Thursday, October 10, 2013

காற்றின் நிலைப்பாடு

காற்றீனிலே வரும் கீதம் 
என்று கூறும் போது 
காற்றே ஒரு இசை 
என்று தோன்றிய தருணம் 
காற்று வீசியது குளுமையாக 
மெல்லத் தவழ்ந்து 
முடி கற்றை கலைத்து 
முகத்தை வருடி 
காதிலே இசையுடன் கொஞ்சி 
பரவிச் சென்றது மென்மையாக 
கிறங்கி மயங்கிய நிலையில் இருக்கும் போது 
காற்று வேகம் பிடித்து வீசத் தொடங்கியது 
உஸ் உஸ் என்று கோரத் தாண்டவமாடியது 
முகத்திலே அடித்து கதவுகளைக் காயப்படுத்தி 
விறு விறு வென்று பாய்ந்து தாக்கி சூறையாடி 
இயல்பு வாழ்வைப் பாதித்து 
நிலை குலையவைத்தது 
சற்று நேரத்தில் குறைந்து மிதமாக வீசியது 
சோகமாகப் பாடியபடி 
செல்லும் போது மரங்கள் தள்ளாடின 
இலைகள் போல பொலவென்று உதிர்ந்தன 
மழையும் துளித் துளியாக சொட்டு சொட்டாக 
கசிந்து கவலையோடு இணைந்து 
காற்றுடன் கலந்து மறைந்தது.



No comments:

Post a Comment