Saturday, April 30, 2016

பிரிவு நிரந்தரம்

ஒரு பிரிவு
 தற்காலிகமாக
 நனமை  பயக்கும்

 பார்த்ததையே  பார்த்து
 செய்ததையே செய்து
வெறுப்பு அடையும் .

ஊர்  மாற்றம்
 இடம் மாற்றம்
 மனம் குளிரும்.


யார் செய்வார்கள் ?
 செலவு என்று
 ஒதுக்கி விட்டு
  அரைத்த  மாவே
அரைத்து
 புண்ணாக்கி
கந்தலாக்கி
 சிதைந்து
 நைந்து
 பிரிவு
 நிரந்தரம்
ஆகும் கால்.


பலப்பல.

குறை காண  வேண்டும்
 கண்டான் பல வகையில்
 பலப்பல .


அது  நெட்டை இது குட்டை
 என்றான் பல விதத்தில்
 பலப் பல.

அது அப்படியல்ல இது  இப்படியல்ல
என்றான் பல முறையில்
 பலப்பல.


கண் பொட்டை  காது செவிடு
என்றான் எல்லாம்  இருந்தும்
நன்றாகவே.


தன குறையை மறந்தான்
தன்னை  நினைக்கவில்லை
குறை நிறைய உள்ளவன்.ஏனோ எனக்கு

திரைப்படம் பார்ப்பதில்லை
 ஏனோ எனக்கு  அவை
 புரிவதில்லை.

காதல் அறிந்ததில்லை
 ஏனோ எனக்கு அவை
 புரிந்ததில்லை.


கோபம் வந்து  போகும்
ஏனோ எனக்கு  அவை
 நிலைத்ததில்லை.


ஏமாற்றம்  நிறைய கண்டேன்
 ஏனோ எனக்கு அவை
 நிலைத்ததில்லை.

ஒதுங்குவேன்  பிடிக்காத போது
 ஏனோ எனக்கு   அவை
 மாறாது என்றும்.Friday, April 29, 2016

ஏதும் நடக்காது

நாடுகளைப்  பார்க்க  நினைக்கிறேன்
 நெடுகிலும் ஏனோ முடியவில்லை .
முய ன்றும் பல தடவைகள்  
 தடைகள் தோன்ற செல்லவில்லை

 இலண்டனைக்  காண வேண்டும்
 பாரிசைப் பார்க்க வேண்டும்
 ஆசையோ மனதில்  வெகு நாளாக
யாவும் கானல் நீராக  வடிநதன.

வயது எறி க் கொண்டே போக
 காலிலே தடுமாற்றம் நிறையவே
 மனதிலே பதட்டம் வெகுவாகவே
ஏதும் நடக்காது எண்ணம் போலே .நூலைப் போல சேலை

தாயின் வழியில்
சென்றனள்
நூலைப்  போல சேலை
 தாயைப்  போல பிள்ளை
அறிந்தேன் .

வல்லமையும்  வடிவமும்
சொல்லாற்றலும்  செயலும்
கண்டேன் .
தாயைப் போல்  பிள்ளையிடம்

பிடிவாதமும்  பீடிகையும்
மதியாமையும்  மதியும்
தெளிந்தேன்.
 தாயைப் போல் பிள்ளையிடம்.

தாயிடம் ஓரளவு எனின்
பிள்ளையிடம்  பெருமளவு
 பார்த்தேன்.
ஒற்றுமையும்  வேற்றுமையும்

நந்மொழியும் நட்பும்
நல்லெண்ணமும்  நலனும்
 காணேன்.
சுற்றிலும் முற்றிலும்


கண்டேனா  தாயிடம்
 மறந்தேன்  முக்கால்
 விதமும்
மறதி என் பால்

காணவில்லை பிள்ளையிடம்
மறக்கவில்லை  முழு
 விகிதத்தில்.
நினைவு  அருமையாக


நூலில் முரணபாடு
பாவிலும் உடுபாவிலும்
 முடிச்சாக
விளம்பினேன்  அழகாக

பிள்ளையில் பிழை
பக்குவத்திலும்  பதட்டத்திலும்
நெருடலாக.
 களங்கம் ஆங்காங்கே.


Thursday, April 28, 2016

புத்தகமே துணை

எரிச்சல் உள்ளத்திலும்
 உடம்பி லும் ஒரு சேர
 தன்னாலே ஒரு மாதம்
அதற்கு மேலேயும்
 சமையல், துவை த்தல்
மடித்தல், படுத்தல்
 என்ற செய்து கொண்டே
 இயந்திர வாழ்க்கை
 மனதை நெருட

காலம் முன்  நினைத்தால்
 மகன்களோடு படித்து
 விளையாடி , தூங்கி
 அடுத்து என்ன என்ற
 எதிர்பார்ப்புடன்  வாழ்ந்தது
 மனதிலே தோன்ற
 பெருமூச்சுடன்   சாய்ந்து
 கடந்த காலங்கள்
மனதில் நெருட


கண்ணீர்  பெருக்கெடுத்து
 ஒரு தனி மரமாக
 நிற்கும் வேளையில்
யாரிடம் பேசுவது
 யாரைப் பார்ப்பது
 என்ற எண்ணம்
தலை தூக்க
 புத்தகமே துணை
என்று அணைத்துக் கொள்ள

மலர்ந்த மாணிக்கமாக

அகமும் புறமும் நன்றே திகழ
தூய்மை  ஒருங்கே அமைய

மனம்  சலனமே இல்லாது இருக்க
ஆத்திரம்  மறுக்க பொய் அறுக்க

துப்பரவு  என்று தொடங்க  நினைக்க
தனது என்ற எண்ணம்  ஓங்க

பார்வையிலே அன்பும் பண்பும் வெளிப்பட
 மனதில் மகிழ்வு அதிகம் பொங்க.

