Saturday, March 12, 2016

பலமுக இலக்கை

தேனே மானே கற்கண்டே 
 என்று விழித்தக்  காலம் போய் 
 ஸ்வீடி டார்லிங்  பிலொவெட் 
 என்று கூப்பிடும் வேளையிலே
 கணவன் பெயர் சொல்ல மறுத்து 
சொல்வதற்கு பல சாட்சிகளை அழைத்து 
 நாராயணன் என்றால் பெருமாளைத்  தேடி 
 முருகன் என்றால் குமரனை துணைக்கு கூ ப்பிட்டு
 வாழ்ந்த காலங்கள் மலையேற 
இன்று சீனு, சிவா என்று பெயர் சொல்லிக்  கூவ 
 வாடா போடா  என்று  கொஞ்சிக் குலவ 
 இலை மறை காய் மறைவாக  நடந்தவை எல்லாம் 
 வெட்ட வெளியில் அரங்கேற 
 பாரதமும் பன்முகத் தொழிலில்  சிறக்க 
கலாச்சாரமும் பலமுக  இலக்கைத் தொட 
 முன்னேற்றம் என்று நாமும் கைக் கொட்டி 
 ஆர்பரித்து சிலாகிக் றோம் மகிழ்வோடு 



.

Friday, March 11, 2016

புதிய உயிர்

குருவி ஒன்று  மரம் மேலே
பழம் தின்று  போடுகிறது
 ஒன்று ஒன்றாக
 முதலில் தோலை
 பின் கொட்டையை
ஈஒன்று பறக்கிறது
  உறிஞ்சுகிறது  கொட்டையை
விட்டுச் செல்கிறது
 அங்கேயே
மண்ணில் புதைகிறது
 கொட்டை
நாட்கள் செல்ல
 வெளியில் வருகிறது
 இளம்
 பச்சையாக
 புதிய உயிர்
 கண்டேன்
 அழகாக




Wednesday, March 9, 2016

கவிதை எழுதுகிறேன்

கவிதை எழுதுகிறேன்
 இலக்கணமே தெரியாமல் 

 எதுகை மோனை துடிப்பு 
 எது வுமே  இல்லாமல் 

மனதில் தோன்றியதை 
 அவ்வவ் வாறே எழுதுகிறேன் 

ஒரு நேரம் குழந்தை அழுகிறது 
 எதற்காகஇருக்கும் என்று எழுதுகிறேன்   

ஒரு பொழுது   அழகிய மலரைப் பற்றி 
 பவளமல்லியோ குண்டு மல்லியோ 
 எழுது கிறேன் எனக்கு தெரிந்ததை  



மறு நாள் குடு ம்பம் அண்ணன் தம்பி  
 என்று எழு துகிறேன் நான் அனுபவித்ததை 


என்னென்ன எழு துவது என்ற வரைமுறை  
இல்லை என்னிடம்  எழுதுகிறேன் 
 நான் பாட்டுக்கு நேரம் தெரியாமல்.




செயல்படுவோம் அவ்வழியே


கற்றேன் என்பது மிகை
 கற்றது குறைவு
 கல்லாதது  நிறைய
 கேட்டதும் கற்றதே
 கண்டதும் கற்றதே
அனுபவித்தலும்  கற்றதே
 ஆழ்ந்த சிந்தனை  ஒரு கல்வி
ஆராய்ந்த  முடிவு ஒரு நிலையான  கல்வி
 அற்புதமான அழகு ஒரு செல்வம்
நிறைந்த  மனது ஒரு  தடையில்லா செல்வம்
அடக்கம் ஒரு பேருண்மை
  அமைதி ஒரு  உறுதியான பேருண்மை
உயர்வு   தனில்  ஒரு ஏகாந்தம்
உன்னதத்தில் ஒரு மலர்ச்சி
நின்று நிதானித்த   செயல்
 ஒரு எழிலான  கோலம்
செயல்படுவோம் அவ்வழியே
பொறுமையின்  வழியிலே  


Tuesday, March 8, 2016

உண்மைக்கும் உழைப்பிற்கும்

காடு வெட்டிப் போட்டவனுக்கு
கையிலே தழும்பு

 கவிதை  எழுதினவனுக்கு
  கையிலே  வலி

வாய்  ஓயாமல்  பேசினவனுக்கு
 கை மேல் பலன்

வாய் நிறைய  பொய் யை அள்ளி விட்டவனுக்கு
 கை  நிறைய பணம் .

இது தான்  உலகம் இன்றைய நாளிலே
உண்மைக்கும்  உழைப்பிற்கும்
விலை இல்லை உண்மையிலே



  

பெரிய மனிதனாகி விட்டான்

பெரிய மனிதனாகி விட்டான் 
 அவளுடைய  கடைசி மைந்தன் 

பேச்சில் அளவு நடப்பில்  வித்தியாசம் 
 சீற்றம் மிகும் போது  கனல் தெறிக்கும்  பார்வை 

இது போல் என்றும் இல்லை அவன் 
 இப்போது  வெகுவாக மாறி விட்டான் 

வயது ஒன்று காரணமா அறியவில்லை  
வாழ்க்கைத் துணையாலா  புரியவில்லை

 பாவம் விழிக்கிறாள்   திரு திருவென்று
 என்ன சொல்லி தேற்று வதோ  தெரியவில்லை   
முழிக்கிறேன்.

    

Sunday, March 6, 2016

வெற்றி திண்ணம்

மனமே சற்று நேரம் பதறாதே 
 சில மணித் துளிகள் அலறாதே
 நின்று நிதானமாக யோசி 
 கிடைக்கும் அற்புதமான தீர்ப்பு
 ஆசுவாசப்படுத்தி  அடங்கி 
 ஒன்றுக்குப் பல முறை ஆராய்ந்து 
 முடிவெடு  வெற்றி உறுதி 
 மனமே சற்று நேரம் அழாதே
 ஆழ்ந்து அழகாக  நினைத்து 
முயன்று  செயல்படு 
வெற்றி திண்ணம்