Sunday, November 29, 2015

இறைவனுடன் கலந்தது

பழக்கத்திலே ஓர் இங்கிதம்
 பேச்சிலே ஒரு நாகரிகம்
 வழக்கத்திலே ஒரு தன்மை 
 பார்வையிலே ரூ கனிவு
 செயலிலே ஒரு தாராளம்
 ஒருங்கே அமையப்பெற் றின்
 இறை தன்மை பொருந்தியது
 இறைவனுடன் கலந்தது
போல் ஆகும்.

வாழ்த்த வேண்டாம்

வாழ்த்த வேண்டாம் வாழ விடு
 பாராட்ட வேண்டாம் பாழ்  நினையாதே
 போற்ற வேணடாம் போக்கடிக்காதே
தூக்க வேண்டாம் தூக்கியடிக்காதே
நியாயாமாக இரு  நலியாதே 

Saturday, November 28, 2015

கேடு நினைப்பவன்

கேடு நினைப்பவன்
 கேடு செய்பவன்
 கெட்டுப்  போவான்
 இன்று அல்ல
 நாளை அல்ல
 இன்றும் நாளையும்
 அவன் பூவாய்
 மலர்வான்
 பின் ஒரு காலத்தில்
 துடிப்பான்  உறுதியாக.

காடும் மேடும் விற்றான்

காடும் மேடும் விற்றான்
 எதற்கு என்று தெரியவில்லை
 காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
 அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
 செல்வந்தன் என்று கூறு பவன்
 என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக 

Friday, November 27, 2015

கையில் இருக்கு திறன்

கையில் இருக்கு திறன்
கண்ணில் இருக்கு புலன்
 கிடைப்பது அருமை
 கிட்டியது திறமை
 முடித்து விடு சட்டெண்று
 வென்று விடு முழுமையாக

ஏண்டா மனிதா

பாரினிலே அல்லாடும் மைந்தனே
 உனக்கு ஏன் இந்த வீதி

சண்டை வீட்டினிலே  எந்நேரமும்
நிம்ம்தியில்லை ஒரு காலும்..


கைகலப்பு அரசல் புரசலு மாக அண்டை
 அசலில்  மகிழ்வில்லை  ஒரு போதும்


 போர் மற்றைய நாடுகளுடன்  எந்நேரமும்
 துவளும் மனம் எக் காலமும்.


ஏண்டா   மனிதா   உன் தலைஎழுத்து  இவ்வாறு
 நியே யு ன்னை நொந்துகொள்  பலவாறாக.

தெளிவு வரும்

செய்தி சென்றது வேகமாக
 சென்ற வேகத்தில் திரும்பியது
 அதி வேகமாக


நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்க
 நினத்தது எல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஒன்று இல்லை.

மனதில் குழப்பம் மிஞ்ச கலங்குது மனது
 கலக்கம்  வெகுவாகத தாக்க
தெளிவு வரும் என்ற  நம்பிக்கை. 

Thursday, November 26, 2015

இரு கண்களாகப் போற்று.

நல்லது செய் மனமே
 நல்லதே நினை மனமே
நன்றாக வாழ இவை இரண்டும்
இரு கண்களாகப் போற்று 

குறையே உள்ளது என்பவன்

குற்றம் கண்டவன் காண்பான் எப்போதும்
 குற்றம் காணாதவன் காணமாட்டான் எப்போதும்
 குறை ஒன்றுமில்லை என்பவன் குறை யில்லாமல் வாழ்வான்
 குறையே  உள்ளது  என்பவன்  குறையுடன் வாழ்வான்

Wednesday, November 25, 2015

மனிதனைப் போல

வான் கோழி தன்னை மயில்
 என்று நினைத்து ஆடியதாம்
 மைனா  குயில் என்று
நினைத்துப் பாடியதாம்
 காகம் தன அழகை எண்ணி
 பெருமிதம் கொண்டதாம் 
கழுதை குதிரையாக நினைத்தாம்
 நிலை தெரியாமல் வாழும்
 மனிதனைப் போல 

அ , ஆ, அறியாதவன்

படிக்காதவன் பேசுகிறான் படிப்பை ப் பற்றி 
 கூட்டல் கழித்தல் தெரியாதவன் 
 கணக்கியலைப் பற்றி பேசுகிறான்
 அ , ஆ, அறியாதவன் 
 தமிழ்  இலக்கியத்தைப் விவாதிக்கிறான் 
 இதை எங்கு போய்ச் சொல்வது ?
 தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.