சுற்றுப்புறம் அழகும் ஒழுங்கும் மேம்பட
மனதிலே  அதிர்வு  வெகுவாகக் குறைய

அகத்தில் அழகு புறத்த்தில்   தெரிய
மலர்ந்த மாணிக்கமாக  தெளியுமே
இவ்வுலகு.

வீடே வாழ்வு

வீடே வாழ்வு
 வாழ்வே வீடு
 என்ற எண்ணம்
 இன்றல்ல நேற்றல்ல
எப்போதும்  என்றும்.

வீடே உலகம்
 உலகமே வீடு
 என்ற நோக்கு
 இன்றல்ல நேற்றல்ல
 எப்போதும்  என்றும்.


வீடே அனைத்தும்
 அனைத்தும் வீடே
 என்ற உள்ளம்
 இன்றல்ல நேற்றல்ல
 எப்போதும்  என்றும்.


விட்டிலே கண்டேன்
 சுகமும் சௌக்கியமும்
மகிவும் மகிச்சியும்
 இன்றல்ல  நேற்றல்ல
எப்போதும் என்றும்.


விட்டில் இருந்தே
 கண்டேன் யாவற்றையும்
 நல்லதையும் கெ ட்டதையும்
இன்றல்ல நேற்றல்ல
எப்போதும் என்றும்.


வீடே எனக்கு
யாவும்  தெளிந்தேன்
 வீட்டை அடைய
 இன்றல்ல நேற்றல்ல
எப்போதும் என்றும்,

Wednesday, April 27, 2016

கண் கொள்ளாக் காட்சி

கயிலை மலையிலே
 பனி வாசம்  வெகுவாக
 வெள்ளிமலை  சாரலில்
 அழகாக மின்ன
 வெள்ளிப் பனி
 பாறையெல்லாம்
கனிந்து நிரம்ப
கண் கொள்ளாக்
 காட்சி  கண் நிறைய.


குளிரும் பனியில்
 கதிரவன்  எழும்ப
 இருட்டும்  வெளிச்சமும்
 விட்டும் விடாமலும்
 மப்பும் மந்தாரமுமாக
வெண் போர்வை
மெல்ல மெல்ல விலக
கண் கொள்ளாக்
காட்சி  கண்  நிறைய.


வெளிறிய போது
 மஞ்சள்  முகத்தான்
பட்டும் படாமலும்
 பகட்டும் பகட்டாமலும்
அசையாமல்   மௌனமாக
 வெளி வரும் தோற்றம்
மனதிற்கு  ஈடொ ன்னா
அமைதியை நல்க
கண்  கொள்ளாக்
 காட்சி கண்  நிறைய.
  

வையகம் புகழ பெறுமே !


 காட்டிலே மழை  பெய்தால் 
 நாட்டிலே  களை கட்டும் 
 காட்டிலே  பயம்  என்றால் 
 நாட்டிலே நயம் தெளியும் 


காடும் நாடும்  ஒன்றுக்கொன்று 
  எதிர் மறையாக விளங்க 
 இருட்டும் வெளிச்சமும்  ஒன்றன் பால் 
கடினமும் எளிதும்  விளைவிக்கும்.

காட்டிலே  வாழ்க்கை காணின் 
 இன்னல்  நிறைய  கண்டு 
 பேரிடர்  பெரும்பான்மை அறிந்து 
நன்நிலை  குறைவே என்று எண்ணி 

நாட்டிலே வாழ்வு  பயக்கின் 
இனிமை  மிகவே  கண்டு 
வன்செயல்  மிதமாக  வலிந்து 
நன்று   நின்று  பெருகுமே 


காடும் நாடும்  சில கணங்களில் 
 அநேகமாக   ஒன்றே   புரிந்து 
 சற்று ஏறக்குறைய எனின்
 அதுவல்லவே  தீர்ப்பு. என்று கொள் 


காட்டு மனிதன்  அனாயசமாக 
  மேட்டிலும்   காட்டிலும்  கரடுமுரடிலும் 
 சுற்றி  வலம் வந்து  ஆங்காங்கே 
காயும் பழமும் புசித்து.

பொங்காமல்  பொரிக்காமல்  
 பச்சை யாக உண்பாண்  உடனே 
 இறைச்சியும்  கிழங்கும்  அதிகமாக 
உப்பும் உரைப்பும்  இல்லாது.


நாட்டு மனிதன்  நளினமாக 
வானிலும் தரையிலும் வலி தெரியாது 
 கடலிலும்  பறந்து  நடந்து 
ஊர்ந்து  களிப்புடன்.

 

பக்குவமாக ஆக்கி  பலவிதமாக 
மணமுடனும் சுவையுடனும்   
அரிசிச் சோறும்  கூட்டும்  
அவியலும்  குழம்பும்  கலந்து 


எங்கு வாழின்  காட்டிலோ 
 நாட்டிலோ மனிதன் மனிதனாக 
வாழ்ந்தான் எனில் 
வையகம் புகழ  பெறுமே !

 

 
  


Tuesday, April 26, 2016

நன்றே! நவினமே !

சாதம் போட்டு
 நெய் உற்றி
மை போல்
பிசைந்து  உருட்டி
 காகம் அழைத்து
உட்டிய  காலம்
 போய்  இன்று

பிசா என்ற \
ஒன்று  வி ரிந்து
 பரந்து  வெண்ணெய்
 பரப்பி காய்
 தூவி  யுடியுபில்
படம் பார்த்து
 ஊட்டும் வேளை.

காலம் மாற
 உணவு வேறுபட
 நெய் வெண்ணையாக
காகம் யூடிய்பில்
பறந்து வர
 முன்னே  நிற்கும்
 காகம் காணாமல்
நடாத்தும்  பாங்கு
 நன்றே! நவினமே !


