Friday, April 29, 2016

நூலைப் போல சேலை

தாயின் வழியில்
சென்றனள்
நூலைப்  போல சேலை
 தாயைப்  போல பிள்ளை
அறிந்தேன் .

வல்லமையும்  வடிவமும்
சொல்லாற்றலும்  செயலும்
கண்டேன் .
தாயைப் போல்  பிள்ளையிடம்

பிடிவாதமும்  பீடிகையும்
மதியாமையும்  மதியும்
தெளிந்தேன்.
 தாயைப் போல் பிள்ளையிடம்.

தாயிடம் ஓரளவு எனின்
பிள்ளையிடம்  பெருமளவு
 பார்த்தேன்.
ஒற்றுமையும்  வேற்றுமையும்

நந்மொழியும் நட்பும்
நல்லெண்ணமும்  நலனும்
 காணேன்.
சுற்றிலும் முற்றிலும்


கண்டேனா  தாயிடம்
 மறந்தேன்  முக்கால்
 விதமும்
மறதி என் பால்

காணவில்லை பிள்ளையிடம்
மறக்கவில்லை  முழு
 விகிதத்தில்.
நினைவு  அருமையாக


நூலில் முரணபாடு
பாவிலும் உடுபாவிலும்
 முடிச்சாக
விளம்பினேன்  அழகாக

பிள்ளையில் பிழை
பக்குவத்திலும்  பதட்டத்திலும்
நெருடலாக.
 களங்கம் ஆங்காங்கே.














No comments:

Post a Comment