Wednesday, May 4, 2016

கசிந்து படுத்துவதற்கு

படுக்கிறேன் காலை நீட்டி
 ஆயாசமாகத் தோன்ற

 கண் அயரும் முன்
 தலை முழு வதும் ஈரம்

துவட்டிக் கொண்டு
சாய்கிறேன் அனாயசமாக

கண்களைப் பொருத்தும் போது
கழுத்து இடுக்குக்குள்  ஈரம்.

 எழுந்து அமர்கிறேன்
பிரயாசையுடன்  மெதுவாக

கண்களோ முடி திறக்க
கைகளில்  ஈரம் .

நிற்கலாம் சற்று நேரம்
 எனறு  தோன்ற

 நிற்கிறேன்  ஒரமாக
 கால்வழியே  வடிகிறது ஈரம்.


என்னைச் சுற்றி ஈரமே இல்லை
வறண்ட காற்று  வீச

நிலம்  நீர்இன்றி  வெடிக்க
வெயில் சுட்டெ ரிக்க

எங்கிருந்து ஈரம் என்னிடம் .
கசிந்து படுத்துவதற்கு?















Tuesday, May 3, 2016

வாழ்க் இருவரும் வளமுடன்.

குறை காணுவதே அவன் எண்ணம்
 நிறையே அவனிடம் காணவில்லை
 எண்ணம்  குறுக மனம் நோக
 பேசுவதே அவன் வழக்கம்

தானே பெரியவன் தானே நியாயம னவன்
 என்று மார் தட்டி பேசும் விதமே அலாதி
 தன்னை   விட யாரும் இல்லை என்ற நினப்பே
 மேலோங்க மேலும் கீழும்  பார்த்து  நொ டிப்பான்

தன்மை என்பதே அவனிடம் இல்லை
 பொறாமை ஆற்றாமை அவனைச்  சூழ
 அதோடு  இல்லாமல் தற்போது இயலாமையும்
 அவனைப் பிடிக்க   புழுங்குகிறான்  அனலாக

அவனுக்குத் துணையாக  மற்றொருவன்
எடுத்துக் கொடுக்க   சொன்னதைச  செய்ய
 கிளிப் பிள்ளை போல்  பேசுவதற்கு
 ஏனோ அவன் தட்டுத் தடுமாறி  பேசுகிறான்.


இருவருமே ஒரு சேர்க்கை  நல்லதற்கோ
கெ ட்டதற்கோ   என்று எனக்கு விளங்கவில்லை
எங்கும் எவ்வாறும் எடுத் தெறிந்து பேசுவதே
 குறிக்கோள்  வாழ்க் இருவரும் வளமுடன்.

எல்லாம் இருக்க எதுவும் இல்லை.

வசிக்க ஆவல்
 வாழ இல்லை 

பாட  எண்ணம் 
படிய  இல்லை .

நடக்க  விருப்பம் 
நழுவ  இல்லை.

வினவ  நோக்கம்
வழுவ  இல்லை


எல்லாம் இருக்க
 எதுவும் இல்லை.












நன்றி மறப்பது நன்றன்று.

செய்ததை மறந்தான்
 இன்று அதை
 அனாவசியம் என்றான்.


சொன்னதை மறந்தான்
 இன்று அது
 தேவையற்றது என்றான்.


சொன்னதும் செய்ததும்
 எனக்கு நன்றாகவே
 ஞாபகத்தில்.



மறந்ததை  நினைத்து
 மறுகவில்லை
 வியப்புற்றேன்.


மனதைச்  சமானப்ப்டுத்த
 முடியவில்லை
 எவ்விதத்திலும்.


அவ்வளவு தான் மனிதன்
 இன்றை  நேற்று என்பான்
 அவனுக்கு  ஏற்றவாறு..


சொல்லட்டும்  அவன்
  நன்றி  மறப்பது
நன்றன்று என்று  அறிந்தால்
 சரி.


















Monday, May 2, 2016

நானாகவல்ல

இடத்தை விடாதே
 பிடித்துக் கொள்
 சட்டென்று.

கேட்டவுடன் சற்று
 துணுக்குற்றேன்
 சில மணித் துளிகள்.

பின் சிரித்தேன்
 எனக்குள்ளே
 அதிராமல்.

இடமே இல்லை
 எதைப் பிடிப்பது
 சிந்தித்தேன்.


நேராக அனுபவித்தால்
 தான் தெரியும்
 நினைத்துக் கொண்டேன்.


சிறுமையும்  சீற்றமும்
மோத  முட்ட
 விலகினேன் .


தாங்க முடியாத போது
தள்ளப்ட்டப் போது
 வெளியே வந்தேன் .

நானாகவல்ல  என்பது
சொன்னாலும்  புரியாது
புரியவே வேண்டாம்
யாருக்கும்.




 

Sunday, May 1, 2016

ஒரு நிலைப்படுத்தும்

மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை  உன்னதமானது

நிலைப்டுத்துவது சாமானியமல்ல
 அது ஒரு  வழிமுறை .

நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.

 நொடித்துப் பார்ப்பவனை
 மறந்தும்   கருதாமல்.


வெடித்து  விளம்புவனை
 எவ்விதத்திலும்  அறியாமல்

புறம் கூறுபவனை
 ஒதுக்கி  சகியாமல்


தன நோக்கிலே
 குறியாகி வாழும் நோக்கு


மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.







ஒவ்வவொரு செயலும்

மாவைக் கரைத்து 
 மறு நாள் காணி ன் 
 ஒரு புளிப்பு 
 பெருக்கம்.

தயிரை  தோய்த்து 
மறு நாள் காணின்   
ஒரு புளிப்பு 
 ஒடுக்கம். 

இன்றைய வேலையை 
 முடித்து  நாளை  காணின் 
 ஒரு நிறைவு
ஊக்கம் .


ஒவ்வவொரு செயலும் 
இன்று போல் 
நாளை இல்லை  
மாற்றம்.