 

Monday, April 25, 2016

பச்சை

கிளிப்   பச்சை
பேருவகை
பசேலேன்ற வயல்
 பெரு  மகிழ்வு
பசுமை எங்கும்
பேரின்பம்.

இருப்பினும்

பச்சை வேறுவிதமாக
பச்சைப்  பொய்.

பச்சைத் துரோகம்
 கொடுரம் என்பினும்

பச்சையாகப்  பேசுவது
கொச்சை   என்றினும்

காணலாம்  வெவ்வேறு
வழி  மொழிதல்களிலே

அழகிய ஒப்பனையாகவும்
 அநீதியான ஒப்புதல்களாகவும்


பச்சை  கூறும்  கூற்று
பசுமையாக மனதிலே.
பேச்சை வம்பாக்குவான்

பேச்சை வம்பாக்குவான்
 வம்பை    வழக்காக்குவான்
 வழக்கை  சண்டையாக்குவான்
சண்டையை  கலகமாக்குவான்
கலகத்தை  போராக்குவான்
 போரில் உயிரிழப்பு
 குருதி  வெள்ளம்
 காயம்  சேதம்
பொருளிலே  வாழ்விலே.

 எவ்வாறு ஒரு சிறு பொறி
 அனல் வாரிக் கொட்டி
காட்டுத்  தீயாகப் பரவி
அழிவை உண்டாக்குவது  போல
 ஒரு சொல் வெடித்துச் சிதறி
திரிந்து  மலிந்து ஒன்று பலவாகி
உலகமே   அசைந்து அசந்து
 வாழ்வே  மறித்து மறைந்து
சேதமே  யாவற்றிலும்  காணலாம்.


அவன் வழியிலே

வழிந்தான்  குடம் குடமாக
 அசடு


முழித்தான் திரு திருவென்று
மக்கு.

முனங்கினான்  முனு முனுவென்று
கோழை.

ஒளிந்தான் ஒடி ஒடி
பயந்தாங்கொளி.

வாழ்கிறான் அவனும்
 அவன் வழியிலே


இலக்கே இல்லாமல்

பட பட வென்று பேசி
 நிலை குலைய வைத்து

சட சட வென்று  ஏசி
மனம் குன்ற வைத்து

சுடு சுடு வென்று  குத்தி
நெஞ்சைக்  கொதிக்க  வைத்து

நம நம வென்று  நச்சு
உள்ளத்தை நடுங்க வைத்து

விடு விடு வென்று ஓடி
கதவை  அறைந்து சாத்தி


வெகு வெகு வென்று
நடந்தான்  இலக்கே  இல்லாமல்

Sunday, April 24, 2016

வெற்றி உறுதி.

சற்றும் நினையாமல்
சற்றும் நிதானிக்காமல்
சற்றும் தெளியாமல்
சற்றும் அடங்காமல்
 சற்றும் தயங்காமல்
பேசுகிறான் .

கொஞ்சம்  நினைப்பு
கொஞ்சம் நிதானம்
கொஞ்சம்  தெளிவு
கொஞ்சம் அடக்கம்
 கொஞ்சம்  தயக்கம்
 இருந்திருந்தால்


காரியம் கை குடியிருக்கும்
காரியம்  முடிந்திருக்கும்
காரியம்  நிலைத்திருக்கும்
காரியம் வென்றிருக்கும்
காரியம் காரியாமாயிருக்கும்
வெற்றி உறுதி.
நினைப்பு எல்லாம்

மனது  ஒய்ந்து விட்டது
 உடலைப் போலவே

ஆர்வமும் ஆவலும்
குன்றி விட்டது


ஆசையும்  பற்றும்
வடிந்து விட்டது.

வாழ வேண்டும்
 என்ற துடிப்பு  
வற்றி விட்டது.


கண்ணை முடுவது
 எப்போ  என்ற
 வேகம் கூடுகிறது..

 காத்துக்  கொண்டிருக்க
 முடியவில்லை நினைப்பு
எல்லாம் போவதிலேயேSaturday, April 23, 2016

கடுவன் பூனையாக.

பேசினான் என்பதோடு
 வெடித்தான்  குமறி னான் என்பதே
நியாயம் .


வெடித்தது எதற்காக?
கொழுந்து விட்டு எறிந்த
பொறாமைத் தீ.

பொருமினான் நேரமாக
ஒன்றல்ல ஒராயிரம்   மணியாக
வெந்த மனம்.


விளம்பினான் எல்லாரிடமும்
தன்னுடைய ஆத்திரத்தை  முழுதாக
கனல் புகைய.


என்னவென்று சொல்வது
அவன் தன் இயலாமையை
கடுவன் பூனையாக.
Tuesday, April 19, 2016

எண்பத்தியாறி ல்

முகம்  பார்த்து 
 பரிமாறுவாள்.

இலைப் பார்த்து 
நிரப்புவாள்.

கை நிறைய 
  வைப்பாள்.

 ஒரு தடவை 
 மறு  தடவை.


 மேலே . மேலே 
கேட்காமலே .

 பசித்தார் பால் 
 அன்பு 

சகியாள்   தாமதம் 
 அப்போதே 

அன்னபூரணி  அவள் 
அமுதம்.


.

படித்தவள்  மேற்படிப்பு 
 பட்டம் .

சிறந்தவள் யாவற்றிலும் 
 தொழில்.

 அளவான  குடும்பம் 
 அழகாக 

அமைதியான் பேச்சு 
அடக்கம்.


வாழ்கிறாள் அமோகமாக 
 எண்பத்தியாறில்   


  
 

Monday, April 18, 2016

புல்லிலே அதிகமாக.

