Friday, March 14, 2014

ஆற்றல் பொருந்திய மனிதன்

பால் ததும்பும் முலைகளை
கன்றிடம் சிறிது வீடு  கறக்கும் மந்தன்
 சுருங்கக் கொடுத்து   கன்றுக்கு
 பெருக ஒதுக்குகிறான் தனக்கு .

எதிலும் தனக்கு மிகுதி வேண்டும்
 பாலில் மட்டும் விட்டு விடுவானா மனிதன்
உதிரம் பாலாகி வரும் நேரம்
கறந்து அளந்து காசாக்குகிறான் .

ஆற்றல்  பொருந்திய மனிதன்
எல்லாவர்ரிலும்  போன் அடைகிறான் 
பெருமிதம் கொள்கிறான் தன சாமர்த்தியத்தை வியந்து
போட்ட முதலை வட்டியும் முதலுமாகத்  திருப்பிகிறான்

சாதுர்த்தியமும் பெருகி வளமும் கொழித்து
 நல விதமாக வாழத் தலை ப்ப்படும்போது
குறுக்கிடுகிறது துயரம் வாழ்விலே
 பயனே நோக்காமாக வாழ்ந்த்ததால் அல்லல் படுகிறான் .


 

No comments:

Post a Comment