Tuesday, December 23, 2014

தலை மகன்

தலை மகன் அவன்
தலைமை தாங்க வேண்டியவன் அவன் 
தலையான மகன்  அவன.

தலையில்  சுமத்திய  பாரத்தை
சுமந்து கொண்டேயிருக்கிறான்
இருபது  ஆண்டுகளாக.

 இறக்கி வைக்கத் தெரியவில்லை
தடுமாறுகிறான் நிலமை  புரியாமல்.

இருந்தும் அவன் தலை மகன்  
இத்  தலையைப் பற்றி .என்ன சொல்வது. .

Saturday, December 20, 2014

வாழ்வே அது தான்.

கண் விழித்தேன்
விடிவைக்  கண்டேன்
 கண் துஞ்சினேன்
முடிவைக் கண்டேன்
வாழ்வே அது தான்
 தொடக்கமும்
தொடர்ச்சியும்
 முடிவும்
முடிவுரை யும் 

பிரிவினை

கணக்கில்லாமல்  பாகப் பிரிவினை
 கணக்குப் பண்ணாமல் சொத்துப் பிரி வினை
கணக்கு கொடுக்காமல் ஒரு பிரிவினை
எங்கு கண்டோம் இம்மாதிரி பிரிவினை
காண ஆவல் இருந்தால் வரவேற்கிறோம்
எங்கள்  குடுமபப் பிரிவினைக்  காண 

யசோதையின் கண்ணன்

கண்ணனின் கையில் குழல் 
கண்ணிலே குறும்புத  துளி   
உதட்டிலே  முறுவல் 
 எதற்கோ  தெரியவில்லை 
முட்டை முழி முழிக்கிறான் 
 யசோதையின் கண்ணன் 

Sunday, November 9, 2014

உண்மை

உண்மை கசக்கும்
கசப்பது உண்மை
உண்மை கசக்கும்
கசக்குவது உண்மை
உண்மை கசக்கும்
கசம் தருவது  உண்மை
கச ப்பது உண்மை
கசங்குவது உண்மை
கசங்கப்படுவது  உண்மை
உண்மை செத்து மடிந்தாலும்
இறுதி  வரை நிற்கும். 

Saturday, November 8, 2014

மனிதன் தூங்குகிறான்

பூ பூக்குது
காகம்  கரைகிறது
குதிரை கனைக்கிறது
நரி உளையிடுகிறது
யாவும்  விழிதது  எழ
கதிரவன் தோன்றுகிறான்
நிலவு மறைகிறது
மனிதன் தூங்குகிறான்
 காலை விடியலைக்  காணாமல்  

வாழ் மகனே

கண்ணிலே கனிவு
மனதிலே தெளிவு
அறிவிலே செறிவு
பேச்சிலே அன்பு
செயலிலே  பண்பு
நடையிலே  நிமிர்வு
என்று வாழ் மகனே