செல்வம்  கண்டேன்
 புல்லிலே  அதிகமாக.

புல்லின் நிறத்தில் 
 பச்சை பசேலென்று .

புல்லின் உறுதியிலே 
 மிருதுவான கடினம்.

புல்லின் தன்மையிலே 
 எங்கும் எவ்வாறும்.

புல்லின் ஏற்றத்திலே 
 பரவலாக முழுவதும் 

புல்லின் மனப்பான்மையிலே 
எதிலும் குறை காணாத


புல்லின்  எடுப்பிலே
 மிடுக்குடன் எளிமையாக  


 புல்லின் வழியிலே 
 நலம் காண.


புல்லின் தடத்திலே 
 வெற்றிக் காண் 

புல்லே என்றில்லாமல் 
புல்லோ  என்று 
விமர்சையாக.!

அநியாயமே !

கிடந்தவன் கிடந்தவனாகவே
இருத்தல்  வேண்டும் .

பாடுபட்டவன்  பாடுபட்டுக் கொண்டே
இருத்தல் வேண்டும்


அழுதவன் அழுது கொண்டே
இருத்தல் வேண்டும்

 உலக நிதி இது தான்
ஒப்புக் கொள்ள வேண்டும் .


அவன் வெளி வரக் கூடாது.
 மகிழக் கூடாது.


என்ன நியாயமோ  தெரியவில்லை
 இது ஓர் அநியாயமே !
Sunday, April 17, 2016

பாராட் டுவானின் தகுதி.

பாராட் டுவானின் தகுதி
 கருதி மகிழு

அறியாமல் சொல்லும்
 மொழி உன்னதம் அல்ல

அறிந்து குறிப்பதே
 அவசியம்

பாமரனுக்கும்  பாராட்ட
 உரிமை உண்டு


அவனுக்குத் தெரிந்த
 வகையில்


அதில் மிகுந்த
 பொருள்  இல்லை.


தெரிந்தவன்  சொல்வதே
மெய்யாக விளங்கும்.

கவனம் கொள்
யாரிடம் இருந்து
 வருகிறது என்று.
சோறு பொங்க

சோறு பொங்க
 காய் கொதிக்க
 குழம்பு வழிய
கடிகாரம் மணி அடிக்க
 பேருந்து ஒலிப்பான் அலற
குழந்தையோ  ஆனந்தமாக நீராட
தாய் அங்குமிகுமாக ஓட
 தந்தையோ  செய்தித்தாள் வாசிக்க
 பெண் ஓர் அலங்கோலம் .
 ஆண்  ஒர்  அலங்காரம் .  

மிக அழகே !

ஒரு பூவின் வாழ்விலே
 மலர்ச்சி அற்புதம்
 மொட்டு விரிந்து
மலராகும்  காட்சி
மிக அழகு.


ஒரு குட்டி நடமாடும்
விதமே  ஆனந்தம்
 கண்ணைத் திறந்தும்
 திறாவது  ஓடுவது
மிக அழகு.

ஒரு குழந்தை  சிரிப்பது
கோடானுகோடிக்குச் சமம்
 குவிந்த   முறுவல்
கிறக்கம் ஊட்ட
 மிக அழகு.

எது மிக அழகு ?
என்று தெளியுமுன்
போட்டி இல்லை
யாங்கும்  யாவையும்
மிக அழகே !


கண் அகல நிற்கிறேன்.

ஏச்சும் பேச்சும்  கேட்டு அலுத்துப் போய்
நமட்டுச் சிரிப்பும் ஏகத்தாளமும்  பார்த்து
 கொக்கரிப்பும்  அட்டகாசமும்  கண்டு
விக்கித்துப் போய் நிற்கும் கால்


ஏசினவன்  எங்கு என்று அறிய முடியவில்லை
சிரித்தவனைக்   கண்டு பிடிக்க  தெரியவில்லை
 கொக்கரித்தவனோ  வெளியே தலைக் காட்ட வில்லை
 தேடி அலைந்தும்  மறைவிடம் அறியவில்லை.

பேசியே பொழுதைக்  கழித்தவன்  எங்கே ?
 ஏகத்தாளமாகத் திரிந்தவன்  எவ்விடம் ?
அட்டகாசம்  செய்தவன்  எங்கு சென்றான் ?
வியந்து கண் அகல நிற்கிறேன்.
Saturday, April 16, 2016

தாய் யார் என்று தெரியாது

கண்களில்  ஓர் ஏக்கம்  நிறையவே
 அறியாத அன்பு மனதை நெருட
 அறிந்தது   வெறுப்பு முகத்திl அடிக்க .

அநாதை  அவன் பிறந்தன்றே
 தாய் அறியான்  அவள் எறிந்த பிள்ளை
 தந்தை தெரியான். அவன் உதறின குழந்தை

அண்ணன் என்ற உறவில்லை
 யாவருமே அண்ணன் அவனுக்கு

தாய் யார் என்று தெரியாது
 யாவருமே அம்மா அவனுக்கு .

அரவணைப்பு  என்றால் என்ன ?
ஆதரவு என்றால் என்ன?

அவன் அறியான் அவை யாவையும்
 யாதும் இல்லாமல் வளர்ந்தான்.

வளர்ச்சிக்கு தெரியாது அன்பும் ஆசையும்
 பெரியவனான் வெகு விரைவிலே

 அன்பு குறுக்கிட்டது பெண்ணின்  உருவிலே
 உருகினான் அவளுக்காக் நாளும் பொழுதும்.

அவன் நேரமோ   சாபமோ அறியுமுன்
விலகினாள் அவள் ஏன் எதற்கு என்று சொல்லாமல்.

 நொந்து போனான் அளவுக்கு அதிகமாக
 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.

