Wednesday, December 11, 2013

ஆண் என்ன பெண் என்ன ?

 மகனைப்  பெற்றவள் மக ராசி 
 அவளைக் கை எடுத்துக் கும்பிடும்  மண் ராசி
அளவில்லா மகிழ்ச்சியை தரும் மனராசி
அவளே  ஒரு முக ராசி
அவள் ஒரு பேரரசி .

மகளை ஈன்றவள்  ஒரு மூதேவி 
 அவள் வெட்டி சாய்க்கும்  ஒரு பெருந்தேவி
மனம் குமறி   வெதும்பி  அழுகும்  சிறு தேவி
அவளே ஒரு  பொருந்தாத  தேவி
அவள் ஒரு  வீண்டிக்கும் தேவி 

மகனோ மகளோ  என்று  விழும்  திரை 
மகன் என்றால் வெகு  நிறை
மகள் என்றாலே   படு  குறை
பிள்ளையே  ஒரு வரம்  என்கிறது மறை
குழந்தையே  ஒரு மட்டில்லா  இன்பம்  என்று பறை .


Tuesday, December 10, 2013

கண்டேன் உலகை அவ்வவாறே

அடக்கம் காணேன் எங்கும்
அமைதி காணேன் இங்கும் 
 சாதனைகள் செய்வோர் 
ஆட்டமும் பாட்டமும் 
 கலந்த அதிகாரம் 
கண்டேன் இங்கும் அங்கும் .

கண்ணிலே நீர் எதற்கும் 
முகத்திலே கவலை  இதற்கும் 
காரியம் கை கூடா  விடில் 
துயரம் அதி களவு பொங்க
நெஞ்சம் விம்மி வெடிக்க  
கண்டேன் அதற்கும் இதற்கும் .

சீற்றம் எழும்பியது சட்டெ ன்று  
சென்ற வழி  திரும்பியது  பட்டென்று 
நினைத்தது  நடக்கா விடில்
அடிதடியில்  இறங்கி கலகம் கொணர    
கொலை வெறியில்  களமிறங்கி 
கண்டேன்  குருதியும் சாவும் ,

சுற்றுகிறது  உலகம்  எப்போதும்
பகலும் இரவும் மாறுகிறது   எப்பொழுதும் 
கடலும் கொந்த ளிக்கிறது அவ்வப்போதே 
காற்றும் புயலாக சீறுகிறது  சில நேரங்களிலே 
நெஞ்சமும் ஏறி   இறங்குகிறது  எந்நேரமும்
 கண்டேன்  விநோதங்களை  அந்தப் போதினில் 


Saturday, December 7, 2013

பாக்கியம் இல்லை

சென்ற ஆண்டு மழை போதவில்லை  
இந்த ஆண்டு  மழை இல்லவே இல்லை  
அடுத்த  ஆண்டு மழை  இருக்குமோ இருக்காதோ 
வரும் ஆண்டுகளில்  மலை ஒரு சொல்  மட்டுமே 
 எத்தனையோ சேதங்கள் பாதகங்கள் கண்டோம் 
இதையும் ஏன்  விட்டு விட வேண்டும்  பார்ப்போம் 
நம்  குழந்தைகளுக்கு  மழை  ஒரு பாடப் பொருள்  மட்டுமே 
கண்டு அநுபவிக்க அவர்களுக்கு பாக்கியம் இல்லை 

Thursday, December 5, 2013

குப்பையும் வார்த்தையும்

குப்பையைக்  கொட்டினான்
 கூட்டி அள்ளினான
இடம் சுத்தம் ஆனது

வார்த்தைகளை  கொட்டினான்
வம்பை விலைக்கு வாங்கினான்.
இடம் ரண களமாயிற்று.


குமித்து வைத்த  குப்பையை
சேகரித்து தூரப் போட்டான்
இடம் துலங்கியது பளிச்சென்று.

கொட்டிய வார்த்தைகளை
திரும்பிப் பெற முடியாமல்  திணறினான்
இடம் கும்மிருட்டாகி  விட்டது.

