Wednesday, September 7, 2016

மகிழ்ந்தேன்! மறந்தேன்!

பரத  முனிவரின்  நாட்டிய சாத்திரம்
 பல்கி பெருகி விதம் விதமாக
 செழிக்க

ப  என்பது முக  பாவத்துக்கும்
ர   இராகத்தை   மேற்கோளிட
த தாளத்துக்கு நிற்க
 பரத  நாட்டியம்
 ஒரு சுகானுபவ மாகத்  திகிழ

சுருதியும்  ஜதியும்
ஒன்று கூட
ஆரணங்கு   ஆனந்தம்
 மேலிட  குவிந்து மகிழ்
 அதிகாரம் காட்ட
 அடித்து உந்த.

   வீரம் வெளிப்பட
 குதித்து ஆர்ப்பரிக்க
வெகுண்டெழுந்து
கனல் கணக்ளில் தெறிக்க
ஆடுகிறாள்.
 
 கனவும்  கண்டு
 வெட்கி நாணி
 உயிர்ப்பித்தெழுகிறாள்
 நாட்டிய பெண்மணி.

பரவசத்தில் தன்னை
அறியாது  கண்ணீர்  மல்க
இறைவனை நினைத்து
கூத்தாடுகிறாள்.

என்னே ஓர் நாட்டியம்
 ஓர் அற்புதம்
கண்டேன்
 மகிழ்ந்தேன்!
 மறந்தேன்!
 என்னையும், ஏன்
 யாவறறையும்.










No comments:

Post a Comment