தனியாக வந்தான் தனியாக வளர்ந்தான்
 தனி மனிதனாக  இன்றும் வலம் வருகிறான்.

 அவன் செய்த பாவம் என்னவோ
 இல்லவே இல்லை அது  அவன் வீதி.

 கூடி வாழவில்லை  கும்மாளமில்லை
 கொஞ்சுவாரில்லை  குலம் செழிக்கவில்லை.

 இருந்தும் வாழ்கிறான் அவன் தனியாக
அள்ளி கொடுக்கிறான் பிறருக்கு.

தான் இழந்ததை பகிர்கிறான் யாவரிடம்
 அன்பு, பண்பு, செல்வம், செல்வாக்கும்

Friday, April 15, 2016

கண்டான் எதை

ஒரு வழியாக நினைத்தது நடந்தது
 நினைத்தது என்று சொல்ல  முடியாது
 எதிர் பார்தத்து என்று கொள்ளாலாம்.

பணமே குறிக்கோள் என்று வாழ்ந்தவன்
 தன்னேயே  மெச்சியவன்   இன்று நொந்து
ஏதும் புலப்படாமல்  தவிக்கிறான் பாவமாக.

விற்று விட்டான் மொத்த சொத்தையும்
செலவே இல்லாதவன்  தொழில் வல்லுனன்
என்று போற்றப்பட்டவன் முழிக்கிறான்  மலங்க .

ஏன் இவ்வாறு என்று அறிய முடியில்லை
நாலாப் பக்கமும் வருமானம் என்றவன்
 இன்று ஒன்றும் கையில் இல்லாமல் .

பணம் நிற்காது என்று தெரிந்தும்
 சட்டத்தை மீறி வாழ்ந்து  கண்டான்
 எதை கிடைத்தது என்ன தெரியவில்லை. 

Thursday, April 14, 2016

வானம் பார்த்த நிலமாகவே!

மானம் பார்த்த பூமி இடுகுறியாக
இவ்வுலகில்  ஒரு புறம் நிற்க
 புன்செய் என்ற  அழகான  சொல்
.பூஞ்சையாக மருவி பேச்சில் புணர

கேட்கும் போதே  ஓர் இனிமை
  பொருள் பொதிந்த  செம்மை சிறப்பு
விளையும் நிலம் நஞ்சை  என்றும்
வற ண்டது பூஞ்சை என்று வழக்கில் .

வாசல் நோக்கி நிற்கிற  பாவை
 நாணத்தோடு கண்கள் விரிய  ஆவலுடன்
 வானம் பொழியுமா என்ற  ஏக்கத்தோடு
தவம் காக்கும் நிலம் போல.


இல்லானைக் கண்ட நாழியில்  பரவசத்துடன்
 பூரித்து மும்மரமாக  துள்ளும் மனைவியும்
நீர்த் துவாலை  வீழ்ந்தவுடன்  ஆறுதலுடன்
மகிழ்ந்து விறுவிறுப்பாக  ஆர்ப்பரிக்கும்  புன்செய்யும்


கூடி  ஆதுரமாக விரிந்து  பரந்து
 வம்சம்  பெருக்கும் ஆளு மையான  பெண்ணும்
நட்டு  முளைத்து  விளைந்து சரிந்து
நெற் குதிராகக் குமியும்   அகண்ட நிலமும்

உண்டாகிப்  பெற்று வளர்க்கும்  பாங்கிலே
 தகை சான்ற மகளிர்ப் போலே
உள்வாங்கி  உற்பத்தி  செய்யும்  வாகிலே
அளவில்லா வளமையான் நிலம்  கண்டோம்


நன்செயாக மலர்ந்து  வளம் காண
புன்செயுடன்  கை கோர்த்து  நிற்க
வளமை செழித்து  அற்புதமாக மேன்மையுற
வெறுமை வானம் பார்த்த நிலமாகவே!
நன்றி அறியார் பால்

நன்றி அறியார் பால்
 நவிந்து நல்க வேண்டாம்.

யாராகிருந்துவிடலாம்  ஒரு போதும்
  நினைப்பு வேண்டாம்

 மறந்து விட்டொழிந்து  வெகு தொலைவு
விலகி  வாழ் வேண்டின் நன்கு

எங்கு ஏது   எண்ணாமல் விட்டு விடலாம்
 இடம் பொருள் வேண்டற்பாற்று


செய்நன்றி மறந்தவன்  மனிதன்
  அல்ல என்று  கண்டின்

மானிடனும் அல்ல மிருகமும் அல்ல
என்று தெளிந்து நடப்பின்

உறுதி என்ற கோட்பாட்டை
 நெஞ்சில் இருத்தி  நடப்பின்

நயம் என்று உ ரைப்பேன்
நலமும்  அதுவே.Wednesday, April 13, 2016

செல்லாக் காசு

மனிதனுக்கு  காசு
 என்றால் ல் ஒரு வேகம்.

எங்கு என்று தேடுவான்
 ஓடுவான் பறப்பான்.

அடித்துக் கொள்வான்
பறிப்பான் புடுங்குவான்

தாய் தாரம் என்றும்
 அண்ணன் தம்பி

பிள்ளை பெண் என்றும்
நியாயம் அநியாயம்

அவனிடமில்லை எதிலும்
 காசே தான் எல்லாம்.


காசிலே ஏது  மையல்
காகிதம் என்று நினைத்தால் .

பொருளிலே எங்கே அழகு
அழிவது என்று எண்ணினால் .


உயிரிலே ஏன் ஆசை
மண்ணோடு போவது என்று தெரிந்தால்.


வாழ்வே ஒரு செல்லாக் காசு
செல்வதும் செல்லாததும்

மனம் போலே என்று தெரிந்தால்
 நப்பாசை அற்றுப் போயின்,


 

 


பால்காரர் மணி பார்த்து.

