Thursday, April 14, 2016

வானம் பார்த்த நிலமாகவே!

மானம் பார்த்த பூமி இடுகுறியாக
இவ்வுலகில்  ஒரு புறம் நிற்க
 புன்செய் என்ற  அழகான  சொல்
.பூஞ்சையாக மருவி பேச்சில் புணர

கேட்கும் போதே  ஓர் இனிமை
  பொருள் பொதிந்த  செம்மை சிறப்பு
விளையும் நிலம் நஞ்சை  என்றும்
வற ண்டது பூஞ்சை என்று வழக்கில் .

வாசல் நோக்கி நிற்கிற  பாவை
 நாணத்தோடு கண்கள் விரிய  ஆவலுடன்
 வானம் பொழியுமா என்ற  ஏக்கத்தோடு
தவம் காக்கும் நிலம் போல.


இல்லானைக் கண்ட நாழியில்  பரவசத்துடன்
 பூரித்து மும்மரமாக  துள்ளும் மனைவியும்
நீர்த் துவாலை  வீழ்ந்தவுடன்  ஆறுதலுடன்
மகிழ்ந்து விறுவிறுப்பாக  ஆர்ப்பரிக்கும்  புன்செய்யும்


கூடி  ஆதுரமாக விரிந்து  பரந்து
 வம்சம்  பெருக்கும் ஆளு மையான  பெண்ணும்
நட்டு  முளைத்து  விளைந்து சரிந்து
நெற் குதிராகக் குமியும்   அகண்ட நிலமும்

உண்டாகிப்  பெற்று வளர்க்கும்  பாங்கிலே
 தகை சான்ற மகளிர்ப் போலே
உள்வாங்கி  உற்பத்தி  செய்யும்  வாகிலே
அளவில்லா வளமையான் நிலம்  கண்டோம்


நன்செயாக மலர்ந்து  வளம் காண
புன்செயுடன்  கை கோர்த்து  நிற்க
வளமை செழித்து  அற்புதமாக மேன்மையுற
வெறுமை வானம் பார்த்த நிலமாகவே!
























No comments:

Post a Comment