Monday, April 11, 2016

வழி தவறாமல்

மற்றொரு நாள் விடிய
எப்போதும்  போது
கதிரவன் உதயம்
என்றும் போல
 பகலவன் மறைவு


இன்றும் வேலைப்  பளுவே
இன்றும் தூக்கம் நிறையவே
சிலப் பல நிகழ்வுகள்  குறுக்கிட
 நல்லதுக்கும் கெட்டதுக்கும் 
என்பது போலே .

நேற்றைய தினம் அவ்வாறு
 இன்றைய நாள் இவ்வாறு
 நாளை  எப்படியோ
இறுதியில் யாவும்
 ஒருங்கே ஒருமித்தவாறே.

ஒன்று மட்டும்  மாறுமே
வயது  என்பது தெளிவே
  உனக்கும்  எனக்குமே
 யாவருக்கும் என்பது
 விதியே .


சுருக்கம்  தளர்வு நெருங்க
 நரையும்  தடுமாற்றமும்
நிறையவே  தெரியுமே
வழி  தவறாமல்  வந்த விடுமே
 முதுமையும் இறப்பும் ஒன்றாகவே.





































No comments:

Post a Comment