பால்காரர் மணி  பார்த்து 
 வருவதில்லை நேரம் 
 அவருடையதே 

காலை என்பது 
 மணி பத்தரை 
வருவார் வேகமாக 
.
மோட்டார்  பைக்கில் 
விதியில் நுழைந்து
பால் பையை 
 

மதில் மிது வைத்து 
 ஒரு சத்தம் கொடுத்து  
 பறந்து விடுவார் .

சில பல நாட்களில் 
 எனக்கு முன் 
 வானரங்கள்  கவ்வி விடும் .

பையை அழகாகக் எடுத்து  
 முடிச்சை தளர்த்தி 
உறிஞ்சும்  பாலை நேர்த்தியாக .

 செயலற்றுப் போய் நிற்பேன் 
கையில் கம்புடன்   
 எனது தேநிரில்  மண் 
 குரங்குகளுக்கு   வெகு தாராளமாக 
 

 

பாடினாள் ஆராரோ

பாடினாள்  ஆராரோ
 தன செல்வத்துக்கு

கண்ணே கண்மணியே
 என்ற மகிழ்வோடு

கட்டிக் கரும்பே  செல்லமே
 என்ற அனுசரணையோடு

கற்கண்டே  புள்ளி மானே
 என்ற அ டை மொழிகளோடு

அக்கணமே இட்டுக் கட்டி
 பாடினாள்   மெட்டோடு

 எந்தக் கவித்திறனும் இல்லை
எந்த  அப்பியாசமும்  இல்லை

பாடினாள்  குரலெடுத்து
ஆனந்த  இராகமாக


 சுற்றுபுறம் தெரியவில்லை
 யார் யார் அருகில் என்று
அறியவில்லை.

பாடினாள்  பண்ணோடு
நெக்குருக  நெஞ்சுருக

கடமை குறுக்கிடவில்லை
கட்டாயம் அமிழ்த்தவில்லை


பாடினாள்  இனிமையாக
தன் குழந்தை உறங்குவதற்கு


கண்ணயர்ந்தது  செல்வம்
 தாயின் கரங்களிலே
மட்டில்லா ஆதுரத்துடன்

பாடினாள்  அவள்
 மெய்மறந்து  தாலாட்டு
 மென்மையாக மிருதுவாக.
அதி அற்புதமாக
Tuesday, April 12, 2016

கருதுவோம் யாவற்றையும்

அலைகள் பாய்ந்து 
 முன்னே கரையை
 தொட்டும் தொடாமலும் 
 நின்று ஓட.


அப்பொழுதே அலைகள் 
 பின்னால் இழுத்து  போக 
 பட்டும்படாமலும் 
நின்று ஓட 

பொழுதுகளில்   அலைகள் 
 தவழ்ந்து அழகாக 
 நளினமாக விளையாட 
தத்தி தத்தி 

நேரங்களில் அலைகள்  
 ஆவேசமாக  ஆத்திரமாக
 கோரமாகத் தாண்டவமாட 
ஊ வென்றும் ஓ வென்றும் 


வாழ்வின்  நிகழ்வுகள்  போலே 
 நல்லதும் கெட்டதும் 
கூடவே ஒன்றுக்கொன்று 
 ஏற்றமும் இறக்கமுமாக .


 அலை போலே என்று 
 வாழ்வும் அதுவே என்று 
 கொண்டு கருதுவோம் 
யாவற்றையும் .


 
 

இழப்பே தான்.

நேற்று  ஓர் அரிய காட்சி
யாரை சாட்சிக்கு அழைப்பது
அறியவில்லை

அண்ணலும் நோக்கினான்
 இளவலும் நோங்கினான்
.எங்கோ   தெளியவில்லை

அண்ணின்  உடை
அழுக்கைத் தவிர\
ஒன்றுமில்லை அதில்.

உயிரும் இல்லை
 கசக்கவும் இல்லை
நொந்து நூலாக

வலம் வந்தான்
 கையை உயரே
 கூ ப்பிக் கொண்டு


இளவலோ  சற்று
மெலுக்காக   திமிறிக்
கொண்டு

அடைத்துப் படை
சாத்திப போய்
 திரு திரு முழியுடன்


திருகிக் கொண்டு
 நிற்கிறான்   எங்கும்
 எவ்விடத்திலும்.


இருவருமே  நல்ல
மனதில் இல்லை
வெந்து புண்ணாகி .


எதையோ இழந்த மாதிரி
மாதிரி  என்ன
இழப்பே  தான்.Monday, April 11, 2016

வழி தவறாமல்

மற்றொரு நாள் விடிய
எப்போதும்  போது
கதிரவன் உதயம்
என்றும் போல
 பகலவன் மறைவு


இன்றும் வேலைப்  பளுவே
இன்றும் தூக்கம் நிறையவே
சிலப் பல நிகழ்வுகள்  குறுக்கிட
 நல்லதுக்கும் கெட்டதுக்கும் 
என்பது போலே .

நேற்றைய தினம் அவ்வாறு
 இன்றைய நாள் இவ்வாறு
 நாளை  எப்படியோ
இறுதியில் யாவும்
 ஒருங்கே ஒருமித்தவாறே.

ஒன்று மட்டும்  மாறுமே
வயது  என்பது தெளிவே
  உனக்கும்  எனக்குமே
 யாவருக்கும் என்பது
 விதியே .


சுருக்கம்  தளர்வு நெருங்க
 நரையும்  தடுமாற்றமும்
நிறையவே  தெரியுமே
வழி  தவறாமல்  வந்த விடுமே
 முதுமையும் இறப்பும் ஒன்றாகவே.ஒரு படிப்பினையே!

