Saturday, April 16, 2016

தாய் யார் என்று தெரியாது

கண்களில்  ஓர் ஏக்கம்  நிறையவே
 அறியாத அன்பு மனதை நெருட
 அறிந்தது   வெறுப்பு முகத்திl அடிக்க .

அநாதை  அவன் பிறந்தன்றே
 தாய் அறியான்  அவள் எறிந்த பிள்ளை
 தந்தை தெரியான். அவன் உதறின குழந்தை

அண்ணன் என்ற உறவில்லை
 யாவருமே அண்ணன் அவனுக்கு

தாய் யார் என்று தெரியாது
 யாவருமே அம்மா அவனுக்கு .

அரவணைப்பு  என்றால் என்ன ?
ஆதரவு என்றால் என்ன?

அவன் அறியான் அவை யாவையும்
 யாதும் இல்லாமல் வளர்ந்தான்.

வளர்ச்சிக்கு தெரியாது அன்பும் ஆசையும்
 பெரியவனான் வெகு விரைவிலே

 அன்பு குறுக்கிட்டது பெண்ணின்  உருவிலே
 உருகினான் அவளுக்காக் நாளும் பொழுதும்.

அவன் நேரமோ   சாபமோ அறியுமுன்
விலகினாள் அவள் ஏன் எதற்கு என்று சொல்லாமல்.

 நொந்து போனான் அளவுக்கு அதிகமாக
 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.

தனியாக வந்தான் தனியாக வளர்ந்தான்
 தனி மனிதனாக  இன்றும் வலம் வருகிறான்.

 அவன் செய்த பாவம் என்னவோ
 இல்லவே இல்லை அது  அவன் வீதி.

 கூடி வாழவில்லை  கும்மாளமில்லை
 கொஞ்சுவாரில்லை  குலம் செழிக்கவில்லை.

 இருந்தும் வாழ்கிறான் அவன் தனியாக
அள்ளி கொடுக்கிறான் பிறருக்கு.

தான் இழந்ததை பகிர்கிறான் யாவரிடம்
 அன்பு, பண்பு, செல்வம், செல்வாக்கும்

No comments:

Post a Comment