உண்டாகாது ஏனோ

பட்ட மரம் துளிர்க்காது
கெ ட்ட மனம் பெருகாது
வெந்த பேச்சு  விரியாது
 சுட்டப் பார்வை  விருத்திக் காது
 கடுஞ் சொல் துளிர்க்காது
 இருந்தும்  திருந்த நோக்கம்
 உண்டாகாது ஏனோ 

அறிவு இல்லை

எதற்கு என்று தெரியாமல்
 என்ன விதம் என்று புரியாமல்
 போட்டி போடுவதற்காகவே
 அவன் வருகிறான் என்னிடம்
 மறு த்து ப் பேசியும், ஊதா சினப்படுத்தியும்
விரட்டியும், பாராமுகமாக இருந்தும்
 அவன் தி ரும்பித்  திரும்பி  செய்கிறான்
 வீண் வெட்டிப் பேச்சும் விதண்டாவாதமும் 
எழுபதை நெருங் கும் போதும்  அறிவு இல்லை 

Monday, November 23, 2015

எதிர் நீநதினாள்


வாழும் எண்ணம் தலை தூக்க
 வாழ்ந்தே காட்டுவேன் என்று
வீம்புடன் வாழ நினைக்க
 கொடுமைகளையும்  தாங்கி
 துய ரங்களை முழுங்கி
 கடுஞ் சொற்களைப்   பொறுத்து
 எதிர்  நீநதினாள்  அங்கயற்கண்ணி 

மன நிறைவோடு.

தம்பி என்று நினைத்தேன்
 அண்ணன் என்று நம்பினேன் 
அக்கா  என்று எண்ணினேன்
 எனக்கு யாரும் இல்லை
 என்று அறிந்தேன்
 சிரித்தேன்  சிரிப்பாக
 வாழ்கிறேன்  மன நிறைவோடு.

அதுவே சிறப்பு

கொள்கை மாறாமல் வாழ வேண்டும்
 இன்று ஒன்று நாளை மற்றது
 என்று வாழும் நிலை மாற
 இன்றும் அதே  நாளையும் அதே
 என்று வாழப் பழகிக் கொள்
 அதுவே மகிழ்ச்சி அதுவே சிறப்பு 

சத்தமே இல்லாமல் வாழும் பெண்

சத்தமே இல்லாமல் வாழும் பெண் 
 சத்தமே பிடிக்காமல் வாழ நினைக்க 
குந்தகம்  வந்தது அவளின் இயல்புக்கு 
அதற்கு வரவில்லை இதற்கு வரவில்லை 
 என்று பேசி பேசியே  நெருக் கிறார்கள்  
மனித நேயமில்லா தவர்கள்  திறமையாக 
அவளோ சிரித்துக்கொண்டே விலகுகிறாள் 
வென்று விடுவாள் என்ற எண்ணம் மேலோங்க 
வாழ்த்துகிறேன் அவளை மனதார .

Saturday, November 21, 2015

கலகம் அவனது இயல்பு

கலகம் அவனது  இயல்பு
 எதில் வம்பு செய்ய
 எதில் வீம்பு பண்ண
என்று காத்திருப்பான்
 வாழ்வே அவ்வாறு  செல்ல
 அவன் நாட்களும் முடிவை  நெருங்க
 ஓடுகிறான் மூக்கில் வேர்வையுடன் 

Friday, November 20, 2015

நெஞ்சிலே கொள்ளை ஆசை

நெஞ்சிலே  கொள்ளை ஆசை
 உடலிலே பலமில்லை
 கண்ணிலே துள்ளும் அறிவு
 உடலிலே வலிமை இல்லை
 சாதிக்கத் துடிக்கும் அறிவு
 உடலோ இட ம் அளிக்கவில்லை
 இருந்தும் முயற்சி விடவில்லை
உடலைப் பொருட்படுத்தாமல். 

Thursday, November 19, 2015

நலம் விசாரிக்க வந்தான்

நலம் விசாரிக்க  வந்தான் என் தம்பி
 விசாரணை மட்டுமே கேள்வி மேல் கேள்வியாக
 மெய்யாக அதில்  ஓர் அன்பு காணேன்
 கண்டேன் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம்
 மனம் கோபத்தி ல் பொ ங்க
 அவனை வெளியேற்றினேன் நல்ல விதமாக.

Wednesday, November 18, 2015

பகற் கனவு.

சடுதியில்  ஒரு திருமணம்
 படைப்பின் காரணமாக
 பாம்பின் வரவு  அனுகூலம்
கனவிலும் நனவிலும்  தோற்றம்
 கை கூடியது மங்களம்
 இன்று என் வீட்டில்
 நாளை  உனதில்
 மறு நாள்  என்தில்
 என்று பெருமை பேசும்
அலமேலு  வளமுடன்   காண்கிறாள்
 பகற்  கனவு.