கண்கள் கரு விழிகள் 
 அச்சம் சூழ 
நோக்குகிறேன்.

இரு கண்கள் 
பொறாமையை  உமிழ 
என் முன்னால் .

இரு கண்கள் 
 ஆத்திரத்தைக்  கொட்ட
என் பின்னால்.  

இரண்டுக்கும் நடுவே 
என் கண்கள் முழிக்க 
 பயத்துடன்.


கண்களுக்கு ஒரு சக்தி 
அதிதமான்  வலிமை
பார்வையில்.

வீரியம் கொல்லும் 
அக்கணமே 
அடிப்படையிலே.


விலகி விடு என்ற
கூச்சல்  அருகிலே 
நல்லதற்காகவே.


ஒடி விடு  என்ற 
கூவல் தொலைவிலே  
நன்மைக்காகவே 


எனக்கு மட்டும் அல்ல 
 உனக்கும் உலகத்தாருக்கும்  
ஒரு படிப்பினையே!
   

  

Sunday, April 10, 2016

முகம் ஒன்று தான்

முகம் ஒன்று தான்
 அதில் தான் என்ன 
 என்ன வெளிப்பாடுகள்.

புன்சிரிப்பிலே விரிந்து
 பூவாக மலர்ந்து
பொலிவுடன் திகழும்.

கவலையிலே  சோர்ந்து
கசங்கி வாடி
சோபையிழந்து  தோன்றும்.


ஆச்சரியத்தில்  வியந்து
 பரவி ஒளி  கூட்டி
கொள்ளாது விளங்கும் .


வெறுப்பில்  வதங்கி
ஒடுங்கி ஒளி குறைந்து
குணங்கி  சொடியும்.


அன்பில்  மலர்ந்து
ததும்பி  தடவி
 கருணை வடிவாகத் திகழும் .


ஆத்திரத்திலே பொங்கி
 வெடித்துச் சிதறி
ஆவேசத்தைக்   காட்டும்.


முகம் ஒன்று தான்
 அதில் தான் எவ்வளவு
கோடுகள்  குறுக்கும்
நெடுக்குமாக.


Saturday, April 9, 2016

இன்று ஒன்றும்

இன்று ஒன்றும் செய்ய வேண்டாம்
 முழு நேரமும்  விட்டத்தைப பார்த்தபடி.

இன்று ஏனைய  நாளைப் போல் இல்லை
ஒடித்   திரிய வேண்டிய அவசியமில்லை .

இன்று யாருக்காகவும் இருக்க வேண்டியதில்ல
எனக்கே  எனக்கே என்று நினைத்த்ப் போது 

வந்தது அட்டகாசமாக ஒரு விருந்து
 முழு நேரமும் வேந்தேன்  அடுப்படியில்.

வந்தது  மற்ற நாட்கள விட அதித வேலை
ஓட முடியாமல் ஒடி அவசியத்தோடு.

வந்தது நிகழ்வுகள் எனக்க்காக ஏதும்  இல்லை
எதுவும் எனக்கே என்று  வராது போல்
கண்டோம் பாவினிலே !

கை வளை குலுங்க 
 கொடி இடையாள்
பால் செம்பு ஏந்தி 
நாணம் படர
 வலது காலை 
எடுத்து வைத்து 
 புகுந்தாள் அகத்தில் 
தேவகி . 


கை குலுக்கி 
இடை தெரிய 
மதுவேந்தி 
நிமிர்ந்து 
காலணிகளோடு 
எடுத்து வைத்து 
 புகுகிறாள்  இல்லத்தில் 
அதிதி .

முந்தி விலகாமல் 
அதிராத நடையுடன் 
கண்ணாலே பேசி 
 கணவனை புரிந்து 
அணைந்து நாடி 
அழகாக விரித்தாள் 
தேவகி.  


முந்தியே காணாமல் 
 தடதடவென்ற நடையுடன் 
உரக்க அறை   கூவி 
கணவனை விழித்து 
கும்மாளமிட்டு   ஆடி 
 வேகமாக  விரிகிறாள்
அதிதி .


இருவருமே பெண்கள் 
 காலமும் நேரமும் 
 இன்றும் நேற்றுமாக 
 தேவகியும் அதிதியும் 
 வாழந்த வாழ்கின்ற 
பக்குவ   மாற்றங்களை 
கண்டோம் பாவினிலே !

 
 
 

Friday, April 8, 2016

ஏகாந்தம்

ஏகாந்தம்  எனில்
ஒரு சக்தி 
 எங்கும்  ஒளி 
யாவும் அமைதி 
 பரவலான  ஆனந்தம் 
பேரானந்தம்  
ஒரு நிர்ச்சலனாமான
பேருவகை .


கண்டேன் அச்சுகத்தை 
 ஒரு நாள் யானும் 
என் குழந்தைகள்  மட்டும்  
 கொஞ்சவில்லை 
பேசவில்லை  
நோக்கினேன் அவர்களை  
நேரம் அறியா  வண்ணம் 
அடைந்தேன் பேருவகை 
ஏகாந்தம்   அதுவே.
Wednesday, April 6, 2016

நன்றல்லவா?

கண்டதும் கேட்டதும் பொய்
என்றின் எது மெய் ?

காதுகளை நம்பாதே
 என்றின் எப்படி?


கண்களை நம்பாதே
 என்றின் எவ்வாறு?


சொல்லும் செயலும் பொய்யா
தெரிந்து கொள்வது
நன்றல்லவா?எவ் நிலையும் .

எளிது என்று எதுவும் இல்லை
 எளிமை என்று ஏதும் இல்லை


கடினம் என்று ஒன்றும் இல்லை
 பகட்டு என்று ஏதுமில்லை.

 ஒருங்கே நினைக்கின்  கண்டது
மனதளவில் தான் எவ் நிலையும் .


