Wednesday, January 7, 2015

வைகை

கடலாடி  குதிப் போட்டு
 துள்ளி  விளையாடி
 கண்ணா  மூச்சி ஆடி
உருண்டு  புரண்டு
  குலுங்கி அலு ங்கி
 மகிழ்ந்து பரவசமாக
 கரை நோக்கிச்
சென்றாள்    வைகை

Monday, January 5, 2015

என் பொம்மை தாயும் தந்தையும்.

என் சிறு பிள்ளை விளையாட்டு
மரப்பாச்சி பொம்மைகளுடன்
 தாயகவும்  தந்தையாகவும்
நினனத்து  பேசுவேன்
  அழுவேன், சிரிப்பேன்
குறைகளைக்  கூறி  கதறுவேன்
 நிறைகளைச் சொல்லி நிரப்புவேன்
  பாடுவேன் , ஆடுவேன், கொண்டாடுவேன்
என் தாயும் தந்தையுமே மறந்தாலும்
என் மரப்   பெற்றோர்  மற க்கவில்லை
தந்தை சிவனடி சேர்ந்தார்
 தாய் தவறி  விட்டார்
என் பொம்மை தாயும் தந்தையும்
உள்ளனர்   இன்றும்  என்னோடு
இருப்பார்கள்  எனக்குப்  பிறகும்  கூட.
   

ஒரு தாய் மக்களிடம் கூட!

பார்வைகள் வெவ் வேறு
 தாயுமாயின் தனயனுமாயின்
 தங்கை போல் அக்கா இல்லை
பண்பில், படிப்பில், தோற்றத்தில்
 அக்கா வெடித்து விம்முவாள்
 தங்கை மடித்து மறு குவாள்
பெரியவள் கடித்துக் குதுறு வாள்
 சின்னவளோ  முழுங்ஙி   மறைப்பாள்
 முத்தவள்  எல்லாம் தனக்கு
 இளையவள் கிடைத்ததில் மகிழ்ச்சி
 அடங்காத ஆசை அக்காவுக்கு
 ஆறாத மனதும்    கூட!
போதுமென்ற   வழி  முறை தங்கைக்கு
அமைதியான மனதும் கூட!
 பார்வை வேறு, முறை வேறு
 ஒரு தாய் மக்களிடம்  கூட!
     

விழி வழியாக

காட்டிலே காண்டாமிருகம்
பெரிய  மாமிச மலையாக
நாட்டிலே நட்டுவாக்களி
பெரிய விஷக்   கொடுக்காக
மலையிலே மலைப்பாம்பு
விரிய வேக சூரனாக
 கடலிலே கடல் புறா
அமைதி வேள்வியாக
பெரிதும் சிறிது மாக
கொடுமையும் கனிவுமாக
பயங்கரமும்  பரிதாபமுமாக
நடைபெறும்  நடவடிக்கை
 கண்டும் காணாமலும்
 நிகழும் நிகழ்ச்சிகள்
 மனத்தைக் குடைய
 வாழா விருத்தலும்
வாழ்த்தியும் வாடியும்
  நிறுத்தலும் நிற்காமலும்
இருத்தலைக் கண்டேன்
விழி வழியாக    


ஆட்டமும் பாட்ட முமாக

ஆடல் வல்லான்
 ஆடினான்
 இர வும்  பகலுமாக
 தரிசனம் தந்தான்
 ஆதிரை அன்று
 கால் மாறி
 மாறி  ஆடினான்
  இடது வலது என்று
 மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
 வையைத்தில்
தோன்றும் கதிரவன்
 கிழக்காலே
 மறையும் ஞாயிறு
 மேற்காலே
 இரவும்  விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
 ஆட
 மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்




 




சற்றுப் பொழுதிலே


அன்றொரு நாள்

காற்று  வீசியது
கோராமாக
 பிய்த்துக்  கொண்டு
 பிளறிக் கொண்டு
 தாண்டவமாடியது
அலறியது, பதறியது
 அமைதியானது  சற்றுப்
பொழுதிலே.


மறு நாள்

காற்று  பரவியது
 தென்றலாக
உரசிக்  கொண்டு
உறவாடிக்கொண்டு
  நடனமாடியது
பாடியது, அழைத்தது
சுகமாக சற்றுப்
பொழுதிலே




ஒரு கேள்வி

வந்தவன் கேட்டான்
 ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
 பதில்   சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா  உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
 அந்தக் காரணமும்
 எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.