குப்பையை விட வார்த்தைகள் மோசம்
குப்பை அழிந்து போகும்  சுவடில்லாமல்
வார்த்தை நின்று நிலைக்கும் அச்சுப பிசகாமல்





 

Tuesday, December 3, 2013

ஆடல் காணிரோ

ஆடல் காணிரோ
திரு விளையாடல் காணிரோ
இன்று நடக்கும் ஆட்டம் காணிரோ

அரசியல் ஒரு சூதாட்டம்
 அங்கு தலைவர்களும் கட்சிகளும்  
ஆடும் வெறியாட்டத்தை  காணிரோ.

வர்த்தகம் ஒரு களியாட்டம்
இதில்  பங்குச் சந்தையிலும் தொழிலும்
 நடக்கும் தில்லு முல்லு  ஆட்டத்தைக் காணீரோ.

கல்வி ஒரு சதிராட்டம்
இங்கு  படிப்புக்கும்  ஆசிரியர்கள்  பணிக்கும்   விலை
பணத்தின் பேயாட்டத்தைக் காணீரோ.

 மக்கள் பாடு திண்டாட்டம்
எதற்கும்  காசு என்ற நிலை  நிடடிக்கும் அவதி
சாமானியனை  ஆட்டிப் படைக்கும் ஆட்டத்தைக்  காணீரோ


Sunday, December 1, 2013

பிறந்து மடிவது நிர்ணயமே

வாடின பூ  என்னிடம் சொன்னது
என் என்னை பார்த்து ஒதுங்குகிறாய் என்று?
நான் வதங்கிப் போனேன் என்று தானே ?
 நான் சருகாகிப் போனேன் என்று தானே ?
 நான் பொலிவிழந்து கிடக்கிறேன் என்று தானே?

நான் பதிலுரைக்கும் முன்
 மீண்டும் பேசியது அழாக்  குறையாக
நேற்றுக்கு முந்திய நாள்  நான்
ஓர் அழகான மொட்டு  விரிய  காத்திருக்க
விடியும்  முன்  மெல்ல விரிந்து விட்டேன்  நேர்த்தியாக


நேற்றைய தினம் அ ன்றலர்ந்த மலராகத்  தோன்றி 
கண்டோரும் காணப் போவோரும்   வியந்து மகிழ
மெலிந்த காம்பிலே மொட்டவிழ்த்து   மனம் பரப்பினேன்
தென்றல் காற்றிலே அசைந்து ஆடி  இதமாகத் தவழந்தேன் 
என் அழகிலே நானே மயங்கி னேன் அன்று போதும்  முழுமையாக .


இன்று நான் ஆகாமல் தரையில்  விட்டேரறியப்பட்டுள்ளேன்
என் நிலைமை கண்டு உனக்கு ஏளனமோ!
 வாழ்வே இது தான் புரிந்து கொள் மானிடனே !
 இன்று இருப்பது நாளை இல்லை  யாவும்
மனிதனும், பொருளும் பிறந்து  மடிவது  நிர்ணயமே 

 




என்னே ஓர் அற்புதம் !

பே ரிரச்சலடுன் ஆடிப் பாடும் கடலே
 உன்னிடையே மேலும் கீழும  ஏறி இறங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  கும்மாளுமிடுகிறாய்?

குமறிக்  கொப்பளிக்கும்  கடலே
உன்னுள் கோரத் தாண்டமாடும் அலையே
எதற்கு நீ இவ்வாறு கோபம் கொள்கிறாய்?


 சலனமே இல்லாமல் தவழும்  கடலே
உன்னிடம் ஒரே  கோட்பாட்டில்  அடங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  நிதானமா இருக்கிறாய் ?

  ஆழம் தெரியாத  நீலக் கடலே
உன் மேல் அலங்காரமாக  சலசலக்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு பதுங்குகிறாய்?

உன்னை எப்போது பார்த்தாலும் ஆனந்தம்
எத்தனை முறை கண்டாலும் அதிசயம்
 கனவோ நனவோ என்னே ஓர் அற்புதம்