Monday, June 15, 2015

குருவிகளின் சத்தம்

குருவிகளின் சத்தம் 
 என் அருகில் 
 வெகு அருகில் 
 கீச் என்றும் 
 க்கு க்கு என்றும் 
காதோடு  பேச 
 எனென என்று 
 கேட்க  நான் திரும்ப 
 விலகி விலகிச்  செல்கின்றன
சற்று மிரட்சியுடன் 
 நான் என்னிடம் திரும்ப 
 மீண்டும் கீச் க்கு 
என்று என்னை அழைக்க 
 இன்று போதும் விளையாட்டு 
 தொடர்கிறது அழகாக  

No comments:

Post a Comment