மனதை தாண்டின் யாவுமே  நன்று
 செய்யும் செய்யாததும்  அவ்வளவே.

Tuesday, April 5, 2016

கோபமும் தாபமும்.

கோபம் தாண்டி வந்தான்
 தாவித் தவ்வி நுழைந்தான்
 கத்தி குத்தி வதைத்தான்.


கோபம் தலைக்கேற வந்தான்
கண் சிவந்து புகுந்தான்
மனம் நோகச்   சாடினான்.

 கோபம்  அடங்காது  ஆடினான்
உடல் முறுக்கேறி  குதித்தான்
 தாண்டவமாடினான்  கோரமாக,


விழித்தனர் குடும்பத்தினர்
நின்றனர்  சற்று நேரம்
 மனம் துணுக்குற.

நடந்தனர் அவ்வி டம் அகன்று
இது ஒரு பழகிய பழைய
 ஆட்டம் புதிதன்று.கத்தட்டும் முடிந்தவரை
ஆடட்டும் இயன்றவரை
போகட்டும் அவனோடு
 கோபமும் தாபமும்.

  


Monday, April 4, 2016

வென்று விடலாம் உலகத்தை

மனது  வலிமை இழந்த பொது
 உடலும் சோர்ந்து கண்டேன்
 உடல் வலு விழந்த பொது
 மனது  திடமாகக் கண்டேன்


மனது   அலை பாயும் போது
 உடல் ஓரிடத்திலே
 உடல் அலையும் போது
 மனமும் ஓடும் கூடவே.


அடக்கி ஆளத்  தெரிந்த
மனதுக்கு  ஒடுக்கி
 வாழவும் வேண்டும்
 என்று அறியவும்.


அறிந்து கொண்டேன்
என்ற ஆணவமும்
புரிந்து கொள்ளவில்லை
என்ற பேதமையும்


காட்டுகிறது  மனதின்
தன்மையை  வெளிப்படையாக
அதிகாரமும்  அசட்டுத்தனமும்
விம்மி வெளியேறும்

  மனதின் உள்ளேயுள்ள
எண்ணங்களைக்  கொணரும்
 வழி தெரிந்தால் வென்று
விடலாம் உலகத்தை.

   .


மனம் வலிக்க

கணவனும் மனைவியும்
 அடித்துக் கொண்டார்கள்
 தினமும் எந்நாளும்

ஒரு முறை அல்ல
 ஒவ்வொரு நாளும்
வேளையும்   எப்போதும்

எதற்கு எனின்
ஒரு காரணம் அல்ல
 பலப் பல   எவ்விதமும் .

பற்பசை முதல் படுக்கை
வரை பலப்ப்ரிட்சை  என
ஏச்சும் பேச்சும்  யாவற்றிலும் .

கணவன் பிடித்தால்
 ஒரே பிடி  மனைவியோ
சுற்றி  வளைத்தல்  எவ்வகையிலும்.

முடிவே இல்லையா  என்று
 மனம் வலிக்க  எண்ண 
 விடிவே இல்லையா எக்காலமும்.
Saturday, April 2, 2016

எப்போதும் எதுவுமாக

வானளாவிய  பொய்யும்
 உலகளாவிய  பேச்சும்
அளவில்லா தற்பெருமையும்
 அன்பில்லா நடிப்பும்
 வழக்கும் வாதமும்
கலகமும் கலாட்டாவும்
வாழ்வின் ஆதாரம்  என்று
 வாழ்கிறான் அவனும்
 தன்னுடைய  நிலை
அறியாது  இன்றல்ல
 நாளையல்ல எப்போதும்
எதுவுமாக


Friday, April 1, 2016

சங்கரனுக்கு ஆபரணம்

சங்கரனுக்கு ஆபரணம்
 சங்கராபரணம்
 என்று கண்டேன்

வைரம் வைடுரியம்
 தங்கம் என்ற
 பல விலை மதிப்புள்ள
 ஆபரணங்கள் அணிந்து


முத்து பவளம்,
 மரகதம் நீலம்
 இரத்தினம்  பதித்த 
அணிகலன்கள் சூடி
 

கங்கை சந்திரன்
 மூடியில் தரித்து
உமையம்மை
 உடலில் ஒரு பாகமாகமரவுரி கட்டி
 திருநீறு  பட்டையிட்டு 
 காலைத்  தூக்கி  ஆடும்
வேளையில்.
 
 பண்ணோடு இசை பாடி
சங்கராபரணம் இராகம்
 பிரவாகம் எடுத்து
 உற்றாகப்  பெருக

கண்ணிர் மல்கி
 அமைதி  கொண்டு
 தனை மறந்து
 பணிகிறான் அடியவன்.சங்கரா பரணம்

இராகத்தின்  உடே சென்று 
 உள்ளே நின்று நெருடி 
ஊடுருவி  அறிந்து 
தெரிந்து குழைத்து 
 கொஞ்சி   பருகி 
 பிணைந்து  படிந்து
அதட்டி அதிகாரமாக  
 ஆனந்தித்து  குதகாலமாக  
 நெக்குருகி  இன்பமாக 
 இழைத்தான்   அழகான
 சங்கராபரணத்தை.
 
 
 
 

மோகன இராகம்

 மோகன இராகம் தவழ்ந்து ஓட 
 சில் நேரம் விர்ரென்று பாய
 மேலே ஏறி  குதித்து ஓட 
கிழே  இறங்கி சுற்றி வர 
 மத்திமத்தில்  நின்று அசை போட
நெஞ்சை உருக்கி கனிந்து உருக 
 கண்களில் நீர் கசிந்து வழிய 
சிலை போல் ஆடாமல் 
அசையாமல் நின்று  
கரைந்ததது மனம்.