அதன் மேன்மையை அறிந்து கொள்.


  

இசையின் மகிமை

பாட்டு ஒன்று கேட்டேன் 
 பாலத்தின் மேலே.

அருகே சென்றேன்  
வெகு நேரத்த்லே .

யாரையம்  காணேன் 
பாலத்தின் மேலே.

பாட்டு காற்றிலே  வந்து
 மோதியது .காதிலே 

எங்கு என்று தேடினேன்
கண்ணுக்கு  புலப்படவேயில்லை 
.
சுகமாகத தவழ்ந்து  வந்தது 
 இனிமையான   கீதம் 

ஓசையில் மயங்கினேன் 
முகம் பார்க்காமல்.


சொக்கி நின்றேன்  அங்கே 
 வெகு நேரம் பாலத்திலே

என்னை மறந்தேன் 
 யாவற்றையும் மறந்தேன் 

இசையின் மகிமையை  
நினைக்கையில் தன்னால்
 கண் பொழிகிறது  
 
 


 
  

Saturday, February 1, 2014

நிலைத்துப் போவேன்

கலந்து நின்றேன் 
கலைந்து போனேன்.


 களைந்து நின்றேன்
.கவிழ்ந்து  போனேன் 

கரைந்து நின்றேன் 
காணாமல் போனேன்.

கவர்ந்து   நின்றேன்
குறைந்து போனேன் .


குவிந்து நின்றேன் 
 கூம்பிப் போனேன்  

குலைந்து  நின்றேன்
குறுகிப் போனேன்.

நிமிர்ந்து  நின்றால் 
நிலைத்துப்  போவேன் 

தமிழை அகமகிழ்ந்து

தமிழின்  அழகு
அதன் முதிர்ச்சியிலே.

தமிழின் அதிர்வு 
அதன் ஒலி யிலே 

தமிழின்  பகிர்வு  
அதன் சுழற்சியிலே .

தமிழின் ஆனந்தம் 
அதன் பரிவிலே .

தமிழின் ஆற்றல் 
அதன் கண க்கியலிலே  .

தமிழின் விளையாட்டு 
 அதன் சொற்தொடரிலே .

தமிழின் தெய்விகம் 
அதன் அருளிலே. 

தமிழை  அகமகிழ்ந்து
பிணைந்து நெக்குருகி 
 படிக்க இன்பம்  பெருகும்