விழுந்த மழையோ மிக அதிகம்

விழுந்த மழையோ  மிக அதிகம்
 விணானதோ  அதை விட அதிகம்
 மிண் டும் தண்ணீருக்கு கெஞ்சல்
 இன்னும் கொஞ்ச நாட்களில்
 தொடரு ம் இந்த அரசியல் விளையாட்டு
 பணத்தின் திருவிளையாடல்  

Tuesday, November 17, 2015

தந்தை தாய் என்று பாராமல்

தந்தை தாய் என்று பாராமல் 
 பேசினான் வாய்க்கு வந்த படி 
 அநாகரிகமாக அல்ல 
 நாகரிகமாகச்  சாடினான் 
 காரண மே  இல்லாமல்.
பேசட்டும்  முடிந்தவரை
 சாடட்டும்  முடியு ம் வரை 
 நோகட்டும் வேண்டிய வரை 
 பொறுக்கும் தன்மை வேண்டும் 
 அவனைப பெற்றவர்களுக்கு 
 ஏகமாக இருக்க இன்னும் நிறையவே 
 வரமாக அளித்தல்  வேண்டும் 

.

 
 

Sunday, November 15, 2015

எமகாதகன் எமனிடம்

களவாடினான்  கொள்ளை கொள்ளையாக
 தனக்கு  தனக்கு மட்டும் என்று
 பகிர்ந்தளித்தான்  தன்  பிள்ளைகளுக்கு
 ஏமாற்றினான் தம்பி களைச்  சுளையாக
 தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
 அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
 காலன் வந்தான் சடுதியில்
 வீசினான் கயிற்றை
 சுருண்டான்  எமகாதகன் எமனிடம்
 காலனுக்கே பொறுக்கவில்லை போலும் 

Saturday, November 7, 2015

செதுக்கினான் உளியை

செதுக்கினான் உளியை
 வடித்தான் சிலையை
 அருமையாகத்   திகழ்ந்தது
 அதித  அழகாக
 அற்புத வடி வமாக
 தெய்வப்  பொலிவொடு
கண் கொள்ளாக்  காட்சியாக

  

திருமண ஆசை

காலம் கடந்த பிறகு
திருமண ஆசை
 கொடி  கட்டி பறக்கிறது
  ஓடி ஓடிச் சென்று
பதிகிறான் வேகமாக
திருமண  சேவை  மையத்தில்
 பதில் வரவில்லை இன்று வரைக்கும். 

மனம் வெதும் பியது

செய்த உதவிக்கு
 பலன் எதிர்கொள்ளவில்லை
 நன்றியை நோக்கவில்லை
 நிராகரிப்பு கிடைக்க
மனம் வெதும் பியது

Tuesday, November 3, 2015

என்ன ஒர் எதிர்பார்ப்பு.

காலைப்  பொழுதிலே 
 கதிரவன்  தோன்றும்   வேளையிலே 
பறவைகள் எழும் பொழுதிலே 
ஒரு அலை பேசியின் அழைப்பு 
 பதறிக் கொண்டு எடுத்தப்  போது 
 தவறான அழைப்பு என்று துண்டிக்கப்  பட்டது 
 என்ன ஒரு பரபரப்பு !  என்ன ஒர்  எதிர்பார்ப்பு.

Sunday, November 1, 2015

அண்ணனும் தம்பியும்.

பின் தொடர்வதே பழக்கம் 
 இருவரும் கை கோர்த்துக் கொண்டு 
 என்ன மகிழ ச்சியோ ! 


புற ங் கூறு வதே   தொழில்  
இருவரும் அதிலும் ஒற்றுமையாக 
 என்ன நினைப்பிலோ !.

யாரையும் பற்றி அல்ல 
 கூடப்  பிறந்தவனைப் பற்றி 
 ஏன் தானோ !

 அவனின் அழகைக் கணடு  பொறாமை 
 அவனின் இயல்பை  அறிந்து கடுப்பு 
 அவனின் செல்வாக்கைக் பார்த்து  ஆத்திரம் .

பின் தொடர்ந்து புற ங்  கூறி   பழித்துப் பேசி 
 நேரத்தையும் பொழுதையும் 
 ஆண்டா  ண்டாகக் கழித்து
 வாழ் கி றார்கள்  அண்ணனும்  தம்பியும். என்ன நியாயமோ

தாயும் அணைக்கவில்லை
 தந்தையும் கண்டு கொள்ளவில்லை
 வாய் மூடி மௌனம் காத்ததற்கு  பலனோ
 எதிர்த்து ஆடினவளுக்கு கரிசினம்
அமைதி காத்தவளுக்கு விமர்சனம்
 என்ன நியாயமோ
 என்ன தர்மமோ