Saturday, November 7, 2015

மனம் வெதும் பியது

செய்த உதவிக்கு
 பலன் எதிர்கொள்ளவில்லை
 நன்றியை நோக்கவில்லை
 நிராகரிப்பு கிடைக்க
மனம் வெதும் பியது

Tuesday, November 3, 2015

என்ன ஒர் எதிர்பார்ப்பு.

காலைப்  பொழுதிலே 
 கதிரவன்  தோன்றும்   வேளையிலே 
பறவைகள் எழும் பொழுதிலே 
ஒரு அலை பேசியின் அழைப்பு 
 பதறிக் கொண்டு எடுத்தப்  போது 
 தவறான அழைப்பு என்று துண்டிக்கப்  பட்டது 
 என்ன ஒரு பரபரப்பு !  என்ன ஒர்  எதிர்பார்ப்பு.

Sunday, November 1, 2015

அண்ணனும் தம்பியும்.

பின் தொடர்வதே பழக்கம் 
 இருவரும் கை கோர்த்துக் கொண்டு 
 என்ன மகிழ ச்சியோ ! 


புற ங் கூறு வதே   தொழில்  
இருவரும் அதிலும் ஒற்றுமையாக 
 என்ன நினைப்பிலோ !.

யாரையும் பற்றி அல்ல 
 கூடப்  பிறந்தவனைப் பற்றி 
 ஏன் தானோ !

 அவனின் அழகைக் கணடு  பொறாமை 
 அவனின் இயல்பை  அறிந்து கடுப்பு 
 அவனின் செல்வாக்கைக் பார்த்து  ஆத்திரம் .

பின் தொடர்ந்து புற ங்  கூறி   பழித்துப் பேசி 
 நேரத்தையும் பொழுதையும் 
 ஆண்டா  ண்டாகக் கழித்து
 வாழ் கி றார்கள்  அண்ணனும்  தம்பியும். 



என்ன நியாயமோ

தாயும் அணைக்கவில்லை
 தந்தையும் கண்டு கொள்ளவில்லை
 வாய் மூடி மௌனம் காத்ததற்கு  பலனோ
 எதிர்த்து ஆடினவளுக்கு கரிசினம்
அமைதி காத்தவளுக்கு விமர்சனம்
 என்ன நியாயமோ
 என்ன தர்மமோ


Saturday, October 31, 2015

வணங்க வேண்டியவன்.

கடலினும் மாணப் பெரிது
 மனதில் நிரம்பி வழியும்  
 அன்பு.

மலையிலும் மிகப பெரிது 
மனித  நேயம்  ததும்பும் 
மனம்.

வானிலும் சாலச்   சிறந்தது 
 சக மனிதனை மதிக்கும் 
எண்ணம். 

அன்பு செலுத்தவது எளிதல்ல 
 மனி த  நேயம்   கிடைக்காது 
மதிக்கும்  எண்ணம்  வராது.

மூன்றும் ஒருங்கே பெற்றால் 
 மனி தன தெய்வம்   போன் றவன் 
வணங்க வேண்டியவன்.

எல்லாம் பணத்துக்காக

விரட்டி விரட்டி செல்கிறான்
 எங்கு சென்றாலும்
 எதற்காக   என்று நினைத்தால்
 எல்லாம் பணத்துக்காக
 பணம் என்றால் மனம் மாறும்
 மனம் மாறினால் பணம் தடுமாறும்
 தடுமாறினால்  திருடு நடக்கும்
 திருடு என்றால் மோசம் செய்வது
 மோசம் பண்ணினால்  குடு ம்பம்
வளராது  புல் பூண்டு கூடத் தக்காது 

Thursday, October 29, 2015

வேறுபாடு ஏனோ ?

காற்றிலே ஆடியது மரம்
சாய்ந்து  சாய்ந்து ஆடியது
 பார்க்க பரவசம் மிகுந்தது

 மனமும்  சில கணங்களில்   ஆடுகிறது
 விரைந்து விரைந்து ஆடுகிறது
 பார்க்க பதற்றம் மிகுந்தது.

ஆட்டம் ஒன்றே தான்
 சாய்ந்தும் விரைந்தும்  ஆட
ப ரவசம் ஒன்றில் தோன்ற
பதற்றம் மற் றோன்றில்  காண
வேறுபாடு ஏனோ ?